Sunday, July 30, 2006

(25) எந்நாட்டுக் கரன்ஸியும் இதற்கு இணையில்லை

இது எனது கால் நூற்றுப் (25வது) பதிப்பு.

உலகில் இன்றைய தேதியில் இருக்கும் கரன்சிகளில் நானிருக்கும் குவைத் நாட்டுக் கரன்ஸிதான் அதிக மதிப்புள்ளது.

ஒரு குவைத் தினார் = இந்திய ரூபாய் 160/-


நான் சிறு வயதில் என் ஆரம்பப் பள்ளிக்கூட காலகட்டத்தில் அஞ்சாப்பு , ஆறாப்பு படித்த 1980 களில் இன்றைய மாதிரி 24மணிநேர சினிமாப் பிரதானமான கேபிள் தொலைக்காட்சிகளோ, வீடியோ கேம்ஸ் கேட்ஜட்களோ இருந்ததில்லை.

இரண்டு மாதத்திற்கு ஒருமுறை தியேட்டரில் சாதா பெஞ்சு கிளாஸில் 40 பைசாவுக்கு ஏதாவது ஒரு படம். அதுவும் ரிலீஸாகி ஊரெல்லாம் ஓடி திரையில் "க்ரைன்ஸ்"மழை விழும் 35mm பட்டணத்தில் பூதம், திரிசூலம், துணிவே துணை மாதிரியான படங்கள்.

போடி நகர தியேட்டர்கள் இதற்கே போஸ்டர் ஒட்டிய நகரும் தட்டி (Mini Mobile hoarding !?) அதற்குத் தோரணம் கட்டி, பேண்ட் வாத்திய (ஸிம்பொனி)இசைக்குழு என்று மாலை 5.30 மணிக்கு நகரின் முக்கியத் தெருக்களில் எபெக்டிவ், இன்டராக்டிவ் advt. campaign என்று பின்னி எடுப்பார்கள்.

தியேட்டரில் தரை டிக்கட் 25 பைசா சிமண்ட் கட்டாந்தரையில் ஆசாமிகள் தலைக்குத் துண்டை வைத்துக் கொண்டு, படுத்துக்கொண்டு, காலைநீட்டி உட்கார்ந்த்துகொண்டு, பிடித்த காட்சிகளுக்கு விசில் அடித்து என்று படுரிலாக்ஸ்டாக படம் பார்ப்பார்கள்.

பால்கனியில் ரூ 1.25 க்கு ஐந்து மடங்கு அதிகமாக பணம் தந்து காலைக் கூட நீட்டமுடியாமல் மூட்டைப்பூச்சிக்கடியில் முழுமையாக படம் தெரியாமல் இடையில் தூண்கள் என்று அவதிப்படுவர்.

For a change நான் அறிந்து 25பைசா தரை டிக்கட் வாங்கிய பொருளாதாரத்தில் குறைவான ஆசாமி முழுமையாக மகிழ்ச்சியாகவும், பொருளாதாரத்தில் மேம்பட்ட பணக்கார ஆசாமி ஐந்துமடங்கு செலவழித்தும் ரிலாக்ஸ் பண்ண வந்து இயலாது போகும் முரண் பட்ட சூழல் இங்கே.

சரி பேக் டு தி ட்ராக்.

ரெண்டு மாசத்துக்கு ஒரு சினிமா என்ற பொழுதுபோக்கு என் மாதிரியான சிறுவர்களுக்கு சோளப்பொரி மாதிரி! வார விடுமுறைகள், இதர விடுமுறை நாட்களுக்கு செலவில்லாத பொழுது போக்கிற்கென சில விளையாட்டுக்கள் இருந்தன.

கோலி குண்டு விளையாட்டில் "லாக்" என்று ஏதாவது சுவரை ஒட்டி "ப" வடிவில் இரண்டுக்கு இரண்டு சதுரமாக, அதனுள் கோலிக்குண்டுகள் தங்க என்று சிறு குழிகள் இருக்குமாதிரி "லாக்" வரையப்பட்டு சாட் ப்பூட் த்ரீ முறையில் விளையாடுவோர் வரிசை தேர்ந்தெடுக்கப்படும்.

இதில் குழுவாகவும் விளையாடுவார்கள். 2,3,5 கோலிகளை லாக்குக்குள் விதிக்கப்பட்ட எல்லைக் கோட்டிலிருந்து வீசிப்போடுவார்கள். லாக் லைனில், லாக்கினுள் உள்ள குழிகளில் உள்ள கோலிகளில் எதிராளி /எதிர்க்குழு சொல்லும் கோலியை கையில் உள்ள அளவில் பெரிய கோலியால் வீசி அடிக்க/தொட வேண்டும். அடிக்கும் கோலி 'லாக்"லைனில் நின்று விட்டால் ஆள் அவுட்.(முழுமையான விதிகள் மறந்துவிட்டது)

இதிலே வயதில் கூடிய கில்லாடிகள் (சண்டியர்கள்) சிலர், பேருந்து மெக்கானிக்கல் வொர்க் ஷப்பிலிருந்து உடைந்த பால் பேரிங்கின் பால்ரஸ் என அழைக்கப்பட்ட கடினமான உலோகக் கோலியைக் கொண்டு கண்ணாடி கோலிகளை அடித்து நொறுக்கி ஆடும் போதே வெற்றிக்களிப்பர்.

இச்சண்டியர்கள் பொதுவாக 5,10,25 பைசா என பணம் வைத்து ஆடுவார்கள். இவர்களது 'லாக்' ஏதோ குறுநில அரசின் எல்லைமாதிர் பரந்து பட்டிருக்கும். லாக் லைன் குழிகல் அகழி, பதுங்கு குழி ரேஞ்சில் அமைத்து விளையாடி பயங்காட்டுவார்கள்.

என் மாதிரி சிறுவர்கள் குழந்தை 'லாக்' விதிப்படி அமைத்து விளையாடுவோம். 5,10,25 காசுகள் எனச் சில்லறையாக இல்லாமல் நிறையப் பணம் வைத்து கண்டிப்பாக விளையாடுவோம். நாசிக்குக்கு இணையாக நோட்டடிப்போம். சிசர்ஸ், மஞ்சள், வெள்ளை வில்ஸ் நேவி கட் ,ப்ளூ பேர்டு, போன்ற சிகரட் அட்டைகளை மாப்பிள்ளை விநாயகர் கலர் கூல் ட்ரிங்கின் உலோக மூடியை இந்த சிகரெட் அட்டை மீது வைத்து கொண்டு சிமிண்ட் தரையில் தேய்த்துத் தேய்த்து அம்மூடியின் அச்சில் சிறு சிறு வட்டமாக எங்கள் விளையாட்டுக்கான கரன்ஸிகளை உருவாக்குவோம்.

"லாக்" மற்றும் "பேந்தா" "பம்பரம்" மாதிரியான கோலிகள் சார்ந்த விளையாட்டுகளுக்குப் பொதுக்கரன்ஸியாகப் பயன்படுத்தப்படும். "பேந்தா' எனும் வகை கோலிசார் விளையாட்டு ரவுடிகள் விளையாட்டு என்று "பொடா' விதிக்கப்பட்டு குழந்தைக் கரன்ஸிகளின் பணப்புழக்கம் வலிந்து குறைக்கப்பட்டதில், வைகுண்ட ஏகாதசியன்று இரவு முழித்திருக்கையில் வீட்டுக்குள் விளையாடப்படும் பல்லாங்குழி, பரமபதத்திற்கும் அவ்விளையாட்டுக்களின் extra femine தோற்றம் மாற்ற இக்கரன்ஸி தேவையின்றிப் புகுத்தப்படும்.

என்றாலும் லாக், பேந்தா போன்ற கோலிசார் விளையாட்டுக்கள் ஐந்தடி தூரத்திலிருந்து ஆறேழு வயது சிறுவர்க்கு குறிபார்த்து அளவில் சிறிய கோலிக்குண்டு இலக்கைத் தொடும் பயிற்சியை அளித்தது.

உப 'ஸ்கில்களாக" க்ரியெட்டிவ் எமுலேஷன் உத்தியில் சிகரட் அட்டையை சிறுவர் கரன்சியாக்கி அழகு பார்க்க வைத்தது, உப-உப திறனாக சிகரட் பெட்டிக்கு நான்கு மாப்பிள்ளை விநாயகர் மூடியை தென்னை ஓலைக்குச்சியில் (வெளக்கு மாத்துக்குச்சி) டயர்களாக்கி பொம்மைக் காராக்கி சுயமாய் பொம்மை உருவாக்கி ஏதுமில்லாதவைகளிலிருந்து இதோ ஏதோ இருக்கிறது (from nothings to something) என்றறியும் திறன் தந்தது.

சனி, ஞாயிறு மற்றும் பண்டிகை விடுமுறை வந்தால் எனது அரை டவுசரின் இரு பைகளும், வாரச் சந்தைக்கு விற்பனைக்கென இட்டுச் செல்லப்படும் வழியில் அதன் உடல் எடை கூட்டுவதற்காக வம்படியாகத் தவிடு ஊட்டப்பட்டுப் பொருமிய ஆட்டின் வயிறு மாதிரி, கோலிகள், பம்பரம், சிகரட்டு அட்டைக் கரன்ஸி நிரம்பிப் பொருமியிருக்கும்.

ஸ்பெஷல் கரன்ஸியாக தீப்பெட்டிகளின் படம் ஒட்டிய அட்டைகள் சீட்டா பைட், இலை இன்ன பிற சிவகாசி பயர் ஒர்க்ஸ் தயாரிப்புத் தீப்பெட்டி பிராண்டுகள் அத்தனையும் இந்த "கரன்சி"அட்டைப் பொறுக்கலால் அறிந்தேன்.

இந்தச் சிறுவர் கரன்ஸி நோட்டுக்கள் சிவகாசி கள்ளநோட்டு மாதிரி பதுங்குகுழியில் அடிக்கப்படாது வீட்டின் வராண்டா சிமெண்ட் தரை "திடீர் நாசிக்" காக மதிப்புயர்வு தரப்பட்டு சிகரட் பெட்டி, தீப்பெட்டி என்ற மூலப்பொருட்கள் கொட்டப்பட்டுப் படு தீவிர ப்ரொடக்ஷன் நடந்து கொண்டிருக்கும் போது "பண்டிகை தினத்தன்று சிகரட், தீப்பெட்டி என்று மொத்த தெருக் குப்பையும் வீட்டுக்குள்ளே" என்று பெரியவர்கள் திடீர் எதிர்ப்பில் எனது பலமணிநேர கூரிய பார்வைத் தெருவிழா உலாவுதலில் கிட்டிய எனது ஸ்பெஷ்ல் கலெக்சன் தீப்பெட்டி படங்கள் குப்பையில் எறியப்படும். அதிலே அரிய மாணிக்கமான மூடும் வசதியுள்ள, காலியான 555 சிகரட் பெட்டியை வீட்டுப் பெரியவர்களிடமிருந்து காப்பாற்றுவதற்குள் தாவு தீர்ந்துவிடும்.

உலகப் பணச் சந்தையில் எந்தநாட்டுக்க் கரன்ஸியானாலும் நிர்ணயிக்கப்பட்ட எக்சேஞ் ரேட்டுக்குட்பட்டாகவேண்டும்.

ஒரு குவைத் தினார் = 160 இந்திய ரூபாய்கள்
ஒரு குவைத் தினார் = 3.45 அமெரிக்க டாலர்கள்
ஒரு குவைத் தினார் = ???? சிறுவர் கரன்ஸி

எவராலும் நிர்ணயிக்க முடியுமா எமது சிறுவர் கரன்ஸிக்கு எக்சேஞ் ரேட்?
எவராலும் மதிப்பிடவே முடியாது சிறுவர் உலகக் கரன்ஸிகளுக்கு.

இந்தச் சிறுவர் உலகக் கரன்ஸி பெற்றுத்தந்த மகிழ்ச்சியை வேறு எந்த நாட்டுக்கரன்ஸியும் தந்ததில்லை எமக்கு.

இச்சிறுவர் கரன்சிக்கு எந்த நாட்டுக் கரன்ஸியும் இணையில்லைதானே!


அன்புடன்,


ஹரிஹரன்

Tuesday, July 25, 2006

(24) உஷ்ஷ்ஷ்.. இது பாரபட்சமில்லாத தனி உலகம்!

ஒன்று முதல் பன்னிரண்டு வயதிலான குழந்தைப்பருவம் மனிதன் பாரபட்சமின்றி பெரும்பாலும் மனிதனாகவே வாழும் பிராயம்.

எனக்கு என் வேலைதரும் அழுத்தங்கள், நான் நேரில் பார்த்ததைவிட பல மடங்குகள் உக்கிரமாக தமிழ்மணத்தில் நடந்தேறும் ஆரிய-திராவிட இன்னபிற மதம் சார்ந்த சர்ச்சைகள் எனக் கிளறப்படும் உணர்வுகள், வலிந்து தட்டி எழுப்பப்படும் என்னுள் தூங்கும் மிருகம் என மனதிற்குள் உணர்வுகள் நாடோடியாய் நாட்டியமாடியபடி வீடு வந்து சேரும் போது எனக்கு எனது இரு ஐந்து வயதுக்குள்ளான குழந்தைகள் மிகப் பெரும் ஆசிரியர்கள் ஆகிறார்கள்.

மாலை எங்காவது சூப்பர் மார்க்கட் போகும் போது தள்ளிச் செல்லும் ட்ராலியில் அமர்ந்தவாறு அதே மாதிரி அருகில் இன்னொரு ட்ராலியில் அமர்ந்து வரும் வேறு குழந்தையைப் பார்த்ததும் கல்மிஷமில்லாமல் பரஸ்பரம் சிரித்துக் கொள்கிறார்கள்.

அடுத்த ட்ராலியில் அந்தக்குழந்தை எகிப்திய/பிலிப்பைன்ஸ் குவைத்/வெள்ளைக்கார/இந்திய/வேறுஅரேபிய இனக் குழந்தையா என்ற ஆராய்ச்சி எல்லாம் செய்வதில்லை. பேச்சே வராத சிறு குழந்தைகள் கூட எச்சில் ஒழுகிக்கொண்டு நட்பாய் முதலில் மனம் திறந்த சிரிப்பு பின் அவர்களது "நிஜமான புரியாத தேவபாஷயில்" ஏதோ பேசிக்கொள்ளவும் செய்கிறார்கள்.

ஆனால் ட்ராலி தள்ளி வரும் பெற்றோர்கள் உலகம் வேறு நேர்மாறாக கல்மிஷங்கள் எக்கச்சக்க ஏராளம் நிறைந்தது.

கல்மிஷமில்லாத இந்தக் குழந்தைகள் மெல்ல வளரும் போது நாம் சொல்வதையெல்லாம் ஆச்சர்யத்துடன் கண்கள் வரிய, வாய்திறந்த நிலையில் கேட்டுக் கொள்ளும். ரூல் நம்பர் 1 ஆக நாம் சொன்ன விதிகளை எந்தப் பாரபட்சமுமில்லாமல் பெற்றோர் மீறும் போது சுட்டுவார்கள்.

இரண்டு முதல் நான்கு வயதுக் குழந்தைகள் சுபாவத்தின் படி கையில் கிடைத்த பேனா, பென்சில், க்ரேயான் கொண்டு சுவர் எல்லாம் கிறுக்குவார்கள்.

சில மாதங்கள் முன்பு வரை என் குழந்தைகளும் அப்படிச் செய்து வீட்டின் எல்லா சுவர்களிலும் அநியாயமாய் ஆட்டோகிராப் போட்டு வைத்திருந்தனர். நானும் என் மனைவியும் "குட் ஹேபிட்ஸ்" என்று சொல்லித்தந்த போது சுவரில் கிறுக்குவது "பேட் ஹேபிட்" என்று அழுத்திச் சொன்னதைக் கேட்டுக்கொண்டனர்.

வீட்டுச் சுவர்களை சில நாட்கள் கழித்து வெள்ளை அடிக்கலாம் என முடிவு செய்தபோது வெள்ளை அடித்தால் மீண்டும் என் குழந்தைகள் கிறுக்குவார்கள், கோபம் வரும்.. குழந்தைகளைத் திட்டக்கூடிய சூழல் வரும். எனவே பள்ளிக்கூட காலங்களில நான் சிறப்பாக வரைவதாக ஓவிய ஆசிரியர் பாராட்டியது நினவுக்கு வர, வீட்டையே குழந்தைகளுக்கான படி வர்ணம் பூசுவது என்று முடிவு செய்தேன்.

முடிவு செய்தபடி வித விதமான வர்ணங்கள் சுவர் மட்டுமில்லாமல் 'உட்புற ஆர்டிபீஷியல் ஸீலிங்கிலும்" வர்ணஜாலம் காட்டினேன். இச் செயல் என்னைக் குழந்தை மனோபாவத்திற்கு எடுத்துச்சென்றதில் குதூகலமாகி எனது வீட்டை ஆர்ட் கேலரியாக்க நான் குழந்தையாக இருந்தபோது விரும்பிய போடி கரிவண்டி ரயில், மதுரை சித்திரைப் பொருட்காட்சியில் வாங்க ஆசைப்பட்ட பலூன்கள், மிக்கி மௌஸ் எலி, டொனால்ட் வாத்து, கூஃபி நாய் என வரைந்து வைத்தேன்.

வரைவது எல்லாம் இரவில் 10 மணிக்குக் குழந்தைகள் உறங்கிய பின்பு தான்.அப்போதானே குழந்தைகள் அவர்கள் ஆர்வமிகுதியில் பெயிண்ட் டப்பாவைத் தட்டிக், பெயிண்ட் கீழே கொட்டி, அதனால் நான் குழந்தைகளைத் திட்டி என்பது தவிர்க்கப்படும் என்பதால் என் உறக்கம் தியாகம் செய்து நடுநிசிநேரம் தேர்ந்தெடுத்தேன்.

கூடுதலாகக் காலையில் குழந்தைகளிடம் ஹாலில் போய்ப் பார்... ரூமில் போய்ப் பார்... என்ன மாறுதல் தெரிகிறது என்று சொல் என்று அவர்களது "அப்ஸர்வேஷன் ஸ்கில்" சோதிக்கும் போர்வையில் கொஞ்சம் தற்பெருமை போதையில் இருக்கலாம் என்பதும் நடுநிசி நேரத்தை வரைவதற்குத் தேர்ந்தெடுக்க ஒரு காரணம்.

சரி. காலை வந்து குழந்தைகள் எழுந்திருக்கும் வரை எனக்குத் தூக்கம் வரவில்லை. குழந்தைகள் எழுந்து வந்ததும் "அப்ஸர்வேஷன் ஸ்கில்" சோதிக்கும் கேள்விகளாக ஹாலில் போய்ப் பார், ரூமில் போய்ப் பார் என்ன மாறுதல் தெரிகிறது என்று சொல்லவும் என்பவை என்னால் சுயபூரிப்புடன் அவர்களிடம் கேட்கப்பட்டன.

குழந்தைகள் ஹால், ரூம் இவையெல்லாம் சென்று பார்த்துவிட்டு வந்ததும் என்ன தெரிகிறதா? என்றேன் களிப்பில் கண்சிமிட்டியபடி. அவர்கள் என்னிடம் "அப்பா நீயா கலர்க் கலராக எழுதினாய்?" நான் ஆமாம் என்றேன் புளகாங்கிதத்தில் பல்லைக் காட்டிக்கொண்டு.

நான்கு வயதான என் பெரிய குழந்தை என்னைப் பார்த்துக் கொண்டே தீர்க்கமாக " அம்ம்மா... எங்களைச் சுவரில் கிறுக்காதே என்று சொல்லி விட்டு அப்பா சுவரெல்லாம் மஞ்சள், நீலம்,நிவப்பு, பச்சை,கறுப்பு, ஊதா எனக் கலர் கலராக கிறுக்கி வைத்திருக்கிறார் என்று சமயலறையில் அம்மாவிடம் புகாராகச் சொல்லிக்கொண்டு ஓடினர்.

குழந்தைகள் உலகில் என் ரூல் நம்பர் 1 ஆகிய சுவற்றில் கிறுக்குவது "பேட் ஹாபிட்' அதை அப்பாவே செய்தாலும்.

ஆம் குழந்தைகள் உலகம் என்பது பாரபட்சமில்லாத தனி உலகம் தான்!

பி,கு
தற்போது என் குழந்தைகள் உருளைக்கிழங்கு சிப்ஸிலிருந்து தாங்கள் சாப்பிடும் எதையும் மனப்பூர்வமாக சுவரில் இருக்கும் தங்கள் நண்பர்கள் மிக்கி மௌஸ் எலி, டொனால்ட் வாத்து, கூஃபி நாய் -இவைகளோடு சேர்ந்து தான் உண்பது. (ஆயில் பெயிண்ட் என்பதால் எளிதில் துடைத்துச் சுத்தமாகிறது. ) இது குழந்தைகளின் இன்னொரு தனிஉலகம்.


அன்புடன்,

ஹரிஹரன்

Monday, July 24, 2006

(23) சிதம்பரத்தில் "ஸிம்பொனி"திருவாசகம் கேட்பது எப்போது?



"தமிழக அரசியல் திராவிடப் பெத்தடின் செயல்பாடுகள்"


முக்கண்ணில் ஒரு கண் நெருப்பைக் கக்கும் நெற்றிக்கண் கொண்ட சிவ பெருமான், நாட்டியத்தின் அரசனாக நடராஜனாக எழுந்தருளியிருக்கும் சிதம்பரம் வீணே சர்ச்சையில் சிக்கவைத்துச் 'சீ'தம்பரம் என ஆக்கியிருக்கிறார்கள்.


இன்று சிதம்பரம் கோயிலின் நெறி, நியதிக் கட்டுடைப்பில் பாட்டாளி ஆறுமுகச்சாமியின் மூலமாக அரசியல் திரா'விட நச்சு இயக்கங்களால் வம்படியாகக் கேடயமாகத் திணிக்கப்பட்ட நம் தமிழ் மொழி நிஜமாகவே பாவம்.

நெறிகள், நியதிகள் ஏன் எதற்கு என்று வியாக்கியானம் செய்யுமுன் நெறி, நியதிகள் கட்டுடைப்பு சமூகத்திற்குத் தரும் பயன்பாடுகள் பார்ப்போம்.


முன்பெல்லாம் சென்னையின் அயோக்கிய ஆட்டோ ஓட்டுனர்கள் ( ஒரு சில விதிவிலக்குகள் உண்டு) ஆண்டில் நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை சபரிமலைக்கு மாலை போட்ட காரணத்தால் கொஞ்சம் நாகரீக வார்த்தை, மட்டுப்பட்ட மீட்டர் சூடேற்றம், குறைவான ஏமாற்றுதல் என்று அவர்கள் தற்காலிகமாகப் பின் பற்றும் ஐயப்ப பக்தி நியதி, நெறிகளால் சாதாரணமான பொதுஜனத்திற்குக் கொஞ்சம் பயன் கிடைத்து வந்தது.

சரி. சபரிமலைக்கு மாலைபோட்டு, 48நாள் விரதமிருந்து மலையேறும் நெறிகள் , நியதிகள்க் கட்டுடைப்புச் செய்யப்பட்ட சபரிமலையிலிருந்து மெல்ல மலை இறங்கிவருவோம்.

சபரி மலைக்கான நெறி + நியதிகளாக இருப்பவை:
1. ஐயப்பனை எப்போதும் நினத்திருக்க, ஐயப்பன் நாமம் ஜெபிக்க வேண்டும்.
2. 48நாட்கள் உணவுப் பத்தியத்துடன் விரதமிருக்கவேண்டும்.
2. கெட்ட பழக்கங்களில் அறவே ஈடுபடக்கூடாது.

இந்த நெறிகள், நியதிகள் இவைகளைக் கட்டுடைத்த சபரிமலைக்கு மாலை போட்டுச் செல்லும் பின்நவீனத்துவ அதிவீரத்தமிழர்கள் என்ன செய்கிறார்கள்?

  • விரத நாட்களில் இறைவனை எப்போதும் நினைத்திருக்க அவன் நாமத்தை முறையாக ஜெபிப்பது, கேட்பது என்பது விரத கால நெறி+நியதி ஆனால் இந்த பழக்கத்தை திரா'விடப்' பெத்தடின் கொள்கை உந்துதலால் கட்டுடைத்துவிட்டு மீறித் வக்கிரமான தமிழ்த்திரைப்படப் பாடல்களான "லாலாக்கு லோல் டப்பிம்மா", "அண்ணாநகரு ஆண்டாளு" போன்ற கருத்துச் செறிவான பாடல்களின் தழுவல் பாடல்களில் ஐயன் ஐயப்பனின் நாமம் கேட்பார்.

  • 48 நாள் விரத கால பத்திய உணவுக் கட்டுப்பாட்டு நியதியை திரா'விடப்' பெத்தடின் கொள்கை உந்துதலால் கட்டுடைத்துவிட்டு மீறித் தான் உண்ணும் புலால் உணவில் ஐயன் அய்யப்பனுக்கு ஒரு துண்டு எடுத்து வைக்கிறார்.

  • அடுத்து மாலையில் "மதுக்கடையில்" விரத காலத்தில் நெறி+நியதிகளால் தடை செய்யப்பட்ட "மது" "சாராயத்தை" திரா'விடப்' பெத்தடின் கொள்கை உந்துதலால் கட்டுடைத்துவிட்டு மீறித் தான் குடிக்கும் மதுக்கடை சரக்கில் ஐயன் அய்யப்பனுக்கு ஒரு கட்டிங் கிளாஸில் ஊற்றுகிறார்.

  • அடுத்து " விரத காலத்தில் நெறி+நியதிகளால் தடை செய்யப்பட்ட சூதாட்டம் செல்கிறார் "மூணுசீட்டு மங்காத்தாவை" திரா'விடப்' பெத்தடின் கொள்கை உந்துதலால் கட்டுடைத்துவிட்டு மீறித் தான் சூதாடும் மூணுசீட்டு மங்காத்தா ஆட்டதில் ஐயப்பனுக்கு ஒருகை சீட்டு போடுகிறார்.

ஆக நம் முற்போக்கு நவீனத் தமிழன் திரா'விடப்' பெத்தடின் கொள்கை உந்துதலால் வழக்கில் நல்லதுக்காக இருந்த நெறி+நியதிகளைக் கட்டுடைத்துவிட்டதில் சபரிமலை ஐயப்பன் பக்தி காலமான மலைக்கு மாலைபோடும் காலம்

இன்று வக்கிரமான திரைப்பட குத்துப் பாடல் தழுவிய ஐயப்ப நாம ஜெபங்கள் ஒலிக்கும் காலம் ஆகியிருக்கிறது.

மதுக்கடையில் ஐயப்பனுக்கு கட்டிங் விடப்படும் சீஸன் ஆகியிருக்கிறது.

சூதாட்டக் கிளப்பில் மூணுசீட்டு ஆட்டத்தில் கை கொடுக்கும் தெய்வக்கைத் தென்படும் காலம் ஆகியிருக்கிறது.

வாழ்க முற்போக்கு திரா'விடப் பெத்தடின் நவீனத்துவம்!

மிருகம் மாதிரி கெட்டவார்த்தை பேசி, குடும்பத்தைக் குடித்துச் சீரழித்து, சூதாடி வாழ்க்கை வாழும் அடி மட்டத்தவனைத் சபரிமலை தெய்வத்தின் வழிபாட்டு நெறி, நியதிகள் படி 48நாள் விரதத்தின் போது முற்றிலும் மாறிய மனிதனாக வாழ கற்பிக்கப் பட்டவை செறிவான நெறி, நியதிகள்.

இவை யாவும் பகுத்தறிவுப் பகலவன்களின் முற்போக்கு நவீனத்துவம் என்ற பம்மாத்து அரசியல் திரா'விட'ப் பெத்தடின் முழக்கத்தில் கட்டுடைக்கப்பட்டதில் நட்டப் பட்டது நிச்சயமாக நம் அடித்தட்டுத் தமிழன்.

இந்து மதத்தில் ஒழுக்கக் கட்டுப்பாடான நல்ல நியதிகள், நெறிகள் கட்டுடைக்கப்பட்டதில் லாபமடைந்தது தமிழகத்தில் மதுக்கடைகளை நடத்தும் வடக்கில் வன்னியர், முதலியார் தெற்கே தேவர், நாடார், மேற்கே கள்ளர், கவுண்டர், கிழக்கில் வாண்டையார், அகமுடையார் சமூகத்தவரா?

இல்லை சபரிமலை கோவில் பார்ப்பன பூசாரிகளா? பகுத்தறிவெல்லாம் தேவையில்லை. சும்மா சிந்தித்தாலே விடை கிடைக்கும்.

அதென்ன சிதம்பரம் மற்றும் சிவன் கோவில்களில் பழமைவாதிகள் சதிப்படி ஒரு குறிப்பிட்ட பண்ணில் தான் திருவாசகம் பாட வேண்டுமா? அக் மார்க் ஒரிஜினல் தமிழன் மேற்கத்திய கிறித்துவ ஸிம்பொனி முறையிலான பண்ணில் திருவாசகம் பாடினால் துர்வாசகம் ஆகிவிடுமா?

அதென்ன நடராஜர்ன்னு ஆரியப்பாம்புகள் சதிசெய்து வைத்த பெயர்? நல்லமேய்ப்பன்னு வச்சா ஆவாதா? சோனியா அன்னை, வாடிகன் பாப்பரசர் இந்திய ஆத்மா அறுவடை மெகா செயல்பாட்டுப் பிளானில்

  • நம் நடராஜனுக்கு "நல்ல மேய்ப்பன்",
  • திருப்பதி ஏழுமலை "திருப்பலி ஏசுமலை",
  • சபரிமலை அய்யப்பனை "சவரியார் மலை ஆயப்பர்"
  • அமர்நாத் பனிலிங்கம் "அந்தோணியார் பனிச்சிலுவை"
என்று மாற்றிவிடும் முயற்சிக்கு, தென்னகத்தில் தமிழகத்தில்
"திருட்டுச் சோழன்" மு.க, ஆந்திரத்தில் சாமுவேல் ராஜசேகர ரெட்டி, கேரளத்தில் கம்(மனாட்டி)யூனிடிஸ்ட் துணையிருக்கும் போதே எத்தனை வேகமாக ஆத்மா அறுவடைக்கு அடித்தளம் அமைக்க முடியுமே அவ்வளவுக்கு செய்ய முயல்வது பகுத்து அறியும் அறிவு இருந்தால் தானே புலப்படும்.

இந்துமத நெறி, நியதிகள் சிதைக்கப்படும்போது லாபமடைவது வெளிநாட்டு மதங்களே. இந்த அரசியல் திரா'விட'ப் பம்மாத்து இயக்கங்களைவிட இந்துமத நெறி, நியதிகள் கேடு கெட்டவை அல்ல.

ஒழுக்கமான ஒழுங்குகள் அற்புதக்கோலம் (வேதப்படியான் நெறி+நியதிகள்)
ஒழுங்கற்ற ஒழுங்குகள் அரைக்கோலம் (வேத ஆனால் மருவிய நெறி,நியதி) ஒழுங்கற்ற ஒழுங்கீனங்கள் அலங்கோலம்(அரசியல் திரா'விட நெறி,நியதி)

அரைக்கோல நிலையினின்று மீண்டு அற்புதக்கோல நிலைக்குச் செல்வதைத் தவிர்த்து அரசியல் திரா'விட'ப் பெத்தடின் தமிழ் மொழிப் பற்று ஊசிகளால், மீள முடியாத அலங்கோல நிலைக்குத்தள்ளப்படும் சூழலை அரசியல் திரா'விட'த் திருட்டு இயக்கங்கள் முழுமையாக முயல்கின்றன.

தமிழக அரசியல் திரா'விட' இயக்கங்களின் தமிழகக் கோவில் கொள்ளை இஸ்லாமியக் கொள்ளைக்காரன் "கஜ்னி மகாம்மத்"தின் கோவில் கொள்ளைக்கு சற்றும் குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது திருச்செந்தூர் வைரவேல்முதற்கொண்டு இவர்கள் "ஆட்டையா"போட்ட கொள்ளைகளைத் தனிநூலாக வெளியிடவேண்டும்.

இந்த அத்தனை சர்ச்சையிலும் டாப் காமெடி தமிழக மக்கள் நலவாழ்வுக்கான நிதியைத் திருடிய கருணாநிதியைச் சோழன் என்பதும், தமிழின் தமிழே என்பதும் அய்யன் வள்ளுவனின் குறளைக் குறளோவியம், தொல்காப்பியனின் தொல்காப்பியத்தினை மீண்டும் எழுதியதாலேயே கருணாநிதியை தமிழின் தமிழே என்று தமிழே வெட்கப்படும் அளவுக்கு ஜால்ராப் பெத்தடின் வேலை செய்கிறது.

அப்ப சத்தமே இல்லாமல் சீவகசிந்தாமணியிலிருந்து, சீறாப்புராணம் வரை, திருக்குறள், புறநானூறு, அக நானூறு, குற்றாலக்குறவஞ்சி, சிலப்பதிகாரம், என எண்ணற்ற தமிழிலக்கியங்கலுக்கு உரை எழுதிய, எழுதிக்கொண்டிருக்கிற, எழுதும் திருச்சி பழனியப்பா பிரதர்ஸ் அதாங்க நம்ம 'இறவாப் புகழ்" கொண்ட தமிழ்க் கோனார் உரை நூல் எழுதி வெளியிடுவோர்க்குத்தான் நிஜமாகத் தமிழின் தமிழேப் பட்டம் தரவேண்டும்.

கருணாநிதியிடம் மக்கள் வேண்டுவது எப்படிக் கொள்ளையடித்துச் சேர்த்தாய் 5000 கோடிச் சொத்துக்களை என்ற டெக்னாலஜிக்கல் சுயசரிதையே அன்றி தொல்காப்பியம் மாதிரி கோனார் உரையில் எளிதாகக் கிடைத்துவிடும் விளக்கவுரைகள் அல்ல.

சரி சிதம்பர சர்ச்சையில் எனது தீர்வு, அய்யா தமிழுக் காவலருங்களா, தமிழையும், சிற்றம்பலத்தையும் விட்டுடுங்கப்பா.

சாமியே இல்லைன்றவன் எல்லாம் சேர்ந்து வழியனுப்பி வச்சு, அவசியமில்லாமல் வெட்டியா ஏன்? எதுக்கு?னு 'வெங்காயத்தோட' பிரியாணி தின்னது செரிக்க ஏதாச்சும் பேசாதீங்கப்பூ.

தமிழும், சிற்றம்பலமும் அது பாட்டுக்கு பிழைச்சிக் கிடைக்கட்டும். நீங்க இதையும் தொட்டு சிற்றம்பலத்தையும் வெளங்காமப் பண்ணிடாதீங்க.

தமிழ்நாட்டுக்கு ஒரு பிரச்சினைன்னா அது அரசியல் திரா'விட திருடர்கள் இயக்கங்களே.

திருட்டுப் பெரியார் இயக்கம் சேலத்துல 768 அல்லாவோட பூட்டு நம்பரான்னு தட்டி வச்சாங்களாம். இன்னும் கொஞ்சம் வெளக்கமா தட்டியில எழுதிவைங்கப்பா திருடர்கள் இயக்கக் கொழுந்துகளா. இந்து சகோதரன் பொறுமை காத்ததில் இன்றுவரை பிழைத்திருக்கிறாய். அல்லாவைச் சொல்லித் தட்டிவச்சதுக்கு பதிலுக்குத் தட்டிரப் போறானுங்க பாத்து ஆப்பூ!

அதுசரி. பெரும்பான்மை அரசு அமைச்சப்பவே திருடுறதத் தவிர ஏதும் மக்கள் பிரச்னையைத் தீர்த்து வைக்கிறமாதிரி செய்யமாட்டீங்க. சிறுபான்மை அரசியல் திரா'விட' த் திருட்டு இயக்க அரசு இந்த மாதிரி மாய்மாலம் செஞ்சாத்தானே அது பெரியார் பாசறையில் பயின்ற பகுத்தறிவு!

எலே போங்கலே வெட்டிப்பயலுவளா! தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் புடிச்ச கெரகம்லே நீஙக!


அன்புடன்,


ஹரிஹரன்

Sunday, July 23, 2006

(22) என்ன இது? அமானுஷ்யமா? தெரியவில்லை..

இச்சம்பவம் நான் சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் இருந்த மேன்ஷனில் தங்கியிருந்து வேலை தேடிக் கொண்டிருந்த கால கட்டத்தின் போது நடந்த சம்பவம்.

அது 1990 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் நான் மேன்ஷன் அறையில் எனது அன்றைய தினத்திற்கான செயல்கள் அனைத்தும் முடித்துவிட்டு உறங்கச் சென்றுவிட்டேன்.

வேலையைத் சென்னைத்தெருக்களில் தேடி அலைந்த களைப்பில் அந்த மேன்ஷன் அறையின் சிமெண்ட் தரையில் விரித்த ஜமுக்காளத்தில் படுத்தவுடன் அயர்ந்து தூங்கிவிட்டேன்.

நள்ளிரவு பட்டென்று முழிப்புத் தட்டியது. கண்விழித்துப் பார்த்தேன். அருகில் என் சகோதரன் ஒரு அடி தூரத்தில் தூங்கிக்கொண்டிருக்கிறான்.

என்மீது ஏதோ ஒன்று அழுத்துவது மாதிரி உணர்கிறேன். கால் நீட்டி மல்லாந்த நிலையில் படுத்திருந்த என் மேல் நான்கு 100கிலோ அரிசி மூடைகளை போட்டு அமுக்குவது மாதிரியான உணர்வு.

அருகில் ஓரடி தூரத்தில் தூங்கிக்கொண்டிருக்கிற என் சகோதரனை எழுப்ப முயற்சிக்க கையை தூக்க முயற்சிக்கிறேன் ம்ஹூம் என்மீது ஏதோ ஒன்று
அமர்ந்து நசுக்கி அமுக்குவது அதிகமாகிறது.

சரி கை கால் தான் அசைக்க முடியவில்லை, குரலெடுத்துக் கத்தியாவது சகோதரனை எழுப்பிவிடலாம் என்ற எண்ணத்தில் அந்த கட்டிடமே அதிரும் வண்ணம் ஜீரோ டெஸி பெல்லில் காட்டுக்கத்தல் போடுகிறேன். என் காதுக்குக்கூட அந்த சத்தம் கேட்கவில்லை.

கை, கால் அசைக்க முடியவில்லை, பேச(கத்த) வும் இயலவில்லை. என்ன ஆயிற்று எனக்கு என்று என்று இயலாத அந்நிலையில் மனம் மட்டும் சிந்திக்கத் தொடங்குகிறது.

நான் ஹரிஹரன் என்ற ஞாபகம் இருக்கிறது. சிலமணிநேரம் முன்பாக சாதரணமாகத்தானே ஜமுக்க்காளம் படுக்கை விரித்துப் படுத்தேன் அதற்குள் என்ன ஆச்சு? என்று கவலையோடு யோசிக்கிறது.

ஒருவேளை நான் இறந்து போய்விட்டேனா? இறந்து போய்விட்டதால் தான் இப்படி எதையும் முன் (?!) மாதிரி செய்யமுடியவில்லை போலிருக்கிறது என்று பலவாறு எண்ணிக்கொண்டிருந்தது.

சரி நம்மால இனி ஏதும் ஆகிறமாதிரி இல்லை. என் இஷ்ட தெய்வமான போடி எல்லைக் காளியை நினத்துக் கொண்டேன். குபு குபுன்னு வியர்க்கிறமாதிரி தெரியுது கொஞ்ச நேரத்தில தொப்பலா வியர்த்து கொட்டிவிட்டது!

இப்போ மேலே இருந்த நான்கு அரிசிமூடை பளுவும் அது இதுவரை தந்த அழுத்தமும் குறைந்து காணாமல் போனது. கை கால் அசைக்க முயன்று முடியாமல் தோற்றுத் துவண்டு போயிருந்ததில் ஆயாசமாயிருந்தாலும் மீண்டும் முயற்சித்தேன். இப்போது முடிந்தது. நான் நினைத்த மாதிரி கால், கை அசைக்க முடிந்தது.

அருகில் உறங்கிக் கொண்டிருக்கும் சகோதரனை தட்டி எழுப்பினால் 'சள்" என்று விழுந்தான். சரி காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று எழுந்து விபூதியைப் பூசிக்கொண்டு மீண்டும் உறங்கினேன்.

காலையில் எழுந்து நானும் சகோதரனும் டாப், சைடு, ப்ரன்ட் வ்யூக்களில் தீவிர அனலைஸ் செய்தும் ஏதும் துப்புக் கிடைக்கவில்லை. இத்தனை ஆண்டுகளில் இன்னமும் அன்று என்ன நடந்தது, ஏன் நடந்தது என்று காரணம் அறிய முடியவில்லை.

1991ல் என் சித்தி பெண் திருமணத்தின் போது பேச்சு அரட்டையில் இச்சம்பவத்தை நான் விவரிக்கும் போது, சம்பவத்தை எதிர்கொண்ட நான் அமைதியாகப் பேசிக்கொண்டிருக்க கேட்டுக் கொண்டிருந்த என் உறவுக்காரப் பையன் மயங்கிவிழுந்து தண்ணீர் அடித்து திருநீறு பூசவேண்டியிருந்தது.

என்ன இது? அமானுஷ்யமா? சத்தியமா தெரியலீங்க!

பி.கு.
இந்த சம்பவத்திற்குப் பின்பாக நான் தொட்டதெல்லாம் துலங்கியது, முறையாக முயற்சித்தெல்லாம் கைக்குக் கிட்டியது என்னவோ உண்மைதானுங்க!

அன்புடன்,

ஹரிஹரன்

Saturday, July 22, 2006

(21) இனியேனும் அக்கறையாக "விதி"செய்வோம்

இதுவரையில் என் பயண அனுபவங்கள், எனது பார்வையில் திரா'விட'அரசியல் திறனாய்வுப் பதிவுகளுக்கு இடையில் மாறுதலுக்காக இந்தப் பதிவு.


பொதுவா நான் சாப்பிட்ட இலை / தட்டு சாப்பிடும் முன்பாக இருந்த அதே நிலையில் சாப்பிட்டு முடித்த பின்பும் கிட்டத்தட்ட இருக்கும்.


நீ எப்டி சாப்பிட்டா எனக்கென்ன? அப்பிடின்றீங்க... வேறுவழி உங்களுக்கில்லை! படித்தே ஆகவேண்டும்:-)))

  • எங்கோ ஒரு ஊரில் முகம் தெரியாத விவசாயி தன் கடின உழைப்பில் விளைவிக்கும் நெற்பயிர் நாற்றாக இருந்த போது அழுகி அழியாமல்,
  • மாற்றி நடவு செய்தபோது மிதிபட்டு அழியாமல்,
  • வளரும் போது பூச்சி தாக்கி அழியாமல்,
  • அறுவடை செய்யும் போது கீழே விழுந்து வீணாகமல்,
  • களத்து மேட்டில் போரடிக்கும் போது (டிராக்டர்) அழுத்ததில் நசுங்கிப் பாழாகாமல்,
  • நெல்லாக மூட்டைகட்டப்பட்டு சேமிப்புக்களத்தில் சிந்திப்போகாமல்,
  • ரைஸ்மில்லுக்கு மீண்டும் பயணிக்கும் போது போக்குவரத்திலே காணாமல் போகாமல்,
  • மீண்டும் சாக்குப்பைகளில் ரீ-பேக்கிங் செய்யப்படும் போது சிந்திவிடாமல்,
  • ஏற்றுமதிக்கான விமான, கப்பல் ப்யணத்தில் சரக்குச்சோதனையில் இலக்கை அடையுமுன் வெளியேறிவிடாமல்,
  • இறக்குமதி தளத்தில் சரக்குக் கையாள்தலில் சிந்திச் சிதறிவிடாமல்,
  • குவைத் "கல்ப்-மார்ட்டில்" விற்பனைக்கான இடம்வரை வரும்போது தன் வாழ்வைத் தவறவிடாமல்,
  • ஐந்தரை தினார் தந்து 20கிலோ மூடையாக எனது மிட்சுபிஷி காலன்டின் டிக்கியில் இறைந்துபோய்விடாமல்,
  • என் மனைவி சமைக்க ஆளாக்குப்படியில் அளந்தெடுத்துக் கழுவிடும்போது சமையலறை 'சிங்க்கில்' நீரோடு அடித்துச் சென்றுவிடாமல்,
  • சமைக்கப்ப்டும் குக்கரில் வீணே உதவாது ஒட்டிக்கொண்டு விடாமல்,


இத்தனை தடைகள் தாண்டி என்னிடம் வந்து சாம்பார் சாதமாக, தயிர் சாதமாக, புலவ்வாக என் தட்டை / இலையை அடையும் அந்த அரிசிக்குக் குறைந்தபட்சம்

  • தட்டில் இருந்து கீழே விழுந்து பாழாகிவிடாமல்,
  • கையிலே ஒட்டிக் கொண்டு கழுவும் போது கழிவோடைக்குள் வீழ்ந்து வீணாகாமல்

என்னிடம் வரும் அரிசிக்கு என்னால் அதன் "விதி" மாறிவிடாமல் இருக்க என்னாலான முயற்சிகளைச் செய்கிறேன்.


அரிசியாக அவதாரமெடுத்தபின் இலக்கை அடைய அரிசிக்கே இவ்வளவு 'விதி'ப்பயன் இருக்கிறது.

நானும் இந்த அரிசி மாதிரி தான்.

அரிசி அதன் இலக்கை அடைய முடியாது போகக் காரணங்களான அனைத்தும் எனக்கும் இருந்தன.

இறை அருளோடு இணைந்த எனது காலத்திலான முயற்சிகள் எனை எனது இலக்கை நோக்கிச் செலுத்துகின்றன.

பரஸ்பர interactions களால் பின்னிப் பிணந்திருக்கும் இன்றைய வாழ்வில், நம் விதி நம்மையும் தாண்டிய சிலரால் செய்யப்படுகிறது.

நாம் வேறு சில பிறரின் "விதிப்பயன்" செய்கிறோம்.

நம்மிடம் வருகின்றவற்றின் "விதிகளை" சிறப்போடு வீணாக்குதல் இல்லாமல் செய்தாலே நம் அனைவர் விதியும் மிகச் சரியாகவே செய்யப்பட்டதாகும்.

அன்புடன்,

ஹரிஹரன்

Tuesday, July 18, 2006

(20) ஹரிஹரனின் லெபனான் அனுபவங்கள்

லெபனான், பெய்ரூட் பத்தி நான் பார்த்ததை கொஞ்சம் மெல்ல எழுதலாம்னு இருந்தேன். இப்ப என்ன சொல்லி எழுதுனாலும் அடுத்த தரம் போனால் அந்த இடங்கள், பெய்ரூட் நகரமே இருக்குமா? அப்பிடின்ற சூழல் ஆயிடுச்சி! அதனால இந்தப் பதிவு.

சரி. பெய்ரூட் நகரில் தற்போது நடக்கும் இஸ்ரேலிய வெடி வெடிப்பு முடிந்த பின்பும் பொதுவா எதெல்லாம் லெபனானில் மாறாமல் இருக்கும் என்று ( நான் நம்புவதை) வேண்டுமானால் கொஞ்சம் பார்க்கலாம்:



1. பெய்ரூட் நகரில் கடல் நடுவே அமைந்த புறாப்பாறை (Pigeon Rock) என்ற பண்டையகாலத்தைய தற்கொலைப்பாறை!
http://img88.imageshack.us/my.php?image=lebanonrockmp6.jpg

2. நகரின் நடுவில் அப்போதும், இப்போதும், எப்போதும் தென்படும் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த கட்டிடங்கள்.

3. ஐரோப்பிய + அராபிய கலாச்சாரம் இணைந்த நகர வணிக மையம் .

4. யார் ஹெஸ்பொல்லாக்காரர்னு தெரியாத civic Homogenity.

5. குளிர்காலத்தில் மலைகளில் பனிச்சறுக்குஆடும் வித்தியாசமான ஒரே மத்திய கிழக்கு அராபியநாடு என்பதில் ஸ்பெஷலாய் கர்விக்கும் லெபனான் ஆசாமி.

6. பளிச்சென்ற துறு துறுப்புடன் காணப்படும் லெபனீஸ் இளம் பெண்கள்.


மற்றபடி நடப்பதைப் பார்த்தால் இன்னும் பத்து நாளில் இருக்கிற கொஞ்ச நஞ்சமெல்லாம் காணாமல் போய்விடும் மாதிரிதான் தெரிகிறது.


பொதுவாக அயல் நாடுகள் போகும் போது அங்கிருக்கும் "Infra Structure" ஐ நம்மூர் Infra Structure உடன் ஒப்பீடு செய்யும் எண்ணம் கண்டிப்பாக எனக்கு வரும். லெபனானில் இந்தியன் பெருமூச்சு விடுமளவுக்கு ஏதும் பெரிதாக இல்லை.

கொஞ்சம் நிம்மதி மூச்சு வேறு அரசியல்/தீவிரவாத/சமூக ஒப்பீட்டால் வந்தது!

அப்பாடா இந்தியாவில் ஹெஸ்போலா மாதிரியான தொழில் முறைத் தீவிரவாதக் குழுக்களில் இருந்து MP, Minister என்று அரசியல் வாதிகள் இடம் பெறவில்லை.

அதுசரி நம்மூர் அரசியல்வாதிகளே ஜனநாயகமான தீவிரவாதிகள் தானே!

அன்புடன்,

ஹரிஹரன்.

(19) திரா'விட'ப் பெத்தடினும் வளைகுடாத் தமிழர்களும்

வளைகுடாத் தமிழ் கூலித் தொழிலாளர்கள் அரேபியர்களால் துன்புறுத்தப் படுகிறார்கள் என்பது ஓரளவுக்கு உண்மைதான்.

அரேபியர்கள் நம் தமிழர்களை சரியாக நடத்தாததற்குக் காரணங்கள் இருக்கிறது. மிக முக்கியமான காரணம் அவர்கள் வேறு, நாம் வேறு, மொழி வேறு, கலாச்சாரம் வேறு.

அரேபியர்களால் வரும் பிரச்னைகளுக்கு பிறகு வருவோம்.

நான் அறிந்த குவைத்திலிருந்து ஆரம்பிக்கலாம்.

குவைத்தில் வாழும் 500,000 இந்தியரில் கிட்டத்தட்ட 100,000 பேர் தமிழர்கள். இந்த 100,000 பேரில் 50 முதல் 60,000 தமிழர்கள் கூலித் தொழிலாளர்கள் மிகக் குறைவான சம்பளத்தில் 40 தினார் மாத சம்பளத்தில் வாழ்பவர்கள்.

இதில் சரிபாதி தமிழ்த் தொழிலாளர்கள் திருமணமாகி மனைவி, குழந்தைகளைப் பிரிந்து அவல வாழ்க்கை வாழ்பவர்கள்.

நம் NRI விவகாரத்துறை அமைச்சர்கள் வருடாவருடம் பிக்னிக் மாதிரி வருகிறார்கள், தூதரக ஐந்துநட்சத்திர வசதிகளில் தங்கிவிட்டுப் போகிறார்கள்.

எல்லா வளைகுடா நாடுகளிலும் 50% இந்தியத் தொழிலாளர்கள் இம்மாதிரி லேபர் கேம்பில் மாதம் 40தினார் அளவுக்கு குறைந்த சம்பளம் வாங்குகிறவர்கள் இருப்பதை அறிந்திருக்கிறார்களா?

ஒருநாள் லேபர் கேம்பில் "சர்ப்ரைஸ் விஸிட்" அடித்து ஏழைத் தொழிலாளர் படும் துயர் நேரடியாகக் கண்டறிந்ததுண்டா?

நம் சக ஏழைத் தொழிலாளி இந்தியனை இந்திய அமைச்சரும், இந்திய அரசும் தமிழ்த் தொழிலாளிகளை தமிழக அரசியல் திரா'விட' இயக்கமோ, அதன் சீரிய இன மானத் தலைவர்களோ நலம் காண விழைந்ததுண்டா?

நம் ஏழைத் தமிழ்த் தொழிலாளி ஊரில் ஏஜண்டுக்கு 25-50,000 ரூபாய் கட்டி விட்டு அந்தப் பணத்தினை 4ஆண்டுகள் மாதம் 40தினார் சம்பாதித்து வட்டியோடு கடன் கட்டி என அவதிப்படுபவர்கள்.

டிராவல் ஏஜண்ட் கடன் சுமை, அநியாய ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானப் பயண ரிட்டர்ன் டிக்கட் கட்டணம் இவைகளால் மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தன் குடும்பத்தினைப் பார்க்க தமிழகம் வருகிறான்.

ஆனால் இவனுக்கு ஏதும் விமானக் கட்டணத்தில் சலுகை உள்ளதா? மூச்... கட்டணக் கடுமைதான் உள்ளது.

இதில் பெரிய கொடுமை 3-4 மணி நேர விமானப் பயணத்திற்கு ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானப் பயண ரிட்டர்ன் டிக்கட் கட்டணம் 20-30,000 ரூபாய் வசூலிக்கிறார்கள். ஆனால் இதே ஏர் இந்தியா 20மணிநேர அமெரிக்க விமானப் பயண ரிட்டர்ன் டிக்கட் கட்டணம் 40-50,000 ரூபாய் வசூலிக்கிறார்கள்.

நம் இந்திய அரசும் தமிழக அரசும் விழுந்தடித்துக் கொண்டு 'ஹஜ்' பயணிகளுக்கு 50% விமானக் கட்டணச் சலுகை தருகிறது. இஸ்லாம் மார்க்கமே இயலாத நிலையில் இருப்பவனை ஐந்து கடமைகளில் கடைசிக் கடமையான 'ஹஜ்'பயணிப்பதை வற்புறுத்தித் திணிக்காதநிலையில், மதசார்பில்லாத நமது இந்திய அரசும், மதசார்பில்லாத தமிழக அரசியல் திரா"விட" இயக்கங்களின் அரசும் நியாயமான விமானக் கட்டணச் சலுகை கிடைக்க வேண்டிய நம் தமிழ்த் தொழிலாளியை அட்டை மாதிரி உறிஞ்சுகிறார்கள்.

புள்ளி விபரத்துறை அமைச்சராக நமது தமிழர் ஜி.கேவாசன் இருக்கிறார், இவருக்கு நம் வளைகுடா ஏழைத் தமிழ்த் தொழிலாளியின் அவஸ்தைகள் தெரியாதா? தமிழின மான, நலன் காக்கும் திரா'விட'க் காவல் வெங்காய இயக்கங்கள் என்ன செய்தன?

சரி. இது ஒரு பக்கம்.

நம் தமிழ்த் திரையுலக காம(நெ)டியன்களால் வளைகுடாவில் வசிக்கும் நம் ஏழைத் தமிழ்த் தொழிலாளி படும் மன ரணங்கள். அய்யோ பாவம்! நம் ஏழை வளைகுடாத் தமிழன் தன் பொருளாதார இயலாமையால் மூன்று நான்கு வருடத்திற்கு ஒருமுறை வளைகுடாவிலிருந்து தமிழகம் வரும் அவல நிலையினை இந்தக் காம(நெ)டியன்கள் விவேக், மணிவண்ணன் இதர பலரரும் காம(நெ)டியாக:

"அதெப்படி அப்பன் துபாய் போய் ரெண்டு வருஷமாச்சு, பொண்டாட்டி மூணாவது மாசம் முழுகாம இருக்கா?" மாதிரியான காம(நெ)டிக் காட்சிகள், எல்லாம் இவர்களே சொந்தமாக காம(நெ)டி டிராக் எழுதியதுதான். எல்லாம் திரா'விட' பெத்தடின் சிந்தனை!


பார்ப்பன இனப்பெண்களை தேசிய உடமை ஆக்கச் சொன்ன, முற்போக்குத் திருடர்கள் கழகம் ஊட்டிய திரா'விட'ப் பெத்தடின் சிந்தனையின் பரிணாம வளர்ச்சி. இன்று தமிழ்ச் சமுதாயத்தையே கேவலமாக்கிக் கொண்டிருக்கிறது.

மனித உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும் ஏது ஜாதி, மதம், இனம், ஏது மொழி?. இந்த தந்தை,தாய்,சகோதரி,மனைவி, மகள், உறவுகள் மற்றும் பாரம், அன்பு, அக்கறை, நட்பு போற உணர்வுகள் எல்லா ஜாதி,மதம்,இனத்திலும் ஒன்று தானே!

கொஞ்சம் யோசியுங்கள். நம் அரசியல் திரா'விட' திருடர்கள் இயக்கங்கள் உறவுகளையும், உனர்வுகளையும் சிதைத்து சின்னாபின்னப்படுத்திய திருடர்கள் கழகம் ஊட்டிய திரா'விட'ப் பெத்தடின் செய்கின்ற வேலை இது என்பது புரியும்.

நம் தாய்த்தமிழகத்தில் தானே "மாமனாரின் இன்ப வெறி", தம்பி பொண்டாட்டி, திருடுப்பயலே, அண்ணன் பொண்டாட்டி அரைப் பொண்டாட்டி என்று தமிழ்ப் படங்கள் தமிழர்களால் பெரிதும் விரும்பி அலைகடலென ஆர்ப்பரித்துப் பார்க்கப்படுகின்றன.

உலகில் நம் தமிழகத்தில் தான் காலை 9மணிக்கே மலையாளப்படம் பார்க்க இளைஞர்கள் பாடாவதி திரையரங்குகள் முன் கூடுகிறார்கள்.

இதுக்கும் வளைகுடா ஏழைத்தமிழனுக்கும் என்ன தொடர்பு? என்று தானே குழம்புகின்றீர்கள். இதோ விளக்கம்.

திருமணமாகி, பொருளாதர இயலாமையால் மனைவி குடும்பத்தைப் பிரிந்து வாழும் நம் வளைகுடா ஏழைத்தமிழன் அவனது கல்வியின்மை, மற்றும் அவனது ஒரே பொழுது போக்காகத் தன் சக நண்பர்களோடு தமிழ்த் திரைப்படம் பார்க்க நேர்கையில், விவேக், மணிவண்ணன் காம(நெ)டியினால் தனது குழந்தைமீது, மனைவி மீது சந்தேகப் பொறி விழுந்து வாழ்வை எரிக்கிறது. சரி விடுமுறைக்கு தமிழகம் வரும் போது மீண்டும் மீண்டும் மறு ரிலீஸாகும் "மாமனாரின் இன்ப வெறி' தனது வயதான தகப்பனை சந்தேகிக்கத் தூண்டுகிறது, அண்ணன், தம்பி பரஸ்பர சந்தேகம் வரும்படி செய்கிறது. திருட்டுப்பயலே மாதிரி படங்கள் நண்பனைச் சந்தேகம் கொள்ளத் தூண்டுகின்றன.

இருந்தாலும் நம் வெளிநாடு வாழ் ஏழைத் தமிழ்த் தொழிலாளி இவ்வளவு வெள்ளந்தியா இருக்கக்கூடாதுங்க. இவ்வளவு கேவலமான தமிழ்க் காம(நெ)டியான்கள் "கலைச் சேவை"ன்னு துண்டேந்தி மலேசியா, சிங்கப்பூர்,துபாய்னு வரும் போது கைக்காசப் போட்டு மரியாதை செய்கிறார்கள் (லோஹிப் நடிகைகளை பார்க்குற சாக்கில்)

"அய்யர் தி கிரேட்" என்ற மலையாள டப்பிங் படப் போஸ்டரின் மீது தார் பூசிய அரசியல் திரா'விட' திருடர்கள் கழகக் கண்மணிகள் "மாமனாரின் இன்பவெறி" என்ன எதிர்ப்புக் காட்டினார்கள்? விழுந்தடித்து அந்தப் படத்திற்கு வரிசையில் அல்லவா டிக்கட் வாங்க நின்றார்கள்.

இதோ லேட்டஸ்ட் உயிர் படம் "அண்ணன் பொண்டாட்டி அரைப் பொண்டாட்டி" என்ற புர்ர்ர்ச்ச்சி வாசகத்துடன் வெளிவந்திருக்கிறது. சக்கைப் போடு போடும். நம் தமிழர்கள் இந்த டைட்டிலுக்கே வெள்ளி விழாப் படமாக்கி விடுவோம்.

நம் தமிழ்ப் பாதுகாப்பு இயக்க தங்கரு, திருமா, தமிழ்க்குடிதாங்கி, என்ன செய்தார்கள்? ஏதாவது குஷ்பூ படத்தில் ஸ்லோமோஷனில் குஷ்பூவை ரஸித்தபடி தமிழ்ப் பண்பாட்டைப் பாதுகாக்கிறார்கள் போலிருக்கிறது.

அகில உலக தமிழின மானத்தலைவர் கலைஞரு அவரு துணைவியார் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.

அப்ப நம்ம வளைகுடா ஏழைத் தமிழ்த் தொழிலாளி கதி?

"மஞ்சத்துண்டைப்" போட்டு தாண்டிச் சொல்றேன் ஏதும் நல்லது நடக்காது.

ஒருவேளைம் இந்தியத் தேர்தல் ஆணையம் NRI களுக்கு ஓட்டுரிமை உண்டு என்று அறிவித்தால் நம் தமிழக அரசியல் திரா'விட' ஓட்டுப் பிச்சைக்கார, மற்றும் திருடர்கள் இயக்கங்கள் அதே மஞ்சள்துண்டை வளைகுடாத் தமிழனுக்கு அணிவிக்க ஓடி வரலாம்.

ஏழைத் தமிழ்த் தொழிலாளி படிக்காதவன், திரைப்படங்கள் நாட்டுநடப்பு என நம்புபவன்.


சென்னைக்கும் வளைகுடா நாடுகளுக்கும் இடையே தனியார் சேவையும் கிடையாது. ஏர் இந்தியாவின் சிக்கன விமானச்சேவையான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவையும் தமிழகத்திற்குக் கிடையாது.

நம்ம அகில உலக தமிழின மானத்தலைவர் கலைஞரு தொலைதொடர்புத்துறைக்குக் காட்டிய பிடிவாதம் மாதிரி, இந்திய விமானப் போக்குவரத்துத் துறை தந்தால் தான் நடுவண் அரசில் சேருவேன்னு கொளுகைப் பிடிப்பு ஏன் காட்டவில்லை?

அதுசரி கிங் பிஷர் "விஜய் மல்லய்யா" மாதிரி இன்னொரு பேரன் ஊஊஊதயநிதி "சன் ஏர்வேஸ்" தொடங்கினா இன்னொரு அரசியல் திரா'விட'க் கொளுகைக் களுதை தானா வந்திடாதுங்கிறீங்க. நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்ங்க!

நமக்கு அவ்வளவா அரசியல் திரா'விட'ப் பகுத்தறிவு கிடையாதுங்க. மன்னிச்சுக்கோங்க!

அன்புடன்,

ஹரிஹரன்

Monday, July 17, 2006

(18) பாகம்-3 ஏமாற்றும் அரசியல் திராவிடப் "பெத்தடின்"

எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் நம் தமிழ் நாட்டிலே... சொந்த நாட்டிலே...

இன்னும் எத்தனைக் காலம் தான் திரா'விட'ப் பெத்தடின் ஊசி போட்டு ஏமாற்றுவார்...


பட்டியல்-1


  1. நல்ல ஆரோக்கியமான உடும்பு -1
  2. உறுதியான அறுந்துவிடாத கயிறு-100 முழம்
  3. சிறுகத்தி -1
  4. நெம்புகோல் எம்பார் -1
  5. வழுக்கும் விளக்கு எண்ணைய் -1 பாட்டில்
  6. முகம்/கண் மறைக்கும் முகமூடி-1
பட்டியல்-2


  1. க்ரோம்-வனடியம் ஹைஸ்பீடு ஆக்ஸாபிளேடு-2
  2. செல்போன் காமிராவுடன் -1
  3. ஒத்த எண்ணமுள்ள கூட்டாளி-1
  4. சிறுகத்தி -1
  5. நெம்புகோல் எம்பார் -1
  6. தப்பியோட வாகனம்-1

என்ன இது? ஒரே பட்டியல் மயம்? குழப்பமா இருக்கா? இதோ விளக்கிடறேன்

பட்டியல் 1 இது தமிழ்நாட்டில் 70-80 ஆண்டுகள் முன்பாக (அரசியல் திரா'விட' இயக்கம் தோன்றும் வரைக்கும்) நம் தமிழ்ச் சமூகத்தில் தொழில் முறையில் திருட்டைச் செய்து பிழைப்பை நடத்திய திருவாளர் தொழில்முறைத் திருடரின் "டூல் கிட்."

பட்டியல்-2 இது நம் தமிழகத்தில், சென்னையில், புறநகர்களில் கைவரிசையைக் காட்டும் ஆந்திர, பீகார்,ராஜஸ்தான் போன்ற வெளிமாநில முகமூடிக் கொள்ளையர்கள், தொழில் முறையில் கொள்ளையடிப்பைச் செய்து பிழைப்பை நடத்திய தொழில்முறைத் திருடரின் "டூல் கிட்".

சரி. நம் தமிழ்நாட்டில் நாற்பதாண்டுகளாக ஆட்சியில் இருந்து கொள்ளையடிக்கும் நம் அரசியல் திரா'விட' இயக்கங்கள், தலைவர்கள் வைத்திருக்கும் டூல் கிட் பட்டியல் இதோ:

பட்டியல்-3

  1. ஆரியரை எதிர்ப்பது (அப்படி யாருமே கிடையாது)
  2. (ஹிந்து)மத எதிர்ப்பு, (ஹிந்து)தெய்வ மறுப்பு + அவமதிப்பு
  3. வெட்டி வாய்ச்சவடால் + நோன்புக் கஞ்சி குடிப்பு
  4. தமிழ், இன,மானக் காவல் (999 ஆண்டுகள்)
  5. இலங்கைத் தமிழர் பிரச்னை
  6. சாதி ஒழிப்பு (:-))) சிரிப்பு தாளலீங்க)
  7. பகுத்து அறியும் பகுத்தறிவு
  8. காவிரிப் பிரச்சினை

நம் தமிழக அரசியல் திரா'விட' இயக்கங்கள், சீரிய தலைவர்களால் சத்தமில்லாம பெரிய சாதனை சாதிச்சிருக்கோம்ங்க! தொழில் ரீதியிலான திருடுதல்-ங்கிற தொழிலே காணாமப் போயிடுச்சுங்க! கன்னம் வைத்துத் திருடும் அந்தத் துறையில் பாண்டித்தியம் உள்ள தமிழர் பெரியார்களும், அவர் பாசறையில் பயின்ற எல்லோரும் ஆட்சிக்கு வந்துட்டாங்க.

இப்ப எல்லாம் நம் தமிழ்நாட்டுத் தொழில் முறைத் திருடர் பொருளா, நகையாத் திருடுறதை ஆந்திர, பீகார், ராஜஸ்தான் போன்ற வெளி மாநிலத் திருடர்க்கு 'அவுட்ஸோர்ஸிங்' விட்டுட்டாருங்க!

ஒத்துக்க வேண்டிய உண்மை தானுங்களே! நம் தமிழக அரசியல் திரா'விட' இயக்கங்களோட தனிச் சாதனையாச்சே இது!

பி.கு.1

நானும் ரொம்பக் கவனமா சாதனை செய்தவர்களை திருடர்-ன்னு மரியாதை விகுதியான் 'ஆர்'விகுதி சேர்த்துச் சொல்லியிருக்கேங்க!

பி.கு-2

சாதனை செய்தவர்களை அவன், இவன்னு பேசுனா தெய்வக் குத்தம் வந்துரும்னு பகுத்தறிவோட "மஞ்சள் துண்டுச் சாமியார் சொல்றாருங்கோ!

அன்புடன்,

ஹரிஹரன்


Sunday, July 16, 2006

(17) ஹரிஹரனின் இங்கிலாந்து அனுபவங்கள்

லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் விமானம் இறங்கு முன்பு நடுவானில் மனதில் ஒரு மாதிரி இனம் புரியாத வித்தியாசமான உணர்வு தோன்றுகிறது கொப்பளிக்கின்ற கோபமாக இல்லை, உற்சாகம் கொப்பளிக்கும் பெரும் மகிழ்ச்சி என்றில்லை, ஜஸ்ட் இட் வாஸ் அ டிபரண்ட் மூட் ஆல் டுகதர்.

இங்கிருந்து வந்து தானே வணிகம் என்று ஆரம்பித்து நம் இந்தியாவை அடிமையாக்கி, சுரண்டி இன்றளவில் தொடரும் பல சமூக குழப்பங்களுக்கு வித்திட்ட பரங்கியர் நாட்டின் தலைநகரத்தில் கால் வைக்கப்போகிறோம் என்பதால் ஏற்பட்டது.

தனிமனிதன் உலகம் சுற்றி வரும் போது பல நல்ல , உபயோகமான விஷயங்கள் அறிந்து கொள்ள முடிகிறது. என் மாதிரி சாதாரண கடைக்கோடி கிராம இந்திய இளைஞன் தட்டுத்தடுமாறி, இந்தியாவில்-தமிழகத்தில் கல்விக்கு இட ஒதுக்கீட்டில் இடமில்லாமல் போய் அவதிப்பட்டாலும், தளராமல் உழைத்து முயற்சிக்கும் போது உலகம் சுற்றி அறிந்து கொள்வது சாத்தியமாகிறது.

சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் ஆகப்போகும் நிலையில் ஏராளமான இந்தியர்கள் பல்வேறு துறைகளில் பல்வேறுநாடுகளில் நம்பிக்கை முத்திரையைப் பெற்று இருக்கிறார்கள் தங்கள் அயராத கடும் உழைப்பின் காரணமாக.

இன்று இந்தியர்களின் 'ஹால்மார்க்' குணாதிசயமான பொறுமையும் அதன் விளவான 'லாஜிக்கல்'சிந்திப்பினால் மென்பொருள் துறையில் தனியான இடத்தினை இந்தியர்கள் தமக்கென உருவாக்கிக் கொண்டுள்ளனர்.

இங்கிலாந்து என்றவுடனே நமது சுதந்திரம் பற்றிய எண்ணங்கள் முதன்மைப்படும். எனக்கு அப்படிப் பட்டது. வெள்ளைக்காரக் கிழவன், கிழவியைக் காணும் போது இவர்கள் ஒருவேளை அவர்களது இளம் வயதில் நம்மூரில் கொள்ளையடித்துக் கொட்டமடித்து இருப்பார்களோ என்ற எண்ணம் அவ்வப்போது வந்து சென்றது.

ஹீத்ரூ ஏர்போர்ட்டில் இமிக்ரேஷனில், க்ரவுண்ட் க்ரூ, எனப் பல முக்கிய இடங்களில் தலைப்பாகை கட்டிய நம் சீக்கியச் சிங்குகளைக் காணும் போது தனி மகிழ்ச்சி.

நான் சென்ற Hemel Hempstead, Luton போன்ற இடங்களிலும் நிறைய இந்தியர்கள் இருக்கிறார்கள். அம்மாதிரியே ஏராளமான பாகிஸ்தானியர்கள் மற்றும் பங்களாதேஷிகள்.

இந்திய-பாகிஸ்தானியர்களின் நேரடித் தொடர்பும், அவர்களிடையே நிலவும் நாகரீகமான், நீறுபூத்த வெறுப்பும் காணக்கிடைத்தன. பாகிஸ்தானியரில் நிறைய பாக். காஷ்மீர்க்காரர்கள், பேசினால் பேச்சின் இரண்டாவது வரியிலேயே இந்திய வெறுப்பும், நக்கலும் எளிதில் தென்படுகிறது.

பங்களாதேஷிகள் ஆங்காங்கே "இந்திய"உணவுக் கடைகளை "இண்டியன் ரெஸ்டாரண்ட்' என்று நடத்துவதைப் பார்க்கமுடிகிறது.

நம்மூர் அரசியல் வாதிகள் கூவம் நாறிப்போனதைச் சமாளிக்க வம்புக்கிழுக்கும் "தேம்ஸ்நதி" லண்டன் நகரின் நடுவில் ஓடுகிறது. இதர ஐரோப்பிய நகரினிடையே ஓடும் நதிகளுடன் ஒப்பீடு செய்தால் "தேம்ஸ்"" அழுக்கு நதியாகிறது. தேம்ஸ் நதியில் இன்றும் நிறைய நீர் ஓடுகிறது, பெரிய படகுகள்
உல்லாச மற்றும் சரக்குப் படகுகள் தேம்ஸ் நதியில் பயணிக்கிறது.

நம் அரசியல்வாதிகல் கூவத்தை தேம்ஸ் நதியோடு ஒப்பீடு செய்வதெல்லாம் ரொம்பவே டூடூ மச்.

நம்மூர் ஆங்கிலவழிப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி படிக்கும் நம் குழந்தைகள் பாடும் நர்சரி ரைம்ஸில் வரும் " லண்டன் ப்ரிட்ஜ் இஸ் ஃபாலிங் டௌன்" புகழ் 'லண்டன் டவர் ப்ரிட்ஜ்" தேம்ஸ் நதியின் குறுக்காக பெரிய படகுகள்(ஃபெர்ரீஸ்) வரும் போது திறந்து மூடும்படி 1894ல் கட்டப்பட்டது, இன்றும் செயல் பாட்டில் வைத்திருக்கிறார்கள்.

லண்டன் "கறுப்பு டாக்ஸிகள்" அதன் பிரத்யேக அமைப்புக்காக புகழ் பெற்றவை. என்றாலும் நம்மூரில் இறுதியாத்திரை அமரர் ஊர்தி நினைவுக்கு வருவதைத் தடுக்கமமுடியவில்லை.

லண்டனின் "சிவப்புநிற இரட்டைமாடி பேருந்துகள்" (தற்போது நிறுத்தப்பட்டுவிட்டன) நம் மும்பையை நினவுபடுத்துகின்றது. இந்திய மெட்ரோ நகர்களில் ப்ரிட்டிஷ்காரர்கள் கட்டிய கட்டடங்கள் நிறைய இருப்பதும் லண்டனை சில ஆங்கிளில் நம் இந்திய நகரம் என்று எண்ணத் தோன்றுவதும் தவிர்க்கமுடியாததாகிறது.

ஐரோப்பிய நகரில் லண்டன் எனக்குப் பிடித்துப்போனதற்கு சாப்பாடும் காரணம். நம்மூர் சாப்பாடு எதுவாயினும் எளிதில் பிரிட்டிஷ் நகர்ப்புறங்களில் கிடைகிறது.

"ஆக்ஸ்போர்டு ஸ்ட்ரீட்" மாதிரியான தெருக்களில் 40-50% இந்தியத் துணைக்கண்ட முகங்களாக எதிர்ப்படுகிறது.

'லண்டன் ட்யூபில்' பயணிக்கும் போது நிறைய இந்திய முகங்கள் தென்படுகின்றன. இந்திய இளைஞர்களைப் பார்த்துப் புன்னகைத்தால் படுசிக்கனமாக பதில் புன்னகை அல்லது ஆழமான பார்வையோடு நிறுத்திக் கொள்கிறார்கள். அங்கேயே பிறந்து இந்தியாவைப் பற்றிக் கேட்டும், சினிமா வாயிலாக மட்டும் அறிந்த அடுத்த தலைமுறையாக இருப்பவர்களாக இருக்கலாம்.

லண்டன் ட்யூப் பற்றிக் கொஞ்சம் சொல்லியாக வேண்டும். லண்டன் நகரில் ஒரு 30 கி.மீ சுற்றளவுக்கு காலுக்கு 100மீட்டர் கீழே தனி ரயில் உலகமே செய்திருக்கிறார்கள். அண்டர்க்ரௌண்டில் இரண்டடுக்கு ரயில் நிலையங்கள்.
ரயில் சேவை தனியார் மயம். தேம்ஸ்லன், பிக்காடலி எனப் பல தனியார் ரயில் சேவைகள்.

நம் சென்னை பறக்கும் ரயில் திட்டம் நினைவுக்கு வந்தது. 1980களில் ஆரம்பிக்கப்பட்டு 25ஆண்டுகள் கழித்து சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து திருவான்மியூர் வரை 10கி.மீ என்று படுஸ்பீடாக பறந்துவந்திருக்கிறது!

நம்மூர் அரசியல்வாதிகள் நம் மக்களைக் கொள்ளை அடித்த பணத்தில், இங்கிலாந்தில், ஆக்ஸ்ப்போர்டில் தங்கள் வாரிசுகளைப் படிக்க வைக்கிறார்கள். ஆனால் அங்கிருக்கும் "infrastructure Development" மாதிரி நம்மூரில் ஏன் செய்ய முழுமனதுடன் முயல்வதில்லை?

அய்யா சாமி! ஆயாசமாயிடுச்சுங்கோ!


அன்புடன்,

ஹரிஹரன்.

Thursday, July 13, 2006

(16) போலியனும் வலைத்தள ஜனநாயகமும்

ஐயன்மீர்,

பொதுவாக தமிழக, இந்திய எல்லை தாண்டி வெளியே வேலைக்காக வந்து தங்கி இருக்கும் தமிழ் மக்கள் அவர்கள் இருக்கும் அயல் நாட்டில் எங்காவது அரிதாக தமிழ் எழுத்துக்களைப் பார்க்கும் போது மனம் கொள்ளும் மகிழ்ச்சி கொண்டுவந்திருந்தார்கள்.

இணையம் வந்து இந்த சமீப 5 ஆண்டுகளில் தமிழ் தினசரிகள், வார சஞ்சிகைககள் என வந்து தமிழ் படித்து மகிழ்வது அயல் நாட்டில் மிகப்பெருமளவு கூடியது.

இணைய தொழில்நுட்ப முன்னேற்றத்தில் ப்ளாக்கர், தமிழ்மணம், தேன்கூடு மாதிரியான இணைய முயற்சிகள் பல நாடுகளில் வசிக்கும் மக்கள் தங்கள் உலகத்தை, அனுபவங்களை, நாட்டு நடப்பை அறிந்து கொள்ள உறவினர், நண்பர் இல்லாத குறையை பலருக்கு தீர்த்து வைத்துக் கொண்டிருக்கும் இந்த இனிய காலகட்டத்தில், அதே டெக்னாலஜி "போலியன்கள்" மாதிரி மனம் பிறழ்ந்த சிலரிடம் குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை மாதிரி அவஸ்தைப் படவும் செய்கிறது.

போலியன் நம்பும் திரா'விட'க் கருத்துக்கு மாற்று கருத்து உள்ள பதிவர்கள் மீது "காரக்டர் அசஸினேஷன்" பாணியில் தொந்திரவுகள்!. தனியனாய் இம்மாதிரி வலைப்பூ வன்முறைகளைச் சந்திப்பதைவிட நான் வழிபடும்
"வீர ஹனுமான் " என் தமிழுக்கு உரம் சேர்க்கும் "திருவள்ளுவர்" துணையோடு இருக்குமாறு எனது புகைப்படத்தினை மாற்றியிருக்கிறேன்.

வலைத்தளத்தில் முகம் காட்டிப் பேசும் ஜனநாயகம் "போலியன்"மாதிரி நபர்களால் தொந்தரவுக்கு உள்ளாகலாம். போலியால் ஜனநாயகம் அறவே இல்லாமல் போய்விடாது.

வின்ஸ்டன் சர்ச்சில் சொன்ன "ஜனநாயகம் மாதிரி மோசமானது எதுவுமில்லை...என்றாலும் அதுவே சிறந்தது" என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன.

தமிழக அரசியல் திரா'விட'பெத்தடினின்' தீவிர தாக்கத்தினின்று மீண்டு ஜனநாயகப் பாதைக்கு, ஜனநாயக சிந்திப்பு, ஜனநாயகச் செயல்பாடுகளில் நம்பிக்கை வைக்குமாறு திரு. போலியனை "உண்மையான பகுத்தறிவினைப்" பயன் படுத்த வேண்டுகிறேன்.

என்னைப் "புனிதப் பிம்பமாக்கும்" முயற்சி இல்லை இப்பதிவின் நோக்கம். என்பதையும் தெளிவுபடச் சொல்லிவிடுகிறேன் இங்கு!

அன்புடன்,

ஹரிஹரன்

Wednesday, July 12, 2006

போலிவலைப்பூwww.harimahesh.blogspot.com

தமிழ் மணம் மற்றும் தேன்கூடு நிர்வாகிகளுக்கு,

போலியன் ஒருவன் எனது போட்டோ, எனது வலைப்பூ மாதிரியே அச்சமில்லை அச்சமில்லை என்று பாரதி வரிகளுடன் போலியாக வலைப்பூ ஆரம்ப்த்து பின்னூட்டமிட்டுப்பதை நுனிப்புல் பதிவில் பார்க்கிறேன். இந்த வலைப்பூ www.harimahesh.blogspot.com என்பது.

எனது முறையான ஒரிஜினல் வலைப்பூ www.harimakesh.blogspot.com.

எனவே போலியான வலைப்பூவை தங்களது பதிப்பில் இருந்து நீக்கவும்.

Tuesday, July 11, 2006

(14) பாகம்-2 "அரசியல் திரா'விட'ப் "பெத்தடின்"

பாகம்-1 http://harimakesh.blogspot.com/2006/07/12a-1.html

அரசியல் திரா'விட' "பெத்தடினில்" மரத்துப்போய் விட்டதா நம் தமிழ்ச்சமுதாயம்?

நம் தமிழ்ச்சமுதாயத்தை மரத்துப் போகவைத்திருக்கும் இதர தமிழக அரசியல் திரா'விட'ப் "பெத்தடின்களைப்" இனிப் பார்க்கலாம்.

படிக்கின்ற புத்தகம், கேட்கின்ற பேச்சு, பார்க்கின்ற காட்சி இவை எண்ணங்களை ஏற்படுத்துகிறது.

எண்ணங்களின் தரம் அதன் மூலமான புத்தகத்தின் எழுத்து, கேட்கின்ற பேச்சு, காணும் காட்சி இவைகளில் அடங்கியிருக்கிறது.

மனம் என்பதே எண்ணங்களின் ஆற்று ஓட்டம். எண்ணங்களின் தொகுப்பே மனம். நமது செயல்கள் அனைத்தும் நமது எண்ணங்களின் வெளிப்பாடே. எனவே நம் மனம் எப்படியோ அப்படியே நம் செயல்கள். தரமான எழுத்து, பேச்சு, காட்சியைக் கொண்டு உருவாகும் எண்ணங்களின் தரம் சிறப்புடனும் அம்மாதிரியான எண்ணங்களால் உந்தப்பட்டு வெளிப்படும் செயல்கள் நல்லவையாக அமைகின்றன.

தரமற்ற எழுத்து, பேச்சு,காட்சியைக் கொண்டு உருவாகும் எண்ணங்களின் தரம் கீழ்த்தரமானதாகவும் அம்மாதிரியான எண்ணங்களால் உந்தப்பட்டு வெளிப்படும் செயல்கள் கீழ்த்தரமானதாகவும் அமைகின்றன.

As your mind so is your thoughts
As your thoughts so is your action

என்னத்துக்கு இதெல்லாம்? ஏன் இந்த 'ராவுதல்' என்கிறீர்கள் தோ வந்துட்டேன்!


அரசியல் திரா'விட' தலைவர்கள் ஆவேச (ஊருக்கு உபதேச) பேச்சு, செயல்களை ஒப்பு நோக்குவோம்:

தமிழக அரசியல் திரா'விட' இயக்கங்களின் தலைவர்கள் மாதிரி கேடு கெட்டவர்களைத் தேடினாலும் கிடைக்காது. இவர்களது வழிநடத்தலில் நம் தமிழ்ச் சமுதாயம் சீரழிக்கப்படும் கேவலங்களை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்:

தமிழ்நாட்டிலே ஹிந்தியை எதிர்த்து நடந்த "மொழிப்போரில்" (ரயில் வராத நேரத்தில்) தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து வரலாறு படைத்த நம் தமிழ் அரசியல் திரா'விட'இயக்கத்தலைவரான கருணாநிதி தனது வடமொழிப் பெயரை அப்படியே வைத்துக்கொண்டார். அதற்கு காரணமாக இவரிடம் "பேரறிஞர்"அண்ணா கருணாநிதியென்ற பெயர் நிலைத்துவிட்டபடியால் ("ப்ராண்ட் ஈக்குவிடி") மாற்றவேண்டாம் என்றதால் தட்டமுடியாமல் வைத்துக்கொண்டாராம்.

சரி. மகனுக்கு ஏன் "ஸ்டாலின்" என்ற வெளிநாட்டுப்பெயர்?
தனது பேரன்களுக்கு கலாநிதி, தயாநிதி, உதயநிதி என்று வைத்தது ஏன்? "ப்ராண்ட் ஈக்குவிடி"தொடரவேண்டும் என்ற எண்ணம் அல்லாமல் வேறு என்னவாம்?


கலைஞர் குடும்ப தொலைக்காட்சிகளுக்குப் பெயர் பாருங்கள் சன்,கேடிவி,உதயா,சூர்யா இவைத் தமிழ்ப்பெயர்களா? அப்போ உண்மையாக மொழிப்போர் என்று உயிர்விட்ட தமிழ் இளைஞர்கள்?! கிறுக்கன்கள் பாவம்!

அகில உலகத் தமிழினத் தலைவர் கலைஞரின் "தண்டவாள"ப் புகழ் தமிழ் மொழிப்பற்று பம்மாத்து என்பது வண்டவாளத்தில் ஏறிக்கிடந்தாலும்

உளவியலாக உற்று நோக்குங்கள்...எங்கும்தமிழ் எதிலும் தமிழ்... மொழிப்போர்... ஹிந்தி எதிர்ப்பு என்ற சவடால் அரசியல் திராவிடப்"பெத்தடினில்" எது உண்மை எது சுயநலம் என்று பகுத்தறிய இயலாமல் மரத்துப்போய் கிடக்கிறது நம் தமிழ்ச்சமுதாயம்.

சரி. அடுத்த அரசியல் திராவிடப்"பெத்தடின்"ஊசி பார்ப்போம் .
இந்த தமிழக அரசியல் திரா'விட' இயக்கங்களின் தலைவர்கள் கடுமையாக உழைத்து நம் தமிழைச் செம்மொழி ஆக்கியிருக்கிறார்கள். ஒத்துக்கொள்ள வேண்டியதுதான். எப்படிச் செம்மொழி ஆக்கினார்கள் என்று பார்க்கலாம்.

சாம்பிளுக்கு இரண்டு பேர் போதும்.

1..திரு. தீப்பொறி 'ஆறுமுகம்"
2. திரு. வெற்றி கொண்டான்

இருவரும் நமது அரசியல் திராவிடப்"பெத்தடின்"ஊசிகளைத் தமது தெருமுனைக் கூட்டங்கள் மூலம் கடைக்கோடி தமிழகக் கிராமத்துத் தமிழன் வரை கொண்டுபோய் சேர்த்தவர்கள்.

எதிர்கருத்துக் கொண்டிருக்கும் மாற்று அரசியல் திரா'விட'க் கட்சித் தலைவர்களை, குழுக்களை, தனி நபர்களை இவர்கள் தலைமை ஒப்புதலுடன் பேசும் சிலேடை, நேரடிப் பேச்சுக்கள் அனைத்தும் பாலுணர்வு, ஆண்குறி, பெண்குறி, முறையற்ற புணர்ச்சி சார்ந்த "செந்தமிழ்'ப் பேச்சு!

இந்தப் பேச்சைக் கேட்க கூட்டமான கூட்டமாக நம் தமிழ்ச்சமுதாயம் வரும்

மே மாதம் 2006 தேர்தல் இறுதிநாள் பிரச்சாரத்தில் சிந்தாதிரிப்பேட்டைக் கூட்டத்தில் பேசும் "அகில உலகத் தமிழினத் தலைவர் கலைஞரின்" முத்தாய்ப்பு வரிகள்:

"என்னையே தமிழகத்திற்குப் பரிசாகத் தருகிறேன்... எதிர்க்கட்சியினர் (ஜெயலலிதா) தன்னை அம்மாதிரி தமிழ்மக்களுக்குத் தரமுடியுமா?
அடடா! என்னமாய் தாய்த்தமிழில் சிலேடைச்சொல்லாடல்!

5வது முறை தமிழகத்தின் முதல்வனாய் பொறுப்புக்கு வரக்கூடிய தன்மானத் தமிழன் பேசும் பொறுப்பான வழிநடத்தும் பொறுப்பான தலைவன் பெண்ணை மதிக்கும் லட்சணம் இதுதான்.

எதிர்கருத்து சொல்லிவிட்டால் பொதுஇடத்தில் அவனைச் சிலேடை, நேரடிப் பேச்சுக்களால் பாலுணர்வு, ஆண்குறி, பெண்குறி, குடும்பப் பெண்களை முறையற்ற புணர்வதாகப் பொருள்படும் ஏச்சுப் பேச்சு மூலம் தமிழைச் "செந்தமிழ்' ஆக்கியிருக்கிறார்கள்!

விவாதிக்கும்போதும், வேறுபட்ட்ட கருத்துக்களைப் பகிர்கையில் நம் மறத்தமிழ் சகோதரர்கள் சிலர் அநாகரீகமாக நிதானமிழப்பதும், வலைஉலகில் உலவும் "போலி'யர்கள் "செந்தமிழ்' பின்னூட்டமிடுவதை உளவியலாக உற்று நோக்குங்கள்... சவடால் அரசியல் திராவிடப்"பெத்தடின்"செய்கின்ற வேலை எனப் புரியும்.

கடந்த நாற்பதாண்டுகளில் இந்த அரசியல் திரா'விட'க் கட்சித் தலைவர்கள்தான் ஆட்சி செய்து வருகின்றனர். இவர்களது கோமாளித்தனமான, வக்கிரமான தலைமையில் ஏழையான நம் தமிழ்ச்சமுதாயத்தின் கிராமத்து இளைஞனுக்கு பயன்படும்படி என்ன செய்தார்கள்?

ஜாதியே இல்லாத சமூகத்தை ஏற்படுத்துவதைக் கொள்கையாகக் கொண்ட இந்த அரசியல் திரா'விட'க் கட்சித் தலைவர்கள் ஆட்சியில்தான் எங்கும், எதிலும் ஜாதி..ஜாதி...ஜாதிதான் இன்று விஞ்சியிருக்கிறது.

அல்லது அடித்தால் கூட திருப்பியடிக்காது ஒதுங்கிப்போகும் சுபாவமுள்ள ஒரு ஜாதியினரை இல்லாமல் போகவைப்பதுதான் இந்த அரசியல் திரா'விட'க் கட்சித் தலைவர்கள் கொண்ட கொள்கையா?

இன்றும் தமிழகத்தில் இந்த அரசியல் திரா'விட'க் கட்சித் தலைவர்கள் 40 ஆண்டுகால ஆட்சியில் கண்டதேவியில் கோவில் தேர் இழுக்கும் நிகழ்வுக்கு வரும் பக்தர்களை விட காவல்துறையினர் அதிகம் வரவேண்டியிருக்கிறது.

இன்றளவில் தமிழகத்தில் இந்த அரசியல் திரா'விட'க் கட்சித் தலைவர்கள் 40 ஆண்டுகால ஆட்சியில் பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் நடக்கும் ஜாதீயத் தேர்தல் + ராஜினாமாக்கள் இந்திய ஜனநாயகத்திற்கு உலக அளவில் அவமானமாக இருக்கிறது.

இங்கு தமிழகத்தில் இந்த அரசியல் திரா'விட'க் கட்சித் தலைவர்கள் 40 ஆண்டுகால ஆட்சியில் தாழ்த்தப்பட்ட "வீரன் அழகுமுத்துக்கோன்" பெயரில் போக்குவரத்துக்கழகம் தென் மாவட்டத்தில் தொடங்கிய போது பல பேருந்துகள் எரிக்கப்பட்டது. தென் மாவட்ட ஜாதி மோதல்கள் உயிர்ப்பலி பல கண்டும் அடங்காததில்அரசாணை வாபஸ் பெறப்பட்டதுடன், சேர, சோழ, பாண்டிய, மருது பாண்டிய,பல்லவ, திருவள்ளுவ, ராணிமங்கம்மாள் போக்குவரத்துக்கழகப் பெயர்கள் தமிழகப் போக்குவரத்துக்கழகமாகப் பெயர் மாற்றப் பட்டன.

"அகில உலகத் தமிழினத் தலைவர் கலைஞரின் சீரிய ஆட்சியில் கொடூரமான பல சாதிக்கலவரங்கள் பெரும் சாதிப்புகள்.


சமீபத்திய இந்த அரசியல் திரா'விட'க் கட்சித் தலைவர்கள் 40 ஆண்டுகால ஆட்சியில் நடந்த சமீபத்திய ஜாதிக்கலவரங்கள் எதிலும் "தெய்வத்தைத் எப்போதும் வணங்கிடும்" குறிப்பிட்ட உயர்சாதியினர் எப்போதும்போல் காரணமில்லை.

இந்த அரசியல் திரா'விட'க் கட்சித் தலைவர்கள் 40 ஆண்டுகால ஆட்சியில் இவர்களின் நடுமுதுகில் அரிப்பெடுத்தால் கூட "அரசியல் திரா'விட' "பெத்தடின்" ஊசிபோட்டு திசைதிருப்ப இருக்கவே இருக்கிரார்கள் அடித்தால் கூட திருப்பியடிக்காது, "தெய்வத்தைத் எப்போதும் வணங்கிடும்" ஒதுங்கிப்போகும் சுபாவமுள்ள ஒரு குறிப்பிட்ட ஜாதியினர்.

கிராமத்தில் இருக்கும் நம் இளைஞனை இந்த அரசியல் திரா'விட'க் கட்சித் தலைவர்கள் 40 ஆண்டுகால ஆட்சியில் சும்மா போஸ்டர் ஒட்டவும், ஒரு பாக்கட் பிரியாணிக்காக தன்மானச் சிங்கமாக, ஆர்ப்பரிக்கும் அலைகடெலென,
தான் கட்டிய கோவணம் கழண்டு விட்டது கூடத் தெரியாமல், பஸ், லாரியென ஏறி, இந்த அரசியல் திரா'விட'க் கட்சித் தலைவர்கள் நடத்தும் முப்பெரும் விழ, ஐம்பெரும் விழாவுக்கு ஆட்டுமந்தையாய், பகுத்து அறியும் திறன் மழுங்கிப்போய் அரசியல் எடுபிடியாய், கைக்கூலியாய்த்தானே வைத்திருக்கிறார்கள்.

நம் தமிழக இளைஞனுக்கே நினைத்த படிப்பை படிக்கின்ற சூழல், ஆரோக்கியமான சிந்தனை செயல்களைச் செய்ய முன் மாதிரியாய் இருக்கிறார்களா? ஒருவர் மஞ்சள் துண்டு போட்டு தன் "மூடநம்பிக்கை" மறுப்பை மூணு சீட்டு மங்காத்தா ஆடுகிறார்.

தலைவனுக்கு ஒழுக்கம் வேண்டும். தமிழகத்தை 40 ஆண்டுகால ஆட்சி செய்த இந்த அரசியல் திரா'விட'க் கட்சித் தலைவர்கள் எவருக்காவது தனிப்பட்ட ஒழுக்கம் இருக்கிற்தா?

சட்டப்படி தவறு என்று தெரிந்தும் மீறுபவன் எப்படி நல்ல தலைவனாவான்?
என்குயரி வந்ததும் முதலாவது மனைவி மற்றதெல்லாம் துணைவி என்பதான் தகிடுதத்தங்கள் 5 முறை என்ன எத்தனை முறை வந்தால் என்ன பயன்? (ஒரு சில கழகக் கண்மணிகள் தவிர?)

பின் இம்மாதிரி நபர் 82 வயதானாலும் பெட்ரோல் விலை அதிகமாகிறதே என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என்ற நிருபரை "வா நாம் இருவரும் தீக்குளிக்கலாம்" என்ற தீர்வுதான் கிடைக்கும். சரியான பம்மாத்து!

கவனித்துப் பாருங்கள் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்று 40 ஆண்டுகளாய் இவர்கள் போட்ட திரா'விட' கொள்கைப் பித்தலாட்டப் பெத்தடின் ஊசியில் நம் தமிழ்ச்சமுதாயம் மரத்துப்போய் இருப்பது.

இது என் ஆதங்கம். அவ்வளவே!

அன்புடன்,

ஹரிஹரன்.

Monday, July 10, 2006

(12.a) பாகம்-1 தமிழக அரசியல் திரா'விட' "பெத்தடின்" ?

அரசியல் திரா'விட' "பெத்தடினில்" மரத்துப்போய் விட்டதா நம் தமிழ்ச்சமுதாயம்?

நண்பர் கனகசபாபதி என்ற முத்து (தமிழினி)க்கு நன்றிகள். நான் வைத்த நீண்ட தலைப்புதான் ப்ளாக்கர் குளறுபடிக்குக் காரணம் என அறிவுறுத்தியதற்கு.

வாசிக்கும் வலைஞர்களுக்கு மீண்டும் சோதனை!

சில சேர்க்கைகளுடன் மீண்டும் பதிப்பிக்கிறேன்.

இது எனது முதல்(!?) அரசியல் /சமூகப் பார்வையிலான பதிவு.

நம் தமிழக மக்களின் சில அங்கீகரிப்பு /நிராகரிப்பு பற்றிய என் உளவியல் பார்வை.

கொஞ்சம் சமீப காலத்தைய பொதுமக்க்கள் கலந்து கொண்ட இரு பொது நிகழ்வுகளில் ஆரம்பிப்பதற்கு முன்பாக கொஞ்சம் சின்னதாக வரலாற்று முன்னோட்டம்.

கஜ்னி முகம்மத் துருக்கிய வம்சாவளி ஆப்கானிய அரசன் (இன்றைய ஆப்கானிஸ்தானில் காபூல்-காந்தகாருக்கு இடையில் உள்ள கஜ்னி எனும் இடத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவன் )அக்காலத்தில் இந்தியாவின் வளம், செல்வக்செழிப்பை அறிந்து 16 முறை படைஎடுத்துத் தோற்று, 17ஆம் முறை கி.பி 1025ல் இந்தியாவினுள் நுழைந்து இந்திய வரலாற்றில் நடந்த மிகக் கொடுமையான "சோமநாதபுரப் படையெடுப்பை" நடத்தியவன். கிட்டத்தட்ட 60,000 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். ஏராளமான பெண்கள் ஈவிரக்கமின்றி பலாத்காரம் செய்யப்பட்டனர். கணக்கிலடங்காச் செல்வங்கள் சோமநாதபுரக் கோவிலினிலிருந்தும், சோமநாதபுரக் கோவிலின் கட்டுப்பாட்டில் இருந்த 10,000 கிராமங்களினின்று கொள்ளையடிக்கப்பட்டது.

அப்போது சோமநாதபுரம் சிவன் கோவில் படு பிரசித்தமானது. கோவிலில் இருந்து கணக்கிலடங்கா நகைகள், இரத்தினங்கள் சூறையாடப்பட்டு ஆப்கானிஸ்தான் எடுத்துச்செல்லப்பட்டன. சோமநாதபுரம் கோவிலில் வழிபடப்பட்ட சிவலிங்கம் கஜ்னியில் நடைபாதையில் கால்களால் மிதித்து அவமரியாதை செய்யப்பட்டன.

அதுக்கென்ன இப்போ அப்டீங்றீங்க... வரேன்

ஒரு சில மாதங்கள் முன்பான சூரியத் தொலைக் காட்சி நிகழ்வு ஒன்றில் "க்விஸ்" ப்ரோக்ராம் கேள்வி : கஜ்னி எனும் வார்த்தைப் பதம் எதை நினைவுபடுத்துகிறது?

நிகழ்ச்சியில் பங்கேற்ற நம் மறத்தமிழ் இளைஞன் எழுந்து தந்த பதில்: "தன்னம்பிக்கை"
தொகுப்பாளினி படு உற்சாகத்துடன் "சரியான் விடை" என்று அறிவிக்கிறார்.

வேறு ஒரு டி.வி நிகழ்வில் ரமணா என்ற தமிழ்த் திரைப்படத்தை சமூகப் பொறுப்புடன் இயக்கி வெற்றிகண்ட இளம் இயக்குநர் முருகதாஸ் அவரது அடுத்த வெளியீடான 'கஜ்னி' என்று பெயரிடப்பட்ட படத்தைச் சிலாகித்துப் பேசும் போது படத்தின் தலைப்பான "கஜ்னி" எனும் சொல்லே தன்னம்பிக்கையைத்தான் குறிப்பதாகக் கூறினார்.

நம் மறத்தமிழ் மக்களும் "கஜ்னி" தலைப்புக்காகவே படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கினர்!

இது இப்படியே இருக்கட்டும்.

அரசியல் திரா'விட'த்திற்கு வருவோம். ஆதி பண்டைய காலத்திலிருந்து நமது தேசத்தை இணைக்கும் ஒருமைப்பாட்டு விஷயங்கள் ஹிந்து வழிபாடுகள் வடக்கே இருப்பவர் இராமேஸ்வரத்திற்கு வந்து வழிபடுவதும், தெற்கு நதிகளான காவேரி,கிருஷ்ணா, கோதாவரியில் புண்ய நீராடுவதும்,

அம்மாதிரி தெற்கே இருப்போர் வாரணாசி (காசி), பத்ரிநாத் சென்று வழிபடுவதும், த்ரிவேணி சங்கமமான கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகளில் நீராடுவதும் மற்றும் நமது இரு பெரும் இதிகாசங்களான இராமாயணம் மற்றும் மகாபாரதம் பற்றிய அறிவும் ஆகும்.

தமிழக அரசியல் திரா'விட'ம் இராமயணமே கிடையாது என்றது. பின்பு ராமாயண இதிகாசத்தில் வரும் "எதிர்"நாயகனான (வில்லன்) இராவணன் ஒரு திராவிடன் என்றது. மகாபாரதம் பம்மாத்து என்றது.

மகாபாரதத்தின் முத்தாய்ப்பாக கிருஷ்ணர் அர்ஜுனனுக்குச் சொன்ன 'பகவத்கீதை"யைப் பொய்யுரை என்றார்கள்.

1930களில் ஆரம்பித்து இந்த திரா'விடம்' தோய்ந்த கொள்கைகள் தமிழ் மக்களிடையே இந்தியாவை ஒருங்கிணைத்த ஹிந்து தெய்வவழிபாடுகள் கேவலப்படுத்திச் சொல்லப்பட்டன.

இந்த திரா'விடம்' தோய்ந்த கொள்கைகள் சார்ந்த அரசியல்/சமூக இயக்கம் விடுதலைப் போராட்டதில் வெள்ளைக்காரர்களை எதிர்த்து ஏதும் செய்யவில்லை.

மாறாக பிரிட்டிஷ் காரர்களே இந்தியாவை விட்டுப் போகின்ற கலகட்டத்தில் ப்ரிட்டிஷ்அரசு தொடரவேண்டும் என்று பகிரங்கமாகச் சொன்னது.

இத்தோடு தனித்தமிழ்நாடு கோரிக்கை வேறு சேர்த்துக்கொண்டு இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஆதிகாலத்திலிருந்து காரணமாயிருந்த ஹிந்து தெய்வவழிபாடுகள், இராமயண, மகாபாரத இதிகாசங்கள் கேவலப்படுத்திச் சொல்லப்பட்டன.

தனித்தமிழ்நாடு கோரிக்கை தேசவிரோதச் சட்டதின் நடவடிக்கைக்குக் கீழ் வருவதாகச் சொன்னவுடன் அதுவரை திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு என்றவர்கள் கப்..சிப் ஆனார்கள்.

எப்படியும் தனித்தமிழ்நாடு கிடைத்துவிடும் என்ற ஆர்வக்கோளாறில் தமிழ்ச் சமுதாயம் அதுவரை தேசியநீரோட்டத்தில் இருந்ததைச், இந்த திராவிட அமைப்புகளின் அறைகூவல்கள், செய்த ஹிந்து மத தெய்வ வழிபாடுகள், நம்பிக்கைகள் கலாச்சாரச் சிதைவுகள் இதர இந்திய ப்ராந்தியங்கள் நம் தமிழ்ச் சமுதாயத்தின் மீது கொண்டிருந்த கலாச்சார நம்பிக்கையைச் சிதைத்தார்கள்.

சரி இதற்கு இப்போ என்னன்றீங்கதானே இதோ வந்தாச்சு

இன்று தமிழ்ப்படங்களில் பெரு வெற்றி பெற்ற நாயகர்கள் பட்டியலிடுங்கள்: 1. கமலஹாசன்
2. ரஜினிகாந்த்
3. சரத் குமார்
4. சத்யராஜ்
5. நெப்போலியன்
6. கரண்
7. ப்ரகஷ்ராஜ் (சில படம்)
8. ஆனந்த ராஜ் (சில படம்)

எல்லோருமே "எதிர்"நாயகர்களாக (வில்லன்) இருந்து நாயகர்களாகி (ஹீரோ) ஆக தமிழக மக்களால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்.

நம் தமிழ்ச்சமுதாயம் இந்த எதிர் நாயகரை நாயகராக்கி அழகுபார்க்கும் அங்கீகரிப்பை உளவியலாக நோக்குங்கள் ராவணன் "திராவிடன்" என்ற என்ற "திராவிடப் பெத்தடின்" செய்கின்ற வேலை என்று புரியும்.

அதே மாதிரி தமிழ்ப்படங்களில் பெரு வெற்றி பெற்ற படங்களைச் சாம்பிளாகப் பட்டியல் இட்டுப் பாருங்கள்:
1. நாயகன்
2.தளபதி
3. அமரன்
4.பட்டியல்
5.கொக்கி
6.தலைநகரம்
7.திருமலை
8.புதுப்பேட்டை
9.பகவதி
10.ரெட்
11.தீனா

எல்லாமே தாதா, ரௌடிக்கள் ஹீரோயிஸக்கதைகள்.

நம் தமிழ்ச்சமுதாயம் இந்த தாதா, ரௌடிகளை ஹீரோவாக்கிப் பூரிப்பதைக் கொஞ்சம் உளவியலாக நோக்குங்கள் ராவணன் "திராவிடன்" என்ற என்ற "திராவிடப் பெத்தடின்" செய்கின்ற வேலை என்று புரியும்.

கூடுதலாக இந்த மாதிரி தாதா, ரௌடிக்கள் ஹீரோயிஸக்கதைகளில் நாயகிகள் பெரும்பாலும் "தெய்வ வழிபாடுகள்" என்று இருக்கும் ஹிந்துக் குடும்பத்தைச் சார்ந்தவளாக இருப்பாள்.

கொஞ்சம் உளவியலாக நோக்குங்கள் இதுவும் அரசியல் "திராவிடப் பெத்தடின்" செய்கின்ற வேலை என்று புரியும்.

இன்றைய அரசியலில் "காடுவெட்டி" குரு என்ற ரௌடி தாதா தேர்தலில் "மாவீரன்"குருவாக , இராயபுரம் மனோ, சேகர் பாபு போன்றோர் எம்.எல்.ஏ ஆக ஏற்றம் கண்டது,

நம் தமிழ்ச்சமுதாயம் இந்த தாதா, ரௌடிகளை எம்.எல்.ஏ, மந்திரி என்று உருவாக்கிப் பூரிப்பதைக் கொஞ்சம் உளவியலாக நோக்குங்கள் ராவணன் "திராவிடன்" என்ற என்ற "திராவிடப் பெத்தடின்" செய்கின்ற வேலை என்று புரியும்.

தனித்தமிழ்நாடு கோரிக்கை என்பது ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் போது சுயநலம், பேராசை கொண்ட சிலர் "டிஸைனை"க் களவாடித் தயாரிப்பு செய்ய முற்படும் போது அது சட்டவிரோதம், தண்டனை பாயும் என எச்சரித்ததும் பாதை மாற்றி அடக்கி வாசித்தாலும் நிறுவனத்தில் நம்பகத்தன்மை போய்விட்ட நிலையாகிப்போனது.

இதனைச் சரியாக்கிட ஏதும் திராவிட பம்மாத்து அரசியல் இயக்கங்கள் செய்யாது போனதில் பல இழப்புகள் தமிழகத்துக்கு.

காவிரியின் 700கி,மீயில் 600கி.மீ தமிழகத்தில் இருந்தும் காவிரியில் தண்ணீர் முறையாக வருகிறதா? இதை திராவிட பம்மாத்து அரசியல் இயக்கங்கள் சக திராவிட கர்நாடக மாநிலத்திடமிருந்து தமிழக தஞ்சை விவசாயிகளுக்கு உரிய காலத்தில் பெற்றுத்தர முடிகிறதா?

முல்லைப்பெரியார் அணையிலிருந்து தமிழகத்துக்குப் பாத்யதையான தண்ணீர் முறையாக வருகிறதா?இதை திராவிட பம்மாத்து அரசியல் இயக்கங்கள் சக திராவிட கேரள மாநிலத்திடமிருந்து தமிழக தென்மாவட்ட விவசாயிகளுக்கு உரிய காலத்தில் பெற்றுத்தர முடிகிறதா?

இந்திய ஒருமைப்பாட்டைச் செய்த அத்தனை விஷயங்களையும் தமிழகத்தில் குலைத்துவிட்டு, திராவிட பம்மாத்து அரசியல் இயக்கங்கள் நம் தமிழ்ச்சமுதாயத்தை "எதிர்"நாயகர் அங்கீகரிப்போராய் மனநோயில் தள்ளியதே இந்தத் திராவிட பம்மாத்து அரசியல் இயக்கங்கள் இதுவரை சாதித்தது.

தமிழ்நாட்டில் இருக்கும் மறத்தமிழனுக்கே குடிக்க, பயிர் செய்ய தண்ணீர் பெற்றுத்தர வக்கில்லாத திராவிட பம்மாத்து அரசியல் இயக்கங்கள் பாவம் இலங்கையில் வாடும் தமிழனுக்கு என்ன செய்வார்கள்?

தங்கர் பச்சான் சிறந்த ஒளி ஓவியர் அந்தளவில் சரி. மற்றபடி ப்ளேடால் முச்சந்தியில் நின்று கையைக் கிழித்துக்கொள் "மீடியா"வில் ஸ்கூப் நியூஸ் வரும் என்றால் அவரது சுய விளம்பரத்திற்காகச் செய்யக்கூடிய அக்கறைதான் அவரது இலங்கைத் தமிழர் விஷயத்தில் அவர் அக்கறை.

எவர் வந்து நம் நம் தமிழ்ச்சமுதாயத்தை இந்த திராவிட பம்மாத்து அரசியல் இயக்கங்கள் 70 ஆண்டுகளாக தந்த வந்திருக்கும் அரசியல் திரா'விட' "பெத்தடினில்" மரத்துப்போயிருக்கும் தமிழனை சுயநினைவுக்குத் திருப்புவது!

"தென்னாட்டுடைய சிவனே தமிழகம் காப்பாய்."

அன்புடன்,


ஹரிஹரன்.

Sunday, July 09, 2006

(12) ஹரிஹரனின் அமானுஷ்ய அனுபவங்கள்-1

இது ஒரு மாறுதலுக்காக. எனது நகர்கள் நோக்கிய பயணத்தில் சந்தித்த நபர்களை, அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் முயற்ச்சிக்கு இடையில், எனக்கு ஏற்பட்ட அமானுஷ்ய அனுபவங்களையும் சொல்ல வேண்டிய கடமை உணர்வினால் இப்பதிவு.

கல்லூரி விடுதியில் நான் தங்கியிருந்த அறையில் நான் மட்டும்தான். தொலைதூர ஊர்களில் இருந்து வந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு மாணவர்கள் சிலர் மட்டும் வார இறுதியில் இருப்பார்கள். மெஸ் ஹாலில் உணவு உண்டபின் வராண்டாவில் நின்று பேசிக்கொண்டு இருப்போம். ஆரம்ப நாட்கள் அல்லவா, நான் சில சமயம் அவர்களது அறைக்குச்சென்று பேசிக்கொண்டு இருப்பேன், எனது அறைக்கு நான் வற்புறுத்தி அழைத்தாலும் கதவருகே நின்று பேசிவிட்டு உள்ளே வராமல் அவசரமாக அப்படியே ஓடி விடுவார்கள்.

துப்பறிந்ததில் சில நாட்கள் முன்பாக நானிருந்த அறையில் தங்கியிருந்த மாணவன் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருந்த உண்மை தெரிய வந்தது.

நான் இதனிடையில் சில நாட்கள் நிம்மதியாக தூங்கி எழுந்து எனது தினசரி அலுவல்களை சாதாரணமுறையில் செய்து வந்திருந்தேன். உண்மை தெரிந்த பின்பும் எனக்கு பயமேதும் இல்லை. காலை பல்துலக்கும் தருணங்களில் ஒரே விசாரிப்புகள். அமானுஷ்ய அறை வாசி என்ற திடீர்புகழ் சிலநாட்களிலேயே எனக்குக் கிடைத்தது.

எனது இதர அறை நண்பர்களுக்கு இந்த "தற்கொலை"அறை செண்டிமெண்ட் உறுத்தலாக இருந்தது. மாற்று அறை விடுதியில் அந்த ஆண்டு இல்லை என்றதாலும், எனக்கு உணவு அசைவம் + தண்ணீர்ப்பற்றாக்குறையால் சேர்ந்த ஒரு மாதத்தில் நானும் நான்கு நண்பர்களும் வெளியே வீடு பார்த்து எடுத்துத் தங்கி கல்லூரிக்குச் சென்று வந்தோம்.


அது பல குடும்பங்கள் வாழும் கீழ்தளத்தில் எட்டு, முதல் தளத்தில் நான்கு என்றமைந்த தொகுப்புக் குடியிருப்பு. கல்லூரியில் அனைவருக்கும் ஆச்சர்யம் எப்படி கல்லூரிமாணவர்களாகிய எங்களுக்கு அதுவும் "கலர் புல்லான" ஏரியாவில் குடும்பங்களுக்கே கிடைக்க அரிதான இடத்தில் கிடைத்தது என்று.

என்னைத் தவிர மீதி அனைத்து நண்பர்களும் தஞ்சாவூர், ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை என்று அருகாமை 90கி.மீக்குள் இருந்த ஊர்க்காரர்கள் என்பதால் வார விடுமுறைக்கு வெள்ளி மாலை கிளம்பி திங்கள் காலை வருவார்கள்.

எனது சொந்த ஊர் போடிக்குப் பயண நேரம் 7மணி நேரமாகும். வசதிப்படாது என்பதால் நான் மட்டும் தனியாக வெள்ளி, சனி, ஞாயிறு இரவுகளில் தங்கியிருந்த குடியிருப்பில் இருக்க வேண்டிய கட்டாயம்.

இங்கு குடியிருந்தவர்களுக்கு எனது குழந்தைப்பருவ முதலான தினசரிப் பழக்கமான காலையில் எழுந்தவுடன் குளித்துக் கோவில் செல்லும் பழக்கம் வெகு விரைவில் ஒரு நற்சான்றிதழைப் பெற்றுத்தந்தது.

வார இறுதியில் புள்ளையாண்டான் தனியா பாவமா இருக்கானே என்ற ஒரு பரிதாபத்தில் சில கீழ்வீட்டு Auntyகள் மேலே மாடியில் துணிகாயப்போடும் போது நானிருந்த குடியிருப்பு வரைவந்து சில விசாரிப்புகளோடு அவ்வப்போது ஏதானும் ஸ்னாக்ஸ் தருவார்கள். ஆனால் என்ன வற்புறுத்தி அழைத்தாலும் உள்ளே மட்டும் வரமாட்டார்கள்.

எதிர் வீட்டுக்கார கல்லூரி நண்பனிடம் போட்டு வாங்கியதில் உண்மை வெளிவந்தது. நான் இருந்த குடியிருப்பில் சில நாட்களுக்கு முன்புதான் ஒரு பெண்மணி தீக்குளித்து இறந்து போன விஷயம்.

ஹரிஹரனுக்கு பயம் இல்லைதான். என்றாலும் இந்த உண்மைக்குப் பிறகு நண்பர்கள் கோடி கொட்டிக் கொடுத்தாலும் வார இறுதியில் வெள்ளி மாலை கல்லூரியிலிருந்தே பஸ் ஏறி சொந்த ஊர் ஓடித் தப்பித்து விடுவார்கள்.

வெள்ளி,சனி, ஞாயிறு இரவுகள் தனியாக எனது குடியிருப்பில் தூங்க வேண்டிய சூழல். அப்படியான ஒரு வெள்ளிக்கிழமை தூங்கும்போது நள்ளிரவில் முழிப்பு வந்தது எனக்கு, புரண்டு, புரண்டு படுத்தாலும் திரும்பத் தூக்கம் வரும் மாதிரி இல்லை. அப்படியே படுக்கையில் இருந்த போது "ஜல்..ஜல்'ன்னு சலங்கைச் சத்தம் கேட்டது.

எனக்குப் பயம் இல்லை, எழுந்து விளக்கைப் போட்டேன். முதல்நாள் நாங்கள் நால்வரும் வற்புறுத்தஇ.. இல்லை.. தர..தரன்னு எதிர்வீட்டு செல்வக்குமார்ப் பயலை நாங்கள் இருந்தகுடியிருப்புக்குக் கூட்டிவந்தபோது ஹாலில் தரையில் இருந்த அழுத்தமான திட்டு திட்டான கறைகளைக் காட்டி இது..இது தீக்குளித்த அந்தப்பெண்ணின் தீயில் தீய்ந்து ஒட்டிக்கொண்ட சேலைக்கறை என்று அடையாளம் காட்டப்பட்ட கறை கண்ணில் பட்டது.

"ஜல்..ஜல்' சலங்கை ஒலிச் சத்தம் ஒரு குறிப்பிட்ட பேட்டர்னில் அதுபாட்டுக்கு வந்து கொண்டிருந்தது. கதவைத் திறந்து கொண்டு மாடிக் கைப்பிடிச்சுவர்மீது கை ஊன்றியபடி தெருவைப் பார்க்கிறேன் தெருநாய் ஊளையிட்டபடி ஓடிக் கொண்டிருந்தது.

மீண்டும் உள்ளே வந்தேன். சேரம் நடுநிசி 12.55 மணி என்று எனது எச்.எம்.டி கைக்கடிகாரம் காட்டுகிறது. சரி என்ன நடந்தாலும் பரவாயில்லை வந்துவிட்ட 'ஜல்..ஜல்" அமானுஷ்யத்தை எதிர்கொண்டே தீருவது என்று முடிவெடுத்துவிட்டு எனக்குத்தெரிந்த சில மந்த்ரங்களைச் சொல்லி இறைவனை எனக்கு உதவும்படி வேண்டிக் கொண்டவாறே சமையலறைக்குள் வந்தேன்.

ஜன்னல் வழி பார்த்தால் கருப்பாக ஏதோ உயரமாக தலைவிரியாட்டமாடுவது மாதிரி... ஹரிஹரனின் லப்..டப் இப்போ மெல்ல எகிறியது. பயமில்லை என்றாலும் ஒருமாதிரி படபடப்பு... கூர்ந்து நோக்கியதில் அது தென்னைமரம்.
நிதானத்தில் இருக்கிறேன் என உறுதியானது.

இன்னும் "ஜல்..ஜல்.."சலங்கைச் சத்தம் விட்ட மாதிரியில்லை. மணி பார்த்தால் நடுநிசி 1.20. கிட்டத்தட்ட 25 நிமிடம் அமானுஷ்ய 'ஜல்..ஜல்' தாலாட்டு ! தூக்கம் போயே போயிந்தி! இப்போ ஒரு விஷயம் உறுதியாகியிருந்தது. அந்த அமானுஷ்யம் வாசலில் இல்லை. பின்பக்க சமையலறைப்பக்கம்தான் இருக்கிறது என்று எனது ஐம்புலனில் ஒன்றான காது சொன்னது.

உயிர் போனா மயிர் போன மாதிரி என்று முழுமையான வேகத்துடன் அமானுஷ்யத்தை எதிர் கொள்ளத்தயாரானேன். சமையலறை ஜன்னலை முழுக்கத் திறந்து வைத்தேன். அமானுஷ்யம் இப்போது ஹரிஹரனுக்குக் கொஞ்சம் வியர்வையை ஏற்படுத்தியிருந்தது. 'ஜல்...ஜல்' காதுக்குப் பழகியிருந்தது.. 'ஜல்...ஜல்'..களுக்கு இடையிலான நேரத்தை உற்று நோக்கியதில் ஒரு synchronization புலப்பட்டது.

ஜன்னல் வழி தெரிந்த காட்சியில் இருந்த அனைத்தையும் கூர்ந்து நோக்கினேன். மாட்டு வண்டி, கீழே காளை மாடு படுத்திருப்பது தெரிகிறது. க்ளோஸ்டு சர்க்யூட் காமிரா மாதிரி நிலைநிறுத்துகிறேன் காளை மாட்டின் மீது. காளையின் கழுத்தில் மணி தென்படுகிறது.

சாணக்கழிவினால் அங்கிருக்கும் "ஈ" காளையின் முகத்தின் மேல் தொந்திரவு செய்ய காளைமாடு தலையை இப்படி.. அப்படி அசைக்கிறது. சில வினாடிகளில் மீண்டும் மாடு தலையை அப்படி இப்படி அசைப்பது புலப்பட்டு இதுவரையிலான அமானுஷ்ய ஜல்..ஜல் பேட்டர்னுக்கான மூலம் ஹரிஹரனால் துப்பு துலக்கப்பட்டது.


ஹரிஹரன் அன்று பயந்திருந்தால் "மரணம்" அவனைத் தழுவி இருக்கும்.


பி.கு. தேன்கூட்டு ஜூலை மாதத் தலைப்புக்கூட "மரணம்". இது நம்மளோட உண்மை அனுபவங்க.

அன்புடன்,


ஹரிஹரன்.

(11) அடியேன் இட்ட சமூக அக்கறைப் பின்னூட்டங்களின் தொகுப்பு-1

பிற வலைப்பக்கங்களில் சமூக அக்கறைப் பதிவுகளில் நான் இட்ட பின்னூட்டங்களின் தொகுப்பு பதிவாக தங்கள் பார்வைக்கு:

திரு. கால்கேரி சிவாவின் அரேபிய அனுபவங்கள்10.3 பதிவில்அரேபிய நாடுகளில் வேலை செய்வோர்க்கு வசதிகள், சலுகைகள் இல்லாத நிலை குறித்த பதிவில் நானிட்ட பின்னூட்டம்:
http://sivacalgary.blogspot.com/2006/07/103.html

பாலைவனத்தில் லேபர் கேம்ப் விஷயங்கள் சில நேரங்களில் சிலரை மனம் பிறழ்ந்து போகவும் வைத்திருக்கிறது.

முழுமையான சுதந்திரம் மிக மிக 'லக்சுரியான"விஷயம்.

நம்மவர் பலர் "கப கப" எனப் பசிக்கும் வயிறு(கள்)க்காக, சார்ந்திருக்கும் குடும்பத்தவரை நிமிர்ந்து வாழும்படிச் செய்யும் முயற்சியில் படுகின்ற அவஸ்தை / தியாகம்!

என்றாலும் சவூதி மாதிரியானதாக மனிதாபிமானமற்ற சட்டதிட்டமில்லாத இதர ஒரு சுமாரான நடைமுறைநாடுகளை தேர்ந்தெடுக்கும் சாய்ஸ் இருந்தால் அங்கு வேலையைத் தேர்ந்தெடுக்கலாம்.

நடைமுறையில் இந்தியர்கள் எல்லோருமே சுதந்திரத்தை முதன்மையாகக் கருதி வேலையை/நாட்டினை/ வாழ்க்கையைத் தேர்வு செய்ய இயலாத சூழல் தானே இன்னும் நிலவுகிறது!

உங்கள் பதிவு ஒரு Caution advise! for those who have the fortune of choosing what they want! நல்ல பதிவு.
------------------------------------------------------------------------------------------------
வஜ்ராஷங்கரின் ஆரியர் என்றொரு "இனம்" உண்டா? பதிவில்
http://http://sankarmanicka.blogspot.com/2006/07/blog-post.html
நானிட்ட பின்னூட்டம்:

ஷங்கர்,

நமது திரா(வக)விட(ம்) பகுத்தறிவு வாதிகளுக்கு, இன்று வரை எக்கச்சக்கமாக ஸ்டோரி டிஸ்கஷன்ஸ், ஸ்க்ரீன்ப்ளே, என்று டெவெலப் செய்து, பெருமளவுக்கு வெற்றியும் பெற்றுத் தந்த "ஒன் லைன் ஸ்டோரியான" வந்தேரி ஆரிய இனம் இருந்தே ஆகவேண்டும்.

ஆனால் அமெரிக்காவிலே இந்தப்"பேருண்மை" "மீண்டும்" கண்டுப்டிக்கப்பட்டுள்ள படியால் தமிழகத்தின் ஏகபோக பகுத்தறிவு-பார்ட்டிகள் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

அல்லது தங்களது வழக்கமான "வீர வசனமான" ஆரியப் புற்றிலிருந்து வந்த / ஆரிய அடிவருடிகளின் சதி, பண முதலைகளாம் அமெரிக்கர்கள் துணையோடு சரித்திரத்தை மாற்ற விழைந்த கயமைத்தனத்தை பெரியார் பாசறையின் பகுத்தறிவுக் "கோனார் கையேடு" கிழிந்த நிலைமையில் இருந்தும் உண்மையைச் சோற்றாலடித்த பிண்டமான "மறத்(துப்போன)தமிழனுக்கு உணர்த்திட உதவியதாக மீண்டும் அறைகூவக்கூடும்!
---------------------------------------------------------------------------------------
திரு. ஜோ அவர்களது இந்து மதம் சில சந்தேகங்கள் பதிவில்
http://cdjm.blogspot.com/2006/07/blog-post.html

நானிட்ட பின்னூட்டம்:

ஜோ அவர்களே,

தங்களது சந்தேகத்திற்கு எனது பங்களிப்பாக எனக்குப் பட்டதைச் சொல்கிறேன்:

//1.பொதுவாக நான் பார்த்தவரை சைவர்கள் தயங்காமல் வைணவக் கோவில்களுக்குசெல்கிறார்கள் .ஆனால் பெரும்பான்மை வைணவர்கள் மறந்தும் கூட சைவ கோவில்களுக்குள் அடியெடுத்து வைப்பதில்லை இது ஏன்?//

நம்மூரில் வைணவர்கள் சிலர் விஷ்ணுவுக்கு உகந்ததாகக் கருதப்படும்"துளசி"யைக்கூட "திருத்துளை" என்று சொல்வார்கள். துளசியில் வரும் 'சி' சிவனின் முதல் எழுத்து என்பதால் இந்த வார்த்தை 'பகிஷ்கரிப்பு" சிவ,சிவ என்றால் காதைப் பொத்திக்கொள்வர் சிலர்.

ஆனல், இங்கு நான் வசிக்கும் குவைத்தில் நம்மக்களின் வீடுகளில் நடத்தப்படும் "ருத்ரம்" "சமகம்" போன்ற சிவ மந்த்ர ஸ்துதிக்களில் திருமண் நாமமிட்ட வைணவர்களும் மனனமாகச் சொல்வதுடன், சிவனுடைய ப்ரஸாதமாக தரப்படும் "வீபூதி"யை நெற்றியில் இட்டுக்கொள்கிறார்கள்.

முப்பத்துமுக்கோடி தேவர்கள் இருப்பதாக சராசரி ஹிந்து அவர்களது LKG அளவிலான மத அறிவின்படி ஆரம்பத்தில் சரி, முழுமையாக வேதங்கள், கீதை படிக்கும் போது இருப்பது ஒரே இறைவன் அதுவும் வெளியிலில்லை, அவனுக்குள்ளேதான் என்பது தெரிந்துவிடும். உண்மையான எந்த மதப்படிப்பும் துவேஷத்தைத் தூண்டுவதில்லை.

தொலைதூரநாடுகளில்குடும்ப,சமூக,அழுத்தம் நீர்த்துப்போவதாலும், கிடைக்கும் கூடுதல் சேரங்களில், தனித்துச் சிந்திக்க முற்படும்போது அதுநாள்வரை நம்பிய மூடநம்பிக்கைகள் உடைபடுகின்றன.

//2.பொதுவாக இறைவன் அன்பே உருவானவன் என்று ஏற்றுக்கொள்ளும் போது 'தெய்வக்குற்றம்' என்பது எனக்கு புரிவதில்லை.//

இது மென்மையாய்ச் சொன்னால் பயன் விளையாத கடினமான நபர்/சமூகத்தினரிடம் தெய்வம் கண்ணை நோண்டிவிடும் என்று சொல்லித் தேவையான ஒழுக்கத்தை ஏற்படுத்த வந்தது, இன்று சிலரால், சில சமயம் தனிப் பலன்களுக்கென திரிந்து விடுகிறது.

//3.மாதவிடாய் என்பது இறைவனே பெண்களுக்கு படைத்துவிட்ட ஒரு உடற்கூறு .அது எப்படி தீட்டாக முடியும் ? //

இந்த நடைமுறை பெண்கள் நலனுக்காகவே ஏற்படுத்தப்பட்டது. நானறிந்து 25% பெண்கள் இக்காலகட்டங்களில் நிற்கக்கூடமுடியாத அளவுக்கு வயிற்றுவலியால் துடிக்க வைக்க வல்லதாக உள்ளது.

இதையும் தாண்டி ஹார்மோன் இம்பேலன்ஸால் கடும்கோபம், இயலாமையில் தடித்த சொல்பிரயோகம் என ஸ்பிலிட் பெர்ஸனாலிட்டி அளவுக்கு பெண்களிடிடையே பெரும் behavioural change ஏற்படுகிறது.

அக்காலங்களில் மதகுருமார்கள் உள்ளூர்ப் பிரச்னைகளையும் தீர்க்கும் நீதிபதிகளாகவும் பணியாற்றவேண்டியிருந்திருக்கிறது. நீதிபதியின் தீர்ப்பு மாதத்தில் 3நாட்கள் அவரது இயற்கை உடற்கூறு காரணமாக ஏற்படும் உணர்வு வேறுபாடுகளால் பிறழ்ந்து போகும் வாய்ப்பும் இருப்பதனால் பெண்களை மதகுருவாக்காமல் தவிர்க்கப்பட்டார்கள்.

இக்காலகட்டங்களில், நடந்து அலைந்து கோவில் சென்று, ப்ரகாரம் சுற்றி என ஆரோக்கியம் கெட வேண்டியதில்லை என்பதால் கோவில் செல்லவேண்டாம் என்று வழிநடத்தப்பட்டனர்.

சுகாதாரம் என்றளவில் சரி. தீட்டு எனும் பதம் தற்போது தேவையற்றது.
--------------------------------------------------------------------------------
திரு. கால்கேரி சிவாவின் அரேபிய அனுபவங்கள்10.4 பதிவில்
அரேபிய நாடுகளில் பலகாலம் வேலை செய்வோர்க்கு குடியுரிமை, ச்லுகைகள் இல்லாத நிலை குறித்து நானிட்ட பின்னூட்டம்:

http://http://sivacalgary.blogspot.com/2006/07/104.html

ஷிவா அவர்களே,

உதாரணத்திற்கு 10ஆண்டுகள் வேலை செய்தவர்க்கு நிரந்தரதர ரெஸிடன்ஸி, 15ஆண்டுகள் வேலை செய்தவர்க்கு குடியுரிமை(சிட்டிஸன்ஷிப்) என்று தந்தால், பஹ்ரைன், கத்தார், குவைத், அமீரகம் போன்ற நாடுகளில் GCC-Indian citizens ன் மக்கள்தொகை ஒரிஜினல் GCC-Arabic Citizen மக்கள்தொகைக்கு இணையானதகிவிடும்.

சவூதி அரேபியாவிலும் பெரிய அளவிலான GCC-Indian citizens ன் மக்கள்தொகை பெருகிவிடும்.

அரசியல் ரீதியாக இது அரேபிய நாடுகளை இந்தியாவின் extended territories ஆக்கிவிடும் நிதர்சனம் மற்றும் தற்போதுள்ள Religious dogmatism நீர்த்துப்போய்விடும் நிதர்சனமும், இன்றளவுக்கும் "authoritative Moarchy" அரசியல் அமைப்பு உள்ள அரேபிய நாடுகளை ஆள்வோர் அறிந்துள்ளதும் காரணமாகின்றன.

இன்றும் 90% பெட்ரோலிய வருவாய் இந்த அரேபிய நாடுகளை ஆள்வோர் குடும்பத்திற்குத்தானே செல்கின்றன, இந்த அரேபிய அரச குடும்பத்தவர் பணம் பெரும்பாலும் சுவிஸ்,ஐரோப்பிய வங்கிகளில்தானே சென்று சேர்கிறது.

உழைத்து உளுத்துப்போவது இந்தியர்கள். "இண்டர்நேஷனல் நம்பிக்கையான-ரகசியக்காப்பு வங்கிதொழில்" நடத்தும் வெள்ளைக்கார நாடுகள்தானே முழுப்பயனாளிகள்!

இந்த அரேபியநாடுகளின் அரசியல் சிந்தனையில் புரட்சி வந்தாலேயன்றி ஏதும் மாறாது. புரட்சியாக எவெரேனும்அரசியல் மாற்றத்திற்கு குரல் கொடுத்தால், ஷரியத்போர்வையில் தங்கக்கொடுவாளால் சிரச்சேதம் செய்யப்படுவர்..அல்லது ப்ளைட்பிடித்துத் தப்பி தாங்களிருக்கும் கனடாவிற்குத்தப்பி 'அரசியல் அகதி" கோட்டாவில் இம்மிக்கிரேட் ஆகவேண்டிய நிலைதானே நிதர்சனம்.

இந்த மத்திய கிழக்கு நாட்டு அரசியல் எல்லாவற்றையும் தாண்டி, priority-ல் முதலில் வரும் தன் குடும்பத்தில் உள்ள "நாலு பேருக்காக சவூதியில் வேலை செஞ்சாக்கூட பரவாயில்லை" என்று சொல்லும் "நாயகனாக"த் தானே நம்ம சராசரி இந்தியன் இருக்கிறான்.

-------------------------------------------------------------------------------------------
வெட்டிப்பயலின் "கணவனைக் கொல்" என்ற தலைப்பில் வந்த பதிவில்
//நம்ம தமிழ்மணத்துல சில பேர் இந்து மதத்தை அழித்தால் சாதி பிரச்சனைக்கு முடிவு கட்டிடலாம்னு நினைக்கறாங்க.மத்த மதங்கள் எல்லாம் அனைத்து மக்களையும் சமமாக மதிக்கிற மாதிரியும் அவர்களுக்கு ஒரு எண்ணம்...இக்கரைக்கு அக்கரை எப்பொழுதும் பச்சையாகத்தான் தெரியும்.//

நானிட்ட பின்னூட்டம்
எனக்குத்தெரிந்து படிப்புக்காகவும், பொருளாதாரத்திற்காகவும் கிரிஸ்தவ மதம் மாறுவோர்தான் அதிகம்.படிச்சா முன்னேறலாம். எங்க நிஜமா இருக்கற நிலையப் பாருங்க.. நம்ம "கல்விக்கடவுள் சரஸ்வதி" மைனாரிட்டி மற்ற மதக் கல்விநிறுவனங்களில் மே, ஜூன் மாதம் அதிக மகசூல் தரும் பணப்பயிராக ஆக்கியது நமது "அரசியல் பகுத்தறிவால்"தானே?

ஜேப்பியார், காருண்யா மற்றும் பலகல்விநிறுவனங்கள், 90%ஆசிரியர் பயிற்சி தனியார் நிறுவனங்கள் கிறிஸ்தவ மைனரிட்டி நிறுவனங்களுக்குத் தானே அனுமதிதரப்பட்டுள்ளது நமது பகுத்தறிவு அரசியல் அரசுகளால்.

சின்மயா,ராமகிருஷ்ண,சாரதா மற்றும் இன்ன பிற இந்து நிறுவனங்களுக்கு ஏன் அனுமதி அளிப்பதில்லை நம் பகுத்தறிவு அரசுகள்?

நல்லாபடிச்சு வாழ்க்கையிலே வெளங்கிவருவதற்கு வாய்ப்புத் தரும் வகையில் காமராஜர் பள்ளிக்கல்விக்குச் செய்தமாதிரி மக்கள் தொகை பெருகிப்போன பின்னும் அதே பத்துக்குள்ளான மருத்துவக்கல்லூரிகள்தான், ஆனால் கல்லூரிகளைப்பெருக்காமல் இட ஒதுக்கீடு, மண்டல் என மக்களைப் பிளக்கும் திரா(வக)விட பகுத்தறிவுகளிடம் "குரங்கு அப்பம்" மாதிரி நொந்து தனிவாழ்வைக் காவு தந்தபின் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று எங்காணும் கடற்கரையில் நடக்கும் "அற்புத சுகமளிக்கும் சுவிசேஷக் கூட்டங்கள்" தான் தமது முடத்தை, செவிட்டுத்தனத்தை,நீக்கும் என்று சரணடைவோர்தானே அதிகம்
-----------------------------------------------------------------------------------------------
வெட்டிப்பயலின் திராவிடன் என்பவன் யார் எனும் பதிவில்
http://vettipaiyal.blogspot.com/2006/06/blog-post_28.html

நானிட்ட பின்னூட்டங்கள்:

//திராவிடர்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதா?அப்படினா சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் திராவிடர்கள் கிடையாதா?//

இமயத்ததிலிருந்து கல்லெடுத்து வந்து நிழல் கீழே விழாத கோபுரத்துடன் தஞ்சைப் பெரிய ( பிரகதீஸ்வரர்) கோவில் கட்டிய சோழ மன்னன் இராஜராஜன், மாமல்லபுரம் குடவறை, மற்றும் கடற்கரைக் கோயில்கள் கட்டிய மகேந்திரவர்மன் இவர்களெல்லாம் -தற்போது கடந்த 80 ஆண்டுகளாக தமிழகத்தைப் பீடித்திருக்கும் "சுயநல அரசியல் திராவிட சித்தாந்தத்தின்" அளவுகோல்படி "காட்டுமிராண்டிகள்" என்றும் ஆகம சாஸ்திரப்படி கோவில்கள் கட்டியதால் "ஆரிய மாயையில்" சிக்குண்டுவிட்ட "பார்ப்பன அடிவருடிகள்" என வகைப்படுத்தப்படும் நிலை தெரியவில்லையா திரு.வெட்டிப்பயலாரே?

//ஈ.வே.ரா பிள்ளையார் சிலைக்கு செருப்பு மாலைப் போட்டது சரியா? உங்களுக்கு நம்பிக்கை இல்லனா யாரும் நம்ப கூடாதா? இது கொள்கை திணிப்பு அல்லவா?//

இம்மாதிரி பகுத்தறிவுப் பகலவனின் அடிமடியிலேயே கை வைக்கும் கேள்வியைக் கேட்போரை நோக்கி பதிலலேதுமளிக்காது "மறத்தமிழன்" செய்யவேண்டியதாகச் இன்னும் சொல்லப்படுபவை "பாம்பையும் பார்ப்பானையும் ஒருசேரக் காணும் நிலையில் பார்ப்பானைக் கொல்லவும், பாம்பினை விட்டுவிடவும் வேண்டும்".என்ற "அரசியல்-த்ரா(வக)விடம் - நீ அறியவேண்டும் வெட்டிப்பயலாரே!

//இந்தி திணிப்பு எந்த அளவிற்கு தவறோ அதே அளவிற்கு கொள்கை திணிப்பும் தவறல்லவா?//

பகுத்தறிவுப் பகலவர்களின் அரசியல்-திராவிடப் பாசறைக் கோனார் கையேட்டு விளக்கம் படிக்கவும் வெட்டிப்பயலாரே: "இதோ ஆரியப் புற்றிலிருந்து, ஆரிய மாயையில் மயங்கிய, சோற்றாலடித்த பிண்டமான தமிழன் நிலை பிறழ்ந்துபோய், தரம் தாழ்ந்துபோய்விட்டதன் விளைவே இந்தக் கேள்வி."

//காமராஜர் தோல்வி அடைந்ததற்கான காரணம் என்ன?//

பிரச்னைகளுக்குத் தீர்வுகள் காணும் திரு. காமராஜ் மாதிரியான உண்மையான தலைவனுக்குத் "திராவிட-அரசியல் பதில் மரியாதை" செய்யவேண்டாமா?எதிர்காலத் தமிழனின் தேவைகள உணர்ந்து 3கி.மீ தூரத்திற்கு ஒரு உயர்நிலைப் பள்ளியும், 7கி.மீ தூரத்திற்கு ஒரு மேல்நிலைப்பள்ளியும், ஐஐடியும், பாசனத்திற்குஆறுகளின் குறுக்கே ஐந்துக்கும் மேற்பட்ட அணகளயும் கட்டிச் சாதனைகள் செய்தால் விட்ருவோமா?

தமிழகத்தின் பல பிரச்னைகளுக்குத் தீர்வு கண்ட தங்கத் தலைவன் காமராஜரைச் சரியாப் பழி தீர்த்துட்டோம்ல! என்ன வெட்டிப்பயலரே இப்பவாணும் விஷயம்அறிந்து கொள்ளவும்!

------------------------------------------------------------------------------------------------

Saturday, July 08, 2006

(10) ஹரிஹரனின் போடி டூ சென்னை அனுபவங்கள்-1

நானும் கல்லூரிப்படிப்பு முடிந்தவுடன் விடுதியைக் காலிசெய்துவிட்டு சொந்த ஊர் போடிக்கு வந்தேன். போடியில் 89-90களில் நிறையபேர் என்ஞினியரிங் படிப்பு படித்துக் கொண்டும், படிப்பை முடித்து விட்ட டெக்னோகிராட்ஸ் நிறைய இருந்தனர். அப்போது அவர்களது பிரதான வேலையே 5-10 பேர் கொண்ட சிறு குழுக்களாக, முறை வைத்துக் கொண்டு, இருந்த ஏழெட்டு வீதிகளில் சுற்றிச் சுற்றி ரஜினி, கமல் படங்கள் பற்றி அதிதீவிரமாக விவாதிப்பதும், குறிப்பாக செவ்வாய், வெள்ளிக்கிழமை மாலைகளில் "பக்தி" பெருக்கெடுத்து நகருக்குள் இருந்த சுப்ரமண்யசுவாமி கோவில், பெருமாள் கோவில் பக்கம் ஒதுங்குவது என்றிருந்தது.

கோவில்களின் புகழ் கூட ஏறி இறங்கும் விஷயமாக இருக்கிறது. யாரோ சில படிக்கிற பயபுள்ளைக இந்தக் கோவில் சாமியைக் கும்பிட்ட்டால் புத்தகத்தை முழுப்பரீட்சை வரைக்கும் தொடலைன்னாலும் சாமி பாஸாக்கி விட்டுரும்னு கிளப்பி விட்டது போடியில பயங்கரமா ஒர்க் அவுட் ஆனதில், 4கி.மீ தூரத்தில் மேலச்சொக்கநாதபுரம் எனும் கிராமத்தில் இருந்த தொட்டராயசாமி கோவிலுக்கு சனிக்கிழமைகளில் போடியிலிருந்து நிறைய பேர் குடும்ப சகிதமாகச் செல்வார்கள்.

நம்ம சிபிஏகல்லூரி மாணவர்கள், ஊரில் வளையவரும் டெக்னேகிராட்ஸ் "சனிக்கிழமை" மாலைகளில் "ப்ளாக் கமெண்டோ" மாதிரி தொட்டராயசாமி கோவிலுக்குக் "மாணவிகளோடு" செல்லும் குடும்பத்திற்கு "இஸட்"பிரிவு பாதுகாப்புத்தருவார்கள்.

இப்ப பாவம் அந்த தொட்டராயசாமி முன்னமாதிரி பிட் எடுத்துப்போட ஆள் அனுப்புவதில்லை போலிருக்கிறது. கோவில் காத்தாடுகிறது.

நமக்கு இருந்த குடும்பச்சூழலில் "ப்ளாக் கமெண்டோ" வேலைசெய்யக் குடுப்பினை இல்லை. மேலும் ரஜினி,கமல் நடித்துப் பணத்தில் புரள அவர்களது படங்களைப் பற்றி உயிரைவிட்டு தெருவெல்லாம் கால்தேய நடந்து விவாதிக்கவும், இன்னபிற டைனமிக்,யூத்புல்லான செயல்கள்செய்ய நாணயமான ஆசிரியராக கௌரவமாகப் பணியிலிருக்கும் தந்தைக்கு இடையூராக இருக்க என்மனம் விரும்பவில்லை.

கல்லூரிபடிப்பு முடிந்த பத்துநாட்களில் அப்பாவிடம், உங்களுக்குத் தெரிந்த நபர் யாராவது சென்னையில் இருந்தால் என்னை அங்கே அறிமுகப்படுத்திவிடச் சொல்லி தினம் இம்சித்ததில் அப்பாவும் நிறைய யோசித்து அதிகம் பழக்கம் இல்லாத அவரது உறவினரைக் கேட்பது என்று என்னால் நிர்பந்திக்கப்பட்டார்.

அந்த உறவினரும் சரி...வரலாம்...வந்தால் என்று முடிவுக்கு வருமுன் 102டிகிரி காய்ச்சலெனினும் தந்தையோடு சென்னைக்குள் நான் ஆஜர்.

சென்னையில் இறங்கியவுடனே நகரத்தின் பெரிய அளவிலானதான தன்மை என் 20வயதையும் மீறி ஒரு கிலியை ஏற்படுத்தியது. அப்பா மறுநாள் ஊருக்குச் சென்றுவிட்டார்.

மதுரைக்குப் பலமுறை பள்ளிநாட்களில் ஆண்டுவிடுமுறையின் போது தாய்வழிப்பாட்டி ஊரான சோழவந்தான் போகும்போதும், மதுரையிலேயே அரசரடியில், ஊமச்சிக்குளத்தில், பழங்காநத்தம், என்று பல இடங்களில் இருந்த என் தந்தை வழி அத்தைவீட்டுக்குப்போகும் போது போயிருக்கிறேன். மதுரை போடியை விடப் பலமடங்கு பெரிய நகரம்.

மதுரை புதுஜெயில் ரோட்டில் அத்தை வீட்டிலிருந்து பொழுதைக்கழிக்க வேண்டி எனது சகோதரனுடன் அரசரடியில் அப்போது பலகாலமாகக்கட்டப்பட்ட "ராம்விக்டோரியா" தியேட்டர் அருகே நின்றுகொண்டு"டைம்கீப்பர்"மாதிரிதிண்டுக்கல்போகும்வயிரவன்,
சோலைமலை,நல்லமணி,சி.கே.சொக்கன், எங்கஊர்போகும்எஸ்.என்.ஆர்,மதுரைமீனாக்ஷி,சி.கே.பாலன்,திருமால்அழகுஎன்று எல்லா பஸ்ஸையும் வழியனுப்புவதுதான் பொழுதுபோக்கு.

இந்தப் பொழுதுபோக்கு பிற்பாடு பரிணாம வளர்ச்சிகண்டு லண்டன் ஹீத்ருவிலும், ஆம்ஸ்டர்டாம்ஷிபோல் ஏர்போர்டில் க்வாண்டாஸ்,எஸ்.ஏ.எஸ்,ஏர்ப்ரான்ஸ்,லூப்தான்ஸா,விர்ஜின்,அமெரிக்கன்,கேஎல்.எம், இன்னபிற நாட்டு விமானங்களைக்கண்டபோது க்ராபிக்ஸ்ல போட்டிருந்த புல்சூட் மறந்து டவுசர் சிறுவன் வந்து குதூகலிப்பில்

"வானத்தை வளைத்தேன் வில்லாய்"
"வாயெல்லாம் சிரித்தேன் பல்லாய்" - எனக் புதுக்கவிதை பாடியது.

எண்ணங்கள் நயாகரா வேகத்தில் வந்ததில் சென்னையை விட்டு ஹீத்ரு வரை வந்துவிட்டது. பேக் டு டிராக்.

மதுரையில் எல்லாம் உறவுமுறைதான். ஆண்கள் யாரா இருந்தாலும் அண்ணன்தான், பெண்கள் அக்காதான். சின்னப்பையன் எல்லாம் தம்பி. பாண்டியன் பஸ் டிரைவர்கிட்ட பஸ் ஸ்டாப்பாக இல்லாத இடத்திலும் "அண்ணே ப்ரேக்க ஒருவாட்டி மிதிச்சா இறங்கிக்குவேன்னு" சொன்னா டிரைவர் அண்ணனும் இறக்கிவிட்டுப் போவார்.

சென்னையில் புதிதான எனக்கு கண்டக்டர் எழுந்து வரவே மாட்டார்ன்ற விஷயம் தெரியாது, ஊருக்குப்புதிதான நான் நாலுபேர்கிட்ட நாலுவாட்டி எறங்குற இடம் கேட்டு இறங்கத்தோதா படிக்கட்டில் நின்னுட்டு வந்தப்போ சென்னை பல்லவன் நடத்துநர் "டேய் கண்ணாடி, சாவு கிராக்கி" மேல ஏறிவாடான்னு கூப்பிட்டதுல கண்ல தண்ணியே வந்துருச்சு. அந்தக் கலாச்சார அதிர்ச்சியில இருந்து மீள சில பல நாட்கள் ஆனது எனக்கு.

பள்ளிக்கூடத்திலேயும் சரி, வீட்லேயும் சரி யாரும் என்னைத் திட்டும்படி நடந்துகொண்டதில்லை நான்.

ஆனால் அதுதான் சென்னைன்னு புரிஞ்சுபோச்சு சீக்கிரம். மதுரையிலே ஒரு ரெண்டு மாசம் அலைஞ்சா ஒரு வேலை கிடைக்கிறது குதிரைக்கொம்பு. ஆனால் சென்னையிலே எனக்கு அப்ளை பண்ணா பாதிகுப்பாதி இண்டர்வ்யூக்கு கூப்பிடுவாங்க. அதுல பாதிக்குமேல வேலைக்கு ரெடி.

வளசரவாக்கத்திலிருந்த தந்தைவழி உறவினர்க்கு 15நாட்களுக்கு மேல் சுமையாகிப்போக அப்பா இம்முறை நங்கநல்லூர் சிதம்பரம் ஸ்டோர்ஸ் அருகிலான 13வது குறுக்குத்தெருவில் தாய்வழி தூர உறவினர் வீட்டில் பேயிங் கெஸ்ட்டாக விட்டுச்சென்றார்.

தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் ஒரு கம்பெனியில் ஒருமாதம் சம்பளமின்றி வேலை(!?) பின் சம்பள பேரம் கட்டுபடியாகாததில் சம்பளமே வாங்காத வேலையை ராஜினாமா செய்தேன்.

சென்னைக்கு வந்த 45நாட்களுக்குள் முதல் ராஜினாமா வரை வந்துவிட்டேன். பிற்பாடு முதல் வேலையைவிட ரூ.50 குறைவு என்றாலும் தன்மானத்திற்காக அடுத்த வேலை 15நாட்களுக்குள் ரூ300குச் சேர்ந்தேன். முதன் முதலாக வாங்கிய சம்பளம் ரூ300. அது அப்படியே பேயிங் கெஸ்ட் பேமெண்ட்க்குப் போய்விடும். முதல்மாத சம்பளத்தில் ரூ10எனக்குத்தந்தார் நங்கநல்லூர் உறவினர். மேலும் ஞாயிறு எனக்காக ஹிண்டு வாங்குவார். க்ளாஸிபைடு பார்த்து விண்ணப்பிக்க உதவியாக இருந்தது.

அடுத்த மாதம் ரூ750ல் ஒரு வேலை கிட்டியது. உடனே ஹைதராபாத் டிரைனிங்குக்காக ஒருமாதம் செல்லவேண்டிவந்தது. என்மாதிரி பேச்சிலர்ஸுக்கு இம்மாதிரி லாங் டூர் லாபகரமானது. டிஏ-வைத்தே சமாளிக்கலாம். என்றாலும் எனது ஸ்போக்கன் இங்கிலீஷ் சரியில்லாததால் 'விற்பனை'ப்பிரிவில் எச்சுக்கள் என ஒரே தள்ளாட்டம். பதினொரு மாதங்களில் இது முன்றாவது ராஜினாமா! பெட்டியைக்கட்டிக்கொண்டு போடிக்குத் தோல்விப்பயணம்.

ஊர்திரும்பிய எனக்கு என் உறவினர்களால் நான் ஒரு பெயிலியர், ப்ளாப் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டதில் சென்னையில் இவ்வவளவு பேச்சு வாங்கியிருந்தால் மாதக்கடைசியில் சம்பளமாவது கிடைக்கும் என்ற மெய்ஞானம் தோன்றியது. 45நாட்களில் மீண்டும் சென்னை.

இம்முறை ரங்கநாதன் தெருவில் இருந்த மேன்சனில். தக்க சமயத்தில் மேன்சன் வரை வந்து (நங்கநல்லூர்க்கு ரயில் பிடிக்கும் வழியில்) அந்த உறவினர் நான் முன்பே அப்ளை செய்திருந்த இண்ட் ர்வ்யூ லெட்டரைத் தந்ததை நன்றியுடன் நினைக்கிறேன். அந்தக் கம்பெனியில் ஐந்தாண்டுகள் ஆஃப்டர் சேல்ஸ் சர்வீஸில் பணிபுரிந்தேன் அந்த அனுபவம் குவைத் வேலைக்குப் பெரிதும் உதவியது.

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்,


ஹரிஹரன்

Wednesday, July 05, 2006

(9) ஹரிஹரனின் சொந்த ஊர் அனுபவங்கள்-1

போடிநாயக்கனூர் என்ற போடி. இதுதாங்க நம்ம சொந்த ஊர்.

மதுரையிலிருந்து 90கி.மீ. ஊரெங்கும் ஏலக்காய் வாசம் வீசும்.

ஊரில் பெரும்பாலோனார்க்கு ஏலக்காய்,காபி,டீ,எஸ்டேட் நிறைய. ஒரு 30நிமிடம் சைக்கிள் மிதித்தால் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரம் வந்துவிடும்.

எங்க ஊர் பெருமையே எனக்குக் கல்லூரி விடுதி வாழ்க்கையில்தான் நிரம்பத் தெரிய வந்தது. திருச்சியிலிருந்து பஸ்ஸுல வரும்போது, என்னதான் சரியான தூக்கத்தில் இருந்தாலும் குப்புன்னு ரொம்பக் கெட்ட நாத்தம் (லெதர் டான்னிங்) என்னை எழுப்பினால் பஸ் திண்டுக்கல் வந்திருச்சுன்னு தெரிஞ்சுரும், அப்பிடியே கண்ணைத் தொறக்காம தம் கட்டி, மூச்சை இழுத்து எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசிக்காம இருந்தா செம்பட்டி வந்துரும்.

வத்தலக்குண்டிலிருந்து வெளிச்சமா இருக்கும்போது பயணிச்சா மேற்குத் தொடர்ச்சி, கொடைக்கானல் மலைன்னு பயணம் கண்ணுக்கு விருந்தா இருக்கும். பெரியகுளம், தேனி தாண்டி வலதுபக்கம் மலையைப்பார்த்து ஒரு 12கி.மீ தூரம் உள்ளே போகணும்... வழி எங்கும் பச்சை சதுரங்களாய் நெல் வயல்கள், வாழை, கரும்புத்தோட்டங்கள், வலது பக்கம் வங்கார்சாமி கண்மாய்... ஹரிஹரனின் இஷ்டமான எல்லைக்காளியம்மன் கோவில்... இதோ போடி வந்திருச்சுங்க.

போடி பஸ்டண்ட்ல இருந்து. 2நிமிஷம் இளந்தாரியா நடந்தா மீனாஷி தியேட்டர் பின்னாடிதான் நம்மவீடு. போடி ஊர் சைஸுக்கு ஏழு சினிமாத் தியேட்டர் ரொம்ப ஜாஸ்திதாங்க.

பிரிக்கப்படாத மதுரை மாவட்டத்தில் போடி ஜமீந்தாரணி காமூலம்மாள் நினைவு மேல் நிலைப்பள்ளி ரொம்ப பழைய பரம்பர்யமான பள்ளிக்கூடம். ஒரு 125வருஷப் பாரம்பர்யம் உள்ளது. நாம 1-12வது வரை இந்தப் பள்ளிக்கூடத் தயாரிப்புதாங்க.

போடியில் ஏலக்காய் வியாபாரிகள் சங்கக் (சிபிஏ)கல்லூரி 30 வருஷப் பழைமையானது. அதைவிட இங்க படிச்சா க்யாரண்டியா.. உருப்படவே முடியாதுங்க. மலை அடிவாரத்தில கல்லூரி... க்ளாஸ்ல இருக்குறதவிட மாந்தோப்புல, மலையில,கரட்டுலன்னு மாணவர்கள் ப்ரீயா இருந்து 30வயதுவரைக்கும் பெற்றவர்களுக்கு பாரமா பின்னால ஆறதுதான் முன்னாள் மாணவர்கள் செட் செய்த ட்ரண்டு!

இதனாலேயே மாடுகூட சந்தோஷமாய் மேய்க்க நான் ரெடி. ஆனா போடி சிபிஏ காலேஜ்ல மட்டும் படிக்கவே மாட்டேன்னு அப்பாகிட்டே +2 படிக்கும் போதே சொல்லிவைத்ததில் நம் வாழ்க்கை பிழைத்தது.

ஊர்ல இருந்தவரை காலை, மாலை கோவில் போவது, பள்ளிக்கூடம் போவது, பொதுநூலகம் போய் தினசரிகள், விகடன், கல்கண்டு,கோகுலம்,தினமலர் வாரமலர், என்னன்னே புரியாத யூனெஸ்கோ கூரியர் கூடப் புரட்டி இருக்கிறேன்.

எம்.ஜி.ஆர்,இந்திரா மாதிரி தலைவர்கள் வந்தால் ஹெலிபேட் நம்ம ஸ்கூல் கிரௌண்ட் தான். அவ்வளவு பெரிய்ய்ய்யது. ஏராளமான மரங்கள் அடர்ந்தது.

மாலையில் கூடுதிரும்பும் பறவைகள் இப்பள்ளி மரங்களில் எழுப்பும் ஒலி நம்ம வீடுவரை கேட்கும். (மாடியிலிருந்து அம்மா சின்ன டேப் ரெகார்டரில் பாட்டுப்போட்டால் ஸ்கூல் க்ளாஸ்ல நமக்குக் கேட்கிற தூரம்தான்)

இந்த மரங்களில்தான் "காக்காக்குஞ்சு" விளையாட்டு கற்று விளையாடியது. பத்து முறை மரத்தில் ஏறி கை, காலில் சிராய்ப்போடும், வ்ழிந்தோடும் வியர்வையோடும் ஸ்கூல் காம்பவுண்டுச் சுவர் ஏறி ஏதாவது ஒரு வீட்டைத் தட்டித் தண்ணீர்கேட்டுச் சொம்பிலிருந்து பாதி வாயிலும், பாதி சட்டையில் என்று குடித்துவிட்டு மீண்டும் மரமேறி "காக்காக்குஞ்சு" விளையாடுவோம்.

இந்த மரமேறி விளையாடும் "காக்காக்குஞ்சு" விளையாட்டுக்கு என்னைச் சேர்க்கமாட்டார்கள் ஏனெனில் விரைந்து மரமேறும் திறமைதான் இங்கு அடிப்படைத் தேவை. நான் போனாலே அய்யரை ஆட்டத்தில சேர்க்காதே என்பார்கள்.

சாட்...பூட்...த்ரீ என்று கைகோர்த்துச் சொல்லி செலக்ஷன் ப்ராஸஸ் (ஆட்டவிதிகள் மறந்துவிட்டன) செலக்ட் ஆனவர்கள் முன்னரே மரம் ஏறி வசதியான கிளைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்வர். இறுதியாக மாட்டிக்கொண்டவர் மரத்தின் அடியில் மண் தரையில் ஒரு அடி அளவிலான குச்சியால் வட்டம் போட்டு, அதில் நின்று கொண்டு தூரவீசி எறிந்துவிட்டு விறு விறு என்று மரம் ஏறி கிளையிலிருப்பவரைத் தொட்டால் அவுட்.

எனக்கு க்யாரண்டிக்கு என் நண்பன் "சொத்தைப்பல்" சிவகுமார் வட்டத்திலிருந்து குச்சியை தூரவீசி எறிந்துவிட்டு விறு விறு என்று மரக்கிளையில் என்னைத் தொடாமல் வேறு எவரையாவது அவுட் ஆக்குவான்.

வேனிற்காலத்தில் புளியமரங்கள் துளிர்க்கும் போது அதன் கொழுந்து இலைகள் அதிகப்புளிப்பில்ல்லாது சுவையாக இருக்கும். புளியம்பூககளும், இளம் பிஞ்சுக்காய்களும் வெளியூர் செல்லாத முழுப்பரீட்சை லீவில் நமது அவுட்-டோர் ஸ்னாக்ஸ்.

மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் பரமசிவன் கோவில் திருவிழா போடியில் கோடைகாலத்தில் நடக்கும். 100படிகளுக்கும் மேலான படிகள் ஏறிச்செல்லும் படி அமைந்த சிவன் கோவில்.

விழாக்கமிட்டியினர் உள்குத்து காரணமாக சிலசமயம் விழாவே கான்ஸல் ஆகி என்மாதிரி சிறுவர்களைச் சோகப்படுத்திவிடும்.

பரமசிவன் கோவில் விழாவில் "ஐந்து பூ மார்க் பீடி" நிறுவனத்தார் போடும் 16mm கறுப்பு வெள்ளை "வஞ்சிக்கோட்டை வாலிபன்" மாதிரியான "புதிய" படங்கள் சிறப்பம்சம்.

இந்த விழாவுக்கு போடியைச் சுற்றியுள்ள 18பட்டி கிராமத்துக் கிளிகளும், குடும்ப சமேதமாய் வந்து செல்வர்.

போடிக்கான குடிநீர் "கொட்டகுடி"ஆற்றிலிருந்து சுத்திகரிக்கப்படும் சுத்திகரிப்பு நிலையம் இருக்கிறது. சதுரசதுரமாய் பல ராட்சஸ தொட்டிகளின் மீது நடந்து சென்றது அந்தக்காலத்தில் த்ரில்லான அனுபவம். உபயம் பக்கத்து வீட்டு என்ஞினீயர்.

கொட்டகுடி ஆற்றங்கரையில் இருக்கும் "அணைக்கரைப்பிள்ளையார்கோவில்" தான் நான் சென்ற ஒரே "கல்விச் சுற்றுலா" . சின்ன மதகு அணை, ஆற்று நீரைப் பாசனத்திற்கு திருப்பி விடும் இடம். தென்னந் தோப்புகள், ஆறு என ரம்மியமான இடம். தோப்பில் ஊறல் போட்டு சாராயம் காய்ச்சுவார்களாம்.

சரி. போடிய வச்சே சில பதிவுகள் போட்டுற வேண்டியதுதான்.

டுத்த பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்,

ஹரிஹரன்

(8) "ஆறு"ச்சாமியாக ஹரிஹரன்

"தொழிற்படிப்புக்கு எண்ட்ரன்ஸ் எக்ஸாம் தேவையில்லை" என்ற அறிவிப்பு கிராமப்புற மாணவனுக்கு உதவியதோ இல்லையோ அது தெரியாது, ஆனா துளசியக்கா "ஆரு"வேன்னா "ஆறு" எழுதலாம்னு அவங்க "ஆறுபதிப்பு"ல பிரகடனம் செய்தது, வலைப்பதிவுக்குப் புதியவனான என்னை 'ஆறு"ச்சாமியாக வீறு கொண்டு எழுந்து, எனக்குத் தெரிந்த அந்த, இந்த என்ற எல்லா "ஆறையும்" பதித்து சக வலைஞர்களை இம்சிக்க பேருதவி செய்தது.

இதோ எம்மைக் கவர்ந்த "ஆறு" பட்டியல்:

1. நகரங்கள்:


பிடித்த இந்திய நகரங்கள்

1. வாழவைத்த "சென்னை"
2. சுறுசுறுப்பான "மும்பை"
3. நோட்டடிக்கும் "நாசிக்"
4. அரண்மனைகள் நகரம் "ஜெய்ப்பூர்"
5. தலைநகரம் "புது டில்லி"
6. பாசக்கார "மதுரை"

பிடித்த உலக நகரங்கள்

1. நான் தற்போது இருக்கும் "குவைத் சிட்டி"
2. அவ்வப்போது செல்லும் "துபாய்"
3. சுத்தமும் பசுமையும் இணைந்த "ஜுரிச்"
4. பழமையும் புதுமையும் சேர்ந்த "கோபன்ஹெகன்"
5. ஐரோப்பாவின் மாநகரம் "இலண்டன்"
6. சிறு தீவு நாடான பஹ்ரைன் தலைநகர் 'மனாமா"

பார்க்க விரும்பும் நகரங்கள்

1. மலேஷியாவில் "கோலாலம்பூர்"
2. சிங்கப்பூர்
3. தாய்லாந்தில் "பாங்காக்"
4. இத்தாலியில் "ரோம்"
5. ப்ரான்ஸில்"பாரிஸ்"
6.ஆஸ்திரேலியாவில் "சிட்னி"
(ஒரிஜினல் லிஸ்ட் ரொம்பப் பெரிசு)

2. இசை:

இசை அமைப்பாளர்கள்:

1. வளர்ந்ததெல்லாம் "இளையராஜா" இசையில்
2. தொழில்நுட்ப ரெக்கார்டிங்குக்காக "ரஹ்மான்"
3. வித்யாசாகர்
4. எஸ்.ஏ.ராஜ்குமார்
5. சிற்பி
6. பழையதில் ஏ.எம்.ராஜா

பின்ணணி பாடுவதில்:

1. இளையராஜா
2. எஸ்.பி.பி
3. ஏசுதாஸ்
4. பாம்பே சகோதரிகள்
5.ஸ்வர்ணலதா
6.ஜானகி

3. பிடித்த பொழுதுகள்

1. சந்தியா காலத்தில் (இருள் பிரியும்அதிகாலை, இருட்டுமுன்பான மாலை) பேருந்தில் நெடுஞ்சாலையில், கடற்கரையில் பஸ், கார், பைக்கில் சென்று கொண்டே எழும், மறையும் சூரியனை ரஸிக்கும் பொழுதுகள்.

2. A.விமானம் தரைக்கும் வானத்துக்குமாய் take off ஆகும் தருணங்கள் மற்றும் நடுவானில் நாம் பயணிக்கும் விமானத்திற்குச் சற்று தூரத்தில் க்ராஸ் ஆகிச்செல்லும் வேறு ஏர்லைன் விமானத்தைப் ஜன்னல் வழியே பார்க்க நேரும் தருணங்கள்

2.B. நடுவானில் 35-40,000 அடி உயரத்தில், வெண்மேகமூட்டத்திற்குள் விமானம் செல்லும்போது தேவதைகளயும், தங்கக் க்ரீடம் அணிந்த நம் கடவுளர்களை அனிச்சையாய் ஜன்னல் வழியாகத் தேடும் தருணங்கள்.

3. நண்பர்களுடனான பேச்சு, கல்லூரி விடுதிப் பொழுதுகள், சென்னைப் புறநகர் மின் தொடர்வண்டிப் பயணப் பொழுதுகள்.

4. ஒன்றுமுதல் நான்கு வயதுக் குழந்தைகளின் மழலை மற்றும் அவர்களது பெற்றோர்மீதான அசாத்தியமான ட்ரஸ்ட். எதைச்சொன்னலும், விழிவிரியக் கேட்டு உள்வாங்கும் தருணங்கள்.
5. அதிகாலை 5.30 மணிக்கு மனைவியோடு ப்ளாட் பால்கனியில் மெலிதாய்ப் பேசிய படி காபி அருந்தியவாறே காலையின் இனிமையை உள்வாங்கும் பொழுதுகள்.

6. பெற்றோர், மற்றும் குடும்ப சகிதம் செல்ஃபாக லாங் டிரைவிங்கில் செல்லும் தருணங்கள்.


4. பிடித்த எழுத்(துக்கள்)தாளர்கள்:

1. லேனா தமிழ்வாணனின் ஒருபக்கக் கட்டுரைகள்.
2. சுஜாதாவின் எழுத்துக்கள்.
3. ஷிவ் கேராவின் "யூகேன் வின்" மாதிரியான தன்னம்பிக்கை எழுத்துக்கள்
4. ஆக்ஸ்ஃபோர்ட் பதிப்பக லெக்ஸிகன்கள்
5.ஸ்வாமி சின்மயானந்தாவின் புத்தகங்கள்
6.யூகேஜி படிக்கும் என் மகள் முயன்று எழுதும் அவள் பெயர்!

5. பிடித்த உணவு வகைகள்

1. சென்னைப் புறநகர் ரயில் நிலைய வி.எல்.ஆர்.(வெஜிடேரியன் லைட் ரிஃப்ரிஷ்மண்ட்) ஸ்டால்கள் மற்றும் பாண்டிபஜார் கையேந்திபவன்களில் சைவமாய் எதுவும்!
2. வடுமாங்காயுடன் தயிர்சாதம்
3.நவ்ரத்தன் கொர்மா + பட்டர் நாண்
4. எலுமிச்சைச் சாறு + மிளகுப்பொடி தூவிய க்ரீன் வெஜிடபிள் சாலட்
5. அரேபிய சைவ உனவுகளான ஹுமூஸ் (காபூலி வெண் கொண்டைக்கடலை பேஸ்ட்) , ப்பிலாபில் (வெண் கொண்டைக்கடலை+கீரை சேர்த்த டீப் ஃப்ரைடு வடைமாதிரியானது) , ப்பூல் ( பெரிய அமெரிக்கன் ப்ராட் பீன்ஸ் பயறு வேகவைத்து கொஞ்சம் ப.மிளகாய் சாறு+ பூண்டுச்சாறு +உப்பு+ஆலிவ் ஆயில்) இவைகளை குப்புஸ் என்ற அரேபிய தந்தூரி ரொட்டியுடன் சாப்பிடுவது.
6.கோவை அன்னபூர்ணா&கௌரிசங்கரில் சாம்பாரில் மூழ்கிய இட்லி,வடை!


6.. பிடித்த தலைவர்கள்

1. காமராஜர் (எல்லோரும் படிக்கப் பல கல்விச்சாலைகள் திறந்தவர்)
2. அப்துல் கலாம் (கனவு காண்பதுதான் வளர்ச்சிக்கு உதவும் என்றவர்)
3.மகாத்மா காந்தி
4. பாரதியார்
5. விவேகானந்தர் & சின்மயானந்தா
6. நரேந்திர மோடி (நம்மூர் sickular அரசியல் & மீடியா இவர் administration சாதித்ததைச் சொல்லாது அல்லாததை மட்டும் பெரிதாக்கும்)

நமக்குப் பிடித்த (நாம எப்பவும் நம்மள நாம-ன்னுதான் சொல்லிக்கிறதுங்க!) விஷயங்கள் லிஸ்ட் ஹி..ஹி..கொஞ்சம் நல்லா பெரிசாப் போகுங்க. ஏதோ இத்தோட இப்போ விட்டுர்றேன்.

மற்றபடி "வாய்ப்பு"(!?) ஏற்படுத்தித் தந்த 'வலை உலகின் மகாராணி' துளசியக்கா வாழ்க! வாழ்க! என்று கூறி பெறுகிறேன்.

என்ன அங்க சத்தம் "போதும் நிறுத்திரு இப்பவா..." சரி சரி..

அன்புடன்,

ஹரிஹரன்

Tuesday, July 04, 2006

(7) ஹரிஹரனின் டென்மார்க் அனுபவங்கள்-1


கோபன்ஹேகன் டென்மார்க் நாட்டின் தலைநகரம்.

புயல் மழை பெய்து நேரில் பார்த்திருக்கிறேன். உக்கிரமான வெயிலுடன் கூட்டணி அமைத்துத் தாக்கும் புழுதிப்புயலில் திளைத்திருக்கிறேன்(!). நான் அதுவரை நேரில் பார்த்திராத, விழும் போதே உறைந்து தூவலாய் விழும் பனி மழை என்னை- கோபன் ஹேகனில் வரவேற்றது.

டாம் & ஜெர்ரி கார்ட்டூனில் டாம் பூனை உறைந்து விறைப்பாவது மாதிரி உறைந்து போய் வெளி வந்தேன்.

இந்த "டென்மார்க்கர்களைத்" தான் டச்சுக்காரர்கள் என்று நாம் இந்திய சுதந்திர வரலாற்றில் படித்திருக்கிறோம். நம்ம தரங்கம்பாடியில் டச்சுக்கார Ziegenbalg சீகன் பால்கு(ஐயர்!?) (மக்களை மதம் மாற்ற பெயரோடு ஐயர் அடைமொழி சேர்த்துக்கொண்டவர்)

ஐரோப்பாவில் ஜெர்மனி,நெதர்லாண்ட்ஸ்,டென்மார்க்-இங்கு உள்ளோர் Deutch என்றே அழைக்கின்றனர்.

டென்மார்க், ஸ்வீடன், நார்வே, பின்லாந்து எனும் அரச நாடுகள் இணைந்து "ஸ்காண்டிநேவியா" என்று அழைக்கப்படுகிறது.

இங்கிலாந்து அரச குடும்பமும், டென்மார்க்கிய அரச குடும்பமும் திருமண பந்தங்கள் உடையன. டென்மார்க் மக்கள் ஓரளவுக்கு மொழி வெறுப்பில்லாமல் ஆங்கிலம் பேச இதுவும் ஒரு காரணம் என நினைக்கிறேன்.

நம் பாரதி சிங்களத் தீவிற்குப் பாலம் அமைக்கச் சொல்லி கிட்டத்தட்ட 100ஆண்டுகள் ஆகப்போகிறது. தெற்காசிய infrastructure இன்னும் பெருமளவுக்கு பாரதி காலத்தைய மாதிரிதான் இருக்கிறது.

டென்மார்க்கும் ஸ்வீடனும் ஓர்சுண்ட் (Oresund Bridge) கடல் மேல் பாலத்தால் 17 கி.மீக்கு நெடுஞ்சாலை,இரயில் மார்கங்களில் இணைக்கப்பட்டுள்ளது. நார்வே தலைநகர் ஓஸ்லோ (Oslo)க்கு தினசரி கோபன்ஹேகனிலிருந்து கப்பல் போக்குவரத்து நடக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் தனி மனித அளவில் இங்கிலீஷ்காரனுக்கும் ப்ரெஞ்சுக்காரனுக்கும் தினசரி நடவடிக்கையில் ஏழாம் பொருத்தம். கிழக்கு ஐரோப்பியனை சுத்தமாக மேற்கு, வடக்கு ஐரோப்பியர்கள் மதிப்பதில்லை,

நம் இந்தியாவில் "இத்தாலிய அன்னையை" தலையில் தூக்கி வைத்து ஒரு கூட்டம் இன்னும் தாம் கலோனியல் (கஸின்ஸ் ) சிந்தனையோடு திரிகிறது.


ஆனால் அரசியல்,பிராந்திய முன்னேற்ற்ம், Regional infrastructure development என்று வரும் போது இங்கிலாந்துக்கும், ப்ரான்சுக்கும் இடையில் கடலடியில் ஆங்கிலக் கால்வாயைக் under sea bridge அமைத்துக் கடந்து பெரும்பாலான ஐரோப்பாவை யூ-ரயில் (european rail) network அமைத்து இணைத்திருக்கிறார்கள். டென்மார்க்கும் ஸ்வீடனும் ஓர்சுண்ட் (Oresund Bridge) பாலத்தால் நெடுஞ்சாலை,இரயில் மார்கங்களில் இணைத்திருக்கிறார்கள்.

நம் இந்தியா இணந்துள்ள "SAARC" அமைப்பும், ஆசிய நாடுகளின் அவலநிலையும், அரசியல் குழாயடி சண்டைகளும் நினைவுக்கு வந்து இம்சித்தது.


கோபன்ஹேகன் தெரு டாக்ஸிகள் கூட "மெர்செடிஸ் பென்ஸ்" தான். 20கி.மீ தூரத்திற்கு 300 டேனிஷ் குரொனர் (6குரோனர்=1 அமெ.டாலர்) (2500ரூ) இந்திய Vs டேனிஷ் Standard of Livingல் உள்ள Contrastஅப்பட்டமாகத் தெரிகிறது.

டென்மார்க்கில் Carlsberg பீர், பால்பொருட்கள், டேனிஷ் பேஸ்ட்ரி, டேனிஷ் பட்டர்குக்கீஸ், போன்றவை மிக பாப்புலரானவை.

கடல் வணிகம்தான் டென்மார்க்கியரது பண்டைய தொழில். இன்றைக்கும் Mersk என்ற நிறுவனம் தன் கடல் சரக்குப் போக்குவரத்தில் உலகின் முன்னோடி.

நான் பார்த்த அளவில் பெரும்பாலான ஐரோப்பிய நகரின் நடுவில் ஓடுகின்ற நதிகளில் இன்றளவும் தூய்மையுடன் சல சலத்து ஓடுகிறது நீர். எனக்குத் தமிழகத் தலை நகரமான சென்னை நகரில் ஓடி(!)க் கொண்டிருக்கும் கூவமும், அடையாறு நதிகளின் "நறுமணக்கும்" உண்மை நினைவில் வந்தது!

கடந்த 40ஆண்டுகளில் தமிழகத்தில் அரசியல் மட்டும் சாக்கடையாகவில்லை, சாக்கடை அரசியல் நம் தலைநகர் நதிகளையும் சாக்கடையாக்கிவிட்டது.

எல்லா வளமும் இருந்தும் அரசியல்வாதிகளால் இந்தியா மட்டும் infrastructure developmentல் உலக அரங்கில் இன்னும் dwarf ஆகவே வைக்கப்பட்டுள்ளது. வேறென்ன செய்யமிடியும் என்னால்? குளிரான கோபன்ஹேகனில் அக்னிப்பெருமூச்சு விட்டு எனது (அதி) குளிர் ஆடைப் பற்றாக்குறையைச் சமாளித்தேன்.


அன்புடன்,

ஹரிஹரன்.

Sunday, July 02, 2006

(6) ஹரிஹரனின் சுவிஸ் பயண அனுபவங்கள்-2

ஒரு சுவாரசியமான விஷயம். சுவிஸ் நாட்டிற்கென்று தனி மொழி கிடையாது. வடக்கில் ஜெர்மானிய ஜெர்மனும், தெற்கில் இத்தாலி மொழியும், மேற்கில் ஃப்ரஞ்சு மொழியும் பேசுகின்றனர். சில மாறுதல்களுடனான "சுவிஸ் ஜெர்மன்" என்பது அஃபிஷியல் அரசு மொழியாக பயன்படுத்துகின்றனர்.

சுவிஸ் முழுக்க, ஆங்காங்கே புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களால் அவர்களுக்கே உரித்தான உச்சரிப்பு, சொல்லாடல்களுடன் தமிழோசையும் கேட்கமுடிகிறது.

ஜூரிச் நகரம் தான் பெரியது. சுவிஸ் நாட்டின் வணிக நகரம். லிட்டில் பிக் சிட்டி... 15-20 நிமிட வேக நடையில் நகர எல்லைகள் வந்துவிடும். பெர்ன் தலை நகரம் என்றாலும் ஜெனீவா சர்வடதேச நிகழ்வுகளுக்கும், நுட்பமான கைக்கட்காரங்களுக்கும் புகழ் பெற்ற நகரம்.

சுவிஸ் நாட்டில் உலோகக் கனிமங்கள் கிடைப்பதில்லை. தங்கத்தாது கிடையவே கிடையாது. பின் எப்படி சுவிஸ் தங்கக்கட்டிகள் என்று தானே யோசிக்கிறீர்கள். வருகிறேன்...

சரி. சுவிஸ் நாட்டு உலகளாவிய வங்கித் தொழில் பற்றப் பார்க்கலாம். இந்த வங்கிப் பொருளாதாரத்திற்கு வரலாற்றைத் தொட்டுச்செல்லவேண்டியது அவசியம்.

1940களில் ஐரோப்பா முழுவதும் இருந்த யூதர்கள் இரண்டாம் உலகப் போர் சமயத்தில், ஹிட்லரால் விரட்டி விரட்டி கொல்லப்பட்டனர், அனைத்து ஐரோப்பிய நாடுகளும் சார்பு நிலையெடுத்துப் போரில் ஈடுபட்டிருந்த நிலையில், சுவிஸ் நாடு சாரா நிலை (ந்யூட்ரல்) எடுத்தது, பெரும் யூதப் பணக்காரர்கள் முதல், பெரும்பாலான யூதர்கள் அவர்களது பெரும்பணம், தங்கம் என அனைத்தையும் சுவிஸ் வங்கிக் கணக்குகளில் போட்டு வைத்தனர்.

கிட்டத்தட்ட 70 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டனர். நாஜிக்கள் அவர்களது பணம், பொருள் அனைத்தையும் கொள்ளையடித்தனர். அவைகளை உலகச் சந்தையில் பண்டமாற்றி போர்ச் செலவுகளை சமாளிக்க ஒரு வழி நாஜிக்களுக்குத் தேவைப்பட்டது. சுவிஸ் வங்கிகள் "இச்சேவை"யைச் செய்து தந்தன.

இரண்டாம் உலகப்போரில் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான ஏராளமான யூதர்கள் பணம் , தங்கம் சுவிஸ் வங்கிகளின் சொத்தாகிப்போனது.

இது பழைய உண்மை.

ஆசிய, ஆப்ரிக்க நாடுகள் "Infra Structure"-ல் இவ்வளவுக்குப் பின் தங்கியிருப்பதற்கு பெரிய அளவில் சுவிஸ் வங்கிகளின் "Intentional Account Secrecy Policy" காரணம்.

நமது இந்திய ஐந்தாண்டுத்திட்டங்களில் முதல் ஐந்து திட்டங்கள் தவிர்த்து அடுத்து வந்த எட்டு ஐந்தாண்டுத்திட்டங்கள், போஃபார்ஸ் உள்ளிட்ட இராணுவ தளவாடத் திட்டங்கள் அனைத்திலும் செய்யப்பட்ட ஊழல் பணம் பெரும்பாலும் இந்த சுவிஸ் வங்கிகளில் நமது அரசியல்வாதிகளால் முடக்கப்பட்டன.

ஆண்டுக்குப் பல ஆயிரம் கோடி எனப் பலநூறாயிரம் கோடி இந்தியத் திட்டங்களுக்கான நம் பணத்தில் சுவிஸ் நாடு "Modern Infrastructure"அமைத்து வசதியாக உள்ளது.

ஒரு Official Informal Dinner-ன் போது நானும் , என்னுடன் வந்த நைஜீரிய நாட்டு நண்பனும் சுவிஸ் நாட்டு Host-டிடம் சுவிஸ் வங்கிகளின் "Intentional Account Secrecy Policy" பற்றிச் சில அன்ஈஸி கேள்விகள் கேட்டு விட்டு "you live better life with Our money " என்று சொல்லிப் பொருமிவிட்டு வந்தேன்.

வேறென்ன செய்ய முடியும் நம் அழுக்கு அரசியல்வாதிகளை என்னால்! இவர்களது ஊழலால் நம் பெருநகரங்கள் கூட வசதிகளற்ற அழுக்கு நரகங்களகவேதானே இன்னும் இருக்கின்றன.

சுவிஸ் மாதிரி Infrastructure கட்டமைப்பு நம் இந்திய நகரங்களுக்கு, சென்னைக்கு வர இன்னும் எத்தனை "ஐந்தாண்டுத்திட்டங்கள்" தீட்ட வேண்டுமோ என்ற அயற்சிதான் வந்தது!

அன்புடன்


ஹரிஹரன்