Monday, July 24, 2006

(23) சிதம்பரத்தில் "ஸிம்பொனி"திருவாசகம் கேட்பது எப்போது?"தமிழக அரசியல் திராவிடப் பெத்தடின் செயல்பாடுகள்"


முக்கண்ணில் ஒரு கண் நெருப்பைக் கக்கும் நெற்றிக்கண் கொண்ட சிவ பெருமான், நாட்டியத்தின் அரசனாக நடராஜனாக எழுந்தருளியிருக்கும் சிதம்பரம் வீணே சர்ச்சையில் சிக்கவைத்துச் 'சீ'தம்பரம் என ஆக்கியிருக்கிறார்கள்.


இன்று சிதம்பரம் கோயிலின் நெறி, நியதிக் கட்டுடைப்பில் பாட்டாளி ஆறுமுகச்சாமியின் மூலமாக அரசியல் திரா'விட நச்சு இயக்கங்களால் வம்படியாகக் கேடயமாகத் திணிக்கப்பட்ட நம் தமிழ் மொழி நிஜமாகவே பாவம்.

நெறிகள், நியதிகள் ஏன் எதற்கு என்று வியாக்கியானம் செய்யுமுன் நெறி, நியதிகள் கட்டுடைப்பு சமூகத்திற்குத் தரும் பயன்பாடுகள் பார்ப்போம்.


முன்பெல்லாம் சென்னையின் அயோக்கிய ஆட்டோ ஓட்டுனர்கள் ( ஒரு சில விதிவிலக்குகள் உண்டு) ஆண்டில் நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை சபரிமலைக்கு மாலை போட்ட காரணத்தால் கொஞ்சம் நாகரீக வார்த்தை, மட்டுப்பட்ட மீட்டர் சூடேற்றம், குறைவான ஏமாற்றுதல் என்று அவர்கள் தற்காலிகமாகப் பின் பற்றும் ஐயப்ப பக்தி நியதி, நெறிகளால் சாதாரணமான பொதுஜனத்திற்குக் கொஞ்சம் பயன் கிடைத்து வந்தது.

சரி. சபரிமலைக்கு மாலைபோட்டு, 48நாள் விரதமிருந்து மலையேறும் நெறிகள் , நியதிகள்க் கட்டுடைப்புச் செய்யப்பட்ட சபரிமலையிலிருந்து மெல்ல மலை இறங்கிவருவோம்.

சபரி மலைக்கான நெறி + நியதிகளாக இருப்பவை:
1. ஐயப்பனை எப்போதும் நினத்திருக்க, ஐயப்பன் நாமம் ஜெபிக்க வேண்டும்.
2. 48நாட்கள் உணவுப் பத்தியத்துடன் விரதமிருக்கவேண்டும்.
2. கெட்ட பழக்கங்களில் அறவே ஈடுபடக்கூடாது.

இந்த நெறிகள், நியதிகள் இவைகளைக் கட்டுடைத்த சபரிமலைக்கு மாலை போட்டுச் செல்லும் பின்நவீனத்துவ அதிவீரத்தமிழர்கள் என்ன செய்கிறார்கள்?

  • விரத நாட்களில் இறைவனை எப்போதும் நினைத்திருக்க அவன் நாமத்தை முறையாக ஜெபிப்பது, கேட்பது என்பது விரத கால நெறி+நியதி ஆனால் இந்த பழக்கத்தை திரா'விடப்' பெத்தடின் கொள்கை உந்துதலால் கட்டுடைத்துவிட்டு மீறித் வக்கிரமான தமிழ்த்திரைப்படப் பாடல்களான "லாலாக்கு லோல் டப்பிம்மா", "அண்ணாநகரு ஆண்டாளு" போன்ற கருத்துச் செறிவான பாடல்களின் தழுவல் பாடல்களில் ஐயன் ஐயப்பனின் நாமம் கேட்பார்.

  • 48 நாள் விரத கால பத்திய உணவுக் கட்டுப்பாட்டு நியதியை திரா'விடப்' பெத்தடின் கொள்கை உந்துதலால் கட்டுடைத்துவிட்டு மீறித் தான் உண்ணும் புலால் உணவில் ஐயன் அய்யப்பனுக்கு ஒரு துண்டு எடுத்து வைக்கிறார்.

  • அடுத்து மாலையில் "மதுக்கடையில்" விரத காலத்தில் நெறி+நியதிகளால் தடை செய்யப்பட்ட "மது" "சாராயத்தை" திரா'விடப்' பெத்தடின் கொள்கை உந்துதலால் கட்டுடைத்துவிட்டு மீறித் தான் குடிக்கும் மதுக்கடை சரக்கில் ஐயன் அய்யப்பனுக்கு ஒரு கட்டிங் கிளாஸில் ஊற்றுகிறார்.

  • அடுத்து " விரத காலத்தில் நெறி+நியதிகளால் தடை செய்யப்பட்ட சூதாட்டம் செல்கிறார் "மூணுசீட்டு மங்காத்தாவை" திரா'விடப்' பெத்தடின் கொள்கை உந்துதலால் கட்டுடைத்துவிட்டு மீறித் தான் சூதாடும் மூணுசீட்டு மங்காத்தா ஆட்டதில் ஐயப்பனுக்கு ஒருகை சீட்டு போடுகிறார்.

ஆக நம் முற்போக்கு நவீனத் தமிழன் திரா'விடப்' பெத்தடின் கொள்கை உந்துதலால் வழக்கில் நல்லதுக்காக இருந்த நெறி+நியதிகளைக் கட்டுடைத்துவிட்டதில் சபரிமலை ஐயப்பன் பக்தி காலமான மலைக்கு மாலைபோடும் காலம்

இன்று வக்கிரமான திரைப்பட குத்துப் பாடல் தழுவிய ஐயப்ப நாம ஜெபங்கள் ஒலிக்கும் காலம் ஆகியிருக்கிறது.

மதுக்கடையில் ஐயப்பனுக்கு கட்டிங் விடப்படும் சீஸன் ஆகியிருக்கிறது.

சூதாட்டக் கிளப்பில் மூணுசீட்டு ஆட்டத்தில் கை கொடுக்கும் தெய்வக்கைத் தென்படும் காலம் ஆகியிருக்கிறது.

வாழ்க முற்போக்கு திரா'விடப் பெத்தடின் நவீனத்துவம்!

மிருகம் மாதிரி கெட்டவார்த்தை பேசி, குடும்பத்தைக் குடித்துச் சீரழித்து, சூதாடி வாழ்க்கை வாழும் அடி மட்டத்தவனைத் சபரிமலை தெய்வத்தின் வழிபாட்டு நெறி, நியதிகள் படி 48நாள் விரதத்தின் போது முற்றிலும் மாறிய மனிதனாக வாழ கற்பிக்கப் பட்டவை செறிவான நெறி, நியதிகள்.

இவை யாவும் பகுத்தறிவுப் பகலவன்களின் முற்போக்கு நவீனத்துவம் என்ற பம்மாத்து அரசியல் திரா'விட'ப் பெத்தடின் முழக்கத்தில் கட்டுடைக்கப்பட்டதில் நட்டப் பட்டது நிச்சயமாக நம் அடித்தட்டுத் தமிழன்.

இந்து மதத்தில் ஒழுக்கக் கட்டுப்பாடான நல்ல நியதிகள், நெறிகள் கட்டுடைக்கப்பட்டதில் லாபமடைந்தது தமிழகத்தில் மதுக்கடைகளை நடத்தும் வடக்கில் வன்னியர், முதலியார் தெற்கே தேவர், நாடார், மேற்கே கள்ளர், கவுண்டர், கிழக்கில் வாண்டையார், அகமுடையார் சமூகத்தவரா?

இல்லை சபரிமலை கோவில் பார்ப்பன பூசாரிகளா? பகுத்தறிவெல்லாம் தேவையில்லை. சும்மா சிந்தித்தாலே விடை கிடைக்கும்.

அதென்ன சிதம்பரம் மற்றும் சிவன் கோவில்களில் பழமைவாதிகள் சதிப்படி ஒரு குறிப்பிட்ட பண்ணில் தான் திருவாசகம் பாட வேண்டுமா? அக் மார்க் ஒரிஜினல் தமிழன் மேற்கத்திய கிறித்துவ ஸிம்பொனி முறையிலான பண்ணில் திருவாசகம் பாடினால் துர்வாசகம் ஆகிவிடுமா?

அதென்ன நடராஜர்ன்னு ஆரியப்பாம்புகள் சதிசெய்து வைத்த பெயர்? நல்லமேய்ப்பன்னு வச்சா ஆவாதா? சோனியா அன்னை, வாடிகன் பாப்பரசர் இந்திய ஆத்மா அறுவடை மெகா செயல்பாட்டுப் பிளானில்

  • நம் நடராஜனுக்கு "நல்ல மேய்ப்பன்",
  • திருப்பதி ஏழுமலை "திருப்பலி ஏசுமலை",
  • சபரிமலை அய்யப்பனை "சவரியார் மலை ஆயப்பர்"
  • அமர்நாத் பனிலிங்கம் "அந்தோணியார் பனிச்சிலுவை"
என்று மாற்றிவிடும் முயற்சிக்கு, தென்னகத்தில் தமிழகத்தில்
"திருட்டுச் சோழன்" மு.க, ஆந்திரத்தில் சாமுவேல் ராஜசேகர ரெட்டி, கேரளத்தில் கம்(மனாட்டி)யூனிடிஸ்ட் துணையிருக்கும் போதே எத்தனை வேகமாக ஆத்மா அறுவடைக்கு அடித்தளம் அமைக்க முடியுமே அவ்வளவுக்கு செய்ய முயல்வது பகுத்து அறியும் அறிவு இருந்தால் தானே புலப்படும்.

இந்துமத நெறி, நியதிகள் சிதைக்கப்படும்போது லாபமடைவது வெளிநாட்டு மதங்களே. இந்த அரசியல் திரா'விட'ப் பம்மாத்து இயக்கங்களைவிட இந்துமத நெறி, நியதிகள் கேடு கெட்டவை அல்ல.

ஒழுக்கமான ஒழுங்குகள் அற்புதக்கோலம் (வேதப்படியான் நெறி+நியதிகள்)
ஒழுங்கற்ற ஒழுங்குகள் அரைக்கோலம் (வேத ஆனால் மருவிய நெறி,நியதி) ஒழுங்கற்ற ஒழுங்கீனங்கள் அலங்கோலம்(அரசியல் திரா'விட நெறி,நியதி)

அரைக்கோல நிலையினின்று மீண்டு அற்புதக்கோல நிலைக்குச் செல்வதைத் தவிர்த்து அரசியல் திரா'விட'ப் பெத்தடின் தமிழ் மொழிப் பற்று ஊசிகளால், மீள முடியாத அலங்கோல நிலைக்குத்தள்ளப்படும் சூழலை அரசியல் திரா'விட'த் திருட்டு இயக்கங்கள் முழுமையாக முயல்கின்றன.

தமிழக அரசியல் திரா'விட' இயக்கங்களின் தமிழகக் கோவில் கொள்ளை இஸ்லாமியக் கொள்ளைக்காரன் "கஜ்னி மகாம்மத்"தின் கோவில் கொள்ளைக்கு சற்றும் குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது திருச்செந்தூர் வைரவேல்முதற்கொண்டு இவர்கள் "ஆட்டையா"போட்ட கொள்ளைகளைத் தனிநூலாக வெளியிடவேண்டும்.

இந்த அத்தனை சர்ச்சையிலும் டாப் காமெடி தமிழக மக்கள் நலவாழ்வுக்கான நிதியைத் திருடிய கருணாநிதியைச் சோழன் என்பதும், தமிழின் தமிழே என்பதும் அய்யன் வள்ளுவனின் குறளைக் குறளோவியம், தொல்காப்பியனின் தொல்காப்பியத்தினை மீண்டும் எழுதியதாலேயே கருணாநிதியை தமிழின் தமிழே என்று தமிழே வெட்கப்படும் அளவுக்கு ஜால்ராப் பெத்தடின் வேலை செய்கிறது.

அப்ப சத்தமே இல்லாமல் சீவகசிந்தாமணியிலிருந்து, சீறாப்புராணம் வரை, திருக்குறள், புறநானூறு, அக நானூறு, குற்றாலக்குறவஞ்சி, சிலப்பதிகாரம், என எண்ணற்ற தமிழிலக்கியங்கலுக்கு உரை எழுதிய, எழுதிக்கொண்டிருக்கிற, எழுதும் திருச்சி பழனியப்பா பிரதர்ஸ் அதாங்க நம்ம 'இறவாப் புகழ்" கொண்ட தமிழ்க் கோனார் உரை நூல் எழுதி வெளியிடுவோர்க்குத்தான் நிஜமாகத் தமிழின் தமிழேப் பட்டம் தரவேண்டும்.

கருணாநிதியிடம் மக்கள் வேண்டுவது எப்படிக் கொள்ளையடித்துச் சேர்த்தாய் 5000 கோடிச் சொத்துக்களை என்ற டெக்னாலஜிக்கல் சுயசரிதையே அன்றி தொல்காப்பியம் மாதிரி கோனார் உரையில் எளிதாகக் கிடைத்துவிடும் விளக்கவுரைகள் அல்ல.

சரி சிதம்பர சர்ச்சையில் எனது தீர்வு, அய்யா தமிழுக் காவலருங்களா, தமிழையும், சிற்றம்பலத்தையும் விட்டுடுங்கப்பா.

சாமியே இல்லைன்றவன் எல்லாம் சேர்ந்து வழியனுப்பி வச்சு, அவசியமில்லாமல் வெட்டியா ஏன்? எதுக்கு?னு 'வெங்காயத்தோட' பிரியாணி தின்னது செரிக்க ஏதாச்சும் பேசாதீங்கப்பூ.

தமிழும், சிற்றம்பலமும் அது பாட்டுக்கு பிழைச்சிக் கிடைக்கட்டும். நீங்க இதையும் தொட்டு சிற்றம்பலத்தையும் வெளங்காமப் பண்ணிடாதீங்க.

தமிழ்நாட்டுக்கு ஒரு பிரச்சினைன்னா அது அரசியல் திரா'விட திருடர்கள் இயக்கங்களே.

திருட்டுப் பெரியார் இயக்கம் சேலத்துல 768 அல்லாவோட பூட்டு நம்பரான்னு தட்டி வச்சாங்களாம். இன்னும் கொஞ்சம் வெளக்கமா தட்டியில எழுதிவைங்கப்பா திருடர்கள் இயக்கக் கொழுந்துகளா. இந்து சகோதரன் பொறுமை காத்ததில் இன்றுவரை பிழைத்திருக்கிறாய். அல்லாவைச் சொல்லித் தட்டிவச்சதுக்கு பதிலுக்குத் தட்டிரப் போறானுங்க பாத்து ஆப்பூ!

அதுசரி. பெரும்பான்மை அரசு அமைச்சப்பவே திருடுறதத் தவிர ஏதும் மக்கள் பிரச்னையைத் தீர்த்து வைக்கிறமாதிரி செய்யமாட்டீங்க. சிறுபான்மை அரசியல் திரா'விட' த் திருட்டு இயக்க அரசு இந்த மாதிரி மாய்மாலம் செஞ்சாத்தானே அது பெரியார் பாசறையில் பயின்ற பகுத்தறிவு!

எலே போங்கலே வெட்டிப்பயலுவளா! தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் புடிச்ச கெரகம்லே நீஙக!


அன்புடன்,


ஹரிஹரன்

13 comments:

முத்துகுமரன் said...

தொடர்ந்து நீங்கள் செய்து வரும் மருத்துவ சேவைக்கு நன்றி ஹரிஹரன்.

Hariharan # 26491540 said...

வாருங்கள் குமரன்.

வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் நன்றி.

dondu(#4800161) said...

அதெல்லாம் சரி அது என்ன இந்துக் கோவிலை மட்டும் அரசு ஏற்று நடத்துவது? இந்து மதத்துக்கு மட்டும் ஏன் தனி ஆலய அமைச்சர்? இசுலாமிய மசூதிகள் மற்றும் வேளாங்கன்னிக் கோவிலையும் எடுத்து வாரியத்தில் போடுவதுதானே?

திருச்செந்தூர் கோவில் உண்டியல் எண்ண வந்த அதிகாரியை போட்டுத் தள்ளியதுதானே திராவிடக் கும்பல்? கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று கூறிவிட்டு பிறகு ஆத்திகர்கள் செய்யும் வேலையில் ஏன் குறுக்கே வர வேண்டும்? திருடியது போதாதா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

murali said...

பிரியாணிக்கு போட்டியா
சம்பா சாதமா?.ஆனால் மிளகு ரொம்ப தூக்கலா இருக்கு.
மிளகு காரம் உடம்புக்கு நல்லதும் கூட.

"இந்த அத்தனை சர்ச்சையிலும் டாப் காமெடி தமிழக மக்கள் நலவாழ்வுக்கான நிதியைத் திருடிய கருணாநிதியைச் சோழன் என்பதும்"
ஒரு பதிவுல ராஜராஜ சோழன்-னு கூட எழுதியிருந்தாங்க.கலைஞருக்கு புகழ்ச்சி ரொம்ப பிடிக்கும்தான் அதுக்காக இந்த மாதிரியெல்லாம் புகழ்ந்தா அவருக்கே வெட்கமா இருக்கும்.

தஞ்சை பெரிய கோவிலில் ஒரு ராஜராஜன் சிலை இருப்பதா கேள்வி; அவர் கோபமடைந்து இருக்கிறாரா என்று, எதுக்கும் பணிக்கர கூப்டு தேவ ப்ரச்னம் பாத்திர்ரது நல்லது.

என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

Hariharan # 26491540 said...

//இந்து மதத்துக்கு மட்டும் ஏன் தனி ஆலய அமைச்சர்?//

சரியான கேள்வி. எந்தக் காலத்திலும் உண்டியல் பணம் கழகக் கண்மணிகளுக்கு பாக்கட் மணியாக கிடைக்கும் என்பதால் தான்.

கோவில் சொத்துக்கள் அனைத்தும் இந்த திருட்டு திரா'விட இயக்கங்கள் கயில் குறிப்பாக ஆதிக்க சாதிகளான MBCக்கள் தான் அறங்காவலர்கள். இவர்கள் திருடித் தின்ற பலநூறி கோடிரூபாய்க் கோவில் செல்வத்தில் குறைந்தது 20 மருத்துவக் கல்லூரிகள் இந்துமதத்தின் சார்பாகக் கட்டியிருந்தால் மருத்துவப் படிப்புக்குத் தமிழகத்தில் இட ஒதுக்கீடு இன்றிருக்கும் அளவிற்குக் கடும் பிரச்னையாகியிருக்காது.

Hariharan # 26491540 said...

//கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று கூறிவிட்டு பிறகு ஆத்திகர்கள் செய்யும் வேலையில் ஏன் குறுக்கே வர வேண்டும்? //

உண்மையில் வெட்டிப்பயல்கள் இந்த அரசியல் திரா'விட' இயக்க வாதிகள் தானே? வெட்டியா இருக்கிரவனுக்கு கோவில் உண்டியல் காசு, கோவில் சொத்தில் 150 ரூபாய்க்கு 10 ஏக்கர் குத்தகை, கோவில் சொத்துக் கடைகளுக்கு மின்சாரத்துடன் மாதம் 120 ரூபாய் வாடகை என்ற பசையான பலன் வேறெங்கு கிடைக்கும்.

உண்மையில் இந்தஆதிக்க MBC சமூக அறங்காவலர்கள்தான் நோகாமல் நோம்பு கும்பிட்டுப் பலன் அடைவது.

Hariharan # 26491540 said...

//திருடியது போதாதா?//

தொழில் முறைக் குலக் கல்வியாக இந்த அரசியல் திரா"விட" இயக்கத் தலைவர்கள் திருடர் பெரியார் பாசறையில் "பகுத்தறிவோடு" கற்றுத் தேர்ந்தது திருடுவது தானே?

பிழைப்பே திருடுவதில் தான் எனும் போது நிறைவு வந்துவிட்டால் புவ்வாவிற்கு உழைக்கல்ல செய்யணும்.

Hariharan # 26491540 said...

//பிரியாணிக்கு போட்டியா
சம்பா சாதமா?.ஆனால் மிளகு ரொம்ப தூக்கலா இருக்கு.
மிளகு காரம் உடம்புக்கு நல்லதும் கூட.//

வாங்க முரளி,

உண்மையை மட்டும் உள்ளது உள்ளபடியாகப் பதிந்திருக்கிறேன். இது நடக்கவில்லை இது பொய் என்று
மறுக்கட்டும்.

எதெடுத்தாலும் 10000 வருடத்திற்கு முன் வந்தேறியவன். இந்துமதம். சும்மா ஒதுங்கி அடிவாங்குவதை விட உண்மையை உரக்கக் காரமாகச் சொல்லலாம்னு ஒரு முயற்சிதான்.

நீங்ககூட பாயர டைப் ஆள் தானே?

Hariharan # 26491540 said...

முரளி,

தஞ்சாவூர்ப் பெரிய கோவில்ல ஆளும் கட்சிக்கு ஒரு சென்டிமெண்ட் இருக்கு. ஆளும் பிரதமர், முதல்வர் நேர்வாயில் வழியாக கோவிலின் உள்ளே சென்றால் மரணிப்பார்கள் என்று.

இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர் இந்த சென் டிமெண்டால் பாதிக்கப்பட்டனர் என்றும் பேச்சு உண்டு.

நம்ம திருட்டுச்சோழர்கள் நேரா மஞ்சக்கட்டிட்டுப் போகச்சொல்லவேண்டும்.

மத்தபடி, ராஜராஜன் கண்டிப்பா கோபமாத்தான் இருப்பார். நிஜமான சோழ அரசன் கருணாநிதி மாதிரி சோப்ளாங்கியைச் சோழன்னு சொன்னா கோபம் வராதா?

Venkataramani said...

ஹரிஹரன் அவர்களே,

தயவுசெய்து உணர்ச்சிப்பிழம்பான உங்கள் வார்த்தைகளைக் கட்டுப்படுத்தமுடியுமா என்று பாருங்கள். எதிர்கருத்துக்களை மட்டும் வெளியிடுங்கள். உணர்ச்சியையும் சேர்த்து வார்த்தையில் கொட்டினால் 'கருப்பு'க்கும் வெள்ளைக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

அன்புடன்,
வெங்கட்ரமணி.

Hariharan # 26491540 said...

வெங்கட் ரமணி அவர்களே,

எனது எம்மாதிரி வார்த்தைகள் என்று கொஞ்சம் கோடிட்டுக் காட்டினால் உடனடியாய் திருத்திக் கொள்ள எனக்கு உதவியாய் இருக்கும்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அடிக்கடி வருக.

Venkataramani said...

திருடர், திரா'விட'ம் போன்றவற்றை தவிர்க்கமுடியுமா என்று பாருங்கள். மற்றபடி, உங்கள் குற்றச்சாட்டுக்களை தாராளமாக எடுத்துவையுங்கள்.

Hariharan # 26491540 said...

திரு. வெ.ரமணி,


அரசியல் திரா'விட' இயக்கங்களின் தலைவர்கள் தமிழர் நலனுக்கான நிதி, கோவில் சொத்து அபகரிப்பு, எங்கும் எதிலும் ஊழல் எனச் செய்யும் திருடர் தானே.

எனினும் திருடர் என்பது தவிர்க்க முயல்வேன்.

நான் அரசியல் திரா'விடம்' என்ற பதத்தினையே பயன் படுத்துகிறேன். இவர்களது அரசியல் சித்தாந்தங்களில் உள்ளவை 'விட'மன்றி வேறென்ன?

பூகோள ரீதியில் தென்னிந்தியர் அனைவரும் திராவிடர்கள்தானே?