Tuesday, July 11, 2006

(14) பாகம்-2 "அரசியல் திரா'விட'ப் "பெத்தடின்"

பாகம்-1 http://harimakesh.blogspot.com/2006/07/12a-1.html

அரசியல் திரா'விட' "பெத்தடினில்" மரத்துப்போய் விட்டதா நம் தமிழ்ச்சமுதாயம்?

நம் தமிழ்ச்சமுதாயத்தை மரத்துப் போகவைத்திருக்கும் இதர தமிழக அரசியல் திரா'விட'ப் "பெத்தடின்களைப்" இனிப் பார்க்கலாம்.

படிக்கின்ற புத்தகம், கேட்கின்ற பேச்சு, பார்க்கின்ற காட்சி இவை எண்ணங்களை ஏற்படுத்துகிறது.

எண்ணங்களின் தரம் அதன் மூலமான புத்தகத்தின் எழுத்து, கேட்கின்ற பேச்சு, காணும் காட்சி இவைகளில் அடங்கியிருக்கிறது.

மனம் என்பதே எண்ணங்களின் ஆற்று ஓட்டம். எண்ணங்களின் தொகுப்பே மனம். நமது செயல்கள் அனைத்தும் நமது எண்ணங்களின் வெளிப்பாடே. எனவே நம் மனம் எப்படியோ அப்படியே நம் செயல்கள். தரமான எழுத்து, பேச்சு, காட்சியைக் கொண்டு உருவாகும் எண்ணங்களின் தரம் சிறப்புடனும் அம்மாதிரியான எண்ணங்களால் உந்தப்பட்டு வெளிப்படும் செயல்கள் நல்லவையாக அமைகின்றன.

தரமற்ற எழுத்து, பேச்சு,காட்சியைக் கொண்டு உருவாகும் எண்ணங்களின் தரம் கீழ்த்தரமானதாகவும் அம்மாதிரியான எண்ணங்களால் உந்தப்பட்டு வெளிப்படும் செயல்கள் கீழ்த்தரமானதாகவும் அமைகின்றன.

As your mind so is your thoughts
As your thoughts so is your action

என்னத்துக்கு இதெல்லாம்? ஏன் இந்த 'ராவுதல்' என்கிறீர்கள் தோ வந்துட்டேன்!


அரசியல் திரா'விட' தலைவர்கள் ஆவேச (ஊருக்கு உபதேச) பேச்சு, செயல்களை ஒப்பு நோக்குவோம்:

தமிழக அரசியல் திரா'விட' இயக்கங்களின் தலைவர்கள் மாதிரி கேடு கெட்டவர்களைத் தேடினாலும் கிடைக்காது. இவர்களது வழிநடத்தலில் நம் தமிழ்ச் சமுதாயம் சீரழிக்கப்படும் கேவலங்களை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்:

தமிழ்நாட்டிலே ஹிந்தியை எதிர்த்து நடந்த "மொழிப்போரில்" (ரயில் வராத நேரத்தில்) தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து வரலாறு படைத்த நம் தமிழ் அரசியல் திரா'விட'இயக்கத்தலைவரான கருணாநிதி தனது வடமொழிப் பெயரை அப்படியே வைத்துக்கொண்டார். அதற்கு காரணமாக இவரிடம் "பேரறிஞர்"அண்ணா கருணாநிதியென்ற பெயர் நிலைத்துவிட்டபடியால் ("ப்ராண்ட் ஈக்குவிடி") மாற்றவேண்டாம் என்றதால் தட்டமுடியாமல் வைத்துக்கொண்டாராம்.

சரி. மகனுக்கு ஏன் "ஸ்டாலின்" என்ற வெளிநாட்டுப்பெயர்?
தனது பேரன்களுக்கு கலாநிதி, தயாநிதி, உதயநிதி என்று வைத்தது ஏன்? "ப்ராண்ட் ஈக்குவிடி"தொடரவேண்டும் என்ற எண்ணம் அல்லாமல் வேறு என்னவாம்?


கலைஞர் குடும்ப தொலைக்காட்சிகளுக்குப் பெயர் பாருங்கள் சன்,கேடிவி,உதயா,சூர்யா இவைத் தமிழ்ப்பெயர்களா? அப்போ உண்மையாக மொழிப்போர் என்று உயிர்விட்ட தமிழ் இளைஞர்கள்?! கிறுக்கன்கள் பாவம்!

அகில உலகத் தமிழினத் தலைவர் கலைஞரின் "தண்டவாள"ப் புகழ் தமிழ் மொழிப்பற்று பம்மாத்து என்பது வண்டவாளத்தில் ஏறிக்கிடந்தாலும்

உளவியலாக உற்று நோக்குங்கள்...எங்கும்தமிழ் எதிலும் தமிழ்... மொழிப்போர்... ஹிந்தி எதிர்ப்பு என்ற சவடால் அரசியல் திராவிடப்"பெத்தடினில்" எது உண்மை எது சுயநலம் என்று பகுத்தறிய இயலாமல் மரத்துப்போய் கிடக்கிறது நம் தமிழ்ச்சமுதாயம்.

சரி. அடுத்த அரசியல் திராவிடப்"பெத்தடின்"ஊசி பார்ப்போம் .
இந்த தமிழக அரசியல் திரா'விட' இயக்கங்களின் தலைவர்கள் கடுமையாக உழைத்து நம் தமிழைச் செம்மொழி ஆக்கியிருக்கிறார்கள். ஒத்துக்கொள்ள வேண்டியதுதான். எப்படிச் செம்மொழி ஆக்கினார்கள் என்று பார்க்கலாம்.

சாம்பிளுக்கு இரண்டு பேர் போதும்.

1..திரு. தீப்பொறி 'ஆறுமுகம்"
2. திரு. வெற்றி கொண்டான்

இருவரும் நமது அரசியல் திராவிடப்"பெத்தடின்"ஊசிகளைத் தமது தெருமுனைக் கூட்டங்கள் மூலம் கடைக்கோடி தமிழகக் கிராமத்துத் தமிழன் வரை கொண்டுபோய் சேர்த்தவர்கள்.

எதிர்கருத்துக் கொண்டிருக்கும் மாற்று அரசியல் திரா'விட'க் கட்சித் தலைவர்களை, குழுக்களை, தனி நபர்களை இவர்கள் தலைமை ஒப்புதலுடன் பேசும் சிலேடை, நேரடிப் பேச்சுக்கள் அனைத்தும் பாலுணர்வு, ஆண்குறி, பெண்குறி, முறையற்ற புணர்ச்சி சார்ந்த "செந்தமிழ்'ப் பேச்சு!

இந்தப் பேச்சைக் கேட்க கூட்டமான கூட்டமாக நம் தமிழ்ச்சமுதாயம் வரும்

மே மாதம் 2006 தேர்தல் இறுதிநாள் பிரச்சாரத்தில் சிந்தாதிரிப்பேட்டைக் கூட்டத்தில் பேசும் "அகில உலகத் தமிழினத் தலைவர் கலைஞரின்" முத்தாய்ப்பு வரிகள்:

"என்னையே தமிழகத்திற்குப் பரிசாகத் தருகிறேன்... எதிர்க்கட்சியினர் (ஜெயலலிதா) தன்னை அம்மாதிரி தமிழ்மக்களுக்குத் தரமுடியுமா?
அடடா! என்னமாய் தாய்த்தமிழில் சிலேடைச்சொல்லாடல்!

5வது முறை தமிழகத்தின் முதல்வனாய் பொறுப்புக்கு வரக்கூடிய தன்மானத் தமிழன் பேசும் பொறுப்பான வழிநடத்தும் பொறுப்பான தலைவன் பெண்ணை மதிக்கும் லட்சணம் இதுதான்.

எதிர்கருத்து சொல்லிவிட்டால் பொதுஇடத்தில் அவனைச் சிலேடை, நேரடிப் பேச்சுக்களால் பாலுணர்வு, ஆண்குறி, பெண்குறி, குடும்பப் பெண்களை முறையற்ற புணர்வதாகப் பொருள்படும் ஏச்சுப் பேச்சு மூலம் தமிழைச் "செந்தமிழ்' ஆக்கியிருக்கிறார்கள்!

விவாதிக்கும்போதும், வேறுபட்ட்ட கருத்துக்களைப் பகிர்கையில் நம் மறத்தமிழ் சகோதரர்கள் சிலர் அநாகரீகமாக நிதானமிழப்பதும், வலைஉலகில் உலவும் "போலி'யர்கள் "செந்தமிழ்' பின்னூட்டமிடுவதை உளவியலாக உற்று நோக்குங்கள்... சவடால் அரசியல் திராவிடப்"பெத்தடின்"செய்கின்ற வேலை எனப் புரியும்.

கடந்த நாற்பதாண்டுகளில் இந்த அரசியல் திரா'விட'க் கட்சித் தலைவர்கள்தான் ஆட்சி செய்து வருகின்றனர். இவர்களது கோமாளித்தனமான, வக்கிரமான தலைமையில் ஏழையான நம் தமிழ்ச்சமுதாயத்தின் கிராமத்து இளைஞனுக்கு பயன்படும்படி என்ன செய்தார்கள்?

ஜாதியே இல்லாத சமூகத்தை ஏற்படுத்துவதைக் கொள்கையாகக் கொண்ட இந்த அரசியல் திரா'விட'க் கட்சித் தலைவர்கள் ஆட்சியில்தான் எங்கும், எதிலும் ஜாதி..ஜாதி...ஜாதிதான் இன்று விஞ்சியிருக்கிறது.

அல்லது அடித்தால் கூட திருப்பியடிக்காது ஒதுங்கிப்போகும் சுபாவமுள்ள ஒரு ஜாதியினரை இல்லாமல் போகவைப்பதுதான் இந்த அரசியல் திரா'விட'க் கட்சித் தலைவர்கள் கொண்ட கொள்கையா?

இன்றும் தமிழகத்தில் இந்த அரசியல் திரா'விட'க் கட்சித் தலைவர்கள் 40 ஆண்டுகால ஆட்சியில் கண்டதேவியில் கோவில் தேர் இழுக்கும் நிகழ்வுக்கு வரும் பக்தர்களை விட காவல்துறையினர் அதிகம் வரவேண்டியிருக்கிறது.

இன்றளவில் தமிழகத்தில் இந்த அரசியல் திரா'விட'க் கட்சித் தலைவர்கள் 40 ஆண்டுகால ஆட்சியில் பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் நடக்கும் ஜாதீயத் தேர்தல் + ராஜினாமாக்கள் இந்திய ஜனநாயகத்திற்கு உலக அளவில் அவமானமாக இருக்கிறது.

இங்கு தமிழகத்தில் இந்த அரசியல் திரா'விட'க் கட்சித் தலைவர்கள் 40 ஆண்டுகால ஆட்சியில் தாழ்த்தப்பட்ட "வீரன் அழகுமுத்துக்கோன்" பெயரில் போக்குவரத்துக்கழகம் தென் மாவட்டத்தில் தொடங்கிய போது பல பேருந்துகள் எரிக்கப்பட்டது. தென் மாவட்ட ஜாதி மோதல்கள் உயிர்ப்பலி பல கண்டும் அடங்காததில்அரசாணை வாபஸ் பெறப்பட்டதுடன், சேர, சோழ, பாண்டிய, மருது பாண்டிய,பல்லவ, திருவள்ளுவ, ராணிமங்கம்மாள் போக்குவரத்துக்கழகப் பெயர்கள் தமிழகப் போக்குவரத்துக்கழகமாகப் பெயர் மாற்றப் பட்டன.

"அகில உலகத் தமிழினத் தலைவர் கலைஞரின் சீரிய ஆட்சியில் கொடூரமான பல சாதிக்கலவரங்கள் பெரும் சாதிப்புகள்.


சமீபத்திய இந்த அரசியல் திரா'விட'க் கட்சித் தலைவர்கள் 40 ஆண்டுகால ஆட்சியில் நடந்த சமீபத்திய ஜாதிக்கலவரங்கள் எதிலும் "தெய்வத்தைத் எப்போதும் வணங்கிடும்" குறிப்பிட்ட உயர்சாதியினர் எப்போதும்போல் காரணமில்லை.

இந்த அரசியல் திரா'விட'க் கட்சித் தலைவர்கள் 40 ஆண்டுகால ஆட்சியில் இவர்களின் நடுமுதுகில் அரிப்பெடுத்தால் கூட "அரசியல் திரா'விட' "பெத்தடின்" ஊசிபோட்டு திசைதிருப்ப இருக்கவே இருக்கிரார்கள் அடித்தால் கூட திருப்பியடிக்காது, "தெய்வத்தைத் எப்போதும் வணங்கிடும்" ஒதுங்கிப்போகும் சுபாவமுள்ள ஒரு குறிப்பிட்ட ஜாதியினர்.

கிராமத்தில் இருக்கும் நம் இளைஞனை இந்த அரசியல் திரா'விட'க் கட்சித் தலைவர்கள் 40 ஆண்டுகால ஆட்சியில் சும்மா போஸ்டர் ஒட்டவும், ஒரு பாக்கட் பிரியாணிக்காக தன்மானச் சிங்கமாக, ஆர்ப்பரிக்கும் அலைகடெலென,
தான் கட்டிய கோவணம் கழண்டு விட்டது கூடத் தெரியாமல், பஸ், லாரியென ஏறி, இந்த அரசியல் திரா'விட'க் கட்சித் தலைவர்கள் நடத்தும் முப்பெரும் விழ, ஐம்பெரும் விழாவுக்கு ஆட்டுமந்தையாய், பகுத்து அறியும் திறன் மழுங்கிப்போய் அரசியல் எடுபிடியாய், கைக்கூலியாய்த்தானே வைத்திருக்கிறார்கள்.

நம் தமிழக இளைஞனுக்கே நினைத்த படிப்பை படிக்கின்ற சூழல், ஆரோக்கியமான சிந்தனை செயல்களைச் செய்ய முன் மாதிரியாய் இருக்கிறார்களா? ஒருவர் மஞ்சள் துண்டு போட்டு தன் "மூடநம்பிக்கை" மறுப்பை மூணு சீட்டு மங்காத்தா ஆடுகிறார்.

தலைவனுக்கு ஒழுக்கம் வேண்டும். தமிழகத்தை 40 ஆண்டுகால ஆட்சி செய்த இந்த அரசியல் திரா'விட'க் கட்சித் தலைவர்கள் எவருக்காவது தனிப்பட்ட ஒழுக்கம் இருக்கிற்தா?

சட்டப்படி தவறு என்று தெரிந்தும் மீறுபவன் எப்படி நல்ல தலைவனாவான்?
என்குயரி வந்ததும் முதலாவது மனைவி மற்றதெல்லாம் துணைவி என்பதான் தகிடுதத்தங்கள் 5 முறை என்ன எத்தனை முறை வந்தால் என்ன பயன்? (ஒரு சில கழகக் கண்மணிகள் தவிர?)

பின் இம்மாதிரி நபர் 82 வயதானாலும் பெட்ரோல் விலை அதிகமாகிறதே என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என்ற நிருபரை "வா நாம் இருவரும் தீக்குளிக்கலாம்" என்ற தீர்வுதான் கிடைக்கும். சரியான பம்மாத்து!

கவனித்துப் பாருங்கள் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்று 40 ஆண்டுகளாய் இவர்கள் போட்ட திரா'விட' கொள்கைப் பித்தலாட்டப் பெத்தடின் ஊசியில் நம் தமிழ்ச்சமுதாயம் மரத்துப்போய் இருப்பது.

இது என் ஆதங்கம். அவ்வளவே!

அன்புடன்,

ஹரிஹரன்.

9 comments:

Sivabalan said...

Hari,

I was not able to post messages in your blog.

This is just a test.

Thanks

பாலசந்தர் கணேசன். said...

இந்தி புகுத்த பட்டதற்கு மக்களிடையே மிக கடுமையாக எதிர்ப்பு இருந்தது. மாணவர்கள் உண்மையில் அதனை மிக கடுமையாக வெறுத்தனர். தங்களை அடிமையாக வைத்திருக்கும் முயற்சியாகவே அது சரியாகவே கருத பட்டது. அந்த நேரத்தில் காங்கிரஸ் மாநில மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளதா சூழ்நிலையில் இவர்கள் மேலே எழும்பி வந்தார்கள். மேலிடத்திற்கு காவடி தூக்கி பழகிய காங்கிரஸ் மாநில அளவில் பலவீனமானது எதிர்பார்க்க கூடியதே.

Hariharan # 26491540 said...

பாலசந்தர்,

கொள்கை என்பது ஒரு இயக்கத்திற்கு, அதனை வழிநடத்தும் தலைவனுக்கு எஞ்சியிருக்கும் மிச்ச வாழ்வின் நீட்சியாக இருக்க வேண்டும்.

சாதாரண தமிழக அரசுப் பாடத்திட்டத்தில் படித்த என் மாதிரியான ஆட்கள் மொழிக் கொள்கை காரணமாக என் விருப்பம் இல்லாமலே மறுக்கப்பட்டு விட்டு, தயாநிதி, கலாநிதி, உதயநிதி வட இந்தியாவில் இன்று ஹிந்தி மொழி தெரிந்திருக்கிறது என்று மத்திய அமைச்சர், டாட்டாவுடன் 'மிரட்டலான' வணிகம் எனச் செய்வதை எப்படிச் சரியாகும்?

தமிழக அரசுப்பள்ளிகளில் பிற திராவிட மாநிலங்களான கேரளம், ஆந்திரம்,கர்நாடகம் இங்குள்ள மாதிரி மூன்றாம் மொழியாக வைக்கலாமே பாலசந்தர்.

ஜயராமன் said...

தங்கள் பெயரில் போலியின் அடாவடித்தனம் பற்றிய தங்கள் பதிவை பார்த்து இப்பதிவையும் காண நேரிட்டது.

தங்களின் வீராவேசமாக தமிழ் தாங்களும் ஒரு 'தீப்பொறி' என்று காட்டுகிறது.

கலைஞர் என்பதே வடமொழி வார்த்தை. இவர் சிலேடையில் பல சமயம் பெண்களை அவமதிக்கிறார். (ஜெயலலிதாவை உனக்கு என்ன பிள்ளையா, குட்டியா, குடும்பத்தை பற்றி உனக்கு என்ன தெரியும் போன்ற சாயலிலும் பல தடவை). அதனால், நான் இந்த அம்மையார் ரொம்ப ஒழுங்கு என்றும் நினைக்கவில்லை.

இதுபோன்ற பல விஷயங்களில் உண்மை சுடுகிறது.

மற்றபடி தங்கள் பதிவில் கருத்துத்தாக்கத்தை விட கோபத்தின் தாக்கமே அதிகமாக காண்கிறது.

தமிழனத்தை ஒரு தலைமுறையை இவர்கள் ஏமாற்றிவிட்டார்கள். இதில் ஜோக் என்னவென்றால், இவர்கள் ஆட்சியில் தமிழகம் சமுதாயத்தில் முன்னேறியதாக வேறு இதே இளைஞர்களை நம்ப வைக்கிறார்கள். டிவி பார்ப்பதில் ரொம்ப முன்னேறி இப்போது சன் குரூப்புக்கு கோடி கோடியாய் கொட்டுகிறது. வேறு எதிலும் முன்னேற காணோம். காவேரி போன இடம் தெரியல. எலிக்கறி சாப்பிடும் விவசாயியும், கூழுக்கு அடித்துக்கும் நெசவாளர்களும்தான் மிச்சம்.

நன்றி

Hariharan # 26491540 said...

வருக ஜெயராமன்.

எனக்குக் கோபம் இருக்கிறது எதையும் உருப்படியாகச் சாதிக்காத திராவிட இயக்கத் தலைவர்கள் மேல்.

இவர்கள் பற்றிய இரு பதிப்பே என் வலைப்பூக்கு போலியாக ஒரு வலைப்பூ ஆரம்பிக்க ஒரு போலியன் தயாராகிறார்.

பகுத்தறிவும், 40 ஆண்டுகள் போட்ட திரா'விட'ப்"பெத்தடின்"எத்தனை உக்கிரமாக வேலை செய்கிறது பாருங்கள்!

Hariharan # 26491540 said...

//தங்களின் வீராவேசமாக தமிழ் தாங்களும் ஒரு 'தீப்பொறி' என்று காட்டுகிறது.//

ஜெயராமன்,

நான் உள்ளதை உள்ளபடியே பதிவு செய்திருக்கிறேன்.

உளவியல் ரீதியிலான பார்வைதான் இங்கு மையக் கருத்து.

எவ்வளவு எளிதில் நம் தமிழ் மக்களை வெட்டித்தனமாகப் பேசிப் பேசியே கெடுக்கிறார்கள் இந்த திரா'விட' இயக்கத் தலைவர்கள் என்பதை அப்படியே பதிவு செய்திருக்கிறேன்.

அருண்மொழி said...

பெத்தடின் பற்றி எழுதிவிட்டீர்கள். அதில் இருந்து மீள்வதற்கு என்ன செய்வது என்று சொல்லுங்கள்.

Hariharan # 26491540 said...

வாருங்கள் அருண்மொழி,

கண்டிப்பாக. அடுத்த சில பதிவுகளில் நானறிந்த தீர்வுகளை எழுத இருக்கிறேன்

விடுமுறைக்குச் செல்லவிருப்பதால் சற்று தாமதமாகலாம்.

கால்கரி சிவா said...

ஹரிஹரன்,

இந்த மாதிரி பெத்தடின்களை மீறியும் நம் தமிழ்மக்கள் நன்றாக வாழ்கிறார்கள். அதற்கு காரணம் தனி மனித முயற்சியே. இந்த பெத்தடின்கள் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் முன்னேறியிருப்போம்