Sunday, July 16, 2006

(17) ஹரிஹரனின் இங்கிலாந்து அனுபவங்கள்

லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் விமானம் இறங்கு முன்பு நடுவானில் மனதில் ஒரு மாதிரி இனம் புரியாத வித்தியாசமான உணர்வு தோன்றுகிறது கொப்பளிக்கின்ற கோபமாக இல்லை, உற்சாகம் கொப்பளிக்கும் பெரும் மகிழ்ச்சி என்றில்லை, ஜஸ்ட் இட் வாஸ் அ டிபரண்ட் மூட் ஆல் டுகதர்.

இங்கிருந்து வந்து தானே வணிகம் என்று ஆரம்பித்து நம் இந்தியாவை அடிமையாக்கி, சுரண்டி இன்றளவில் தொடரும் பல சமூக குழப்பங்களுக்கு வித்திட்ட பரங்கியர் நாட்டின் தலைநகரத்தில் கால் வைக்கப்போகிறோம் என்பதால் ஏற்பட்டது.

தனிமனிதன் உலகம் சுற்றி வரும் போது பல நல்ல , உபயோகமான விஷயங்கள் அறிந்து கொள்ள முடிகிறது. என் மாதிரி சாதாரண கடைக்கோடி கிராம இந்திய இளைஞன் தட்டுத்தடுமாறி, இந்தியாவில்-தமிழகத்தில் கல்விக்கு இட ஒதுக்கீட்டில் இடமில்லாமல் போய் அவதிப்பட்டாலும், தளராமல் உழைத்து முயற்சிக்கும் போது உலகம் சுற்றி அறிந்து கொள்வது சாத்தியமாகிறது.

சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் ஆகப்போகும் நிலையில் ஏராளமான இந்தியர்கள் பல்வேறு துறைகளில் பல்வேறுநாடுகளில் நம்பிக்கை முத்திரையைப் பெற்று இருக்கிறார்கள் தங்கள் அயராத கடும் உழைப்பின் காரணமாக.

இன்று இந்தியர்களின் 'ஹால்மார்க்' குணாதிசயமான பொறுமையும் அதன் விளவான 'லாஜிக்கல்'சிந்திப்பினால் மென்பொருள் துறையில் தனியான இடத்தினை இந்தியர்கள் தமக்கென உருவாக்கிக் கொண்டுள்ளனர்.

இங்கிலாந்து என்றவுடனே நமது சுதந்திரம் பற்றிய எண்ணங்கள் முதன்மைப்படும். எனக்கு அப்படிப் பட்டது. வெள்ளைக்காரக் கிழவன், கிழவியைக் காணும் போது இவர்கள் ஒருவேளை அவர்களது இளம் வயதில் நம்மூரில் கொள்ளையடித்துக் கொட்டமடித்து இருப்பார்களோ என்ற எண்ணம் அவ்வப்போது வந்து சென்றது.

ஹீத்ரூ ஏர்போர்ட்டில் இமிக்ரேஷனில், க்ரவுண்ட் க்ரூ, எனப் பல முக்கிய இடங்களில் தலைப்பாகை கட்டிய நம் சீக்கியச் சிங்குகளைக் காணும் போது தனி மகிழ்ச்சி.

நான் சென்ற Hemel Hempstead, Luton போன்ற இடங்களிலும் நிறைய இந்தியர்கள் இருக்கிறார்கள். அம்மாதிரியே ஏராளமான பாகிஸ்தானியர்கள் மற்றும் பங்களாதேஷிகள்.

இந்திய-பாகிஸ்தானியர்களின் நேரடித் தொடர்பும், அவர்களிடையே நிலவும் நாகரீகமான், நீறுபூத்த வெறுப்பும் காணக்கிடைத்தன. பாகிஸ்தானியரில் நிறைய பாக். காஷ்மீர்க்காரர்கள், பேசினால் பேச்சின் இரண்டாவது வரியிலேயே இந்திய வெறுப்பும், நக்கலும் எளிதில் தென்படுகிறது.

பங்களாதேஷிகள் ஆங்காங்கே "இந்திய"உணவுக் கடைகளை "இண்டியன் ரெஸ்டாரண்ட்' என்று நடத்துவதைப் பார்க்கமுடிகிறது.

நம்மூர் அரசியல் வாதிகள் கூவம் நாறிப்போனதைச் சமாளிக்க வம்புக்கிழுக்கும் "தேம்ஸ்நதி" லண்டன் நகரின் நடுவில் ஓடுகிறது. இதர ஐரோப்பிய நகரினிடையே ஓடும் நதிகளுடன் ஒப்பீடு செய்தால் "தேம்ஸ்"" அழுக்கு நதியாகிறது. தேம்ஸ் நதியில் இன்றும் நிறைய நீர் ஓடுகிறது, பெரிய படகுகள்
உல்லாச மற்றும் சரக்குப் படகுகள் தேம்ஸ் நதியில் பயணிக்கிறது.

நம் அரசியல்வாதிகல் கூவத்தை தேம்ஸ் நதியோடு ஒப்பீடு செய்வதெல்லாம் ரொம்பவே டூடூ மச்.

நம்மூர் ஆங்கிலவழிப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி படிக்கும் நம் குழந்தைகள் பாடும் நர்சரி ரைம்ஸில் வரும் " லண்டன் ப்ரிட்ஜ் இஸ் ஃபாலிங் டௌன்" புகழ் 'லண்டன் டவர் ப்ரிட்ஜ்" தேம்ஸ் நதியின் குறுக்காக பெரிய படகுகள்(ஃபெர்ரீஸ்) வரும் போது திறந்து மூடும்படி 1894ல் கட்டப்பட்டது, இன்றும் செயல் பாட்டில் வைத்திருக்கிறார்கள்.

லண்டன் "கறுப்பு டாக்ஸிகள்" அதன் பிரத்யேக அமைப்புக்காக புகழ் பெற்றவை. என்றாலும் நம்மூரில் இறுதியாத்திரை அமரர் ஊர்தி நினைவுக்கு வருவதைத் தடுக்கமமுடியவில்லை.

லண்டனின் "சிவப்புநிற இரட்டைமாடி பேருந்துகள்" (தற்போது நிறுத்தப்பட்டுவிட்டன) நம் மும்பையை நினவுபடுத்துகின்றது. இந்திய மெட்ரோ நகர்களில் ப்ரிட்டிஷ்காரர்கள் கட்டிய கட்டடங்கள் நிறைய இருப்பதும் லண்டனை சில ஆங்கிளில் நம் இந்திய நகரம் என்று எண்ணத் தோன்றுவதும் தவிர்க்கமுடியாததாகிறது.

ஐரோப்பிய நகரில் லண்டன் எனக்குப் பிடித்துப்போனதற்கு சாப்பாடும் காரணம். நம்மூர் சாப்பாடு எதுவாயினும் எளிதில் பிரிட்டிஷ் நகர்ப்புறங்களில் கிடைகிறது.

"ஆக்ஸ்போர்டு ஸ்ட்ரீட்" மாதிரியான தெருக்களில் 40-50% இந்தியத் துணைக்கண்ட முகங்களாக எதிர்ப்படுகிறது.

'லண்டன் ட்யூபில்' பயணிக்கும் போது நிறைய இந்திய முகங்கள் தென்படுகின்றன. இந்திய இளைஞர்களைப் பார்த்துப் புன்னகைத்தால் படுசிக்கனமாக பதில் புன்னகை அல்லது ஆழமான பார்வையோடு நிறுத்திக் கொள்கிறார்கள். அங்கேயே பிறந்து இந்தியாவைப் பற்றிக் கேட்டும், சினிமா வாயிலாக மட்டும் அறிந்த அடுத்த தலைமுறையாக இருப்பவர்களாக இருக்கலாம்.

லண்டன் ட்யூப் பற்றிக் கொஞ்சம் சொல்லியாக வேண்டும். லண்டன் நகரில் ஒரு 30 கி.மீ சுற்றளவுக்கு காலுக்கு 100மீட்டர் கீழே தனி ரயில் உலகமே செய்திருக்கிறார்கள். அண்டர்க்ரௌண்டில் இரண்டடுக்கு ரயில் நிலையங்கள்.
ரயில் சேவை தனியார் மயம். தேம்ஸ்லன், பிக்காடலி எனப் பல தனியார் ரயில் சேவைகள்.

நம் சென்னை பறக்கும் ரயில் திட்டம் நினைவுக்கு வந்தது. 1980களில் ஆரம்பிக்கப்பட்டு 25ஆண்டுகள் கழித்து சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து திருவான்மியூர் வரை 10கி.மீ என்று படுஸ்பீடாக பறந்துவந்திருக்கிறது!

நம்மூர் அரசியல்வாதிகள் நம் மக்களைக் கொள்ளை அடித்த பணத்தில், இங்கிலாந்தில், ஆக்ஸ்ப்போர்டில் தங்கள் வாரிசுகளைப் படிக்க வைக்கிறார்கள். ஆனால் அங்கிருக்கும் "infrastructure Development" மாதிரி நம்மூரில் ஏன் செய்ய முழுமனதுடன் முயல்வதில்லை?

அய்யா சாமி! ஆயாசமாயிடுச்சுங்கோ!


அன்புடன்,

ஹரிஹரன்.

7 comments:

கீதா சாம்பசிவம் said...

லண்டன் பத்திப் படிக்கும்போது நம்ம டுபுக்கு போன லண்டன் தான் நினைவுக்கு வருது. ஹி,ஹி,ஹி, நீங்களும் போய்ப் படிச்சுப் பாருங்க, புரியும். மத்தபடி லண்டன் நினவுகளுக்கு ஒரு பாராட்டுக்கள்.

Hariharan # 26491540 said...

கீதா,

தீவிர சைவர்கள், தீர்த்தம் அடிக்காத நபர்கள் பாடு ரொம்பப் பாவம். அதிலும் தீர்தவாரி முடித்தவர்களை வாரிக்கொண்டு ரூமுக்கு வழிகாட்டும் பொழப்பு கொஞ்சம் கஷ்டம். நிறையப் பட்டிருக்கிறேன். வெஜ்.சாலட்டில் மீனைப் பிய்த்துப் போட்டிருப்பார்கள். பெரிய்ய ஆராய்ச்சி செய்து கடைசியில் ஒரு பெரிய 'பேக்டு பொடெடோ"மட்டும் சாப்பிட வேண்டியதாக அமையும்.

'க்ராண்ட் காலா பார்ட்டி' எல்லாம் அந்த தீர்த்த,ஊர்வன பறப்பன,நடப்பன உட்தள்ளும் பார்ட்டிகளுக்குத்தான்.:-((

Vajra said...

//
தீவிர சைவர்கள், தீர்த்தம் அடிக்காத நபர்கள் பாடு ரொம்பப் பாவம்.
//

அப்பாடா, நான் வைணவம்!! :D

கோகுலத்துப் பசுக்களைத் தவிர, கூர்மாவதாரம், மச்சாவதாரம், வராக அவதாரம் எல்லாமே, சிறிது வயிற்றிர்கும் ஈயப்படும்.

//
இந்தியத் துணைக்கண்ட முகங்களாக எதிர்ப்படுகிறது.
//

நல்லவேளை நீங்களும் அந்த "தெற்காசியா" காய்ச்சலால் பீடிக்கபடாமல் இந்திய துணைக்கண்டம் என்று கன்னியமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் "இந்திய" என்கிற வார்த்தைக்கு அலர்ஜி ஏற்பட்டு பாழாய்ப்போன பாகிஸ்தானியர்களயும், ஜிஹாதி வங்கதேசத்தவரையும் குஷிபடுத்தப் பயன்படுத்தும் சொல் "தெற்காசியர்கள்"!!

CT said...

"தங்கள் அயராத கடும் உழைப்பின் காரணமாக."
Truly said..I think one of the westerner said India Developed in his sleep(meaning it was not by politicians and its policies).

I know there is tube but didn't know it is two story....

nice to read with all your expectations for india.

Hariharan # 26491540 said...

ஷங்கர்,

இந்திய சரித்திரம் தான் முழுமையாகவும், உண்மையாகவும் இன்னும் இந்தியர்களுக்கும், உலகிற்கும் சரியாகச் சொல்லப்படவில்லை. சும்மா தன் அப்பனையே சிறையில் தள்ளிவிட்டு பின் நம் இந்திய ராஜபுத்திர அரசன் கட்டிய "தேஜோமாகால்" சிவன் கோவிலை தன் காதலி மும்தாஜூக்காக ஷஜகான் கட்டியதாக்ச் சொல்லப்படுவதைத் தானே நம் இந்திய வரலாறாக sickular ஜனநாயக NCERT மாணவர்களுக்குப் படிக்க தந்திருக்கிறது.

எனக்கு இந்திய அரசியல்வாதிகளிடம் மட்டுமே கோபம்.

இண்டர்னேஷனல் மார்கட்டிங் & டிஸ்ட் ரிப்யூஷன் விதிகள்படி பூகோள ரீதியாக இன்று பாகிஸ்தான் மத்திய கிழக்கு நாடு தெரியுமா?

தற்போது JNU மாதிரி இடங்களில் பொய்யான NCERT படித்த அறிவுசீவிகள் உருப்படாத நபர்கள் பூகோளத்திலும் இந்தியத் துணைக்கண்டம் தவிர்த்து கீழான தொனியில் "தெற்காசியா" என்கிறார்கள்.

இனி வரும் நாட்களில் இந்தியப் பெருங்கடல் என்பது கூட நாளடைவில் மருவி "தெற்காசியக்கடல்" ஆனாலும் ஆகும்.

Hariharan # 26491540 said...

CT,

In reality, there has been a leap in global acknowledgement on Indian's sincerity and hard work.

In Kuwait many reputed local arabic business people prefer Indian workforce, manytime they openly admit "Indians are trustworthy" even religiously fundemantal locals too don't have proximity with pakistani/bengalis when it comes to work and business.

Muse (# 5279076) said...

Hari,

London is a multi-national city. I felt happy when I saw name boards in Tamil, Punjabi, and Hindi. This nature seems to be in danger due to the Conservative party's ideas, and the party seems to be enjoying a winning edge in the forthcoming elections. hmmmmmm, let us see.

I spent most of my time on Museums (London has more than 300 museums !). The city itself is a museum. Even the toilet basins are atleast 200 years old.

One can see War memorials everywhere. I feel sad that the Indian government does not have any memorials for our brave warriors. What we see here are all done by the British, including our constitution.

The beautiful cathedrals are grand, and ironically I felt elated to see St. Paul's cathedral which is as big as our Madurai Meenakshi temple. One thing I found is their obsession with heights; Indians are obsessed with breadth. Our temples are huge in terms of land that they occupy, whereas the cathedrals make up it with their height. I found the obsession of height with almost all europeans. "He is fair, tall, and handsome".

Will be going again next month. Have you any suggstion on place to visit?