Tuesday, July 18, 2006

(19) திரா'விட'ப் பெத்தடினும் வளைகுடாத் தமிழர்களும்

வளைகுடாத் தமிழ் கூலித் தொழிலாளர்கள் அரேபியர்களால் துன்புறுத்தப் படுகிறார்கள் என்பது ஓரளவுக்கு உண்மைதான்.

அரேபியர்கள் நம் தமிழர்களை சரியாக நடத்தாததற்குக் காரணங்கள் இருக்கிறது. மிக முக்கியமான காரணம் அவர்கள் வேறு, நாம் வேறு, மொழி வேறு, கலாச்சாரம் வேறு.

அரேபியர்களால் வரும் பிரச்னைகளுக்கு பிறகு வருவோம்.

நான் அறிந்த குவைத்திலிருந்து ஆரம்பிக்கலாம்.

குவைத்தில் வாழும் 500,000 இந்தியரில் கிட்டத்தட்ட 100,000 பேர் தமிழர்கள். இந்த 100,000 பேரில் 50 முதல் 60,000 தமிழர்கள் கூலித் தொழிலாளர்கள் மிகக் குறைவான சம்பளத்தில் 40 தினார் மாத சம்பளத்தில் வாழ்பவர்கள்.

இதில் சரிபாதி தமிழ்த் தொழிலாளர்கள் திருமணமாகி மனைவி, குழந்தைகளைப் பிரிந்து அவல வாழ்க்கை வாழ்பவர்கள்.

நம் NRI விவகாரத்துறை அமைச்சர்கள் வருடாவருடம் பிக்னிக் மாதிரி வருகிறார்கள், தூதரக ஐந்துநட்சத்திர வசதிகளில் தங்கிவிட்டுப் போகிறார்கள்.

எல்லா வளைகுடா நாடுகளிலும் 50% இந்தியத் தொழிலாளர்கள் இம்மாதிரி லேபர் கேம்பில் மாதம் 40தினார் அளவுக்கு குறைந்த சம்பளம் வாங்குகிறவர்கள் இருப்பதை அறிந்திருக்கிறார்களா?

ஒருநாள் லேபர் கேம்பில் "சர்ப்ரைஸ் விஸிட்" அடித்து ஏழைத் தொழிலாளர் படும் துயர் நேரடியாகக் கண்டறிந்ததுண்டா?

நம் சக ஏழைத் தொழிலாளி இந்தியனை இந்திய அமைச்சரும், இந்திய அரசும் தமிழ்த் தொழிலாளிகளை தமிழக அரசியல் திரா'விட' இயக்கமோ, அதன் சீரிய இன மானத் தலைவர்களோ நலம் காண விழைந்ததுண்டா?

நம் ஏழைத் தமிழ்த் தொழிலாளி ஊரில் ஏஜண்டுக்கு 25-50,000 ரூபாய் கட்டி விட்டு அந்தப் பணத்தினை 4ஆண்டுகள் மாதம் 40தினார் சம்பாதித்து வட்டியோடு கடன் கட்டி என அவதிப்படுபவர்கள்.

டிராவல் ஏஜண்ட் கடன் சுமை, அநியாய ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானப் பயண ரிட்டர்ன் டிக்கட் கட்டணம் இவைகளால் மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தன் குடும்பத்தினைப் பார்க்க தமிழகம் வருகிறான்.

ஆனால் இவனுக்கு ஏதும் விமானக் கட்டணத்தில் சலுகை உள்ளதா? மூச்... கட்டணக் கடுமைதான் உள்ளது.

இதில் பெரிய கொடுமை 3-4 மணி நேர விமானப் பயணத்திற்கு ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானப் பயண ரிட்டர்ன் டிக்கட் கட்டணம் 20-30,000 ரூபாய் வசூலிக்கிறார்கள். ஆனால் இதே ஏர் இந்தியா 20மணிநேர அமெரிக்க விமானப் பயண ரிட்டர்ன் டிக்கட் கட்டணம் 40-50,000 ரூபாய் வசூலிக்கிறார்கள்.

நம் இந்திய அரசும் தமிழக அரசும் விழுந்தடித்துக் கொண்டு 'ஹஜ்' பயணிகளுக்கு 50% விமானக் கட்டணச் சலுகை தருகிறது. இஸ்லாம் மார்க்கமே இயலாத நிலையில் இருப்பவனை ஐந்து கடமைகளில் கடைசிக் கடமையான 'ஹஜ்'பயணிப்பதை வற்புறுத்தித் திணிக்காதநிலையில், மதசார்பில்லாத நமது இந்திய அரசும், மதசார்பில்லாத தமிழக அரசியல் திரா"விட" இயக்கங்களின் அரசும் நியாயமான விமானக் கட்டணச் சலுகை கிடைக்க வேண்டிய நம் தமிழ்த் தொழிலாளியை அட்டை மாதிரி உறிஞ்சுகிறார்கள்.

புள்ளி விபரத்துறை அமைச்சராக நமது தமிழர் ஜி.கேவாசன் இருக்கிறார், இவருக்கு நம் வளைகுடா ஏழைத் தமிழ்த் தொழிலாளியின் அவஸ்தைகள் தெரியாதா? தமிழின மான, நலன் காக்கும் திரா'விட'க் காவல் வெங்காய இயக்கங்கள் என்ன செய்தன?

சரி. இது ஒரு பக்கம்.

நம் தமிழ்த் திரையுலக காம(நெ)டியன்களால் வளைகுடாவில் வசிக்கும் நம் ஏழைத் தமிழ்த் தொழிலாளி படும் மன ரணங்கள். அய்யோ பாவம்! நம் ஏழை வளைகுடாத் தமிழன் தன் பொருளாதார இயலாமையால் மூன்று நான்கு வருடத்திற்கு ஒருமுறை வளைகுடாவிலிருந்து தமிழகம் வரும் அவல நிலையினை இந்தக் காம(நெ)டியன்கள் விவேக், மணிவண்ணன் இதர பலரரும் காம(நெ)டியாக:

"அதெப்படி அப்பன் துபாய் போய் ரெண்டு வருஷமாச்சு, பொண்டாட்டி மூணாவது மாசம் முழுகாம இருக்கா?" மாதிரியான காம(நெ)டிக் காட்சிகள், எல்லாம் இவர்களே சொந்தமாக காம(நெ)டி டிராக் எழுதியதுதான். எல்லாம் திரா'விட' பெத்தடின் சிந்தனை!


பார்ப்பன இனப்பெண்களை தேசிய உடமை ஆக்கச் சொன்ன, முற்போக்குத் திருடர்கள் கழகம் ஊட்டிய திரா'விட'ப் பெத்தடின் சிந்தனையின் பரிணாம வளர்ச்சி. இன்று தமிழ்ச் சமுதாயத்தையே கேவலமாக்கிக் கொண்டிருக்கிறது.

மனித உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும் ஏது ஜாதி, மதம், இனம், ஏது மொழி?. இந்த தந்தை,தாய்,சகோதரி,மனைவி, மகள், உறவுகள் மற்றும் பாரம், அன்பு, அக்கறை, நட்பு போற உணர்வுகள் எல்லா ஜாதி,மதம்,இனத்திலும் ஒன்று தானே!

கொஞ்சம் யோசியுங்கள். நம் அரசியல் திரா'விட' திருடர்கள் இயக்கங்கள் உறவுகளையும், உனர்வுகளையும் சிதைத்து சின்னாபின்னப்படுத்திய திருடர்கள் கழகம் ஊட்டிய திரா'விட'ப் பெத்தடின் செய்கின்ற வேலை இது என்பது புரியும்.

நம் தாய்த்தமிழகத்தில் தானே "மாமனாரின் இன்ப வெறி", தம்பி பொண்டாட்டி, திருடுப்பயலே, அண்ணன் பொண்டாட்டி அரைப் பொண்டாட்டி என்று தமிழ்ப் படங்கள் தமிழர்களால் பெரிதும் விரும்பி அலைகடலென ஆர்ப்பரித்துப் பார்க்கப்படுகின்றன.

உலகில் நம் தமிழகத்தில் தான் காலை 9மணிக்கே மலையாளப்படம் பார்க்க இளைஞர்கள் பாடாவதி திரையரங்குகள் முன் கூடுகிறார்கள்.

இதுக்கும் வளைகுடா ஏழைத்தமிழனுக்கும் என்ன தொடர்பு? என்று தானே குழம்புகின்றீர்கள். இதோ விளக்கம்.

திருமணமாகி, பொருளாதர இயலாமையால் மனைவி குடும்பத்தைப் பிரிந்து வாழும் நம் வளைகுடா ஏழைத்தமிழன் அவனது கல்வியின்மை, மற்றும் அவனது ஒரே பொழுது போக்காகத் தன் சக நண்பர்களோடு தமிழ்த் திரைப்படம் பார்க்க நேர்கையில், விவேக், மணிவண்ணன் காம(நெ)டியினால் தனது குழந்தைமீது, மனைவி மீது சந்தேகப் பொறி விழுந்து வாழ்வை எரிக்கிறது. சரி விடுமுறைக்கு தமிழகம் வரும் போது மீண்டும் மீண்டும் மறு ரிலீஸாகும் "மாமனாரின் இன்ப வெறி' தனது வயதான தகப்பனை சந்தேகிக்கத் தூண்டுகிறது, அண்ணன், தம்பி பரஸ்பர சந்தேகம் வரும்படி செய்கிறது. திருட்டுப்பயலே மாதிரி படங்கள் நண்பனைச் சந்தேகம் கொள்ளத் தூண்டுகின்றன.

இருந்தாலும் நம் வெளிநாடு வாழ் ஏழைத் தமிழ்த் தொழிலாளி இவ்வளவு வெள்ளந்தியா இருக்கக்கூடாதுங்க. இவ்வளவு கேவலமான தமிழ்க் காம(நெ)டியான்கள் "கலைச் சேவை"ன்னு துண்டேந்தி மலேசியா, சிங்கப்பூர்,துபாய்னு வரும் போது கைக்காசப் போட்டு மரியாதை செய்கிறார்கள் (லோஹிப் நடிகைகளை பார்க்குற சாக்கில்)

"அய்யர் தி கிரேட்" என்ற மலையாள டப்பிங் படப் போஸ்டரின் மீது தார் பூசிய அரசியல் திரா'விட' திருடர்கள் கழகக் கண்மணிகள் "மாமனாரின் இன்பவெறி" என்ன எதிர்ப்புக் காட்டினார்கள்? விழுந்தடித்து அந்தப் படத்திற்கு வரிசையில் அல்லவா டிக்கட் வாங்க நின்றார்கள்.

இதோ லேட்டஸ்ட் உயிர் படம் "அண்ணன் பொண்டாட்டி அரைப் பொண்டாட்டி" என்ற புர்ர்ர்ச்ச்சி வாசகத்துடன் வெளிவந்திருக்கிறது. சக்கைப் போடு போடும். நம் தமிழர்கள் இந்த டைட்டிலுக்கே வெள்ளி விழாப் படமாக்கி விடுவோம்.

நம் தமிழ்ப் பாதுகாப்பு இயக்க தங்கரு, திருமா, தமிழ்க்குடிதாங்கி, என்ன செய்தார்கள்? ஏதாவது குஷ்பூ படத்தில் ஸ்லோமோஷனில் குஷ்பூவை ரஸித்தபடி தமிழ்ப் பண்பாட்டைப் பாதுகாக்கிறார்கள் போலிருக்கிறது.

அகில உலக தமிழின மானத்தலைவர் கலைஞரு அவரு துணைவியார் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.

அப்ப நம்ம வளைகுடா ஏழைத் தமிழ்த் தொழிலாளி கதி?

"மஞ்சத்துண்டைப்" போட்டு தாண்டிச் சொல்றேன் ஏதும் நல்லது நடக்காது.

ஒருவேளைம் இந்தியத் தேர்தல் ஆணையம் NRI களுக்கு ஓட்டுரிமை உண்டு என்று அறிவித்தால் நம் தமிழக அரசியல் திரா'விட' ஓட்டுப் பிச்சைக்கார, மற்றும் திருடர்கள் இயக்கங்கள் அதே மஞ்சள்துண்டை வளைகுடாத் தமிழனுக்கு அணிவிக்க ஓடி வரலாம்.

ஏழைத் தமிழ்த் தொழிலாளி படிக்காதவன், திரைப்படங்கள் நாட்டுநடப்பு என நம்புபவன்.


சென்னைக்கும் வளைகுடா நாடுகளுக்கும் இடையே தனியார் சேவையும் கிடையாது. ஏர் இந்தியாவின் சிக்கன விமானச்சேவையான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவையும் தமிழகத்திற்குக் கிடையாது.

நம்ம அகில உலக தமிழின மானத்தலைவர் கலைஞரு தொலைதொடர்புத்துறைக்குக் காட்டிய பிடிவாதம் மாதிரி, இந்திய விமானப் போக்குவரத்துத் துறை தந்தால் தான் நடுவண் அரசில் சேருவேன்னு கொளுகைப் பிடிப்பு ஏன் காட்டவில்லை?

அதுசரி கிங் பிஷர் "விஜய் மல்லய்யா" மாதிரி இன்னொரு பேரன் ஊஊஊதயநிதி "சன் ஏர்வேஸ்" தொடங்கினா இன்னொரு அரசியல் திரா'விட'க் கொளுகைக் களுதை தானா வந்திடாதுங்கிறீங்க. நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்ங்க!

நமக்கு அவ்வளவா அரசியல் திரா'விட'ப் பகுத்தறிவு கிடையாதுங்க. மன்னிச்சுக்கோங்க!

அன்புடன்,

ஹரிஹரன்

10 comments:

Mansoor said...

வளைகுடா தமிழர்களின் நிலையை மிக சரியாக எழுதி உள்ளீர்கள்.

எழுத்துப் பிழை said...

தொழிலாளி ப்டும் : தொழிலாளிபடும்
உனர்வுகளையும் : உணர்வுகளையும்
திருடுப்பயலே : திருட்டுப்பயலே
வ்ழுந்தடித்து : விழுந்தடித்து
புர்ச்சி : புரட்சி
படமாகி : படமாக்கி
விஜய் மல்ல்ய்யா : விஜய் மல்லய்யா
ஊதயநிதி : உதயநிதி

Hariharan # 26491540 said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மன்சூர்.

Hariharan # 26491540 said...

வாருங்கள் தமிழாசிரியர் எழுத்துப்பிழை அவர்களே.

இதில் புர்ச்சி, ஊதயநிதி கிண்டலுக்காக

பிற பிழைகள் ப்ளாக்கர் சரியானதும் சரிசெய்து விடுகிறேன்.

வந்ததற்கும் பிழைகள் சுட்டியதற்கும் நன்றி. அடிக்கடி வருக எழுத்துப்பிழை அவர்களே.

Hariharan # 26491540 said...
This comment has been removed by a blog administrator.
Hariharan # 26491540 said...

திராவிடவெறியன் has left a new comment on your post "(19) திரா'விட'ப் பெத்தடினும் வளைகுடாத் தமிழர்களும்":

உன் வலைப்பூவைத் தான் எவனுமே படிக்க மாட்டேன்னு அடம் புடிக்கிறானே. அப்புறம் ஏன்யா எழுதறே. உனக்கு எழுத்தும் சரியா வரமாட்டேங்குது. நகைச்சுவையும் சுத்தம். உனக்கு நீயே ஏதோ பெருசா மாலன் மாதிரி எழுதி கிழிக்கிற நெனைப்பா?

Hariharan # 26491540 said...

திராவிட வெறியன்,

வாங்க. மாடரேஷன்ல வெறியன்னு பார்த்தவுடன் ரிஜக்ட் கிளிக்கினேன்.

ஜனநாயகத்தில் எதிர் தரப்புத் திறனாய்வு அவசியம்னு பட்டது. அதனால ரி-பப்ளிஷ் பண்ணுகிறேன்.

இப்படிப் படிக்கிறமாதிரி நாகரீகத் தமிழில் திட்டிப் பின்னூட்டம் எழுதினாலும் சரி.

இப்ப என்னறீங்க? என் எழுத்து பெருசா மாலன் மாதிரி இல்லை அதானே? சிறுசா மாலன் மாதிரி கிழிக்கிறேனில்லையா...

கவலையை விடுங்க... முயற்சி திருவினையாக்கும். கால ஓட்டத்தில் என் எழுத்து தானே என் வசப்படும்.

சரி ஓடாதீங்க. உங்களைமாதிரி சிங்கை ஆட்கள் படிக்கலைன்னாலிம் என் வலைப்பூ சிங்கி அடிக்கப் போவதில்லை. எப்பவும் மாதிரி தினம் ஒரு பத்துதரம் கண்டிப்பா என் வலைப்பூக்கு வரவும்.

tbr.joseph said...

ஹரிஹரன்,

நல்லா உணர்ச்சிபூர்வமா எழுதறீங்க. ஒத்துக்கறேன்.

குவைத்தில் தமிழ் மக்கள் படும் அவதிகளை மிக எளிதாக எழுதியுள்ளீர்கள்.

ஆனால் ஒன்று ஹரி..

பிரச்சினைகளைக் குறித்து எழுதும் நேரங்களில் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்துக்கொள்ள பழகினால் நல்லது.

பிரச்சினைகளை முன்வைக்க வேண்டும்.. ஆனால் யாரும் ஏதும் செய்யவில்லை என்ற பாணியில் எழுதாதீர்கள்.

அத்துடன் அரசியல்வாதிகளை சாடி எழுதுவதில் எந்த பயனும் இல்லை.அவலங்களை அப்படியே மிகைப்படுத்தாமல் மற்றவர் முன் கொண்டுவந்தாலே போதும்.

அப்புறம் உங்களுக்கு வரும் பின்னூட்டாங்களின் தரம் குறைவாக இருந்த்தாலும் நீங்களும் அதே பாணியில் கோபத்துடன் பதில் எழுதாதீர்கள்..

உங்களுடைய உணர்ச்சிகளுக்கு வடிகால் வேண்டுமென்றால் எழுதிவிட்டு மீண்டும் ஒருமுறை உங்களுடைய பதிலை படித்து பாருங்கள். உங்களுக்கே உங்களுடைய கோபம் சற்று அதிகமானதாக தெரிந்தால் எடிட் செய்துவிட்டு பிரசுரியுங்கள்..

உணர்வுகளை அப்படியே எழுத்தில் வடித்தெடுக்கும்போது நம்மையும் மீறி சில தவறுகள் ஏற்படுவதுண்டு..

அதை மட்டும் சற்று கவனத்தில் கொண்டால் போதும்..

Hariharan # 26491540 said...

ஜோசப் சார்,

தங்களது அறிவுரைகளை இனி பின்னூட்டதில் பதிலளிக்கும் போது முழுமையாக செயல் படுத்த முயற்சி செய்வேன்.

இங்கே வளைகுடா வாழ் நம் தமிழ் ஏழை உழைப்பாளிகள் படும் அவஸ்தைகளிலேயே மிகவும் கொடுமையானது திருமணமாகியும் பொருளாதார ஊனத்தால் தனிமையாக வாழும் அவலச் சூழல்.

முடிந்தமட்டும் நாகரீகமான வழியிலேயே பண்பான வார்த்தைகளைப் போட்டு எழுதுகிறேன். பதிவின் களமே சற்று காரமானது என்பதால் அப்படியே உணர்வுபூர்வமாக சுட்டிக்காட்ட விழைந்திருக்கிறேன்.

தங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி. என் எழுத்தில், கருத்தில் தவறுகள் இருப்பின் தயங்காது சுட்டிக் குட்டுங்கள்.

Muse (# 5279076) said...

>>> "மாமனாரின் இன்பவெறி" என்ன எதிர்ப்புக் காட்டினார்கள்? விழுந்தடித்து அந்தப் படத்திற்கு வரிசையில் அல்லவா டிக்கட் வாங்க நின்றார்கள்.<<<

If they dont get tickets, they will read their leaders speaches and writings.

I heard about the kind of relations that Maniammai and Viramani had even when EVR naickar was alive. I dont believe it to be true.

அகில உலக தமிழின மானத்தலைவர் கலைஞரு அவரு துணைவியார் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.

Not precise info. Which one: No 2, 3, 4, 5, or etc.?