(16) போலியனும் வலைத்தள ஜனநாயகமும்
ஐயன்மீர்,
பொதுவாக தமிழக, இந்திய எல்லை தாண்டி வெளியே வேலைக்காக வந்து தங்கி இருக்கும் தமிழ் மக்கள் அவர்கள் இருக்கும் அயல் நாட்டில் எங்காவது அரிதாக தமிழ் எழுத்துக்களைப் பார்க்கும் போது மனம் கொள்ளும் மகிழ்ச்சி கொண்டுவந்திருந்தார்கள்.
இணையம் வந்து இந்த சமீப 5 ஆண்டுகளில் தமிழ் தினசரிகள், வார சஞ்சிகைககள் என வந்து தமிழ் படித்து மகிழ்வது அயல் நாட்டில் மிகப்பெருமளவு கூடியது.
இணைய தொழில்நுட்ப முன்னேற்றத்தில் ப்ளாக்கர், தமிழ்மணம், தேன்கூடு மாதிரியான இணைய முயற்சிகள் பல நாடுகளில் வசிக்கும் மக்கள் தங்கள் உலகத்தை, அனுபவங்களை, நாட்டு நடப்பை அறிந்து கொள்ள உறவினர், நண்பர் இல்லாத குறையை பலருக்கு தீர்த்து வைத்துக் கொண்டிருக்கும் இந்த இனிய காலகட்டத்தில், அதே டெக்னாலஜி "போலியன்கள்" மாதிரி மனம் பிறழ்ந்த சிலரிடம் குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை மாதிரி அவஸ்தைப் படவும் செய்கிறது.
போலியன் நம்பும் திரா'விட'க் கருத்துக்கு மாற்று கருத்து உள்ள பதிவர்கள் மீது "காரக்டர் அசஸினேஷன்" பாணியில் தொந்திரவுகள்!. தனியனாய் இம்மாதிரி வலைப்பூ வன்முறைகளைச் சந்திப்பதைவிட நான் வழிபடும்
"வீர ஹனுமான் " என் தமிழுக்கு உரம் சேர்க்கும் "திருவள்ளுவர்" துணையோடு இருக்குமாறு எனது புகைப்படத்தினை மாற்றியிருக்கிறேன்.
வலைத்தளத்தில் முகம் காட்டிப் பேசும் ஜனநாயகம் "போலியன்"மாதிரி நபர்களால் தொந்தரவுக்கு உள்ளாகலாம். போலியால் ஜனநாயகம் அறவே இல்லாமல் போய்விடாது.
வின்ஸ்டன் சர்ச்சில் சொன்ன "ஜனநாயகம் மாதிரி மோசமானது எதுவுமில்லை...என்றாலும் அதுவே சிறந்தது" என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன.
தமிழக அரசியல் திரா'விட'பெத்தடினின்' தீவிர தாக்கத்தினின்று மீண்டு ஜனநாயகப் பாதைக்கு, ஜனநாயக சிந்திப்பு, ஜனநாயகச் செயல்பாடுகளில் நம்பிக்கை வைக்குமாறு திரு. போலியனை "உண்மையான பகுத்தறிவினைப்" பயன் படுத்த வேண்டுகிறேன்.
என்னைப் "புனிதப் பிம்பமாக்கும்" முயற்சி இல்லை இப்பதிவின் நோக்கம். என்பதையும் தெளிவுபடச் சொல்லிவிடுகிறேன் இங்கு!
அன்புடன்,
ஹரிஹரன்
4 comments:
test
போலி வரலைனா அப்புறம் வலைப்பூ எழுதறதுக்கு உள்ள முக்கிய தகுதி இல்லாமல் போயிடும். அதான் வந்திருக்காரு.
கீதா,
எனது எழுத்து தகுதி பெற்றது என்பது போலி எனக்கு நான் வலைப்பூ அமைத்த 20 நாட்களில் போலியான வலைப்பூ ஆரம்பித்த உடன் புரிஞ்சுக்கிட்டேன்.
வலைப்பூ வாழ்க்கையில் இதெல்லாம் 'சிறப்புத் தகுதி'யாச்சே!
Post a Comment