(7) ஹரிஹரனின் டென்மார்க் அனுபவங்கள்-1
கோபன்ஹேகன் டென்மார்க் நாட்டின் தலைநகரம்.
புயல் மழை பெய்து நேரில் பார்த்திருக்கிறேன். உக்கிரமான வெயிலுடன் கூட்டணி அமைத்துத் தாக்கும் புழுதிப்புயலில் திளைத்திருக்கிறேன்(!). நான் அதுவரை நேரில் பார்த்திராத, விழும் போதே உறைந்து தூவலாய் விழும் பனி மழை என்னை- கோபன் ஹேகனில் வரவேற்றது.
டாம் & ஜெர்ரி கார்ட்டூனில் டாம் பூனை உறைந்து விறைப்பாவது மாதிரி உறைந்து போய் வெளி வந்தேன்.
இந்த "டென்மார்க்கர்களைத்" தான் டச்சுக்காரர்கள் என்று நாம் இந்திய சுதந்திர வரலாற்றில் படித்திருக்கிறோம். நம்ம தரங்கம்பாடியில் டச்சுக்கார Ziegenbalg சீகன் பால்கு(ஐயர்!?) (மக்களை மதம் மாற்ற பெயரோடு ஐயர் அடைமொழி சேர்த்துக்கொண்டவர்)
ஐரோப்பாவில் ஜெர்மனி,நெதர்லாண்ட்ஸ்,டென்மார்க்-இங்கு உள்ளோர் Deutch என்றே அழைக்கின்றனர்.
டென்மார்க், ஸ்வீடன், நார்வே, பின்லாந்து எனும் அரச நாடுகள் இணைந்து "ஸ்காண்டிநேவியா" என்று அழைக்கப்படுகிறது.
இங்கிலாந்து அரச குடும்பமும், டென்மார்க்கிய அரச குடும்பமும் திருமண பந்தங்கள் உடையன. டென்மார்க் மக்கள் ஓரளவுக்கு மொழி வெறுப்பில்லாமல் ஆங்கிலம் பேச இதுவும் ஒரு காரணம் என நினைக்கிறேன்.
நம் பாரதி சிங்களத் தீவிற்குப் பாலம் அமைக்கச் சொல்லி கிட்டத்தட்ட 100ஆண்டுகள் ஆகப்போகிறது. தெற்காசிய infrastructure இன்னும் பெருமளவுக்கு பாரதி காலத்தைய மாதிரிதான் இருக்கிறது.
டென்மார்க்கும் ஸ்வீடனும் ஓர்சுண்ட் (Oresund Bridge) கடல் மேல் பாலத்தால் 17 கி.மீக்கு நெடுஞ்சாலை,இரயில் மார்கங்களில் இணைக்கப்பட்டுள்ளது. நார்வே தலைநகர் ஓஸ்லோ (Oslo)க்கு தினசரி கோபன்ஹேகனிலிருந்து கப்பல் போக்குவரத்து நடக்கிறது.
ஐரோப்பிய நாடுகளில் தனி மனித அளவில் இங்கிலீஷ்காரனுக்கும் ப்ரெஞ்சுக்காரனுக்கும் தினசரி நடவடிக்கையில் ஏழாம் பொருத்தம். கிழக்கு ஐரோப்பியனை சுத்தமாக மேற்கு, வடக்கு ஐரோப்பியர்கள் மதிப்பதில்லை,
நம் இந்தியாவில் "இத்தாலிய அன்னையை" தலையில் தூக்கி வைத்து ஒரு கூட்டம் இன்னும் தாம் கலோனியல் (கஸின்ஸ் ) சிந்தனையோடு திரிகிறது.
ஆனால் அரசியல்,பிராந்திய முன்னேற்ற்ம், Regional infrastructure development என்று வரும் போது இங்கிலாந்துக்கும், ப்ரான்சுக்கும் இடையில் கடலடியில் ஆங்கிலக் கால்வாயைக் under sea bridge அமைத்துக் கடந்து பெரும்பாலான ஐரோப்பாவை யூ-ரயில் (european rail) network அமைத்து இணைத்திருக்கிறார்கள். டென்மார்க்கும் ஸ்வீடனும் ஓர்சுண்ட் (Oresund Bridge) பாலத்தால் நெடுஞ்சாலை,இரயில் மார்கங்களில் இணைத்திருக்கிறார்கள்.
நம் இந்தியா இணந்துள்ள "SAARC" அமைப்பும், ஆசிய நாடுகளின் அவலநிலையும், அரசியல் குழாயடி சண்டைகளும் நினைவுக்கு வந்து இம்சித்தது.
கோபன்ஹேகன் தெரு டாக்ஸிகள் கூட "மெர்செடிஸ் பென்ஸ்" தான். 20கி.மீ தூரத்திற்கு 300 டேனிஷ் குரொனர் (6குரோனர்=1 அமெ.டாலர்) (2500ரூ) இந்திய Vs டேனிஷ் Standard of Livingல் உள்ள Contrastஅப்பட்டமாகத் தெரிகிறது.
டென்மார்க்கில் Carlsberg பீர், பால்பொருட்கள், டேனிஷ் பேஸ்ட்ரி, டேனிஷ் பட்டர்குக்கீஸ், போன்றவை மிக பாப்புலரானவை.
கடல் வணிகம்தான் டென்மார்க்கியரது பண்டைய தொழில். இன்றைக்கும் Mersk என்ற நிறுவனம் தன் கடல் சரக்குப் போக்குவரத்தில் உலகின் முன்னோடி.
நான் பார்த்த அளவில் பெரும்பாலான ஐரோப்பிய நகரின் நடுவில் ஓடுகின்ற நதிகளில் இன்றளவும் தூய்மையுடன் சல சலத்து ஓடுகிறது நீர். எனக்குத் தமிழகத் தலை நகரமான சென்னை நகரில் ஓடி(!)க் கொண்டிருக்கும் கூவமும், அடையாறு நதிகளின் "நறுமணக்கும்" உண்மை நினைவில் வந்தது!
கடந்த 40ஆண்டுகளில் தமிழகத்தில் அரசியல் மட்டும் சாக்கடையாகவில்லை, சாக்கடை அரசியல் நம் தலைநகர் நதிகளையும் சாக்கடையாக்கிவிட்டது.
எல்லா வளமும் இருந்தும் அரசியல்வாதிகளால் இந்தியா மட்டும் infrastructure developmentல் உலக அரங்கில் இன்னும் dwarf ஆகவே வைக்கப்பட்டுள்ளது. வேறென்ன செய்யமிடியும் என்னால்? குளிரான கோபன்ஹேகனில் அக்னிப்பெருமூச்சு விட்டு எனது (அதி) குளிர் ஆடைப் பற்றாக்குறையைச் சமாளித்தேன்.
அன்புடன்,
ஹரிஹரன்.
5 comments:
வெளிநாடு செல்லும் அனைவரிடமும் இந்தியாவை கேவலப்படுத்தும் ஒரு மனோபாவம் வந்து ஒட்டிக்கொள்வதற்க்கு காரணம் என்ன ஹரி..
நம்மூரு கேவலம்...நம்மூரு சாக்கடை...என்று...
எவ்வளவு நாள் சொல்லுவீங்க...மழைபெய்து சற்று நேரம் கழிந்து வரும் சுகமான மண்வாசனை அங்கு வருமா ? அம்மா சூடாக இட்டிலி / தேங்காய் சட்னி வைப்பாங்களே..அதை கே டிவியில் ஏதாவது படம் பார்த்துக்கொண்டே கணக்கில்லாமல் உள்ளே தள்ளும் சுகம் கிடைக்குமா ? ரோட்டோர டீக்கடையில் தினத்தந்தி பேப்பரோடு தம்மு கட்டும் இன்பம்தான் கிடைக்குமா...
என்னாடு என்றாலும் அது நம்நாடு போலாகுமா...
ரவி,
இது என் தாய்நாட்டை கேவலப்படுத்தும் மனோபாவத்தில் எழுதப்பட்டதல்ல.
நம்மூர் Infrastructure inferiority பிற நாடுகள் செல்கையில் எனக்கேற்பட்ட ஆதங்கம். அவ்வளவே.
நீங்கள் சொல்லும் இதர நம்மூர் விஷயங்கள் ரசிப்பானவைகளே!
உணர்வுபூர்வமானவற்றிற்கு நம் நாடு நம்நாடுதான். வெளிநாடு வெளிநாடுதான்.
எனது அடுத்த பதிவில் அங்கு வருகிறேன்.
//I was told in denmark income tax is very high, is it true.//
Income tax is about 45% yet denmark is not the highest. Sweden where tax brden is upto 55%
//What is the political system//
Welcome CT. இங்குள்ள அரசியல் முறை Democratic Monarchy. மக்கள் அரச குடும்பத்தவரை மரியாதையுடனும், மதிப்புடனும் பார்க்கிறார்கள்
//About indian infrastructure, some of the states are taking really good initiative and am sure Tamil nadu will BE ABLE TO go in that direction when they stop running the government as a CHARITABLE ORGANISATION.
//
Let Tamilnadu Govt run some departments a CHARITABLE ORGANISATION like education ministry ensuring any level of education to ALL students who wants to pursue education. Education is the key for us to prosper in the coming years.
Not the free TVs and other a-z freebies
//உங்க பதிவை 'தேசி பண்டிட்'லே லிங்க் செஞ்சிருக்கேன்.//
துளசியக்கா,
தங்கள் பாசத்திற்கும், அக்கறைக்கும்
நன்றிகள்.
நல்ல பதிவு ஹரிஹரன்
எந்நாட்டிற்கு சென்றாலும் நம் நாட்டை ஒப்பிட்டுப் பார்க்கும் பலஹீனம் எனக்கும் உண்டு. நம் நாடு அப்படி இல்லையே என்கிற ஆற்றாமை நமக்கு வருவதுபோல் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு வரும் நாள் எந்நாளோ அந்நாள் நமக்கு பொன்னாள்
Post a Comment