(20) ஹரிஹரனின் லெபனான் அனுபவங்கள்
லெபனான், பெய்ரூட் பத்தி நான் பார்த்ததை கொஞ்சம் மெல்ல எழுதலாம்னு இருந்தேன். இப்ப என்ன சொல்லி எழுதுனாலும் அடுத்த தரம் போனால் அந்த இடங்கள், பெய்ரூட் நகரமே இருக்குமா? அப்பிடின்ற சூழல் ஆயிடுச்சி! அதனால இந்தப் பதிவு.
சரி. பெய்ரூட் நகரில் தற்போது நடக்கும் இஸ்ரேலிய வெடி வெடிப்பு முடிந்த பின்பும் பொதுவா எதெல்லாம் லெபனானில் மாறாமல் இருக்கும் என்று ( நான் நம்புவதை) வேண்டுமானால் கொஞ்சம் பார்க்கலாம்:
1. பெய்ரூட் நகரில் கடல் நடுவே அமைந்த புறாப்பாறை (Pigeon Rock) என்ற பண்டையகாலத்தைய தற்கொலைப்பாறை!
http://img88.imageshack.us/my.php?image=lebanonrockmp6.jpg
2. நகரின் நடுவில் அப்போதும், இப்போதும், எப்போதும் தென்படும் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த கட்டிடங்கள்.
3. ஐரோப்பிய + அராபிய கலாச்சாரம் இணைந்த நகர வணிக மையம் .
4. யார் ஹெஸ்பொல்லாக்காரர்னு தெரியாத civic Homogenity.
5. குளிர்காலத்தில் மலைகளில் பனிச்சறுக்குஆடும் வித்தியாசமான ஒரே மத்திய கிழக்கு அராபியநாடு என்பதில் ஸ்பெஷலாய் கர்விக்கும் லெபனான் ஆசாமி.
6. பளிச்சென்ற துறு துறுப்புடன் காணப்படும் லெபனீஸ் இளம் பெண்கள்.
மற்றபடி நடப்பதைப் பார்த்தால் இன்னும் பத்து நாளில் இருக்கிற கொஞ்ச நஞ்சமெல்லாம் காணாமல் போய்விடும் மாதிரிதான் தெரிகிறது.
பொதுவாக அயல் நாடுகள் போகும் போது அங்கிருக்கும் "Infra Structure" ஐ நம்மூர் Infra Structure உடன் ஒப்பீடு செய்யும் எண்ணம் கண்டிப்பாக எனக்கு வரும். லெபனானில் இந்தியன் பெருமூச்சு விடுமளவுக்கு ஏதும் பெரிதாக இல்லை.
கொஞ்சம் நிம்மதி மூச்சு வேறு அரசியல்/தீவிரவாத/சமூக ஒப்பீட்டால் வந்தது!
அப்பாடா இந்தியாவில் ஹெஸ்போலா மாதிரியான தொழில் முறைத் தீவிரவாதக் குழுக்களில் இருந்து MP, Minister என்று அரசியல் வாதிகள் இடம் பெறவில்லை.
அதுசரி நம்மூர் அரசியல்வாதிகளே ஜனநாயகமான தீவிரவாதிகள் தானே!
அன்புடன்,
ஹரிஹரன்.
3 comments:
சார்,
கொஞ்சம் "படம்" போட்டீங்கன்னா நல்லா இருக்கும்...
ஷங்கர்,
ப்ளாக்கர் தகறாறு போட்டோ அப்லோடு செய்ய முடியவில்லை.
போலியார் தொல்லை அவரது மஞ்சள் பக்கங்களில் பயன்படுத்தி படுத்துவார் என்பதாலும்தான் தவிர்க்கிறேன்.
போலியார் தொல்லை அவரது மஞ்சள் பக்கங்களில் பயன்படுத்தி படுத்துவார் என்பதாலும்தான் தவிர்க்கிறேன். //
உங்களுடைய ஃபோட்டாவை தவிர்த்து நீங்கள் செல்லும் இடங்களின் புகைப்படங்களை பிரசுரியுங்கள்..
அப்போதுதான் படிப்பதற்கு சுவையாக இருக்கும்..
மற்றபடி உங்களுடைய எழுத்து நடை நன்றாக இருக்கிறது..
தொடர்ந்து எழுதுங்கள்..
Post a Comment