Saturday, July 22, 2006

(21) இனியேனும் அக்கறையாக "விதி"செய்வோம்

இதுவரையில் என் பயண அனுபவங்கள், எனது பார்வையில் திரா'விட'அரசியல் திறனாய்வுப் பதிவுகளுக்கு இடையில் மாறுதலுக்காக இந்தப் பதிவு.


பொதுவா நான் சாப்பிட்ட இலை / தட்டு சாப்பிடும் முன்பாக இருந்த அதே நிலையில் சாப்பிட்டு முடித்த பின்பும் கிட்டத்தட்ட இருக்கும்.


நீ எப்டி சாப்பிட்டா எனக்கென்ன? அப்பிடின்றீங்க... வேறுவழி உங்களுக்கில்லை! படித்தே ஆகவேண்டும்:-)))

 • எங்கோ ஒரு ஊரில் முகம் தெரியாத விவசாயி தன் கடின உழைப்பில் விளைவிக்கும் நெற்பயிர் நாற்றாக இருந்த போது அழுகி அழியாமல்,
 • மாற்றி நடவு செய்தபோது மிதிபட்டு அழியாமல்,
 • வளரும் போது பூச்சி தாக்கி அழியாமல்,
 • அறுவடை செய்யும் போது கீழே விழுந்து வீணாகமல்,
 • களத்து மேட்டில் போரடிக்கும் போது (டிராக்டர்) அழுத்ததில் நசுங்கிப் பாழாகாமல்,
 • நெல்லாக மூட்டைகட்டப்பட்டு சேமிப்புக்களத்தில் சிந்திப்போகாமல்,
 • ரைஸ்மில்லுக்கு மீண்டும் பயணிக்கும் போது போக்குவரத்திலே காணாமல் போகாமல்,
 • மீண்டும் சாக்குப்பைகளில் ரீ-பேக்கிங் செய்யப்படும் போது சிந்திவிடாமல்,
 • ஏற்றுமதிக்கான விமான, கப்பல் ப்யணத்தில் சரக்குச்சோதனையில் இலக்கை அடையுமுன் வெளியேறிவிடாமல்,
 • இறக்குமதி தளத்தில் சரக்குக் கையாள்தலில் சிந்திச் சிதறிவிடாமல்,
 • குவைத் "கல்ப்-மார்ட்டில்" விற்பனைக்கான இடம்வரை வரும்போது தன் வாழ்வைத் தவறவிடாமல்,
 • ஐந்தரை தினார் தந்து 20கிலோ மூடையாக எனது மிட்சுபிஷி காலன்டின் டிக்கியில் இறைந்துபோய்விடாமல்,
 • என் மனைவி சமைக்க ஆளாக்குப்படியில் அளந்தெடுத்துக் கழுவிடும்போது சமையலறை 'சிங்க்கில்' நீரோடு அடித்துச் சென்றுவிடாமல்,
 • சமைக்கப்ப்டும் குக்கரில் வீணே உதவாது ஒட்டிக்கொண்டு விடாமல்,


இத்தனை தடைகள் தாண்டி என்னிடம் வந்து சாம்பார் சாதமாக, தயிர் சாதமாக, புலவ்வாக என் தட்டை / இலையை அடையும் அந்த அரிசிக்குக் குறைந்தபட்சம்

 • தட்டில் இருந்து கீழே விழுந்து பாழாகிவிடாமல்,
 • கையிலே ஒட்டிக் கொண்டு கழுவும் போது கழிவோடைக்குள் வீழ்ந்து வீணாகாமல்

என்னிடம் வரும் அரிசிக்கு என்னால் அதன் "விதி" மாறிவிடாமல் இருக்க என்னாலான முயற்சிகளைச் செய்கிறேன்.


அரிசியாக அவதாரமெடுத்தபின் இலக்கை அடைய அரிசிக்கே இவ்வளவு 'விதி'ப்பயன் இருக்கிறது.

நானும் இந்த அரிசி மாதிரி தான்.

அரிசி அதன் இலக்கை அடைய முடியாது போகக் காரணங்களான அனைத்தும் எனக்கும் இருந்தன.

இறை அருளோடு இணைந்த எனது காலத்திலான முயற்சிகள் எனை எனது இலக்கை நோக்கிச் செலுத்துகின்றன.

பரஸ்பர interactions களால் பின்னிப் பிணந்திருக்கும் இன்றைய வாழ்வில், நம் விதி நம்மையும் தாண்டிய சிலரால் செய்யப்படுகிறது.

நாம் வேறு சில பிறரின் "விதிப்பயன்" செய்கிறோம்.

நம்மிடம் வருகின்றவற்றின் "விதிகளை" சிறப்போடு வீணாக்குதல் இல்லாமல் செய்தாலே நம் அனைவர் விதியும் மிகச் சரியாகவே செய்யப்பட்டதாகும்.

அன்புடன்,

ஹரிஹரன்

4 comments:

கீதா சாம்பசிவம் said...

ரொம்ப நாள் கழிச்சு உங்க பதிவு திறக்க வந்தது. அருமையான பதிவு. இதுக்கு இது வரை ஒரு பின்னூட்டம் கூட இல்லைங்கறது வருத்தமா இருக்கு. நாங்களும் கூடியவரையில் உங்களைப் போல்தான் விரயம் ஆகாமல் சமைப்போம், சாப்பிடுவோம். இதனால் கஞ்சம் என்ற பெயர் எல்லாம் வாங்கி விட்டேன். ஆனாலும் மாற முடியவில்லை.

Hariharan # 26491540 said...

கீதா,

பாரட்டுக்கு நன்றி. வீணாக்குதல் தவிர்த்தல் கஞ்சம் ஆகாது. அது அக்கறை எனவே எடுத்துக் கொள்ளப் படவேண்டும்.


பதிவை வாசிக்கும் வலைஞர்கள் பின்னூட்டக் கஞ்சம் செய்கிறார்கள் என்றபோதும் 30 நாட்களில் 22 பதிவுகள் பதிந்திருக்கிறேன். எதையும் தாங்கும் இதயம் எனக்கு எப்போதும் உண்டு:-)))

நன்மனம் said...

ஹரிஹரன், இதே மாதிரி எண்ணம் எனக்கும் இருந்தது உண்டு. இப்ப இருக்கற ஊருக்கு எப்படி வந்தோம்னு நெனச்சா இன்னிக்கு கூட ஆச்சரியமா இருக்கும்.

Hariharan # 26491540 said...

வாங்க நன்மனம்.

நேற்று எனக்கு 100மீ தூரத்தில் முன் சென்ற கார் ஒரே நொடியில் ஹைவேஸ் நடுவிலான பிரிப்புச்சுவரில் தட்டி ஐந்தாருமுறை சம்மர்ஸால்ட் அடித்து, நல்லவேளை உள்ளிருந்த நவர் சீட் பெல்ட் போட்டு இருந்ததில் சட்னியாகமல் படுகாயத்தோடு உயிர் பிழைத்தார்.

ஐந்து நொடிகளில் அவர் வாழ்க்கையே மாறிவிட்டது. விதிப்பயன் அன்றி என்ன?

கண்டிப்பா அமைதியான மனம் எல்லோருக்கும் உண்டு. நல்லதை கூடுதலாக மெனக்கெட்டு அதிகரித்து அல்லதைத் தவிர்த்தால் எல்லாம் நலமே.

அதுசரி எப்படியிருக்கு அஸர்பைஜான் நாடு? எழுதுங்கள் உங்கள் வலைப்பூவில்.