(6) ஹரிஹரனின் சுவிஸ் பயண அனுபவங்கள்-2
ஒரு சுவாரசியமான விஷயம். சுவிஸ் நாட்டிற்கென்று தனி மொழி கிடையாது. வடக்கில் ஜெர்மானிய ஜெர்மனும், தெற்கில் இத்தாலி மொழியும், மேற்கில் ஃப்ரஞ்சு மொழியும் பேசுகின்றனர். சில மாறுதல்களுடனான "சுவிஸ் ஜெர்மன்" என்பது அஃபிஷியல் அரசு மொழியாக பயன்படுத்துகின்றனர்.
சுவிஸ் முழுக்க, ஆங்காங்கே புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களால் அவர்களுக்கே உரித்தான உச்சரிப்பு, சொல்லாடல்களுடன் தமிழோசையும் கேட்கமுடிகிறது.
ஜூரிச் நகரம் தான் பெரியது. சுவிஸ் நாட்டின் வணிக நகரம். லிட்டில் பிக் சிட்டி... 15-20 நிமிட வேக நடையில் நகர எல்லைகள் வந்துவிடும். பெர்ன் தலை நகரம் என்றாலும் ஜெனீவா சர்வடதேச நிகழ்வுகளுக்கும், நுட்பமான கைக்கட்காரங்களுக்கும் புகழ் பெற்ற நகரம்.
சுவிஸ் நாட்டில் உலோகக் கனிமங்கள் கிடைப்பதில்லை. தங்கத்தாது கிடையவே கிடையாது. பின் எப்படி சுவிஸ் தங்கக்கட்டிகள் என்று தானே யோசிக்கிறீர்கள். வருகிறேன்...
சரி. சுவிஸ் நாட்டு உலகளாவிய வங்கித் தொழில் பற்றப் பார்க்கலாம். இந்த வங்கிப் பொருளாதாரத்திற்கு வரலாற்றைத் தொட்டுச்செல்லவேண்டியது அவசியம்.
1940களில் ஐரோப்பா முழுவதும் இருந்த யூதர்கள் இரண்டாம் உலகப் போர் சமயத்தில், ஹிட்லரால் விரட்டி விரட்டி கொல்லப்பட்டனர், அனைத்து ஐரோப்பிய நாடுகளும் சார்பு நிலையெடுத்துப் போரில் ஈடுபட்டிருந்த நிலையில், சுவிஸ் நாடு சாரா நிலை (ந்யூட்ரல்) எடுத்தது, பெரும் யூதப் பணக்காரர்கள் முதல், பெரும்பாலான யூதர்கள் அவர்களது பெரும்பணம், தங்கம் என அனைத்தையும் சுவிஸ் வங்கிக் கணக்குகளில் போட்டு வைத்தனர்.
கிட்டத்தட்ட 70 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டனர். நாஜிக்கள் அவர்களது பணம், பொருள் அனைத்தையும் கொள்ளையடித்தனர். அவைகளை உலகச் சந்தையில் பண்டமாற்றி போர்ச் செலவுகளை சமாளிக்க ஒரு வழி நாஜிக்களுக்குத் தேவைப்பட்டது. சுவிஸ் வங்கிகள் "இச்சேவை"யைச் செய்து தந்தன.
இரண்டாம் உலகப்போரில் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான ஏராளமான யூதர்கள் பணம் , தங்கம் சுவிஸ் வங்கிகளின் சொத்தாகிப்போனது.
இது பழைய உண்மை.
ஆசிய, ஆப்ரிக்க நாடுகள் "Infra Structure"-ல் இவ்வளவுக்குப் பின் தங்கியிருப்பதற்கு பெரிய அளவில் சுவிஸ் வங்கிகளின் "Intentional Account Secrecy Policy" காரணம்.
நமது இந்திய ஐந்தாண்டுத்திட்டங்களில் முதல் ஐந்து திட்டங்கள் தவிர்த்து அடுத்து வந்த எட்டு ஐந்தாண்டுத்திட்டங்கள், போஃபார்ஸ் உள்ளிட்ட இராணுவ தளவாடத் திட்டங்கள் அனைத்திலும் செய்யப்பட்ட ஊழல் பணம் பெரும்பாலும் இந்த சுவிஸ் வங்கிகளில் நமது அரசியல்வாதிகளால் முடக்கப்பட்டன.
ஆண்டுக்குப் பல ஆயிரம் கோடி எனப் பலநூறாயிரம் கோடி இந்தியத் திட்டங்களுக்கான நம் பணத்தில் சுவிஸ் நாடு "Modern Infrastructure"அமைத்து வசதியாக உள்ளது.
ஒரு Official Informal Dinner-ன் போது நானும் , என்னுடன் வந்த நைஜீரிய நாட்டு நண்பனும் சுவிஸ் நாட்டு Host-டிடம் சுவிஸ் வங்கிகளின் "Intentional Account Secrecy Policy" பற்றிச் சில அன்ஈஸி கேள்விகள் கேட்டு விட்டு "you live better life with Our money " என்று சொல்லிப் பொருமிவிட்டு வந்தேன்.
வேறென்ன செய்ய முடியும் நம் அழுக்கு அரசியல்வாதிகளை என்னால்! இவர்களது ஊழலால் நம் பெருநகரங்கள் கூட வசதிகளற்ற அழுக்கு நரகங்களகவேதானே இன்னும் இருக்கின்றன.
சுவிஸ் மாதிரி Infrastructure கட்டமைப்பு நம் இந்திய நகரங்களுக்கு, சென்னைக்கு வர இன்னும் எத்தனை "ஐந்தாண்டுத்திட்டங்கள்" தீட்ட வேண்டுமோ என்ற அயற்சிதான் வந்தது!
அன்புடன்
ஹரிஹரன்
8 comments:
நல்ல இருக்குங்க!
வாங்க ஜீவா. அடிக்கடி வந்து கருத்தும் சொல்லிப் போகவும்.
அன்புடன்,
ஹரிஹரன்
நவீன காலத்து நீரோ மன்னர்களோ...?
ஹரி
எனக்கு தெரிந்த ஒரே வழி.பல துறைகளை தனியார் மயப்படுத்துதல் போலே,நகரங்கள் மற்றும் கிராமங்களை மேம்படுத்தும் வேலையையும் தனியாரிடமே விட்டுவிடவேண்டும்.
அப்ப அரசாங்கத்தின் வேலை என்ன?இப்பவும் போல அப்படியே இருக்கவேண்டியது தான்.:-))
வாங்க தருமி சார். தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
//எனக்கு தெரிந்த ஒரே வழி.பல துறைகளை தனியார் மயப்படுத்துதல் போலே,நகரங்கள் மற்றும் கிராமங்களை மேம்படுத்தும் வேலையையும் தனியாரிடமே விட்டுவிடவேண்டும்.//
குமார் எல்&டி மாதிரி எத்தனையோ திறமையான இந்திய தனியார் நிறுவனங்கள் உள்ளன.
//அப்ப அரசாங்கத்தின் வேலை என்ன?இப்பவும் போல அப்படியே இருக்கவேண்டியது தான்.//
அரசியல் தலையீடும், bureaucracyம் தான் நம்மை இன்னும் அழுக்கு, ஏழை நாடாக வைத்திருக்கிறது.
அரசாங்கம் அது பாட்டுக்கு சட்டங்கள் போட்டுக்கிட்டு இருக்கட்டும். அப்பத்தானே தடி எடுத்தவன் தண்டல்காரனா
ஆக முடியும்.
உழைக்காமலேயே சம்பாரிக்கறவங்களுக்கு ஒரு முடிவு கட்டுனாத்தான் வேலையே நடக்கும்.
//அரசாங்கம் அது பாட்டுக்கு சட்டங்கள் போட்டுக்கிட்டு இருக்கட்டும். அப்பத்தானே தடி எடுத்தவன் தண்டல்காரனா
ஆக முடியும்.//
துளசிக்கா, வாங்க. வெளியே வேற நாட்டு நகரங்களுக்குப் போய்ப் பார்த்து, நம் தமிழ்நாட்டு அரசு பஸ்ஸில் கீழே ரோடு தெரியப் பயணிக்க நேர்கையில் இயலாமையில் ரொம்பக் கோபம் வரும்.
//உழைக்காமலேயே சம்பாரிக்கறவங்களுக்கு ஒரு முடிவு கட்டுனாத்தான் வேலையே நடக்கும்//
எங்கக்கா ..ஓசியில டிவி, ஓசி அது, ஓசியில இதுன்னு மக்களை சிந்திக்க எங்க விடுறாங்க! ஆண்டவன் தான் நேரா இறங்கி வரணும்!
Post a Comment