Monday, July 17, 2006

(18) பாகம்-3 ஏமாற்றும் அரசியல் திராவிடப் "பெத்தடின்"

எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் நம் தமிழ் நாட்டிலே... சொந்த நாட்டிலே...

இன்னும் எத்தனைக் காலம் தான் திரா'விட'ப் பெத்தடின் ஊசி போட்டு ஏமாற்றுவார்...


பட்டியல்-1


 1. நல்ல ஆரோக்கியமான உடும்பு -1
 2. உறுதியான அறுந்துவிடாத கயிறு-100 முழம்
 3. சிறுகத்தி -1
 4. நெம்புகோல் எம்பார் -1
 5. வழுக்கும் விளக்கு எண்ணைய் -1 பாட்டில்
 6. முகம்/கண் மறைக்கும் முகமூடி-1
பட்டியல்-2


 1. க்ரோம்-வனடியம் ஹைஸ்பீடு ஆக்ஸாபிளேடு-2
 2. செல்போன் காமிராவுடன் -1
 3. ஒத்த எண்ணமுள்ள கூட்டாளி-1
 4. சிறுகத்தி -1
 5. நெம்புகோல் எம்பார் -1
 6. தப்பியோட வாகனம்-1

என்ன இது? ஒரே பட்டியல் மயம்? குழப்பமா இருக்கா? இதோ விளக்கிடறேன்

பட்டியல் 1 இது தமிழ்நாட்டில் 70-80 ஆண்டுகள் முன்பாக (அரசியல் திரா'விட' இயக்கம் தோன்றும் வரைக்கும்) நம் தமிழ்ச் சமூகத்தில் தொழில் முறையில் திருட்டைச் செய்து பிழைப்பை நடத்திய திருவாளர் தொழில்முறைத் திருடரின் "டூல் கிட்."

பட்டியல்-2 இது நம் தமிழகத்தில், சென்னையில், புறநகர்களில் கைவரிசையைக் காட்டும் ஆந்திர, பீகார்,ராஜஸ்தான் போன்ற வெளிமாநில முகமூடிக் கொள்ளையர்கள், தொழில் முறையில் கொள்ளையடிப்பைச் செய்து பிழைப்பை நடத்திய தொழில்முறைத் திருடரின் "டூல் கிட்".

சரி. நம் தமிழ்நாட்டில் நாற்பதாண்டுகளாக ஆட்சியில் இருந்து கொள்ளையடிக்கும் நம் அரசியல் திரா'விட' இயக்கங்கள், தலைவர்கள் வைத்திருக்கும் டூல் கிட் பட்டியல் இதோ:

பட்டியல்-3

 1. ஆரியரை எதிர்ப்பது (அப்படி யாருமே கிடையாது)
 2. (ஹிந்து)மத எதிர்ப்பு, (ஹிந்து)தெய்வ மறுப்பு + அவமதிப்பு
 3. வெட்டி வாய்ச்சவடால் + நோன்புக் கஞ்சி குடிப்பு
 4. தமிழ், இன,மானக் காவல் (999 ஆண்டுகள்)
 5. இலங்கைத் தமிழர் பிரச்னை
 6. சாதி ஒழிப்பு (:-))) சிரிப்பு தாளலீங்க)
 7. பகுத்து அறியும் பகுத்தறிவு
 8. காவிரிப் பிரச்சினை

நம் தமிழக அரசியல் திரா'விட' இயக்கங்கள், சீரிய தலைவர்களால் சத்தமில்லாம பெரிய சாதனை சாதிச்சிருக்கோம்ங்க! தொழில் ரீதியிலான திருடுதல்-ங்கிற தொழிலே காணாமப் போயிடுச்சுங்க! கன்னம் வைத்துத் திருடும் அந்தத் துறையில் பாண்டித்தியம் உள்ள தமிழர் பெரியார்களும், அவர் பாசறையில் பயின்ற எல்லோரும் ஆட்சிக்கு வந்துட்டாங்க.

இப்ப எல்லாம் நம் தமிழ்நாட்டுத் தொழில் முறைத் திருடர் பொருளா, நகையாத் திருடுறதை ஆந்திர, பீகார், ராஜஸ்தான் போன்ற வெளி மாநிலத் திருடர்க்கு 'அவுட்ஸோர்ஸிங்' விட்டுட்டாருங்க!

ஒத்துக்க வேண்டிய உண்மை தானுங்களே! நம் தமிழக அரசியல் திரா'விட' இயக்கங்களோட தனிச் சாதனையாச்சே இது!

பி.கு.1

நானும் ரொம்பக் கவனமா சாதனை செய்தவர்களை திருடர்-ன்னு மரியாதை விகுதியான் 'ஆர்'விகுதி சேர்த்துச் சொல்லியிருக்கேங்க!

பி.கு-2

சாதனை செய்தவர்களை அவன், இவன்னு பேசுனா தெய்வக் குத்தம் வந்துரும்னு பகுத்தறிவோட "மஞ்சள் துண்டுச் சாமியார் சொல்றாருங்கோ!

அன்புடன்,

ஹரிஹரன்


19 comments:

குழலி / Kuzhali said...

அடேடே எதுனா நல்ல அரசியல் விமர்சனம் இருக்கும்னு வந்து பார்த்தேன், படிச்ச பொறவு தான் தெரியுது இதுக்கு பேசாம வந்தே இருக்க வேணாம் போல :-)

Hariharan # 26491540 said...

வாருங்கள் குழலி.

முதன்முறை வந்ததற்கும், படித்துப் பின்னூட்டமிட்டதற்கும்.

"நல்ல" அரசியலுக்காக வேண்டி எனது விமர்சனப் பதிவுகள் வரும் நாட்களில் இடுவேன்.

CaCo said...

இந்து "தெய்வகளின்" நடு நிலைமையைத்தான் இன்று தஞ்சை கோயிலினுள் பார்க்கிறோமே.
பெரியார் சொன்னது மீண்டும் நிரூபணம்.

CaCo - Comments and Comments Only

Hariharan # 26491540 said...

Caco,

சிதம்பர சர்ச்சையை தஞ்சை என்று குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன்.

ஆண்டுதோறும் கண்டதேவியில் ஏன் நம் தமிழர் அனவரும் வடம் கூடப் பிடித்து தேர் இழுக்க முடியவில்லை திரு. Caco அவர்களே?

பெரியார் சொன்னது சிதம்பரம் கோவிலுக்கும் தீக்ஷிதர்களுக்கும் தானா?
கண்டதேவிக்கு "கன்செஷனா'?

CaCo said...

கண்டதேவி ஒரு கேவல நிகழ்வு.
ஆனால் அதற்கு பெரியார் எப்படி பொறுப்பாவார்? ஒன்னும் புரியவில்லை.
வருண/சாதி தருமத்தை போதிக்கும் இந்து மதம் வேண்டுமானால் காரணமாக இருக்கலாம்.
தமிழகத்தில் உள்ள அநியாயங்களையெல்லாம் காட்டி அதையெல்லாம் நமது சிதம்பரம் கோவிலுக்கும் புகுத்த வேண்டுமா? நேர்மையாக பதில் சொல்லுங்கள்.
ஒரு தவறைக் காட்டி மற்றொன்றை நியாயப்படுத்தாதீர்கள்.

Hariharan # 26491540 said...

//வருண/சாதி தருமத்தை போதிக்கும் இந்து மதம் வேண்டுமானால் காரணமாக இருக்கலாம்.//

திரு. Caco அவர்களே,

வருண சாதி தருமம் இந்துமதம் என்று முடிவு செய்துவிட்டீர்கள். இது cofee-tofee fight மாதிரி. உங்கள் முடிவு. அதை விடுங்கள்.

//கண்டதேவி ஒரு கேவல நிகழ்வு.//

நன்றி. நானும் அப்படியே ஒத்துக்கொள்கிறேன்.


//தமிழகத்தில் உள்ள அநியாயங்களையெல்லாம் காட்டி அதையெல்லாம் நமது சிதம்பரம் கோவிலுக்கும் புகுத்த வேண்டுமா?//

கண்டிப்பாகக் கூடாது. அதே நேரம் சில அரசு நிர்வகிக்கும் கோவில்களில் பல நூறு ஆண்டுகளாக மேலாடை ஆண்கள் கழற்றிச் செல்லும் நியதி மாதிரியான நியதியாயிருக்கலாம்.
அது அவசியமானதா/புத்திசாலித்தனமானதா என்று நான் என்னளவில் எனர்ஜியை விரயம் செய்வதில்லை.

மேற்படியாக தமிழகச் செய்தி ஊடகங்கள் அனைத்தும் அரசியல் சார்புடையவை.

பர பரப்புக்காக எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் சர்குலேஷன் /டி.ஆர்.பி ரேட்டிங்குக்காக
எதையும் செய்பவர்கள்.

CaCo said...

1) //வருண சாதி தருமம் இந்துமதம் என்று முடிவு செய்துவிட்டீர்கள்//
ஹிஹிஹி
அப்புறம் ஏன் மற்ற இனத்தவர் பூசாரி ஆவதற்கு இத்தனை எதிர்ப்பு?
2) சட்டையை கழட்ட சொல்வது நியதி.
ஒத்துக்கொள்கிறேன். தமிழை தடுப்பது
ஒரு மொழியினருக்கு எதிரான discrimination. புரிந்து கொள்ளுங்கள்.
3) நியதி என்றொரு வார்த்தை வைத்து
தப்பிக்க வேண்டாம். Discriminate செய்யும் இந்த நியதிகள் யாரால், ஏன்
ஏற்படுத்தப்பட்டன?

Hariharan # 26491540 said...

//அப்புறம் ஏன் மற்ற இனத்தவர் பூசாரி ஆவதற்கு இத்தனை எதிர்ப்பு?//

எதிர்ப்பு இறை மறுப்போர், அவமதிப்போர் சொல்வதனால் தான். இந்து மதக் கடவுளர்களை அவமதிப்போர்க்கு யார் பூசாரி என அறுதியிடும் எந்த தார்மீக உரிமையும் இல்லாத உண்மையால்.

ஆகமமத்தை கற்றுக்கொண்டு தேவைப்படும் உணவு,பிர ஒழுக்கக் கட்டுப்பாட்டு நியதிகளைப் பின்பற்றினால் கடவுள் நம்பிக்கையுள்ள இனத்தவர் அர்ச்சகராகலாம்.

//2) சட்டையை கழட்ட சொல்வது நியதி.ஒத்துக்கொள்கிறேன்.
தமிழை தடுப்பது
ஒரு மொழியினருக்கு எதிரான discrimination. புரிந்து கொள்ளுங்கள்.

சிதம்பரத்தில் நானறிந்த வரையில் தமிழ் மொழி எங்கே தடுக்கப்பட்டது. திருவாசகத்தை தீக்ஷிதர்கள்தான் பாடவேண்டும் என்பது தானே சர்ச்சை?! திருவாசகம் தமிழ் தானே?

//3) நியதி என்றொரு வார்த்தை வைத்து
தப்பிக்க வேண்டாம். Discriminate செய்யும் இந்த நியதிகள் யாரால், ஏன்
ஏற்படுத்தப்பட்டன? //

நியதிகள் பொதுவானவையாக எங்கே இருக்கிறது? இடம், சூழல், காலம் இவைகளால் விளைந்தவை. எல்லா நியதிகளுக்கும் பின்னால் ஓடவேண்டிய அவசியம் இல்லை.

நியதிக்கான தளங்கள் வேறு இன்றைய அவசர உலகில் இருக்கும் மனோபாவமே வேறு அலாதியான தளம். குழப்பங்கள் பெரும்பாலும் இருவேறு தளத்தில் இருந்து நியதிகளை அணுகுவதால் தான்.

CaCo said...

1) //எதிர்ப்பு இறை மறுப்போர், அவமதிப்போர் சொல்வதனால் தான். //
*அவர்களும்* சொல்கிறார்கள் என்பதுதான் சரி. ஏன், பக்தியுள்ள யாரும் இந்த கேள்வியை கேட்பதில்லையா?
இப்பிரச்சனை வருணத்தின் மற்றுமொரு வெளிப்பாடு.

2)//சிதம்பரத்தில் நானறிந்த வரையில் தமிழ் மொழி எங்கே தடுக்கப்பட்டது. திருவாசகத்தை தீக்ஷிதர்கள்தான் பாடவேண்டும் என்பது தானே சர்ச்சை?! திருவாசகம் தமிழ் தானே?//

இப்பிரச்சனையின் சாரம்சே இதுதான்.
ஏன் தீக்ஷிதர்கள் மட்டுமே பாட வேண்டும்?

3) //நியதிகள் பொதுவானவையாக எங்கே இருக்கிறது? இடம், சூழல், காலம் இவைகளால் விளைந்தவை. //

இந்தக் கோயில் இருக்கும் இடம் - தமிழகம்
சூழல்- சைவம் தழைக்க வைக்க வேண்டிய கோயில்.
ஆனால் இவற்றிற்கு முரணாகத்தானே இருக்கிறது அதன் நியதி?

if you observe, you can find lot of such "நியதி" in Hiduism which form a pattern which is discriminatory.

கோயிலுக்குள் தலித்கள் நுழையவே ஈவேரா அவர்களின் போராட்டம் தேவைப்பட்டதே. "பக்திமான்கள்" அதை தடுக்கத்தானே முயற்சி செய்தனர்?
ஏனப்பா, ஒரு உயர்குடியில் பிறக்காத சாதரண மனிதனுக்கு ஒரு கோயிலினுள் நுழைய, வழிபட இத்தனை பாகுபாடுகள்?

Hariharan # 26491540 said...

//சட்டையை கழட்ட சொல்வது நியதி.
ஒத்துக்கொள்கிறேன்.//

இந்த நியதியை ஒத்துக் கொண்டிருக்கிறீர்கள். சரி.நானறிய விரும்புவது "What is your rationale that makes you to accept this custom as it is?"

CaCo said...

Simple....this rule does not distinguish between different castes.It is applicable to all.

Hariharan # 26491540 said...

//கோயிலுக்குள் தலித்கள் நுழையவே ஈவேரா அவர்களின் போராட்டம் தேவைப்பட்டதே. "பக்திமான்கள்" அதை தடுக்கத்தானே முயற்சி செய்தனர்?
ஏனப்பா, ஒரு உயர்குடியில் பிறக்காத சாதரண மனிதனுக்கு ஒரு கோயிலினுள் நுழைய, வழிபட இத்தனை பாகுபாடுகள்? //

ஈவேரா தமிழகத்தில் செய்யவில்லை. கேரளத்தில் "வைக்கம்" எனும் இடத்தில் சிறு கோவிலில் சுய விளம்பரத்திற்குச் செய்த நிகழ்வு.

மதுரை மீனாஷி கோவிலில் நூறாண்டுகளுக்கு முன்பே வைத்தியநாத ஐயர் திரா'விட சிந்தனை விளம்பரமில்லாமல் கீழ்த்ட்டு மக்களைக் கோவிலுக்குள் பிரவேசிக்கச் சொல்லியிருக்கிறார்.

தமிழகத்தில் ராமானுஜர் திருவரங்கத்தில் பலநூறு ஆண்டுகள் முன்பு ஈவேரா மாதிரி திரா'விட' சிந்தனை ஆட்களுக்கு முன்பே பெரிய புரட்சி விளம்பரமில்லாமல் செய்தனர்.

Hariharan # 26491540 said...

3) //நியதிகள் பொதுவானவையாக எங்கே இருக்கிறது? இடம், சூழல், காலம் இவைகளால் விளைந்தவை. //

இந்தக் கோயில் இருக்கும் இடம் - தமிழகம்
சூழல்- சைவம் தழைக்க வைக்க வேண்டிய கோயில்.
ஆனால் இவற்றிற்கு முரணாகத்தானே இருக்கிறது அதன் நியதி?

if you observe, you can find lot of such "நியதி" in Hiduism which form a pattern which is discriminatory.//

சூழல் - சிறுபான்மை ஆளும் கட்சி வழக்கமான கோவில்,ஹிந்து வழிபாட்டுத்தலங்களை வைத்து திரா'விட' வெறியைத் தூண்டிக் குளிர் காயும் மலிவான திரா'விட' பெத்தடின் ஊசி போடுவதான சூழல்.

சபரிமலை ஐயப்பன் பிரச்சனை, சிதம்பரம் பிரச்சனை, அமர்நாத் பனிலிங்க பிரச்சனை, டாவின்சி கோடு படத்திற்குத் தடை விதித்த காங்கிரஸ் ஆதரவு அரசுகள் இதை எல்லாம் உற்றுப் பாருங்கள் "வாடிகன் ஆசியுடன் இத்தாலிய அன்னையின் செயல்கள் எனப் புரியும்.

இடம்:
ஹிந்துக்கள் புண்பட்டால், இன்பாக்ட் ஹிந்துக்களை ரணப் படுத்துவதே கொள்கையாகக் கொண்ட ஆளும் அரசு டாவின்சி கோடு படத்தை கிறித்தவர் மனம் புண்பட்டுவிடும் என "மதசார்பில்லாமல்" நடுநிலையாக திரா'விட'ப் பகுத்தறிவோடு நடந்து கொள்கின்ற இடம் அறிவாலயம்.

CaCo said...

உங்கள் வாதத்திலேயே பல விஷயங்கள் வெளி வருகின்றனவே:
1) கோயில் சின்னதா பெரியதா என்பதைவிட, அது பெற்று தந்த உரிமை பெரிது. அந்த உரிமை எல்லாக் கோயில்களுக்கும் applicable ஆக இருகிறதே.
2) ராமானுஜர் என்னும் நிஜ பக்தியாளரும் அதை செய்தார்.
உண்மையை சொல்லுங்கள், அவரால் ஒரு ஜாதியில் "உள்" நுழைந்தவர்களை "மற்றவர்கள்" சமமாக நடத்துகிறார்களா/மதிக்கிறார்களா?
3) ஏன் இப்படி ஈவேரா, ராமானுஜம் போன்றோர்கள் புரட்சி செய்து, செய்து
வழிபாட்டு உரிமைகளை பெற வேண்டியதாய் இருகிறது நமது இந்து மதத்தில்?

Hariharan # 26491540 said...

//ஒரு ஜாதியில் "உள்" நுழைந்தவர்களை "மற்றவர்கள்" சமமாக நடத்துகிறார்களா/மதிக்கிறார்களா?//

என்னங்க நீங்க மாட்ரிமோனியலில் "CSI கிறிஸ்தவ நாடார் வகுப்பைச் சேர்ந்த மணமக்கள் தேவை" விளம்பரங்கள் பார்த்ததில்லை?

//ஏன் இப்படி ஈவேரா, ராமானுஜம் போன்றோர்கள் புரட்சி செய்து, செய்து
வழிபாட்டு உரிமைகளை பெற வேண்டியதாய் இருகிறது நமது இந்து மதத்தில்?//

தலித் கிறிச்தவர்கள் (!?) வழிபட தமிழ் சர்ச்சுகள், உயர் சாதி நாடார் கிறிஸ்தவர்கள் வழிபட ஆங்கிலச் சர்ச்சுகள் தமிழகத்தில் பார்த்ததில்லை நீங்கள்?

CaCo said...

நான் சொன்ன வரிகள்:
"தமிழகத்தில் உள்ள அநியாயங்களையெல்லாம் காட்டி அதையெல்லாம் நமது சிதம்பரம் கோவிலுக்கும் புகுத்த வேண்டுமா?"

இதையே இப்படியும் சொல்லலாம்:
"மற்ற மதத்தில் உள்ள அநியாயங்களையெல்லாம் காட்டி அதையெல்லாம் நமது இந்து மதத்திலும் புகுத்த வேண்டுமா?", அப்படியென்றால், இந்து மதத்திற்கென்று தனியான கோட்பாடுகள் இல்லையா?
இந்து மதத்தில் கற்ற பிரிவினைகளை மதம் மாறிய பின்னும், கிறித்துவதில் தொடர்கிறார்கள் என்பதே உண்மை.

Hariharan # 26491540 said...

//"மற்ற மதத்தில் உள்ள அநியாயங்களையெல்லாம் காட்டி அதையெல்லாம் நமது இந்து மதத்திலும் புகுத்த வேண்டுமா?", அப்படியென்றால், இந்து மதத்திற்கென்று தனியான கோட்பாடுகள் இல்லையா?//

திரு.Caco,

நான் தமிழ்நாட்டுச் சமூகத்தில் காணப்படுவதைச் சுட்டினேன். 40ஆண்டு பகுத்தறிவுப் பகலவன்கள் சீரிய திரா'விட'க் கொள்கைகளுடனான ஆட்சியின் பின்பும் தமிழகத்தில் காணப்படும் "கரண்ட் ட்ரெண்டு" இதுதானே? கலப்புத் திருமணம், சீர்திருத்தத் திருமணம் செய்தவர்கள் தாய் பிராமணர்/பிள்ளை/, தந்தை முதலியார்/வன்னியர் என்பதான திருமண விளம்பரங்கள் தருகின்றனர்.


//இந்து மதத்திற்கென்று தனியான கோட்பாடுகள் இல்லையா?//

ஏன் இல்லை. இந்து மதத்தில் சொல்லப்பட்ட வருணப் பிரிவுகளின் உண்மைத்தன்மை யாது? என்று பகுத்தறியும் அறிவற்ற தவறான திரா'விட' நச்சு இயக்கங்களால் இன்று தூற்றப்படும் கோட்பாடுகளைச் சரியாக நல்லவிதமாக கற்றுக் கொள்ள வேண்டும். சின்மயாமிஷன் மாதிரி ஆன்மீக/ சமூகத்தொண்டு இடங்களில் நம் இந்துமதத்தின் உண்மையான கோட்பாடுகள் கற்று அறியலாம், அறிந்தபடி நடக்கவேண்டும்.

//இந்து மதத்தில் கற்ற பிரிவினைகளை மதம் மாறிய பின்னும், கிறித்துவதில் தொடர்கிறார்கள் என்பதே உண்மை. //

உண்மை என்னவெனில் இம்மாதிரி நபர்கள் இந்துமததில் இருந்தபோது இந்து மதக் கோட்பாடுகளைச் சரியாக கற்றுக் கொள்ளவும் இல்லை, சரி கிறிஸ்தவ மதம் மாறிய பின் அதையும் சரியாகப் பின் பற்றுவதில்லை.

CaCo said...

//உண்மை என்னவெனில் இம்மாதிரி நபர்கள் இந்துமததில் இருந்தபோது இந்து மதக் கோட்பாடுகளைச் சரியாக கற்றுக் கொள்ளவும் இல்லை, சரி கிறிஸ்தவ மதம் மாறிய பின் அதையும் சரியாகப் பின் பற்றுவதில்லை. //
சிரிப்புதான் வருகிறது !!
இந்து மதத்தில் எல்லோரும் ஏதேனும் ஒரு ஜாதியில் இருக்கிறார்கள். அப்படியானால் 100 % மக்களும் இந்து மதத்தை புரிந்துகொள்ளவில்லையா?
கண்மூடித்தனமாக எதிர்ப்பது/ஆதரிப்பதென்றால் விவாதம் செய்வது வீண்.

Hariharan # 26491540 said...

//இந்து மதத்தில் எல்லோரும் ஏதேனும் ஒரு ஜாதியில் இருக்கிறார்கள். அப்படியானால் 100 % மக்களும் இந்து மதத்தை புரிந்துகொள்ளவில்லையா?

100 % மக்களும் இந்து மதத்தை புரிந்துகொள்ளவில்லை - அப்படி நான் எங்கே சொன்னேன்?

மதம் மாறிய நபர்களில் வேண்டுமானால் 100% புரிந்து கொள்ளாதது என்பது சரியானது.

//கண்மூடித்தனமாக எதிர்ப்பது/ஆதரிப்பதென்றால் விவாதம் செய்வது வீண். //

கண்டிப்பாக. ஹிந்துக்கள் மட்டும் தான் தமது மதக் கோட்பாடுகள், வேதம், உபநிஷத்துகள், பகவத்கீதை என எதுவும் முறையாகக் கற்பதே வாழ்நாளில் மிகக் குறைவு.

வெறுமனே கட்டுக்குடுமியையும், பூணூலையும் மட்டும் அறுத்தெறிவதால் மட்டும் முன்னேற்றமாக ஏதும் நடந்து விடவில்லை.