Tuesday, January 09, 2007

(101)மத்தியகிழக்கு கருப்புத்தங்க அரசியலால் கருப்பானஉலகம்

அரேபிய ஜிஹாதிகள் வெகு நிச்சயம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களே!

மத்தியகிழக்கில் கிடைக்கும் கருப்புத்தங்கம் எனப்படும் பெட்ரோலியம் மத்தியகிழக்குநாடுகளை கடல் கொள்ளைக்காரர்கள், மீன்பிடிப்பு என்பதான வாழ்வு ஆதாரங்களினின்று கடின உழைப்பேதும் செய்யாமல் தாயம், ஒண்ணு ,ரெண்டு என்று உழைத்து மேலே வராமல் பரமபத பெரிய ஏணியில் கால்வைத்த பலனாய் 40 ஆண்டுகளில் நீட்டிய காகிதங்களில் கையெழுத்துப் போடும் பெரும்பான்மை மத்தியகிழக்கு நிர்வாக மேலாளர்களால் உலக வரலாற்றில் இரண்டாம் உலக நாடுகளாக மேம்பட இறைவனின் கொடையான கருப்புத்தங்கம் உதவிவருகிறது.

இதே கருப்புத்தங்கத்தை இறைவனின் பூமியில் இருந்து உற்பத்தி செய்ய மேற்கத்திய வெள்ளைக்காரர்கள் என்கின்ற Might is Right கொள்ளைக்காரர்கள் 50% டவுன் ஸ்ட்ரீம் ரைட்ஸ் என்று உற்பத்தியில் ஆளுக்குப் பாதி என்று மத்தியகிழக்கு அரச ஆட்சியாளர்களுடன் ஆளுக்குப் பாதி என்று லாபத்தினைப் பிரித்துக்கொள்ளுகின்றார்கள்.

பிரிட்டிஷ் நிறுவனங்கள் ஆரம்ப காலங்களில் மத்தியகிழக்கு எண்ணை உற்பத்தியில் கோலோச்சியிருக்கின்றார்கள். பெரும்பாலும் பிபி எனும் பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம் தனியாகக் காலனியாதிக்கத்தின் தொடர்ச்சியாக தனி நிறுவனமாகக் கோலோச்சியிருக்கிறது.

மத்தியகிழக்கில் எண்ணைய் வர்த்தகத்தில் அமெரிக்க ஆதிக்கம் 1970களில் ஆரம்பித்தது. ஜூன் 1967ல் ஆறு நாட்கள் நடந்த இஸ்ரேல்-அரபியர் போர், அதன் பின் விளைவாக அரேபியர்களின் எண்ணைய் ஏற்றுமதி மறுப்பு இவை முக்கியமான திருப்புமுனை மத்திய கிழக்கு எண்ணைய் வர்த்தகத்தில் ஏற்படுத்தியது.

எண்ணைய் வளத்தினை அரசியலாக்கியது அமெரிக்கர்கள் அல்ல. அரேபியர்களே. தன்னிடம் இருக்கும், இதர உலகோர் பயன்படுத்தும், தமது வாழ்வியலுக்கு அடிப்படையாகிய ஒரே வளமான கருப்புத்தங்கத்தினை வைத்து பிளாக்மெயில் அரசியல் 1967-ல் ஆரம்பித்தது அரேபியர்களே அன்றி அமெரிக்கா இல்லை.

அரேபிய முட்டாள்கள் தமது வாழ்வு 100% சார்ந்த தம்மிடம் இருக்கும் ஒரே வளத்தினை வைத்து உலகையே ஸ்தம்பிக்கச் செய்யும் முதல் பிளாக்மெயிலை ஆரம்பித்துவைத்தனர். இதில் அதிகம் பாதிக்கப்பட்டது அமெரிக்கா!

மத்தியகிழக்கு அரசியலில் அமெரிக்காவின் நிலைப்பாடற்ற நிலைப்பாட்டிற்கு, மத்திய கிழக்கில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை வெளிப்படையாக வானவில்லாக பலவர்ணமுடையதாகக் காணப்படுவது 1967க்குப் பின் எந்த ஒரு சமரசமில்லாமல் அமெரிக்க ரிபப்ளிகன், லேபர் பார்ட்டி அரசியல்வாதிகள் கையாள்வதும் இந்த அரேபியர்களின் கருப்புத்தங்க ஒத்துழையாமை பிளாக்மெயில் சம்பவத்திற்குப் பின்பே!

மத்தியகிழக்கு நாடுகளின் தினசரித் தேவைகளான 1000 பொருட்களும் வேறு நாட்டில் இருந்து வந்தாக வேண்டும். மத்திய கிழக்கின் ஒரே ஏற்றுமதி கருப்புத்தங்கம் மட்டுமே.

இந்த கருப்புத்தங்கமான ஒன்றையும் எல்லா உலக நாடுகளின் துணையோடு , எல்லா உலக நாடுகளுக்கும் விலைக்கு விற்று அதில் வரும் பொருள் கொண்டு இவர்கள் தினசரித் தேவைக்கான ஆயிரம் பொருட்களை மீண்டும் எல்லா உலக நாடுகளிடமிருந்தும் இறக்குமதி செய்யவேண்டியது இன்றைக்கும் இருக்கும் சூழல். (ஆங்காங்கே இதர நாடுகளின் லேபர்களால் தற்போது மத்தியகிழக்கு நாடுகளில் விளைவிக்கப்படும் உருளைக்கிழங்கு மாதிரியான காய்கறிகள் விவசாயத்தை தள்ளுபடியில் விடுகிறேன்)

மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பாவினர்க்கு மத்திய கிழக்கு எண்ணைய் வளம் சார்ந்த பொறியியல் + உட் கட்டமைப்பு வியாபாரம் மிக லாபகரமானது. ஏனெனில் நீட்டிய காண்டிராக்ட் தாளில் கையெழுத்து உபயோகமான கேள்வி ஏதும் கேட்காமலே அரேபிய நிர்வாகிகளால் கடல்கடந்து சென்றும் / மத்தியகிழக்கு அரண்மனைகளிலும் எளிதாக நடக்கும்.


இன்றைக்கு க்ரீன் ஹவுஸ் கேஸ் என்றும், இன்ன பிற வாகன எரிபொருள் புகையாலும் ஓஸோனில் ஓட்டை, அண்டார்டிகா ஐஸ் கிளேசியர் உருகுதல், கடல்நீர்மட்டம் உயர்வு, சைக்ளோன்கள், ஹரிக்கேன்கள் ஒரேநாளில் ஆயிரம் மிமீ மழை என இயற்கை கொந்தளித்து மனிதன் வாழ்வைக் கருப்பாக்கிவருவதற்கு முக்கிய மூலாதார அடிப்படை இந்தக் கருப்புத்தங்கத்தின் மிதமிஞ்சிய பயன்பாடுதான்!

கருப்புத்தங்கத்தை உறிஞ்சி எடுக்க எடுக்க ஆழமாக பூமியில் ஏற்படும் மென் அகழ்வுகள் காரணமாக யூரோஷிய நிலத்தட்டு மோதல்கள், சீஸ்மிக் ஆக்டிவிட்டி அதிகமாகி இந்தியா உட்பட பல நாடுகள் பூகம்பப் பிரதான பிரதேசமாகியுள்ளன!

பண்டைய காலத்தில் கடற்கொள்ளை மட்டுமே வாழ்வாதாரமாயிருந்த மத்தியகிழக்கு நாட்டவர்களின் இன்றைய ஒரே வாழ்வாதாரம் கருப்புத்தங்கம். மேற்கத்திய கொள்ளைக்காரர்கள் கட்டமைப்புப் பொறியியல் தொழில்கள் மிக முக்கியமான அதிக லாபம் தரும் பிரதேசம் மத்தியகிழக்கு நாடுகள்.

அமெரிக்கா மனித உரிமைப் போர்வையில் மத்தியகிழக்கு ஈராக்கை முற்றிலுமாக அதன் ரஷியப் பொறியியல் கொண்டு அமைக்கப்பட்ட கட்டமைப்பை அழித்துப் புதிய ஈராக் உருவாக்குவது அமெரிக்காவின் பொறியியல் தொழில்சார் பொருளாதாரம் முழுமையாக செழித்திருக்கவே. யூரோவினை விடை யூஎஸ் டாலர் குறைவாக்கி வித்தைகாட்டுவதும் அமெரிக்கப் பொருளாதார வித்தையே.

மொத்தத்தில் மிக மலிவாக / இலவசமாக அமெரிக்காவிற்கும் பிரிட்டன், ப்ரான்ஸ் மாதிரி ஐரோப்பிய நாட்டினர்க்கும் மத்திய கிழக்கின் கருப்புத்தங்கம் கிடைக்க அரேபிய அரசர்களின் சுயநல மத்திய கிழக்கு அரசியல் நாடகத்தில் ஈராக் மேம்பாடு சதாம் அழிப்பு என்று மீண்டுமொருமுறை தற்போதும் வழிசெய்து தந்திருக்கின்றார்கள். உண்மையில் இந்தியா மாதிரி வளரும் நாடுகள் இந்த அரேபிய அரசர்களின் / சர்வாதிகாரிகளின் சுயநலப் போர் அரசியலுக்கு கருப்புத்தங்கத்துக்கு அதிக விலை தந்து வாங்கி என ஈடு செய்கிறோம்.

கியாட்டோ புரோட்டோக்கால் என்கிற அதீத கருப்புத்தங்கப் பயன்பாட்டில் எழும் க்ரீன் ஹவுஸ் வாய்க்கள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மாசு குறைப்பு வழிமுறையை கொத்துப் புரோட்டாமாதிரி அமெரிக்கா பிய்த்துப் போட்டிருக்கிறது!

ஜப்பானிய கியாட்டோவில் நடந்ததாலே ஜப்பானியர்களாவது மதிப்பளித்து டயோட்டா முதல் மாஸ்டா, நிஸ்ஸான், மிட்சுபிஷி, ஹோண்டா என ஜப்பானியக் கார் கம்பெனிகள் மின்சார மோட்டார் + கருப்புத்தங்கம் பயன்பாட்டில் புதிய தொழில் நுட்பத்தில் மனிதர்க்கு ஊறு விளைக்கும் மாசு, சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு தயாரித்து 2004ல் இருந்து பயன்பாட்டில் இருக்கிறது.

உலக நாடுகளில் பலவற்றில் இருக்கும் நிலக்கரி எல்லாம் அகழ்ந்து எடுக்கப்படாமலேயே நிலக்கரிசார் தொழில்நுட்பம் 25-30 ஆண்டுகள் ஆட்சி செய்து பின் காலாவதியாகி, அடுத்த பரிணாமமாக பெட்ரோலியத் தொழில்நுட்பம் வந்து க்ரீன்ஹவுஸ் வாய்க்கள் சுற்றுச்சூழல் மாசுபடுத்தி மனிதனைப் படுத்தி அடுத்த தொழில் நுட்பமாக எலக்ட்ரிக் + சிக்கனபெட்ரோலிய மோட்டார்,அடுத்து முற்றிலும் மாசு ஏற்படுத்தாத நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருள் எஞ்ஜின் தொழில் நுட்பம் வரவேண்டியிருப்பது காலத்தின் கட்டாயம்.

நிஜமாகவே பூமியில் மனிதனைப் பாடாய்ப்படுத்திய தொழில் நுட்பம் பெட்ரோலியத் தொழில் நுட்பம்.

மத்திய கிழக்கில் வெகுதியாகக் கிடைக்கும் ஏக எஞ்ஜின் கருப்புத்தங்க பெட்ரோலியத் தொழில்நுட்பம் மனிதனுக்கு வெளிப்புறமுள்ள் சுற்றுச்சூழலில் மட்டும் மாசு ஏற்படுத்தவில்லை. ஏக இறைவன் என்று வன்மையாகப் புகுத்தப்படும் ஜிஹாத் முறை குண்டுவெடிப்புகள், கொலைகள், கலவரங்கள் என மனித வாழ்வியல் மாசுபட மனித சிந்தனையையும் மாசுபட வைத்தது மத்திய கிழக்கில் இன்று வெகுதியாகக் கிடைக்கும் கருப்புத்தங்கம்.


கருப்புத்தங்கத்தினை அரசியலாக்கிய காரண கர்த்தாக்கள் அரேபியர்கள். கருப்புத்தங்கத்தின் பலனை முழுமையாக அனுபவிப்பவர்கள் மத்தியகிழக்க்கு + மேற்கத்திய, தொழில் + வாழ்வுமுறை கொள்ளைக்காரர்கள்!

என்மாதிரி இந்தியர்களும் இதர பன்னாட்டு ஆட்களும் இந்த கருப்புத்தங்கத்தினால் எழுந்த மத்திய கிழக்குப் பொருளாதாரத்தினைச் சார்ந்த வாழ்க்கை மாற்று எரிபொருள் தொழில் நுட்பத்தினால் பாதிக்கப்பட்டாலும் உலகத்தின் சுற்றுச்சூழல் நன்மைக்கும், மனிதர்கள் ஜிஹாத் குண்டுவெடிப்புகளில், வன்முறைகளில் இருந்து அமைதியான வாழ்வு வாழவும் கருப்புத்தங்கம் சாராத, அல்லது கருப்புத்தங்கத் தேவை தற்போதிருப்பதிலிருந்து 50% குறைக்கப்பட்ட தொழில் நுட்பம் எத்தனால் 40% பிளண்ட் பயன்படுத்தும் தொழில் நுட்பம் கரும்பு விவசாய இந்தியாவைச் முழுவதும் சுபிட்சமாக்கும்.

இந்த கருப்புத்தங்கம் தவிர்த்த தொழில்நுட்பத்தினால் (மத்தியகிழக்கு உட்பட) மொத்த உலகமும் ஏகாந்தமாக ஏகத்துவ ஜிஹாதிகளின் மாசுபடுத்தல்களில் இருந்து, உலகெங்கும் தினசரியாக மனித வாழ்வு வெடிகுண்டுகள் வைத்து ஓட்டைபோடப்பட்ட ஓஸோன் படலமாக்கப்படும் வன்முறைப் படலத்திலிருந்து விடுதலை பெறும்!

1967ல் அரேபியர்கள் தங்களிடம் கிடைக்கும் கருப்புத்தங்கத்தினை இசுலாமிய நாடுகளல்லாத இதர உலக நாடுகளுக்கு ஏற்றுமதி மறுப்பால் பிளாக்மெயில் செய்து தங்களது உயிர் வாழ்விற்கு உலக நாடுகளைச் சார்ந்திருப்பதை மறந்து அரசியல் தலையீடு கைப்பாவை அரசர்கள் நிர்வாகம் என்று வெளித்தெரியாத பிரச்சினைக்குள்ளாக்கிக் கொண்டமாதிரி, அனைத்து உலகநாடுகளுக்கும் தம்மிடமுள்ல கருப்புத்தங்கத்தினை விற்றுச் சேர்ந்த பொருளினைக் கொண்டு உலக நாடுகளையே குண்டுவெடிப்பு வன்முறையால் அச்சுறுத்தும் ஜிஹாத், ஏகத்துவம் என்று வெளிச்சூழல் மாசு வெள்ளைக்காரனுக்குத் தராத ஞானத்தினை 9/11 மற்றும் இதர அரேபியர்களின் ஜிஹாத் வன்முறையால் வெள்ளைக்காரனுக்குத ஏற்பட்ட உள்மனச்சூழல் மாற்றம் புதிய தொழில்நுட்பத்தினைக் கண்டுபிடித்துப் பயன்பாட்டில் எடுத்துவந்திருக்கிறது.

அரேபிய ஜிஹாதிகள் வெகு நிச்சயம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களே!


அமெரிக்காவின் வாகனத் தேவை ஜப்பானியக் கார்கம்பெனிளின் வாழ்வு! அமெரிக்காவின் பெட் ரோல் சார்பைக் குறைக்கும் கொள்கைகு அமெரிக்கனை விடவும் ஜப்பானியன் அதிகம் சிந்திக்கிறான் ;-))

எனவே மகிழ்ச்சியோடு வரவேற்போம் ஜப்பானின் (அமெரிக்காவின் ;-) ) இந்தப் புதிய வாகன தொழில் நுட்பத்தினை!

அன்புடன்,

ஹரிஹரன்

8 comments:

Hariharan # 03985177737685368452 said...

டெஸ்ட் மெசேஜ்!

லக்கிலுக் said...

நிலக்கரியைத் தானே கருப்புத் தங்கம் என்பார்கள்?

மத்திய கிழக்கு நாடுகளில் நிலக்கரியா கிடைக்கிறது?

Hariharan # 03985177737685368452 said...

Crude Oil எனப்படும் பெட்ரோலியமும்
Black gold எனவே அழைக்கப்படும் அதையே கருப்புத்தங்கம் எனத் தமிழாக்கம்.

நம்மூரில் இந்தியாவில் நிலக்கரி கிடைப்பது அதிகம் எனவே அது கருப்புத்தங்கம்!

ஐயங்கார் said...

Naan solvathu uNmaithanee?

Hariharan # 03985177737685368452 said...

ராகவன் ஐயங்கார் has left a new comment on your post "(101)மத்தியகிழக்கு கருப்புத்தங்க அரசியலால் கருப்பானஉலகம்":

மத்திய கிழக்கு நாட்டில் வேலை பார்த்துக் கொண்டு அமெரிக்காவை வாழ்த்திப்பேச அறிவுகெட்ட பாப்பாரப் பன்னாடைகளால் மட்டுமே முடியும்.

Hariharan # 03985177737685368452 said...

//மத்திய கிழக்கு நாட்டில் வேலை பார்த்துக் கொண்டு அமெரிக்காவை வாழ்த்திப்பேச அறிவுகெட்ட பாப்பாரப் பன்னாடைகளால் மட்டுமே முடியும். //


ராகவன் ஐயங்காராகிய மகேந்திரன் நன்றிகள்!

அறிவுகெட்டிருந்தால் சுயமரியாதை, பகுத்தறிவோடு சும்மா ஜிங்சாக் அடிக்கலாம்.

தேவையற்று இப்பதிவில் நான் எங்கே அமெரிக்காவினை வாழ்த்தி (?) இருக்கிறேன்!

ஐயங்ஸான பின்னும் கருப்புக்கு கருப்புத்தங்க அரசர்கள்மீது போலிப்பாசம் ஏன் விடவில்லை மகேந்திரன்? :-)))

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்ம், உங்க பதிவிலே பின்னூட்டமே கொடுக்க முடியலையே? இதுக்கு முன்னாலே கொடுத்ததும் வரலை. என்னன்னு புரியலையே? நாளைக்கு வந்து பார்க்கறேன். பதிவு திறக்கவே இல்லை கொஞ்ச நாளா. இன்னிக்கு வந்தது. இது வருதான்னு பார்த்துட்டு வரேன். புத்தாண்டு வாழ்த்துக்கள். ஏற்கெனவே கொடுத்திருந்தேன். வரலைன்னு நினைக்கிறேன்.

கால்கரி சிவா said...

இரவு மணி 11. வெளியே -25 டிகிரி C. நாளை விரிவான பின்னூட்டதுடன் வருகிறேன்