(105) எனது முதல் Close Shave அனுபவம்!!!
திகிலான அனுபவத்தை காயம் படாமல் அதிர்ஷ்டத்தினால் தப்பிப்பதை "க்ளோஸ் ஷேவ்" என்பார்கள். இங்கே Peer Pressure காரணமாக கல்லூரி நாட்களில் ஏற்பட்ட எனது குளோஸ் ஷேவ் அனுபவத்தினைச் சொல்லியிருக்கிறேன்! கல்லூரியில் எனது வகுப்பில் இருந்த பலரை திகிலுக்குள்ளாக்கின சம்பவம் இது!
முதலாண்டு விடுமுறை முடிந்து இரண்டாமாண்டு முதல் நாளில் மாணவர்கள் எல்லாம் மீசை தாடி வளர்த்த நிலையில் சந்திப்பதாக முதலாண்டு இறுதி நாளில் தீர்மானம். மீசையே அப்போது அரும்ப ஆரம்பித்த நிலையில் எனக்கு பிளேடு தினமும் போடும்படி அறிவுரைத் தீர்மானம் வேறு. 30நாளில் தாடி வளர்ப்பது எப்படி? தானாக அரும்பியிருந்த மீசை & தாடி??!! யை அப்படியே விட்டுவைத்துவிடவா இல்லை பிளேடு போடவா?
தந்தையில் சிங்கிள் பிளேடு ரேஸர் அஸெம்பிள் செய்து ஷேவ் செய்வதற்குள் சேட்டிலைட் லாஞ்ச் செய்துவிடலாம் அவ்வளவு டெக்னிக்குகள் அந்த புராதன ரேஸருக்கு பயன்படுத்தப்படவேண்டும். முப்பதாண்டுகள் தந்தைக்கான தனித்த சேவையில் இருந்ட்த ரேஸர் மறை தேய்ந்து அதில் நூல் சுற்றி டைட்செய்யப்படவேண்டும் இல்லை இல்லை மறை கழண்டு ரத்தம் பார்க்கும். சலூனில் கட்டிங் அண்ட் ஷேவிங் காஸ்ட்லியாகும். ஷேவிங் காசை சேவிங் செய்து பாக்கட் மணியாகப் பயன்படுத்தலாமே... பாக்கெட் மணியில் பிளேடு போடலாமா என்கிற குழப்பம். எனது தந்தையிடம் கல்வி விஷயங்கள் தவிர்த்து வேறெதுக்கும் தம்பிடி பெயராது எனவே பக்கெட் மணி ரேஞ்சில் இல்லாத பாக்கெட் மணிக்கு பங்கம் வராமல் ஆனால் முப்பத்தோராவது நாளில் திருவள்ளுவரைச் சவாலுக்கு இழுக்கும் வகையில் தாடி வேறு விளைவித்தாக வேண்டும்.
சரி துணிந்து தந்தையின் லேஸர் டெக்னாலஜி ரேஸரைப் பயன்படுத்திவிடுவதே எல்லாவகையிலும் லாபகரமானது என்று முடிவெடுத்து கோத்ரெஜ் வட்ட சோப்,குழைக்கும் பிரஷ், ரசம் போன கண்ணாடி, நூல்கட்டிய 7'ஓ கிளாக் பிளேடு தாங்கிய ரேஸர் சகிதம் 8 ஓ கிளாக்குக்கு முதல் சவரம் செய்ய ஆரம்பித்தேன்! அ..ஆ..ஆ ரசம் போன கண்ணாடியில் மூக்கு மட்டுமே தெரிகிறது... குத்து மதிப்பாக ...பட படப்புடன் அவசர அவசரமாக வலது பக்கம் ஒரு இழு... இடது பக்கம் ஒரு இழு... உதட்டுக்கு மேல்... தாடையில் ஒரு இழு இழுத்து முகம் கழுவும் போது ஸ்ஸ்ஸ்...ஆஆஆ துண்டில் ரத்தம்.. முகத்தில் அநேக வெட்டுக்குத்து.
ரகஸியமாக ஷேவ் செய்ய எண்ணியிருந்தது முகமெங்கும் ரத்தக் காயத்தால் வீட்டிலே ஹாட் டாபிக் ஆகிப் போனது. பெருங்குற்றமிழைத்துவிட்ட மாதிரி பார்வை எள்ளல்கள்... அதிகப்பிரசங்கித்தனம் முணு முணுப்பு... சரி விஷயத்தை ஆறப்போட்டே ஆகவேண்டிய அளவுக்கு தோலை அழுத்தி ரேஸரை இழுத்ததில் தோலே காது டூ கன்னம் காணாமல் போனதைத் தேடிக்கிட்டே இருந்ததில் நாட்கள் ஓடிவிட்டன.
கல்லூரியின் இரண்டாம் ஆண்டு முதல்நாளில் வகுப்பு நண்பர்கள் எல்லோரும் திருவள்ளுவர்க்குப் பேரனாக வந்திருக்க நான் மட்டும் கவர்னர் மாதிரி போயிருந்தேன். ( ஆட்டுக்கு தாடி... நாட்டுக்கு கவர்னர் என்பதை நினைவில் கொள்ளவும்)
இரண்டாமாண்டு முதல் நாளில் எனது தாடியைக் கண்டு கதிகலங்கி திகிலடைந்தது கட்டாய தாடி வளர்ப்புத் தீர்மானம் போட்ட நண்பர்கள் (?!)
அன்புடன்,
ஹரிஹரன்
10 comments:
டெஸ்ட் மெசேஜ்!
இந்த பதிவை படிக்கும் போது அனுபவங்களை நினைக்க வைக்கிறீங்க ஹரிஹரன் :)
:)
இதுதாங்க Close Shave என்ற பதத்திற்கு closest explanation. உங்களுக்கு தெரியலை ஆனா உங்க நண்பர்களுக்கு ரொம்ப திகிலான அனுபவமாத்தான் இருந்திருக்கும்.
:)))
//இந்த பதிவை படிக்கும் போது அனுபவங்களை நினைக்க வைக்கிறீங்க//
வாங்க திரு.
ப்ளாஷ்பேக் கொசுவர்த்தி சுழன்றதா தங்களுக்கும் :-))
From aasath
It is better than your previous aruments to justify your so-called hindu-religion
If you have angry, please search the papers which are presented at 94 th Science congress in Chidambaram last week
கால்கரி சிவா,
வருகைக்கும் சிரித்ததற்கும் நன்றி!
//உங்களுக்கு தெரியலை ஆனா உங்க நண்பர்களுக்கு ரொம்ப திகிலான அனுபவமாத்தான் இருந்திருக்கும்.//
பின்ன மிரட்டி தினசரி பிளேடு போடச்சொல்லி என்னை திகிலடையச் செய்தவற்களை இயற்கையா ரிவன்ஞ் எடுத்துட்டோம்ல :-))
//It is better than your previous aruments to justify your so-called hindu-religion//
ஆசாத்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
எல்லாருக்குமே முதல் ஷேவ் இப்படி ஒரு க்ளோஸ் ஷேவ் அனுபவமாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்.
எனக்கும் அப்படித்தான். நம்ம பண்ண ஷேவுல சன் டிவி பாணியில சொன்னா அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது. அப்புறம் எங்கப்பாருதேன் அடுத்த ஒரு மாசத்துக்கு அப்புறம் முதல் வேலையா ஒரு டபுள் பிளேடும் அதை வச்சுக்க ஒரு டப்பாவும் (பிளேடோடு இலவசமாக வந்தது) வாங்கிக் கொடுத்தாரு.
நல்ல நினைவலைகள்!
Post a Comment