Sunday, January 21, 2007

(107) இந்துக்கோவில்களில் ரீஃபார்ம்கள்

ஜி.ராகவன் தனது இந்தப்பதிவில் இந்துக்கோவில்களில் வரவேண்டிய ரீபார்ம்ஸ் குறித்துச் சொல்லியிருந்த பல பாயிண்டுகளில் எனது இரண்டனாவாக சில கருத்துக்களைச் சொல்லியிருந்தேன்.

எனது கருத்திற்கு அவர் சொல்லியிருந்த சில பதில்களுக்கு / எழுப்பிய வினாக்களுக்கு எனது பதில் கருத்தைத் தனியாகவே பதிவாக இங்கே இடுகிறேன் ஜி.ராகவனின் கருத்துக்கள் நீல வர்ணத்திலும் எனது கருத்துக்கள் சிவப்பு வர்ணத்திலுமாக வரிசையாக இடப்பட்டிருக்கிறது:

1. திருக்கோயிலில்களில் சாதீய பாகுபாடுகள் இன்றி விருப்பமுடைய எவரும் பூசனை செய்யும் நிலை வர வேண்டும். இதை ஏற்காமல் வழிவழி வருவது என்ற வாதம் செய்வது எடுபடாது. வழிவழி வரத்தொடங்கியது எப்பொழுதிலிருந்து என்று ஆய்ந்தால் பல இடங்களில் உண்மை தெளிவாகும்.

ஹரி: *விருப்பம் மட்டுமே போதுமா?
இங்கே விருப்பத்தினை விட மிக அவசியமானது இறைவன் மீதான நம்பிக்கையும், தெய்வத்தின் மீதான பக்தியும் மிக அவசியமில்லையா? வெறும் விருப்பம் மட்டும் எனில் இறைவனே இல்லை என்போரும் வர விரும்பலாம் இறை பக்தி தவிர்த்த இதர பல்வேறு விஷயங்களுக்காக:

ஜி.இராகவன்: என்ன சொல்கின்றீர்கள் ஹரிஹரன். நான் அனைத்துச் சாதியினரும் பூசை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்கிறேன். நீங்கள் அதைப்பற்றி ஒன்றும் சொல்லாமல் இறைநம்பிக்கையில்லாதாரும் வேறுபல காரணங்களுக்காக வருவார்கள் என்கிறீர்களே. அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு?

ஹரி: என்ன தொடர்பா? இந்து அறநிலையத்துறை இருப்பது அரசின் நேரடிக்கட்டுப்பாட்டில். தற்போதைய வழிவழியாக அர்ச்சகர்கள் இறைவனின் சேவைக்கு வரும் நிலை அறவே நீக்கப்பட்டு, விருப்பமுடைய எவரும் ஆகலாம் எனும் சூழலில், அர்ச்சகர்கள் போஸ்டிங் என்பது இதர அரசுத்துறை நிறுவனங்களில் நடக்கும் பணி நியமனங்கள் போன்றதாகவே நடைமுறையில் செய்யப்படும்.

அரசு நிறுவனங்களில் பணி நியமனங்கள் நேரடியாக அரசியல் கட்சிகளின் வட்ட , மாவட்ட, அமைச்சர்கள் கையூட்டுப் பெற்றுக்கொண்டு செய்கின்ற பரிந்துரையின்படியே நடக்கின்ற நிதர்சனம் மாதிரியே இனிமேல் இந்துக் கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனங்களும் நிகழும்.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வட்ட, மாவட்டங்கள் அர்ச்சகர் பணிக்குப் பரிந்துரைப்பதில் முன்னுரிமை அந்தக் கட்சிகளின் விசுவாசிகளுக்கே தரப்படும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆக தற்போதிருக்கும் வழி வழி அர்ச்சகர்கள் நியமனம் கட்டுடைக்கப்பட்டு முற்றிலும் மாற்றப்படுவதில் கோவில் செல்லும் உண்மையான ஆன்மீகப் பற்றுதல் உள்ள பக்தர்களுக்குப் பலனாக விளைவது என்பது:

1. அர்ச்சனை டிக்கெட்டில் 5 ரூபாய் என இருந்தாலும் அர்ச்சனைக்கு முதலிலேயே 20 ரூபாய் தந்தாக வேண்டும் / தட்டில் போட்டாக வேண்டும்.
(நியமனத்திற்கு வட்ட/மாவட்ட அரசியல் தலையிடம் தந்த பணத்தைத் திரும்பப் பெற்றாகவேண்டிய கட்டாயம் அரசு நியமித்த பொதுவில் வரும் அர்ச்சகருக்கு நிர்பந்தமாகிறது)

2. வட்டார போக்குவரத்து அலுவலகம், (ஆர்டிஓ ஆபீஸ்), ரெவென்யூ டிபார்ட்மெண்ட் மாதிரி கோவில் நிகழ்ச்சிகளுக்கு திருக்கல்யாணம், தேர்புறப்பாடு, வடைமாலை சாற்றுதல் போன்றவற்றுக்கு கட்டளைதாராக ஸ்பான்ஸர் செய்ய விரும்பினாலும் கோவில் அரசு நியமன பொது அர்ச்சகர்கள் /அலுவலர்கள் சிண்டிகேட்டுக்கு ஃபார்மாலிட்டீஸ், கவனிப்பு என்று தனியாக வெட்ட வேண்டிய கட்டாயம் வரும்.
(அரசியல் கட்சி வட்ட மாவட்ட தலைமைகளுக்குக் கையூட்டுத் தந்து பெறும் நியமன பணிகளில் வருவோர் நிதர்சனத்தில் கையூட்டாகத் தந்ததைத் திருப்பி எடுப்பதில் முன்னுரிமை முனைப்புக் காட்டுவார்கள்)

3. வெளிப்புற நடைமுறை உலகில் நிரம்பியிருக்கும் விஷயங்களில் கொடுமை, கொடுமை என்று கோவிலுக்குள் வந்தால் நிஜமாக கொடுமை தலைவிரித்தாடும். மெய்யான ஆன்மீக பக்தர்கள் நியமன அர்ச்சகர்களின் எதிர்பார்ப்பு/தேவைகளை பூர்த்திசெய்யாத நிலையில் அர்ச்சனை/தீபாராதனை என எதுவும் நிகழாது!

4. ஏற்கனவே அர்ச்சனை செய்யப்பட்ட பூக்கள் / ஏற்றப்படாத கற்பூரம் போன்றவை கோவில் தெருமுனையில் நம்பிக்கையான ஆட்கள் மூலம் ரீ-சேலுக்கு அனுப்பப்படும்!

5. அர்ச்சகராக நியமனம் செய்ய பரிந்துரைத்த வட்ட/மாவட்ட அரசியல் பின்ணணியுடன் கூடிய ஒரு குறிப்பிட்ட பங்க் கடையில் மட்டுமே பூஜைப் பொருட்கள் வாங்கும்படி மெய்யான ஆன்மீக பக்தர்கள் அறிவுறுத்தப்படுவர்.

6. குறிப்பிட்ட கடையில் அர்ச்சனை பூஜைப்பொருட்கள் வாங்காத பக்தர்கள் மீது சுடுசொற்கள் அர்ச்சனை செய்யப்படும் நிலை வரும்.

7.கோதண்டராமர், கல்யாணராமர், பட்டாபிராமர் கோவில்களில் மூலவர், உற்சவர் சிலைகளில் இருக்கும் சீதையின் முதுகில் அணிலுக்கு இருப்பதான கோடுகள் இருக்கிறதா எனும் சீரிய ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள்.

(இப்போதைக்கு இந்த ஏழு காரணங்கள் போதும் :-)) )

3. ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் கோயில் அருச்சகர்களவோ பூசாரிகளாகவோ வர வேண்டும். தூய்மை என்று சாக்குச் சொல்லக் கூடாது. இன்று ஆண்களும் பெண்களும் இணைந்து பல இடங்களில் வேலை செய்கிறார்கள். அங்கெல்லாம் தூய்மை கெட்டு விட்டதா! அனைத்தையும் கடந்த பரம்பொருள் இதனால் தீட்டாவார் என்று நினைப்பது அறிவீனம். பெண்களின் உடல்நலம் பாதிக்கப்படும் என்று சொல்வதும் தகாது, அந்த சமயங்களில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். இன்றைக்குப் பெரிய கோயில்களில் எத்தனை அருச்சகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஒரு நாள் விடுப்பில் ஒன்றும் குறைந்து விடாது, அது போலத்தான் இங்கும்.

ஹரி: *புதிதாய்ச் சொல்ல ஏதுமில்லை இதில்.
பெண்களுக்குத் தேவையான உடனடித் தேவையாக இது இருக்கிறதா?
பெண்கள் பூசாரியானால், அதே இடத்தில் தெய்வ பக்தி, இறைவனை நம்பாத வெறும் விருப்பம் மட்டும் இருக்கும் நபர் பூசாரி வேலையில் இருக்கும் நிலையில் பூஜை பகவானுக்கு நடக்குமா?
அர்ச்சக அம்பாளை மட்டுமே விருப்பத்தால் வேலையாக ஏற்றவர் ஆறுகாலம் தாண்டியும் துதித்து பூஜை தொடர்வது தெய்வக் குத்தமாகிவிடாதா?:-)))

ஜி. இராகவன்: அப்படியானால் பெண்களுக்கு இறைபக்தி கிடையாது என்கின்றீர்களா? இதென்ன அபத்தம். பணிக்கு ஆளெடுக்கையில் தகுதியானவர்தானா என்று பார்த்துதான் எடுக்க வேண்டும். அவர் எந்தச் சாதியாக இருந்தால் என்ன....எந்தப் பாலினமாக இருந்தால் என்ன? பக்தி இருந்தால் பெண் என்ன...திருநங்கைகளும் பூசனை செய்யலாம்.




ஹரி: நான் பெண்களுக்கு பக்தியில்லை என்று எங்கே சொன்னேன் ராகவன்?

கோவிலில் பெண்கள் அர்ச்சகராகின்ற சூழலில், அதே கோவிலில் வட்ட, மாவட்ட அரசியல் தலைமையின் பரிந்துரையில், கையூட்டுத் தந்து அரசினால் நியமிக்கப்பட்ட, இப்பணியில் விருப்பமுடைய நபர் அர்ச்சகராக வரும் நிலையில் தழைப்பது ஆன்மீகமாக இருக்குமா? கோவில் இன்னொரு ஆர்டிஓ ஆபீஸ் ஆகும். இத்தகையவர் பணியிடத்தில் இருக்கும் பெண்களை ஆறுகாலம் தாண்டியும் துதித்துப் பூஜிப்பது தெய்வகுத்தம் இல்லையா என்பதே நான் கேட்பது.


ஜி.இராகவன்: திருத்தணியில் பாக்குப் பொட்டலத்தை வாயில் பிரித்துப் போட்டுக் கொண்டு திருநீறும் குங்குமமும் கொடுக்கிறார்களே..அவர்களா பக்திப் பழங்கள்?

ஹரி: ஒத்துக்கொள்கிறேன் இவர்கள் பக்திப் பழங்கள் இல்லை. ஆனால் அரசுத்துறை நியமன பணியாளர்கள் மாதிரி அழுகல் பழங்களாக இல்லை. மாநில அரசைத் தேர்ந்தெடுக்க ஐடியல் குவாலிட்டீஸ் பார்த்து தேர்ந்தெடுக்க வாய்ப்பிருக்கிறதா பொதுமக்களுக்கு? இல்லையே? இருப்பதில் குறைவான கேடுதருவது எது என்பது தானே பார்க்கிறோம்?

இன்று இருக்கும் அர்ச்சகர்கள் நியமனம் வழிவழியாக வருவது என்பதான நடைமுறை இன்றளவில் முற்றுலும் திருப்தி அளிக்கும் இறைச்சேவையை பக்தர்களுக்கு அவர்கள் தராமலிருக்க அரசு அவர்களுக்குத் தரும் மிகக் குறைவான ஊதியம் முதன்மைக் காரணம்.

அரசுப் போர்வையில் அரசியல் கட்சிகளின் வட்ட / மாவட்டத் தலைமைகள் கையூட்டுப் பெற்றுச் செய்யும் அர்ச்சகர்கள் நியமனத்தின் மூலம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 95% அழுகல் சேவையும், கூடுதலாக பல நூறுமடங்கு மனநிம்மதி இழப்பும் மட்டுமே எடுத்துவரும்.



அரசுத்துறைகளில் அரசியல் கட்சிகளால் வழிவழி நடக்கும் பணி நியமனங்களில் ஆராயாமலே அழுகல் தெரியவில்லையா? இல்லை இதுமாதிரி ஆலயங்களில் வரவேண்டியதுதான் வரவேண்டிய சமூக நீதியா?

சொல்லுங்கள் ஜி.ராகவன்.

(ஜி.இராகவன் பரிந்துரைக்கும் இதர இந்துக்கோவில் ரீபார்ம்ஸ்கள் பாதுகாப்பு / மொழிரீதியானவைகளைச் சாய்ஸில் தற்போதைக்கு விடுகிறேன்)

அன்புடன்,

ஹரிஹரன்



9 comments:

Hariharan # 03985177737685368452 said...

டெஸ்ட் மெசேஜ்!

G.Ragavan said...

நீங்கள் குறிப்பிட்ட அத்தனை கருத்துகளையுமே நான் சாய்சில் விடுகிறேன். இந்த மாதிரி வாதங்களுக்கு நான் வரவில்லை. இந்தியாவிற்குச் சுதந்திரம் கொடுக்கும் முன் வெள்ளைக்காரன் பேசியது போல இருக்கிறது. பின்னூட்டமிட வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

ஜடாயு said...

ஹரிஹரன்,

உங்கள் கருத்துக்களின் உயர்வான நோக்கம் எனக்குப் புரிகிறது. கோவிலில் பூஜை, ஆராதனை செய்வதற்கு முதல் தகுதிகள் பக்தி, சமய ஞானம், ஒழுக்கம் இவையே என்று சொல்ல வருகிறீர்கள். மாதா அமிர்தானந்தமயி அவர்கள் நிறுவியுள்ள கோயில்களில் பல சாதிகளையும் சேர்ந்தவர்களும், பெண்களும் பூஜை செய்கிறார்கள். உள்ளார்ந்த ஆன்மிக உணர்வுடன் செய்யப் படும் இந்தப் பூஜைகளால் அங்கே தெய்வீகச் சூழல் தழைக்கிறது.

இதிலிருந்து என்ன தெரிகிறது? இத்தகைய சீர்திருத்தத்தைக் கொண்டுவர முழுத் தகுதி படைத்தவர்கள் ஆன்மிகத் தலைவர்களே. அரசியல் வாதிகள் அல்ல, அதுவும் கண்டிப்பாக நாத்திகம் பேசும், இந்து விரோத அரசியல் வாதிகள் அல்ல.

ராகவன் கோயில் வழிபாட்டை ஒரு அரசியல் கண்ணோட்டத்துடனேயே பார்க்கிறாரோ என்று எனக்கு சந்தேகம் ஏற்படுகிறது.

G.Ragavan said...

// ஜடாயு said...

ராகவன் கோயில் வழிபாட்டை ஒரு அரசியல் கண்ணோட்டத்துடனேயே பார்க்கிறாரோ என்று எனக்கு சந்தேகம் ஏற்படுகிறது. //

அரசியல் கண்ணோட்டமெல்லாம் இல்லை. ஏன் அப்படி உங்களுக்குத் தோன்றுகிறது?

கோயில்கள் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ...அல்லது இந்து மதத்திற்காக ஏதேனும் ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் கட்டுப்பாட்டில் இயங்குகிறதோ...எப்படியிருந்தாலும் என்னுடைய கருத்துகளைச் சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை.

ஆன்மீகத்தலைவர்கள் கூடிச் செய்தாலும் நான் வரவேற்கத் தயாராக இருக்கிறேன். யார் செய்யப் போகிறார்கள். அதைச் சொல்லுங்கள்.

Hariharan # 03985177737685368452 said...

//இந்தியாவிற்குச் சுதந்திரம் கொடுக்கும் முன் வெள்ளைக்காரன் பேசியது போல இருக்கிறது.//

இல்லை இராகவன். இந்தியா சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளில் 40 ஆண்டுகள் என 67% காலம், தமிழ்நாடாக தனித்து அடையாளம் பெற்ற 50 ஆண்டுகளில் 40 ஆண்டுகள் என 80% காலம் அதிகாரத்தில் இருந்து ஆட்சி செய்த இந்த திராவிட இயக்கங்களின் சீரிய செயல்பாடுகள் கண்டபின்னே சொல்கிறேன்.

தமிழகத் தலைநகரில் ஓடும் கூவம், அடையாறு நதிகளைச் சாக்கடை ஆக்கிய தொலைநோக்குப்பார்வை,
தமிழக நதிநீர்ப் பங்கீட்டைக் கையாளும் திறமை,தமிழகம் முழுதும் அனத்து அரசு அலுவலகங்கள் மற்றும் 90% காவல்துறை ஆட்கள் காட்டும் நேர்மை என இந்த அரசியல் தலைமை, வட்ட, மாவட்டங்கள் நாறடித்த செயல்பாட்டுத்திறமை அரைநூற்றாண்டு நேரடியாகக் கண்டு அனுபவித்து சொல்கிற நிதர்சனம் இது.

//நீங்கள் குறிப்பிட்ட அத்தனை கருத்துகளையுமே நான் சாய்சில் விடுகிறேன்.//

சரி உங்கள் விருப்பம்.

//இந்த மாதிரி வாதங்களுக்கு நான் வரவில்லை.//

ஆக்கமான மாற்றங்கள் வேண்டும் எனக் கனவு காண்கின்றீர்கள். நடைமுறையில் இருக்கும் மிகைப்படுத்தப்படாத சிக்கல்களைச் சுட்டினால் வாதங்களுக்கு வரவில்லை என்கின்றீர்கள். உங்கள் இஷ்டம்.

//பின்னூட்டமிட வாய்ப்பளித்தமைக்கு நன்றி. //

??? புரியலை இது (உள் குத்து?)

ரவி ஸ்ரீநிவாஸ் said...

If govt. will not intervene in religious affairs of Christians and Muslims why should it manage
temples.Why not leave it to Hindus.
I think such ideas may sound radical but we need to evaluate
the pros and cons of govt. management of temples based
on the experience so far.To start
with Hindus should demand
1,All money, income and other
things such as gifts should be
spent only for Hindu religious purposes or for maintaining Hindu temples.
2,Govt. should ensure that all properties and assets are properly
managed and accounted for
3,Govt should not interfere in
religious affairs and should
stop with managing temple.It
should have no role in rituals
and other matters where religious
authority is not with govt.
4,Govts performance must be audited by the community
and in case of poor performance
and mismanagement govt should be
made accountable for
5,Remind govt. that it is only
a trustee and not owner of temples.

The problem with persons like G.Ragavan is they can be easily
fooled in the name of equality,
language. They fall in the traps
sent by irrationalists. They fail
to see the fact these irrationalists have no respect
for Hindu religion and would be
happy if Hinduism were to be
destroyed.That is their objective.

Hariharan # 03985177737685368452 said...

//கோவிலில் பூஜை, ஆராதனை செய்வதற்கு முதல் தகுதிகள் பக்தி, சமய ஞானம், ஒழுக்கம் இவையே என்று சொல்ல வருகிறீர்கள். மாதா அமிர்தானந்தமயி அவர்கள் நிறுவியுள்ள கோயில்களில் பல சாதிகளையும் சேர்ந்தவர்களும், பெண்களும் பூஜை செய்கிறார்கள். உள்ளார்ந்த ஆன்மிக உணர்வுடன் செய்யப் படும் இந்தப் பூஜைகளால் அங்கே தெய்வீகச் சூழல் தழைக்கிறது.//

சரியான தங்கள் புரிதலுக்கு நன்றிகள்.
கண்டிப்பாக கோவில்கள் பிரச்சினைகளுடன் போராடும் சாதாரணனுக்கு அவனது மன ரணத்துக்கு பொருளியல் சூழலினின்று முற்றிலும் விலகி மன அமைதியைத் தரும் ரிஜூவனேஷன் மையங்களாக இருப்பது தொடரவேண்டும்.

தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் அரசுநிர்வாகத்தில் இவை ஏதும் கண்டிப்பாகக் கிடைக்காது.

கேரளாவில் அரசே கடவுள் இல்லை என்று பிதற்றுவதில்லை என்பது மிகமுக்கியமானது.

அமிர்தானந்தமயியும், சாய்பாபாவும், சின்மயாவும், ராமகிருஷ்ணாமிஷனும் முழுச் சுதந்திரமாக கல்வி, மருத்துவம், ஆன்மீகம் என மக்கள்சேவையில் ஈடுபட தமிழ்நாட்டில் முடிவதே இல்லை ஏன்?

//இதிலிருந்து என்ன தெரிகிறது? இத்தகைய சீர்திருத்தத்தைக் கொண்டுவர முழுத் தகுதி படைத்தவர்கள் ஆன்மிகத் தலைவர்களே. அரசியல் வாதிகள் அல்ல, அதுவும் கண்டிப்பாக நாத்திகம் பேசும், இந்து விரோத அரசியல் வாதிகள் அல்ல.//

ஒப்புக்கொள்ளவேண்டிய கருத்து இது.

Hariharan # 03985177737685368452 said...

ரவி சீனிவாஸ்,

மதச்சார்பின்மை மதம், இந்துமத பரிகசிப்பு மதம் என்பதில் நம்பிக்கையுள்ள (தமிழக) அரசின் கட்டுப்பாட்டில் இந்துமதக் கோவில்கள் இருக்கக் கூடாது.

கோவில் சொத்துக்களை வெங்காய அரசியல் தலைவர்களது பரிந்துரையில் ஆக்ரமித்து அபகரிக்கும் வட்ட, மாவட்ட அரசியல் தலைவர்களது கட்டுப்பாட்டில் இருந்து இந்துக்கோவிகளது சொத்துக்கள் மீட்கப்பட்டே ஆகவேண்டும்.

விளக்கமாக இதுபற்றித் தனியாகப் பதிவிடுகிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Anonymous said...

அமிர்தானந்தமயியும், சாய்பாபாவும், சின்மயாவும், ராமகிருஷ்ணாமிஷனும் முழுச் சுதந்திரமாக கல்வி, மருத்துவம், ஆன்மீகம் என மக்கள்சேவையில் ஈடுபட தமிழ்நாட்டில் முடிவதே இல்லை ஏன்?

இது மிகவும் யோசிக்கவேண்டிய கேள்வி.
உண்மை குத்துது.