Wednesday, January 24, 2007

(110) எனக்குப் பிடிக்காததே என் வாழ்வாவது

எனக்குப் பிடிக்காதது ஒன்றாயிருக்க காலம் இதுவரை அதற்குள்ளேயே வம்படியாக என்னைத் தள்ளிவிட்டு வந்திருக்கிறது.

*பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது பத்தாம் கிளாஸ் வரைக்கும் அறிவியல் பாடத்தில் வரும் இயற்பியல் (பிஸிக்ஸ்)பகுதி பிடிக்காது!

*அடியேன் ப்ளஸ்டூவில் பர்ஸ்ட் குரூப்பில் இருந்தபோது பிஸிக்ஸ் தனியான ஒரு பாடமாகப் படிக்கவேண்டியிருந்தது. (இருந்தாலும் சமாளித்து ரொம்ப ரசித்துப் படித்து 92% எடுத்தேன்)

*பிளஸ்டூவில் பிஸிக்ஸ் பாடத்தில் வரும் எலக்டிரானிக்ஸ் பகுதி எனக்கு பிடிக்காது! (செமி கண்டக்டர் பிஸிக்ஸில் ஒரு டிரான்சிஸ்டரை அடிவாய், உமிழ்ப்பான், சேர்ப்பான் என்றும் Commonbase சர்க்யூட்ஐ பொது அடிவாய்ச் சுற்று என்று கல்வித்துறை மொழிபெயர்ப்பும், கலைச்சொற்களும் தமிழில் படுத்தி எடுக்கும் :-(( )

*கல்லூரியில் பட்டப் படிப்பில் இண்டஸ்டிரியல் எலக்டிரானிக்ஸ் எனது முதன்மை பிரிவு என்றானது :-(

*இண்டஸ்டிரியல் எலக்டிரானிக்ஸ் கல்லூரிப்படிப்பில் ஒரு சப்ஜெக்டான "இன்ஸ்ட்ரூமெண்டேஷன்" சப்ஜெக்ட் எனக்குப் பிடிக்காது

*மேற்படிப்பாக "டிஜிடல் இன்ஸ்டிருமெண்டேஷன்" பிற்பாடு படிக்கவேண்டியதானது

*வேலைக்கு வந்து முதன் முதலா "டெக்னிகல் சேல்ஸ்& மார்க்கெட்டிங்" சேர்ந்தபோது தலைநகர் சென்னையில் ஆங்கிலம் பேசத் தடுமாறி (தமிழ்மீடியத்திலே பள்ளியிறுதி வரை படித்ததால்) வேலையை ராஜினாமா செய்துவிட்டு பொட்டியைக் கட்டிக்கொண்டு சென்னையைத் துறந்து சொந்த ஊர் சென்று அடுத்த ஆறுவாரத்தில் சுவற்றில் அடித்த பந்துமாதிரி சென்னைக்குத் திரும்பி வந்தேன். மீண்டும் சென்னை வந்து வேலையிலும் ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற்றேன்.

*தற்போது பத்தாண்டுகளாகச் சோறு போடுவது "டெக்னிகல் சேல்ஸ் & மார்க்கெட்டிங்" சார்ந்த வேலை தான்!

*வாழ்க்கையில் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கொள்வது என்று ஆசைப்பட்டேன். ஆனா கல்யாணம் செய்து மனைவியைக் காதலிக்கிறேன். (கல்யாணம் பண்ணிட்டும் இன்னும் எனக்குக் காதலிக்கத் தெரியவில்லை என்பது மனைவியின் கம்ப்ளைண்ட்)

*இப்போ சமீப காலங்களா தமிழ்நாட்டு அரசியல் சுத்தமா இல்லைன்றதாலே அரசியலே சுத்தமாப் பிடிக்கிறதே இல்லை எனக்கு (எந்தத் தேர்தலுக்கும் ஊரில் இல்லாததாலும் வாக்காளர் அட்டை இல்லாததாலும் இதுவரை ஓட்டுக்கூடப் போட்டதில்லை அடியேன்)

*இதுவரையிலான என்னோட வரலாற்று வாழ்க்கையை அலசியதன்படி அரசியல்வாதி ஆகிடுவேனோன்னு ஒரே பயமா இருக்குங்க எனக்கு

*தமிழ்நாட்டு மக்களுக்கு விதிவலியது என்று இருந்தால் கல்விஉதவி-சமூகசேவை-அரசியல்ன்னு என்னை எதிர்கொள்ள வேண்டியிருக்குமோ?

*தமிழ்நாட்டோட ஜாதகத்தை ஒரு காப்பி அனுப்பவும் எனக்கு. பின்னே என்னோட ஜாதகம் தமிழ்நாட்டோட பொருந்திப் போகுறதையும் கணிச்சாத்தானே வெற்றியடையமுடியும் ( ரஜினி-கே.எஸ்.ரவிகுமார் ஜாதகப் பொருத்தம்..சக்குபாய் படம் டிராப்பானது பேக்டிராப்ல வருதா?)

*நல்ல ஜோஸியர் இருந்தால் ரெக்கமெண்ட் செய்யவும். பகுத்தறிவோடு அரசியல் எதிர்காலம் கணிக்கத்தாங்க! பின்ன அரசியல்வாதியானா என்ன கலர் துண்டு போடனும்னு முதல்லயே முடிவு செஞ்சுடணும்ல!

*விஜய்காந்த் மாதிரி நேர்மையான போலீஸ் ஆபீசர் சினிமாவா நிறையப் பார்த்ததில் "அசிஸ்டெண்ட் கமிஷனர் ஹரிஹரன் ஐபிஎஸ்"-ன்னு போலீஸ்ஜீப்ல கொடிபறக்க ஆகணும்னு (கொடிபறக்குது ரஜினி அசிஸ்டெண்ட் கமிஷனர் ஈரோடு சிவகிரி) ஆசைப்பட்டேன்... ஆனா இதுக்கெல்லாம் நேரெதிரா எங்கே திருடனா ஆகிடுவேனோன்னு (மக்கள் மனதைத் திருடும் திருடனாத்தாங்க) தனியா இருக்கிறப்போ இப்போ ஃபீலிங்ல சீலிங்கை அப்பப்போ பார்க்கிறேன்.

அன்புடன்,


ஹரிஹரன்

3 comments:

Hariharan # 03985177737685368452 said...

டெஸ்ட் மெசேஜ்!

Anonymous said...

ஹரி
மனைவியை காதலிப்பது பற்றி ஒரு பதிவு போடுங்க.அது தான் மிகவும் கஷ்டமான வேலை உலகத்திலேயே!!
மனைவியிடம் போட்டு கொடுத்திடாடீங்க!!
என் மனைவி பார்க்கும் முன்பு காணமல் போகக்கடவது(இந்த பின்னூட்டம் மாத்திரம்)
அரசியலுக்கு வருவதால் இருந்தால் இப்போதிருந்தே ஏதோ யாகம் பண்ணிக்கொண்டிருக்கவும்.பிற்காலத்தில் யாரும் குத்திக்காண்பிக்க மாட்டார்கள் அல்லவா?
:-))

Hariharan # 03985177737685368452 said...

வாங்க!குமார்,


//மனைவியை காதலிப்பது பற்றி ஒரு பதிவு போடுங்க.அது தான் மிகவும் கஷ்டமான வேலை உலகத்திலேயே!!
மனைவியிடம் போட்டு கொடுத்திடாடீங்க!!//

இருப்பதிலேயே கஷ்டமான காரியம் காதலிக்கிறது தானுங்க! பெரிய இம்சையான விஷயம்! மனைவியைக் காதலிக்கிறது...ஸ்ஸ்ஸ்வேணாங்க எதுவும் சொல்லவே மாட்டேன் :-))
தங்கம் கிராம் 1000 ஆயிடுச்சு :-((

//அரசியலுக்கு வருவதால் இருந்தால் இப்போதிருந்தே ஏதோ யாகம் பண்ணிக்கொண்டிருக்கவும்.பிற்காலத்தில் யாரும் குத்திக்காண்பிக்க மாட்டார்கள் அல்லவா?//

சண்டி ஹோமம் செஞ்சு சண்டித்தனம் செய்றவங்களைச் சமாளிக்கணுமா? :-))