(111) மேஜிக்..சூப்பர் மேஜிக் ஷோ அனுமதிக்கு அல்லேலூயாசொல்லு
செந்தழலார் ரெண்டு ரூபாய்க்கு பாபா மேஜிக் காட்டினார். இந்த மேஜிக்ல கிடைக்கிறது ஒரு பவுன் மோதிரம், வீபூதி, ரோசாப் பூ என மேக்ஸிமம் வேல்யூ மொத்தமே 10,000 ரூபாய்தான். அதுவும் உங்களுக்குக் கிடைப்பது வீபூதி, ரோசாப்பூ மட்டும்தான். துரைமுருகன், தயாநிதி ரேஞ்சில் இருந்தால் ஒருபவுன் மோதிரம். நாமெல்லாம் ஏழைபாழைங்க நமக்கு மோதிரம் மாதிரி மதிப்பான பொருள் கிடைக்க சான்ஸ் கம்மிதானே!
நான் சொல்லும் இன்னொரு சூப்பர் மேஜிக் ஷோக்கு டிக்கெட் ரெண்டுரூபாய்க்குக்கூட எடுக்க வேண்டியதில்லை. சும்மா ரெண்டுவாட்டி அல்லேலூயா அல்லேலூயான்னு கத்துங்க போதும்.
*குருடர்கள், சரியா கண்ணுத் தெரியாதவருக்கு பார்வை வர கண்தானம் பெற்றுச் சிகிச்சைன்னு விஞ்ஞான ரூட்டில் போனா பஸ், டிரெய்ன், தங்குமிடம்னு அது மட்டுமே 10,000/- செலவாகும்
லேசர் டிரீட்மெண்ட் ரூட்ல போனா 25,000/- விஜயா அகர்வால்ன்னு அலைஞ்சு அல்லோலப்படணும்.
*செவிடர்கள் செவிட்டு மிஷின், செவி அறுவை சிகிச்சைன்னு 10,000/- க்கு மேலெ செலவு செய்யணும். ஈ.என்.டி ஆஸ்பத்திரியா ஏறி இறங்கி ஈனப்பொழப்பாத் திரியவேண்டிவரும்.
*முடவர்கள் ஜெய்ப்பூர் செயற்கைக்கால், தாங்குகட்டை, வீல் சேர்ன்னு ஏகப்பட்ட செலவு குறைந்தது 10,000/- செலவழிக்கணும்
ஜெய்ப்பூர் செயற்கைக் கால்கள் எடைமிகுந்ததாய் இருப்பதால் ஊனமுற்றவர்கள் படும் அவதியை விஞ்ஞானிஅப்துல்கலாம் எடைகுறைந்த செயற்கைக் கால்களைக் கண்டுபிடித்துத் தீர்த்தார்.
அப்துல்கலாம் மாதிரியான விஞ்ஞானிகள் உலகமறியாத முட்டாள்.
நம்மூர் சென்னை மெரீனாகடற்கரை சீரணி அரங்கில் நடக்கும் "அற்புத சுகமளிக்கும் சுவிசேஷக் கூட்டத்தில்" பங்கேற்கும் முடவர்கள் நடக்கின்றார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள்,
குருடர்கள் பார்க்கின்றார்கள்.. பெங்களூருவில் அமெரிக்காவில் இருந்து வந்து பாதிரிமார்கள் சென்ற ஆண்டு இப்படி பெரிய அளவில் அற்புத சுகமளிக்கும் கூட்டம் நடத்தினார்கள். நீங்களும் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
இந்த அற்புத சுகமளிப்புக்கூட்டத்தில் டிவிகேமெராவில் பார்க்கவேண்டிய சிரமமும் இருக்காது நேரிலேயே முட,செவிட்டு,குருட்டுக் குறைபாடுள்ளவர்கள் அல்லேலூயா...அல்லேலூயான்னு கண்ணைமூடிக் கத்தியபடியே சரியாகி மேடையிலேயே பார்த்து, கேட்டு, நடந்து குறைபாடு சரியாகி பரவசப்பட்டு ஆனந்தமாவார்கள்.
மக்களே உங்கள் ஊரில் இருக்கும், உங்களுக்குத் தெரிந்த இந்த உடல் குறைபாடுள்ளவர்களை டி.ஜி.எஸ் தினகரன், காருண்யா நிறுவனத்தையோ ஜோஷுவா நிறுவனத்தையோ அணுகும்படி செய்வீர். பாபாவின் தங்க மோதிர மதிப்பை விட பன்மடங்கு மதிப்புள்ள மருத்துவ சிகிச்சை கிடைக்கும் அவர்களுக்கு இங்கே.
இல்லையேல் இந்துமத வெறிகொண்ட ஜெயலலிதாவால் இடிக்கப்பட்டு, பகுத்தறிவுக் கருணாநிதியால் புனரமைக்கப்பட்ட மெரீனா கடற்கரை சீரணி அரங்கில் நடைபெறும் ஆண்டுத் திருவிழாவான " அற்புத சுகமளிக்கும் சுவிசேஷக் கூட்டங்களுக்கு" வந்து நேரடியாகப் பலன் பெற்று வாழும் நேர்மையான சீரிய வழி இருப்பதைத் தெரிவிக்கவும்.
குறிப்பு-1:
தியேட்டர் ஆர்டிஸ்டாக கூத்துப்பட்டறை / பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இடம் கிடைக்காதவர்கள் நேரடியாகத் திறமையான நடிப்புப் பயிற்சி பெற சீரணி அரங்க அற்புத சுவிசேஷக் கூட்டங்களில் பங்கேற்கவும். இழந்ததைப் பெறுவீர்கள்.
குறிப்பு-2:
இந்தப் பதிவு எண் 111 என்று அமைந்தது தற்செயலான விஷயம் :-)))
இப்படிக்கு,
ஹரிஹரன்
38 comments:
டெஸ்ட் மெசேஜ்!
ரவி பதிவைப் போட்டாச்சு :-))
//இந்தப் பதிவு எண் 111 என்று அமைந்தது தற்செயலான விஷயம் //
சூப்பர் :))))))))
//இந்தப் பதிவு எண் 111 என்று அமைந்தது தற்செயலான விஷயம் //
:))
இதை கிருத்துவ ரவி பதிவிடிருந்தால் நேர்மையாக இருந்திருக்கும் , த்ன்னுடையதையும் கழுவ முயற்சீகிறார் என்று நினைத்திருக்கலாம் ,
ஆனால் சாய்பாபாவை பற்றி மட்டும் பதிவு போட்ட செந்தழல் ரவி தன் மத பிராடுகளைபற்றி ஒன்றுமே பேசாதது ஏன் ? மறைமுக மதமாற்ற எண்ணமோ ?
( வெளியிடுங்கள் ஹரிஹரன் , ரவிக்காக உண்மையை மறைத்துவிடவேண்டாம் )
அப்படியே சண்டி ஹோமம் செய்தால் எதிரிகள் நாசமாய் போய்விடுவார்கள் என்று ஹோமோ குண்டத்தில் பட்டுசேலைகளாக எரிக்கும் பெரிய"வால்" சின்ன"வால்" பற்றியும் கொஞ்சம் எழுதுனா நல்லாயிருக்கும்
நல்ல வேகம்தான்..!!!
//அப்படியே சண்டி ஹோமம் செய்தால் எதிரிகள் நாசமாய் போய்விடுவார்கள் என்று ஹோமோ குண்டத்தில் பட்டுசேலைகளாக எரிக்கும் பெரிய"வால்" சின்ன"வால்" பற்றியும் கொஞ்சம் எழுதுனா நல்லாயிருக்கும்//
சரிங்க செந்தில் , அதுக்கு முன்னாடி உங்க திராவிட பெருந்தலைகள்
1.வெங்காயத்தின் 80 வயசு சின்னவீட்டு கல்யாணம்
2. காஞ்சித்தறுதலையின் நான் பத்தினி - உத்தமனல்ல வாக்குமூலம்
3. மொத்தமா அஞ்சு கல்யாணம் பண்ணின அஞ்சுகம் மகனோட வரலாறு
இதையெல்லாம் ஒரு தொடர்கதையா பத்து பதிவா போடுங்க பார்ப்போம் , ( காமச்சுவைக்கு வேணும்னா "வாழப்பிறந்தவர்களையோ" அடாதகருப்பையோ துணைக்கழைச்சுகங்க .
அப்புறம் ஹரிஹரனிடம் கேக்கலாம்
"இலையை எடுக்க சொன்ன இலையை எடுக்கனும்" அத விடுபுட்டு சோறு வீணாகுதேன்னு சொன்ன கதையா நீ எதுக்கு பெருசு குதிக்கிற ....
நான் அங்க கேட்டேன், பதில் அவரு சொல்லட்டும் . இன்னிக்கு போனி நீங்களாயிடாதீங்க
:)))))))))))
//குறிப்பு-2:
இந்தப் பதிவு எண் 111 என்று அமைந்தது தற்செயலான விஷயம் :-)))//
இதுக்குப்பேருதான் பின்னூட்டக் குறிப்பு...:)))))
சென்ஷி
:-)) கலக்கல் பதிவு ஹரிஹரன். இந்தப் பதிவுக்கு என்னுடைய ஆதரவைத் தெரிவிக்கிறேன்.
அட்றசக்கை...அட்றசக்கை...
அட்றசக்கை...அட்றசக்கை...
அட்றசக்கை...அட்றசக்கை...
அட்றசக்கை...அட்றசக்கை...
அட்றசக்கை...அட்றசக்கை...
அட்றசக்கை...அட்றசக்கை...
அட்றசக்கை...அட்றசக்கை...
அட்றசக்கை...அட்றசக்கை...
அட்றசக்கை...அட்றசக்கை...
அட்றசக்கை...அட்றசக்கை...
/////இந்தப் பதிவு எண் 111 என்று அமைந்தது தற்செயலான விஷயம் //
சூப்பர் :))))))))//
ரிப்பிட்டே!
முடவர்கள் கேட்கிறார்கள், செவிடர்கள் நடக்கின்றார்கள்
குருடர்கள் பேசுகின்றார்கள்
இதுதாங்க உண்மை
கோவி.கண்ணன், ஜோ, கரு.மூர்த்தி. செந்தழல் ரவி- தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
எல்லா மதங்களிலும் அற்புதங்கள் நிகழத்தான் செய்கின்றன!
அதுதான் இறைவனின் கருணை!
தினகரன் நிகழ்த்துவது பொய்யெனச் சொல்லப் புகும்போதே, இவையும் பொய்யென நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதை உணரமல் போனது ஏனோ?
கருணையே வடிவான இறைவன் உண்மையான பிரார்த்தனைகளுக்கு நிச்சயம் செவி சாய்ப்பான்....அவர் எம்மதத்தைச் சார்ந்தவராயிருப்பினும்....அல்லது மதநம்பிக்கையே இல்லாதவராயிருப்பினும்!
அவன் தான் இறைவன்!
இதை நீங்கள் உணராமல் இப்படி ஒரு பதிவிட்டிருப்பது துரதிர்ஷ்டமே!
தினகரனும், தான் செய்வதாகச் சொல்லவில்லை!
அவர் நம்பும் இறையின் மீது நம்பிக்கை வைத்தே அனைவரையும் அழைக்கிறார்!
இவை எவையுமே அறியாமல் "இப்போது" இருக்கும் செந்தழலாரை இங்கு இழுப்பது முறையெனப் படவில்லை.
நன்றி.
//அப்படியே சண்டி ஹோமம் செய்தால் எதிரிகள் நாசமாய் போய்விடுவார்கள் என்று ஹோமோ குண்டத்தில் பட்டுசேலைகளாக எரிக்கும் பெரிய"வால்" சின்ன"வால்" பற்றியும் கொஞ்சம் எழுதுனா நல்லாயிருக்கும்//
வாங்க வரவணை செந்தில்,
தமிழுணர்வு வாள், பகுத்தறிவு வாள் என்று வாள் வாளாக உதார்விடும் வரவணையானுக்கு வக்கணையாப் பேச இங்கதான் வருமோ? பொங்கல் தமிழர் பண்டிகையே இல்லை என்று நல்ல அடியார் யாரோ சொன்ன போது பகுத்தறிவு திராவிட மறுமலர்ச்சிப் போர்வாள் ஏந்தியிருந்தும்
"வாளாதிருந்தது" ஏனோ நல்ல அடி கிடைக்கும் மெய்யாகவே என்று எல்லாம் மூடிக்கொண்டு கடமை ஆற்றிக்கொண்டிருந்தீரோ?
அது போகட்டும் யாகம் பற்றிய பலனுக்கு ஒரு விளக்கம்:
சண்டிஹோமம் என்றில்லை கணபதிஹோமம் என எந்த ஹோமமும் செய்யப்படும் இடத்தில் மினிமம் கேரண்டியாக ஹோமப்புகை காரணமாக கொசு ஒழிந்து போகும்-> கொசு ஒழிவதால் நல்லதூக்கம் கிரைக்கும்-> நல்ல தூக்கம் தெளிவாகச் சிந்திக்கவைக்கும் -> தெளிவான சிந்தனை செய்ய எதிராளியை எதிர்கொள்ள உருப்படியான வழி பிறக்கும்.
ஹோமகுண்டத்தில் இடப்படும் ஆகுதிகள்
என்பது எல்லாமும் இறைவனுடையதே என அவனுக்கு சேக்ரிஃபைஸ் செய்யப்படும் சிம்பாலிஸம்.
நேர்த்திக்கடன்னு ஆடு கோழி நாட்டார் தெய்வத்துக்கு பலியிடுவது எனும் சிம்பாலிஸம் மாதிரி!
//1.வெங்காயத்தின் 80 வயசு சின்னவீட்டு கல்யாணம்
2. காஞ்சித்தறுதலையின் நான் பத்தினி - உத்தமனல்ல வாக்குமூலம்
3. மொத்தமா அஞ்சு கல்யாணம் பண்ணின அஞ்சுகம் மகனோட வரலாறு //
கரு.மூர்த்தி அய்யா,
இந்த விஷயத்தில், குருவை மிஞ்சின சிஷ்யர் தான் மஞ்ச துண்டு.ஆனா 80 வயது தமிழர் தந்தை ,ஒரு சிறுமியை கல்யாணம் செய்து தமிழர்களுக்கு தீரா தலைக் குனிவை ஏற்படுத்தியது மாதிரி, மஞ்ச துண்டு கூட கேவலம் செய்ததில்லை என்பது என் கருத்து.
என்ன செய்வது, பகுத்தறிவு பேய்கள் கட்டவிழ்ந்து,பின் நவீனமாக ஆடியதால் விளைந்த கேடுகள் ஆயிரம்,ஆயிரம்.
பாலா
சென்ஷி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!
பாலா ,
நீங்கள் கேட்க்கும் கேள்விகளை தாங்க முடியாமல் போலி பாலாவாக உலா வருவது மிதக்கும் வலியா , வரவனையா ?
கரு.மூர்த்தி
//நீங்கள் கேட்க்கும் கேள்விகளை தாங்க முடியாமல் போலி பாலாவாக உலா வருவது மிதக்கும் வலியா , வரவனையா ?//
கரு.மூர்த்தி,
இந்தப் பஞ்சாயத்து இந்தப்பதிவில்தான் நடக்கணுமா? பதிவுப் பொருளோடு சார்ந்து பின்னூட்டமிடுங்கள் என்று வேண்டுகிறேன்.
கொசுறு: நம்ம சுயமரியாதை + பகுத்தறிவுப் பார்டிங்க கிட்டே கேள்வி கேட்டா அப்புறம் இங்க ---- என்று ஒருத்தர் இருந்தாரே என்று தேடிக்கிட்டே இருக்கணும் என்பது தெரிஞ்ச விஷயம்தானே!
கேள்விமட்டும் வரைமுறை இல்லாமல் கேட்பார்கள் அவர்களைக் கேள்விகள் கேட்டால் எஸ்கேப்புதான்
//:-)) கலக்கல் பதிவு ஹரிஹரன். இந்தப் பதிவுக்கு என்னுடைய ஆதரவைத் தெரிவிக்கிறேன்.//
நன்றி இராகவன்.
//ஆனால் சாய்பாபாவை பற்றி மட்டும் பதிவு போட்ட செந்தழல் ரவி தன் மத பிராடுகளைபற்றி ஒன்றுமே பேசாதது ஏன் ? மறைமுக மதமாற்ற எண்ணமோ ?//
டிஜிஎஸ் தினகரன் & கோ வின் செயல்களை மோசடி என்று ரவி ஏற்றுக்கொண்டிருப்பதாகச் அவரது பதிவில் எனது பின்னூட்டத்திற்கு பதிலாகச் சொல்லி இருந்தார் ரவி.
இந்துமதத்தில் மிக உயரிய விஷயமே கருத்துச் சுதந்திரம் தான். இந்துவாக இருந்து கொண்டு இந்துமதத்தினையே மிகக் கடுமையாக விமர்சனம் செய்யமுடியும்.
சர்ச்களால் / ஜமாத் களினால் விமர்சகர்கள் விலக்கிவைக்கப்படும் அபாயம் மாதிரி இந்துமதத்தில் இந்துமத விமர்சகர்களுக்கு அச்சம் இல்லை என்பது இந்துமதத்தின் தனித்த சிறப்பு!
//நீங்கள் கேட்க்கும் கேள்விகளை தாங்க முடியாமல் போலி பாலாவாக உலா வருவது மிதக்கும் வலியா , வரவனையா ?//
//இந்தப் பஞ்சாயத்து இந்தப்பதிவில்தான் நடக்கணுமா? பதிவுப் பொருளோடு சார்ந்து பின்னூட்டமிடுங்கள் என்று வேண்டுகிறேன்.//
:))))))))))))))))))
யாரெல்லாம் ஃப்ரீயா இருக்காங்களோ அவங்கள்ளாம்,
முதலில் பாலா என்பதும் கரு.மூர்த்தி என்பதுமே போலியான ஆட்கள்தாம். பார்ப்பனருக்கு ஆதரவாய் பின்னுட்டமிட்டால் உடனே அவர்கள் நல்லவர்களாகிவிட முடியுமா
எஸ்கே சார்,
சாய்பாபாவை ஒரு சமூக அக்கறை கொண்ட, இந்து ஆன்மீக வழி பிலாந்தெரபிஸ்டாகப் பார்க்கிறேன் நான்.
சாய்பாபாவுடன் டிஜிஎஸ் தினகரனை ஒப்பிட இப்பதிவு இல்லை.
செந்தழல் ரவி வீபூதி, லிங்கம்,ரோஜாப்பூ, மோதிரம் எடுத்துத் தருகின்ற பாபாவை நையாண்டி செய்தபோது கிறித்துவ சுவிசேஷக் கூட்டங்களில் நடக்கும் விஷயத்தைச் சுட்டினேன்.
மற்றபடி "பகவான்" சாய்பாபா மீது அவரது இந்துமதச் சேவை, பொதுமக்களுக்கான சேவை தவிர்த்துக் கேள்விகள் உண்டு எனக்கு.
தன்னையே தெய்வம் என்று சொல்லிக்கொள்பவர்கள் மீது கேள்விகள் எனக்கு உண்டு. (மேல்மருவத்தூர், சாய்பாபா, போன்ற சுய அறிவிப்பு தெய்வங்கள்)
இந்துமத மூலமான வேதங்களை நம்புகிறேன். சுய அறிவிப்பு தெய்வங்களை தெய்வ அறிவிப்பு தவிர்த்துவிட்டு அவர்களது சேவைக்காகவும், இந்துமத, வேத நெறி நம்பிக்கையை முன்னெடுத்துச் செல்வதற்காகவும் பாராட்டுகிறேன்.
ஹதயோகம் என்பதான மிஸ்டிசிஸம் பற்றி, ஜோஸிய, ஜாதகக் கணிப்புகள் மெய்யாக முன்பு இருந்திருக்கலாம் ஆனால் இன்று இத்திறன் இவர்களிடையே இருக்கிறதா என்பது கேள்வியாக எனக்குள் எழுகிறது.
சாய்பாபா தவமியற்றி அவருக்கு இச்சக்தி வந்ததாக என்று ஏற்றுக்கொண்டால், சில ஆண்டுகள் முன்பு புட்ட பர்த்தியில் அவர்மீது செய்யப்பட்ட கொலை முயற்சியில், சேப்டி அலார்ம்கள் உதவிய அளவுக்கு அவரது தவசக்தி உதவாது போனது ஏன் எனும் கேள்வியும் எழுகிறது.
சாய் பக்தர்களிடையே இக்கேள்விகள் கேட்டால் நட்பு முறிந்துவிடும் என்கிற அளவுக்கு சாய்பாபா மீது பொஸசிவ்வாக இருக்கின்றார்கள் :-))
சங்கராச்சாரியார்,சுவாமி சின்மயானந்தா,
தயானந்த சரஸ்வதி, இன்னும் பலர் வேத நெறி ஆசிரியர்களாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்.
இவர்கள் ஒருபோதும் தங்களைத் நடமாடும் தெய்வங்கள் என அறிவித்துக்கொண்டது இல்லை என்பதாலேயே இவர்கலை வழிகாட்டி/ஆசிரியர்களாகப் பார்க்க என்னால் முடிகிறது.
சில ஆண்டுகள் முன்பாக தயானந்த சரஸ்வதியிடம் நான் எனது வாழ்க்கையில் விரைந்து மேலேறி வர உபாயம் கேட்டபோது என்னைப் பற்றி விசாரித்துவிட்டு முடிக்காமல் வைத்திருக்கும் எம்பிஏவை முடித்தால் மேலேறலாம் என்றார். தாயத்து தராமல் ஆசிரியராக இன்றைக்கு நேரிடையாக உதவும் வழியைத்தான் சொன்னார்.
//முதலில் பாலா என்பதும் கரு.மூர்த்தி என்பதுமே போலியான ஆட்கள்தாம். பார்ப்பனருக்கு ஆதரவாய் பின்னுட்டமிட்டால் உடனே அவர்கள் நல்லவர்களாகிவிட முடியுமா//
வரவணை செந்தில்,
யார் போலி, யார் நல்லவர்கள் என சர்டிபிகேசனை விட்டு விடலாம். எனக்கு அதுபற்றி அக்கறை இல்லை. அது பதிவில் அவசியமும் இல்லை.
பொங்கல் இந்துப்பண்டிகையா? தமிழர் பண்டிகையா இல்லையா? உங்கள் கருத்து என்ன எனச் சொல்லுங்கள் வரவணை.
பதிவுக்குச் சம்பந்தமில்லாமல் பேசுவது எனும் போது இதற்கு பதில் சொல்லாமல் போகலாமா? தங்களது தமிழ், தமிழர் மீதான "பற்று" இவ்வளவுதானா?
கும்பல் சேர்ப்பதர்க்கு சாய்பாபாவும், தினகரனும், இன்னும் பலப்பல சாமிகளும், மோடி மஸ்தான் வேலை செய்கிறார்கள்.
கிடைக்கும் வசூலை நல்ல விதமாக செலவு செய்தால் இதில் பெரிய தப்பொன்றும் இல்லை.
இலவச ஆஸ்பத்திரி, இலவச உணவு, அரசுக்கு நன்கொடைகள் இவை எல்லாம் நல்ல விஷயம்தானே.
செந்தழல் ரவி எழுதியதையும், நீங்கள் எழுதி இருப்பதையும் படிக்கும் அனைவருக்கும் தெரியும் இந்த மோடி மஸ்தானிஸம் எல்லாம்.
நிஜத்தில் இதெல்லாம் புரிய வேண்டியவர்கள், இவர்கள் கடவுளின் அவதாரங்கள், குறையை இவர்களாவது தீர்ப்பார்கள் என்றெண்ணி, மொத்தத்தையும் செலவு செய்து, ஊர் விட்டு ஊர்வந்து அந்நார்ந்து பார்த்து ஏமாறும் ஏழை ஜனம்.
ஆனாலும், இந்த படிக்காத ஏழை ஜனம் நம்மூரில் படும் பாடும், ஏமாற்றப்படும் விதமும் இருக்கே.. அடேங்கப்பா!
அரசு, சாய்பாபாக்களின் மேஜிக் ஷோக்களுக்கும், தினகரனின் ஸ்விசேஷ கூட்டங்களுக்கும் தடா போட்டு பொது மக்களைக் காக்கலாம்.
இல்லன்னா, டி.வி ல அப்பப்போ ஒரு advertisement போட்டு விழிப்புணர்வு கொடுக்கலாம் இதுக்கெல்லாம்.
btw, இணையத்தில் இந்த கிண்டல் பதிவுகள் தேவை இல்லாதது. நேர விரையம்.
/இந்துமதத்தில் மிக உயரிய விஷயமே கருத்துச் சுதந்திரம் தான்./
சூப்பர் காமெடி.
யாழிசைச்செல்வன்,
ரொம்பவே சந்தோஷமோ? :-))
//முடவர்கள் கேட்கிறார்கள், செவிடர்கள் நடக்கின்றார்கள்
குருடர்கள் பேசுகின்றார்கள்
இதுதாங்க உண்மை//
கால்கரி சிவா,
அப்போ அங்கே யாருதான் (சரியாக)பார்க்கிறார்கள் :-))
//1.வெங்காயத்தின் 80 வயசு சின்னவீட்டு கல்யாணம்
2. காஞ்சித்தறுதலையின் நான் பத்தினி - உத்தமனல்ல வாக்குமூலம்
3. மொத்தமா அஞ்சு கல்யாணம் பண்ணின அஞ்சுகம் மகனோட வரலாறு //
கரு.மூர்த்தி அய்யா,
இந்த விஷயத்தில், குருவை மிஞ்சின சிஷ்யர் தான் மஞ்ச துண்டு.ஆனா 80 வயது தமிழர் தந்தை ,ஒரு சிறுமியை கல்யாணம் செய்து தமிழர்களுக்கு தீரா தலைக் குனிவை ஏற்படுத்தியது மாதிரி, மஞ்ச துண்டு கூட கேவலம் செய்ததில்லை என்பது என் கருத்து.
என்ன செய்வது, பகுத்தறிவு பேய்கள் கட்டவிழ்ந்து,பின் நவீனமாக ஆடியதால் விளைந்த கேடுகள் ஆயிரம்,ஆயிரம்.
பாலா//
பாலா,
வேப்பிறக்கித் திடல்ல சூரமணி பழைய வெங்காய சமையல் குறிப்பு எழுதிய வலைப்பூ பிரிண்ட் அவுட் பேப்பரை எடைக்கு எடை வாங்குகிறதுன்னு பழைய பேப்பர் யாவரம் செய்யறாராம்.
பாலா, கரு.மூர்த்தி கேள்விகளால எனக்கு எடைக்கு எடை போட்டு பண்ட மாற்றப் பரிமாற்ற யாவாரத்துல வெங்காய பஜ்ஜி கூடுதலா கிடைக்க இந்தப்பதிவின் பின்னூட்ட ப்ரிண்ட் அவுட்டால யோகமடிச்சுருக்கு. :-))
//சில ஆண்டுகள் முன்பு புட்ட பர்த்தியில் அவர்மீது செய்யப்பட்ட கொலை முயற்சியில், சேப்டி அலார்ம்கள் உதவிய அளவுக்கு அவரது தவசக்தி உதவாது போனது ஏன் எனும் கேள்வியும் எழுகிறது.//
ஹரி
இந்த பகுதியில் 'ஆன்மிக அற்புதங்கள்' குறித்த நக்கல்கள் மற்றும் கருத்துக்களில் உடன்பாடு என்றாலும் மேலே உள்ளதில் உடன்படவில்லை.
சக்தி உள்ள தெய்வங்கள் என்று என்ன தான் சொல்லி வந்தாலும் சிலைக் கடத்தல்காரர்களுக்கு முன் சக்தி எல்லாம் செல்லுபடியாகாது. மந்திரம், எந்திரம் எல்லாவற்றிற்குமே எதிர் மந்திரம் தந்திரம் எல்லா மதக் கான்செப்டுகளிலும் உண்டு. அழியக் கூடிய உடலை சுகாதாரமாக வேண்டுமானல் வைத்துக் கொள்ளலாம், எதிர்பாராத விபத்துக்கள், ஆபத்துக்கள் ஆகியவைவற்றை முன்கூட்டியோ தெரிந்து கொள்வதோ அல்லது அவைகளை முற்றிலும் அழிப்பதோ முடியாது. ஒருவேளை ஒன்று நடக்க இருந்து 'இதுபோல் நடக்க இருந்தது சக்தியால் தவிர்த்துவிட்டேன்' அல்லது 'சக்தியால் முறியடித்துவிட்டேன்' என்று அவர் சொல்லி இருந்தால் நம்பி இருப்பீர்களா ?
//'இதுபோல் நடக்க இருந்தது சக்தியால் தவிர்த்துவிட்டேன்' அல்லது 'சக்தியால் முறியடித்துவிட்டேன்' என்று அவர் சொல்லி இருந்தால் நம்பி இருப்பீர்களா ? //
கோவி. கண்ணன்,
இந்துமத வேதங்கள், உபநிடங்கள் அளித்த ரிஷிகள் அவர்கள்தான் அதை அருளினார்கள் என்று எதிர்காலத்தில் மக்கள் Identify செய்யவேண்டும் என்று செய்யவில்லை. உடல்,மனம்,புத்தி என்ற நிலை தாண்டி ஆத்மாவுடன் ஒன்றிணைத்துக்கொண்ட நிலையில் அவர்களுக்கு Identification பற்றிய உணர்வெல்லாம் இல்லை. இதனாலேயே இந்துமதத்திலிருக்கும் பல பெரிய உயரிய தத்துவங்கள் எவரால் அருளப்பட்டது என்று கூட அறிய முடிவதில்லை.
சாதாரணமாக சாய்பாபா பஜன்களில் ஒவ்வொரு அடியிலும் "சாய்" சேர்க்கப்பட்டு பாடப்படுவது என்பது சாய் என்கிற Identification மீதான பற்று என்றே நான் காண்கிறேன்.
குருபஜன் என்று பக்தர்களால் குருவைப் புகழ்ந்து சில பாடப்படும் ஆனால் எல்லாப் பாடல்களிலும் "சாய்"என்று வருவது Identification அப்படி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொள்ளுவதாகவும் பார்க்கவேண்டியிருக்கிறது.
ஒரு பற்று அற்று இருக்க வேண்டிய சந்நியாசியின் மனம் Identification என்கிற இதைத் தாண்டவில்லை எனில் பற்று அற்ற ஆத்மாவும் அவரும் ஒன்று என எண்ணவில்லை என்பதையே காட்டுகிறது.
இந்தமாதிரி Identification மீது பற்றுள்ள மனோநிலையில் "பகவான்" என்று விளிக்கப்படுவதும் ஏற்புடையதாகாது என்பது என் கருத்து.
பேட் நியூஸ் இந்தியா,
நேர விரயம்தான். ஜல்லிப்பதிவுகளும் போட்டாத்தானே பல்சுவை வலைப்பூ ஆகும் :-))
adapaavikala "ORIGINALA" comment potta anony listla serthu putingalapaa
:)))))))))))))))))))))))))))))
வரவணை செந்தில்,
இன்னிக்கு புது(பீட்டா)பிளாக்கருக்கு மாறிட்டேன். அதான் சில பேர் அனானியாகிடுச்சு நீங்க, வடுவூர் குமார்ன்னு சிலர் அடையாளம் இந்த மாற்றத்தினால் என நினைக்கிறேன்.
:-))
முடவர்கள் கேட்கிறார்கள், செவிடர்கள் நடக்கின்றார்கள்
குருடர்கள் பேசுகின்றார்கள்
அப்படீன்னா, ஊர்ல இருக்குற ஊனமுற்றவர்களை லிஸ்ட் எடுத்து சரி பன்ன வேண்டியது தானே. . . . . ?
நல்ல பதிவு, ஹரிஹரன் சார்,
(செந்தழல் ரவி அவர்களின் பதிவிலும் பின்னூட்டம் இட்டுருக்கிறேன், அவருடைய பதிவும் சரியான பதிவு என்று தான் நினைக்கிறேன்).
//மிதக்கும் வெளி said...
/இந்துமதத்தில் மிக உயரிய விஷயமே கருத்துச் சுதந்திரம் தான்./
சூப்பர் காமெடி.//
இந்துக்களாய் உணர்ந்து இந்துமத தத்துவப்படி வாழ்பவருக்குப் புரியும் விஷயம் இது.
இந்துக்கோவில் கருவறையில் நாப்கினைக் காயப்போடுவேன்னு நம்பிக்கை இல்லாதவர்கள் சொல்லமுடிவதும் இந்துமதத்தில் இருக்கும் கருத்துச்சுதந்திரம்தான்!
Post a Comment