Monday, July 10, 2006

(12.a) பாகம்-1 தமிழக அரசியல் திரா'விட' "பெத்தடின்" ?

அரசியல் திரா'விட' "பெத்தடினில்" மரத்துப்போய் விட்டதா நம் தமிழ்ச்சமுதாயம்?

நண்பர் கனகசபாபதி என்ற முத்து (தமிழினி)க்கு நன்றிகள். நான் வைத்த நீண்ட தலைப்புதான் ப்ளாக்கர் குளறுபடிக்குக் காரணம் என அறிவுறுத்தியதற்கு.

வாசிக்கும் வலைஞர்களுக்கு மீண்டும் சோதனை!

சில சேர்க்கைகளுடன் மீண்டும் பதிப்பிக்கிறேன்.

இது எனது முதல்(!?) அரசியல் /சமூகப் பார்வையிலான பதிவு.

நம் தமிழக மக்களின் சில அங்கீகரிப்பு /நிராகரிப்பு பற்றிய என் உளவியல் பார்வை.

கொஞ்சம் சமீப காலத்தைய பொதுமக்க்கள் கலந்து கொண்ட இரு பொது நிகழ்வுகளில் ஆரம்பிப்பதற்கு முன்பாக கொஞ்சம் சின்னதாக வரலாற்று முன்னோட்டம்.

கஜ்னி முகம்மத் துருக்கிய வம்சாவளி ஆப்கானிய அரசன் (இன்றைய ஆப்கானிஸ்தானில் காபூல்-காந்தகாருக்கு இடையில் உள்ள கஜ்னி எனும் இடத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவன் )அக்காலத்தில் இந்தியாவின் வளம், செல்வக்செழிப்பை அறிந்து 16 முறை படைஎடுத்துத் தோற்று, 17ஆம் முறை கி.பி 1025ல் இந்தியாவினுள் நுழைந்து இந்திய வரலாற்றில் நடந்த மிகக் கொடுமையான "சோமநாதபுரப் படையெடுப்பை" நடத்தியவன். கிட்டத்தட்ட 60,000 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். ஏராளமான பெண்கள் ஈவிரக்கமின்றி பலாத்காரம் செய்யப்பட்டனர். கணக்கிலடங்காச் செல்வங்கள் சோமநாதபுரக் கோவிலினிலிருந்தும், சோமநாதபுரக் கோவிலின் கட்டுப்பாட்டில் இருந்த 10,000 கிராமங்களினின்று கொள்ளையடிக்கப்பட்டது.

அப்போது சோமநாதபுரம் சிவன் கோவில் படு பிரசித்தமானது. கோவிலில் இருந்து கணக்கிலடங்கா நகைகள், இரத்தினங்கள் சூறையாடப்பட்டு ஆப்கானிஸ்தான் எடுத்துச்செல்லப்பட்டன. சோமநாதபுரம் கோவிலில் வழிபடப்பட்ட சிவலிங்கம் கஜ்னியில் நடைபாதையில் கால்களால் மிதித்து அவமரியாதை செய்யப்பட்டன.

அதுக்கென்ன இப்போ அப்டீங்றீங்க... வரேன்

ஒரு சில மாதங்கள் முன்பான சூரியத் தொலைக் காட்சி நிகழ்வு ஒன்றில் "க்விஸ்" ப்ரோக்ராம் கேள்வி : கஜ்னி எனும் வார்த்தைப் பதம் எதை நினைவுபடுத்துகிறது?

நிகழ்ச்சியில் பங்கேற்ற நம் மறத்தமிழ் இளைஞன் எழுந்து தந்த பதில்: "தன்னம்பிக்கை"
தொகுப்பாளினி படு உற்சாகத்துடன் "சரியான் விடை" என்று அறிவிக்கிறார்.

வேறு ஒரு டி.வி நிகழ்வில் ரமணா என்ற தமிழ்த் திரைப்படத்தை சமூகப் பொறுப்புடன் இயக்கி வெற்றிகண்ட இளம் இயக்குநர் முருகதாஸ் அவரது அடுத்த வெளியீடான 'கஜ்னி' என்று பெயரிடப்பட்ட படத்தைச் சிலாகித்துப் பேசும் போது படத்தின் தலைப்பான "கஜ்னி" எனும் சொல்லே தன்னம்பிக்கையைத்தான் குறிப்பதாகக் கூறினார்.

நம் மறத்தமிழ் மக்களும் "கஜ்னி" தலைப்புக்காகவே படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கினர்!

இது இப்படியே இருக்கட்டும்.

அரசியல் திரா'விட'த்திற்கு வருவோம். ஆதி பண்டைய காலத்திலிருந்து நமது தேசத்தை இணைக்கும் ஒருமைப்பாட்டு விஷயங்கள் ஹிந்து வழிபாடுகள் வடக்கே இருப்பவர் இராமேஸ்வரத்திற்கு வந்து வழிபடுவதும், தெற்கு நதிகளான காவேரி,கிருஷ்ணா, கோதாவரியில் புண்ய நீராடுவதும்,

அம்மாதிரி தெற்கே இருப்போர் வாரணாசி (காசி), பத்ரிநாத் சென்று வழிபடுவதும், த்ரிவேணி சங்கமமான கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகளில் நீராடுவதும் மற்றும் நமது இரு பெரும் இதிகாசங்களான இராமாயணம் மற்றும் மகாபாரதம் பற்றிய அறிவும் ஆகும்.

தமிழக அரசியல் திரா'விட'ம் இராமயணமே கிடையாது என்றது. பின்பு ராமாயண இதிகாசத்தில் வரும் "எதிர்"நாயகனான (வில்லன்) இராவணன் ஒரு திராவிடன் என்றது. மகாபாரதம் பம்மாத்து என்றது.

மகாபாரதத்தின் முத்தாய்ப்பாக கிருஷ்ணர் அர்ஜுனனுக்குச் சொன்ன 'பகவத்கீதை"யைப் பொய்யுரை என்றார்கள்.

1930களில் ஆரம்பித்து இந்த திரா'விடம்' தோய்ந்த கொள்கைகள் தமிழ் மக்களிடையே இந்தியாவை ஒருங்கிணைத்த ஹிந்து தெய்வவழிபாடுகள் கேவலப்படுத்திச் சொல்லப்பட்டன.

இந்த திரா'விடம்' தோய்ந்த கொள்கைகள் சார்ந்த அரசியல்/சமூக இயக்கம் விடுதலைப் போராட்டதில் வெள்ளைக்காரர்களை எதிர்த்து ஏதும் செய்யவில்லை.

மாறாக பிரிட்டிஷ் காரர்களே இந்தியாவை விட்டுப் போகின்ற கலகட்டத்தில் ப்ரிட்டிஷ்அரசு தொடரவேண்டும் என்று பகிரங்கமாகச் சொன்னது.

இத்தோடு தனித்தமிழ்நாடு கோரிக்கை வேறு சேர்த்துக்கொண்டு இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஆதிகாலத்திலிருந்து காரணமாயிருந்த ஹிந்து தெய்வவழிபாடுகள், இராமயண, மகாபாரத இதிகாசங்கள் கேவலப்படுத்திச் சொல்லப்பட்டன.

தனித்தமிழ்நாடு கோரிக்கை தேசவிரோதச் சட்டதின் நடவடிக்கைக்குக் கீழ் வருவதாகச் சொன்னவுடன் அதுவரை திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு என்றவர்கள் கப்..சிப் ஆனார்கள்.

எப்படியும் தனித்தமிழ்நாடு கிடைத்துவிடும் என்ற ஆர்வக்கோளாறில் தமிழ்ச் சமுதாயம் அதுவரை தேசியநீரோட்டத்தில் இருந்ததைச், இந்த திராவிட அமைப்புகளின் அறைகூவல்கள், செய்த ஹிந்து மத தெய்வ வழிபாடுகள், நம்பிக்கைகள் கலாச்சாரச் சிதைவுகள் இதர இந்திய ப்ராந்தியங்கள் நம் தமிழ்ச் சமுதாயத்தின் மீது கொண்டிருந்த கலாச்சார நம்பிக்கையைச் சிதைத்தார்கள்.

சரி இதற்கு இப்போ என்னன்றீங்கதானே இதோ வந்தாச்சு

இன்று தமிழ்ப்படங்களில் பெரு வெற்றி பெற்ற நாயகர்கள் பட்டியலிடுங்கள்: 1. கமலஹாசன்
2. ரஜினிகாந்த்
3. சரத் குமார்
4. சத்யராஜ்
5. நெப்போலியன்
6. கரண்
7. ப்ரகஷ்ராஜ் (சில படம்)
8. ஆனந்த ராஜ் (சில படம்)

எல்லோருமே "எதிர்"நாயகர்களாக (வில்லன்) இருந்து நாயகர்களாகி (ஹீரோ) ஆக தமிழக மக்களால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்.

நம் தமிழ்ச்சமுதாயம் இந்த எதிர் நாயகரை நாயகராக்கி அழகுபார்க்கும் அங்கீகரிப்பை உளவியலாக நோக்குங்கள் ராவணன் "திராவிடன்" என்ற என்ற "திராவிடப் பெத்தடின்" செய்கின்ற வேலை என்று புரியும்.

அதே மாதிரி தமிழ்ப்படங்களில் பெரு வெற்றி பெற்ற படங்களைச் சாம்பிளாகப் பட்டியல் இட்டுப் பாருங்கள்:
1. நாயகன்
2.தளபதி
3. அமரன்
4.பட்டியல்
5.கொக்கி
6.தலைநகரம்
7.திருமலை
8.புதுப்பேட்டை
9.பகவதி
10.ரெட்
11.தீனா

எல்லாமே தாதா, ரௌடிக்கள் ஹீரோயிஸக்கதைகள்.

நம் தமிழ்ச்சமுதாயம் இந்த தாதா, ரௌடிகளை ஹீரோவாக்கிப் பூரிப்பதைக் கொஞ்சம் உளவியலாக நோக்குங்கள் ராவணன் "திராவிடன்" என்ற என்ற "திராவிடப் பெத்தடின்" செய்கின்ற வேலை என்று புரியும்.

கூடுதலாக இந்த மாதிரி தாதா, ரௌடிக்கள் ஹீரோயிஸக்கதைகளில் நாயகிகள் பெரும்பாலும் "தெய்வ வழிபாடுகள்" என்று இருக்கும் ஹிந்துக் குடும்பத்தைச் சார்ந்தவளாக இருப்பாள்.

கொஞ்சம் உளவியலாக நோக்குங்கள் இதுவும் அரசியல் "திராவிடப் பெத்தடின்" செய்கின்ற வேலை என்று புரியும்.

இன்றைய அரசியலில் "காடுவெட்டி" குரு என்ற ரௌடி தாதா தேர்தலில் "மாவீரன்"குருவாக , இராயபுரம் மனோ, சேகர் பாபு போன்றோர் எம்.எல்.ஏ ஆக ஏற்றம் கண்டது,

நம் தமிழ்ச்சமுதாயம் இந்த தாதா, ரௌடிகளை எம்.எல்.ஏ, மந்திரி என்று உருவாக்கிப் பூரிப்பதைக் கொஞ்சம் உளவியலாக நோக்குங்கள் ராவணன் "திராவிடன்" என்ற என்ற "திராவிடப் பெத்தடின்" செய்கின்ற வேலை என்று புரியும்.

தனித்தமிழ்நாடு கோரிக்கை என்பது ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் போது சுயநலம், பேராசை கொண்ட சிலர் "டிஸைனை"க் களவாடித் தயாரிப்பு செய்ய முற்படும் போது அது சட்டவிரோதம், தண்டனை பாயும் என எச்சரித்ததும் பாதை மாற்றி அடக்கி வாசித்தாலும் நிறுவனத்தில் நம்பகத்தன்மை போய்விட்ட நிலையாகிப்போனது.

இதனைச் சரியாக்கிட ஏதும் திராவிட பம்மாத்து அரசியல் இயக்கங்கள் செய்யாது போனதில் பல இழப்புகள் தமிழகத்துக்கு.

காவிரியின் 700கி,மீயில் 600கி.மீ தமிழகத்தில் இருந்தும் காவிரியில் தண்ணீர் முறையாக வருகிறதா? இதை திராவிட பம்மாத்து அரசியல் இயக்கங்கள் சக திராவிட கர்நாடக மாநிலத்திடமிருந்து தமிழக தஞ்சை விவசாயிகளுக்கு உரிய காலத்தில் பெற்றுத்தர முடிகிறதா?

முல்லைப்பெரியார் அணையிலிருந்து தமிழகத்துக்குப் பாத்யதையான தண்ணீர் முறையாக வருகிறதா?இதை திராவிட பம்மாத்து அரசியல் இயக்கங்கள் சக திராவிட கேரள மாநிலத்திடமிருந்து தமிழக தென்மாவட்ட விவசாயிகளுக்கு உரிய காலத்தில் பெற்றுத்தர முடிகிறதா?

இந்திய ஒருமைப்பாட்டைச் செய்த அத்தனை விஷயங்களையும் தமிழகத்தில் குலைத்துவிட்டு, திராவிட பம்மாத்து அரசியல் இயக்கங்கள் நம் தமிழ்ச்சமுதாயத்தை "எதிர்"நாயகர் அங்கீகரிப்போராய் மனநோயில் தள்ளியதே இந்தத் திராவிட பம்மாத்து அரசியல் இயக்கங்கள் இதுவரை சாதித்தது.

தமிழ்நாட்டில் இருக்கும் மறத்தமிழனுக்கே குடிக்க, பயிர் செய்ய தண்ணீர் பெற்றுத்தர வக்கில்லாத திராவிட பம்மாத்து அரசியல் இயக்கங்கள் பாவம் இலங்கையில் வாடும் தமிழனுக்கு என்ன செய்வார்கள்?

தங்கர் பச்சான் சிறந்த ஒளி ஓவியர் அந்தளவில் சரி. மற்றபடி ப்ளேடால் முச்சந்தியில் நின்று கையைக் கிழித்துக்கொள் "மீடியா"வில் ஸ்கூப் நியூஸ் வரும் என்றால் அவரது சுய விளம்பரத்திற்காகச் செய்யக்கூடிய அக்கறைதான் அவரது இலங்கைத் தமிழர் விஷயத்தில் அவர் அக்கறை.

எவர் வந்து நம் நம் தமிழ்ச்சமுதாயத்தை இந்த திராவிட பம்மாத்து அரசியல் இயக்கங்கள் 70 ஆண்டுகளாக தந்த வந்திருக்கும் அரசியல் திரா'விட' "பெத்தடினில்" மரத்துப்போயிருக்கும் தமிழனை சுயநினைவுக்குத் திருப்புவது!

"தென்னாட்டுடைய சிவனே தமிழகம் காப்பாய்."

அன்புடன்,


ஹரிஹரன்.

7 comments:

Hariharan # 03985177737685368452 said...

முத்து(தமிழினி) has left a new comment on your post "(12) ஹரிஹரனின் அமானுஷ்ய அனுபவங்கள்-1":

ஹிஹி உங்க சமூக உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது :))

அதை விடுங்கள்..புதிய பதிவில் தலைப்பை சிறியதாக வைத்தால்தான்
பிளாக்கர் எடுக்கும்.

(இதில் திரா"விட" அரசியல் இல்லை)

வஜ்ரா said...

ஏங்க ஹரிஹரன் உங்களுக்கு இந்த வேலை...ஏற்கனவே எங்கள மாதிரி உள்ள ஆசாமிங்களுக்கு கிடைக்கிற கெட்ட பேர் தான் உங்களுக்கும் கிடைக்கும்...போதாத குறைக்கு நீங்கள் மனிதனே அல்ல, என்று ஒரு "ஆராய்ச்சியாளர்" வந்து தீர்ப்பு கூறுவார், அல்லது கேவலமாக உங்கள் பெயரை "பஞ்சர்" செய்வார்கள்!!

Geetha Sambasivam said...

நல்லா யோசிச்சு எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

Hariharan # 03985177737685368452 said...

ஷங்கர்,

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!

நான் என் கண்களால் பார்த்து, காதால் கேட்ட திரா'விட' விஷயங்கள் இவை.

என்னங்க ஷங்கர் உண்மையைப் பேசக்கூடாதாமா?

Hariharan # 03985177737685368452 said...

கீதா,

வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி.
அடிக்கடி வருக

ஜயராமன் said...

பெத்தடினின் குணமே அது இல்லாமல் ஒருத்தரையும் வாழ விடாது என்பதுதான்.

இங்கு எல்லாமே திராவிட மயமாகிப்போனது.

எங்கும் பரவும் விஷ பார்த்தீனிய செடி போல காற்றில் பரவி இது தமிழகத்தை ஆக்கிரமிக்கிறது. இதற்கு சான்று - புதிதாய் ஏதாவது செய்ய வேண்டும் என்று வந்த விஜய்காந்தும் இன்று 'திராவிட' பெயர் வைத்துக்கொண்டு அந்த ஜோதியில் கலந்தால்தான் ஓட்டு என்று நினைப்பதுதான்.

இதில் தமிழகம் இன்று கேலிக்கூத்தாகி நிற்கிறது. ஒருவருக்கும் இந்தியா தாங்கிய தலைமையோ, பார்வையோ இல்லை. தமிழக மக்கள் எங்கும் எதிலும் கலந்துகொள்ளாத நிலைமை வருகிறது.

இந்த திராவிடம் என்கிறதின் டெஃபனிஷனே ஒரு குழப்பமாக இருக்கிறது நான் உதயசூரியனுக்கு ஒட்டு போடவில்லை. நான் திராவிடனா. புரியவில்லை.

தங்கள் பதிவு விளைவித்த எண்ணங்கள் இவை எல்லாம். தங்கள் பதிவுக்கு நன்றி

நன்றி

Hariharan # 03985177737685368452 said...

பத்துவாட்டி பகுத்தறிவு எனவேண்டும், வானத்தை வளைப்பேன் என்ற சவடால் பேச்சு வேண்டும்... இறுதியாக எதுவும் உருப்படியாக மக்களுக்கு செய்துவிட மனதில் நினைக்கக் கூட நினக்காதீர்.

அக நானூறு, புற நானூறு, சிலப்பதிகாரம் என்று சில வெண்பாக்கள், செய்யுள் மனனமாகத் தெரிந்திருந்தால் நீங்கள் அரசியல் திரா'விட'ரே!