Wednesday, July 05, 2006

(8) "ஆறு"ச்சாமியாக ஹரிஹரன்

"தொழிற்படிப்புக்கு எண்ட்ரன்ஸ் எக்ஸாம் தேவையில்லை" என்ற அறிவிப்பு கிராமப்புற மாணவனுக்கு உதவியதோ இல்லையோ அது தெரியாது, ஆனா துளசியக்கா "ஆரு"வேன்னா "ஆறு" எழுதலாம்னு அவங்க "ஆறுபதிப்பு"ல பிரகடனம் செய்தது, வலைப்பதிவுக்குப் புதியவனான என்னை 'ஆறு"ச்சாமியாக வீறு கொண்டு எழுந்து, எனக்குத் தெரிந்த அந்த, இந்த என்ற எல்லா "ஆறையும்" பதித்து சக வலைஞர்களை இம்சிக்க பேருதவி செய்தது.

இதோ எம்மைக் கவர்ந்த "ஆறு" பட்டியல்:

1. நகரங்கள்:


பிடித்த இந்திய நகரங்கள்

1. வாழவைத்த "சென்னை"
2. சுறுசுறுப்பான "மும்பை"
3. நோட்டடிக்கும் "நாசிக்"
4. அரண்மனைகள் நகரம் "ஜெய்ப்பூர்"
5. தலைநகரம் "புது டில்லி"
6. பாசக்கார "மதுரை"

பிடித்த உலக நகரங்கள்

1. நான் தற்போது இருக்கும் "குவைத் சிட்டி"
2. அவ்வப்போது செல்லும் "துபாய்"
3. சுத்தமும் பசுமையும் இணைந்த "ஜுரிச்"
4. பழமையும் புதுமையும் சேர்ந்த "கோபன்ஹெகன்"
5. ஐரோப்பாவின் மாநகரம் "இலண்டன்"
6. சிறு தீவு நாடான பஹ்ரைன் தலைநகர் 'மனாமா"

பார்க்க விரும்பும் நகரங்கள்

1. மலேஷியாவில் "கோலாலம்பூர்"
2. சிங்கப்பூர்
3. தாய்லாந்தில் "பாங்காக்"
4. இத்தாலியில் "ரோம்"
5. ப்ரான்ஸில்"பாரிஸ்"
6.ஆஸ்திரேலியாவில் "சிட்னி"
(ஒரிஜினல் லிஸ்ட் ரொம்பப் பெரிசு)

2. இசை:

இசை அமைப்பாளர்கள்:

1. வளர்ந்ததெல்லாம் "இளையராஜா" இசையில்
2. தொழில்நுட்ப ரெக்கார்டிங்குக்காக "ரஹ்மான்"
3. வித்யாசாகர்
4. எஸ்.ஏ.ராஜ்குமார்
5. சிற்பி
6. பழையதில் ஏ.எம்.ராஜா

பின்ணணி பாடுவதில்:

1. இளையராஜா
2. எஸ்.பி.பி
3. ஏசுதாஸ்
4. பாம்பே சகோதரிகள்
5.ஸ்வர்ணலதா
6.ஜானகி

3. பிடித்த பொழுதுகள்

1. சந்தியா காலத்தில் (இருள் பிரியும்அதிகாலை, இருட்டுமுன்பான மாலை) பேருந்தில் நெடுஞ்சாலையில், கடற்கரையில் பஸ், கார், பைக்கில் சென்று கொண்டே எழும், மறையும் சூரியனை ரஸிக்கும் பொழுதுகள்.

2. A.விமானம் தரைக்கும் வானத்துக்குமாய் take off ஆகும் தருணங்கள் மற்றும் நடுவானில் நாம் பயணிக்கும் விமானத்திற்குச் சற்று தூரத்தில் க்ராஸ் ஆகிச்செல்லும் வேறு ஏர்லைன் விமானத்தைப் ஜன்னல் வழியே பார்க்க நேரும் தருணங்கள்

2.B. நடுவானில் 35-40,000 அடி உயரத்தில், வெண்மேகமூட்டத்திற்குள் விமானம் செல்லும்போது தேவதைகளயும், தங்கக் க்ரீடம் அணிந்த நம் கடவுளர்களை அனிச்சையாய் ஜன்னல் வழியாகத் தேடும் தருணங்கள்.

3. நண்பர்களுடனான பேச்சு, கல்லூரி விடுதிப் பொழுதுகள், சென்னைப் புறநகர் மின் தொடர்வண்டிப் பயணப் பொழுதுகள்.

4. ஒன்றுமுதல் நான்கு வயதுக் குழந்தைகளின் மழலை மற்றும் அவர்களது பெற்றோர்மீதான அசாத்தியமான ட்ரஸ்ட். எதைச்சொன்னலும், விழிவிரியக் கேட்டு உள்வாங்கும் தருணங்கள்.
5. அதிகாலை 5.30 மணிக்கு மனைவியோடு ப்ளாட் பால்கனியில் மெலிதாய்ப் பேசிய படி காபி அருந்தியவாறே காலையின் இனிமையை உள்வாங்கும் பொழுதுகள்.

6. பெற்றோர், மற்றும் குடும்ப சகிதம் செல்ஃபாக லாங் டிரைவிங்கில் செல்லும் தருணங்கள்.


4. பிடித்த எழுத்(துக்கள்)தாளர்கள்:

1. லேனா தமிழ்வாணனின் ஒருபக்கக் கட்டுரைகள்.
2. சுஜாதாவின் எழுத்துக்கள்.
3. ஷிவ் கேராவின் "யூகேன் வின்" மாதிரியான தன்னம்பிக்கை எழுத்துக்கள்
4. ஆக்ஸ்ஃபோர்ட் பதிப்பக லெக்ஸிகன்கள்
5.ஸ்வாமி சின்மயானந்தாவின் புத்தகங்கள்
6.யூகேஜி படிக்கும் என் மகள் முயன்று எழுதும் அவள் பெயர்!

5. பிடித்த உணவு வகைகள்

1. சென்னைப் புறநகர் ரயில் நிலைய வி.எல்.ஆர்.(வெஜிடேரியன் லைட் ரிஃப்ரிஷ்மண்ட்) ஸ்டால்கள் மற்றும் பாண்டிபஜார் கையேந்திபவன்களில் சைவமாய் எதுவும்!
2. வடுமாங்காயுடன் தயிர்சாதம்
3.நவ்ரத்தன் கொர்மா + பட்டர் நாண்
4. எலுமிச்சைச் சாறு + மிளகுப்பொடி தூவிய க்ரீன் வெஜிடபிள் சாலட்
5. அரேபிய சைவ உனவுகளான ஹுமூஸ் (காபூலி வெண் கொண்டைக்கடலை பேஸ்ட்) , ப்பிலாபில் (வெண் கொண்டைக்கடலை+கீரை சேர்த்த டீப் ஃப்ரைடு வடைமாதிரியானது) , ப்பூல் ( பெரிய அமெரிக்கன் ப்ராட் பீன்ஸ் பயறு வேகவைத்து கொஞ்சம் ப.மிளகாய் சாறு+ பூண்டுச்சாறு +உப்பு+ஆலிவ் ஆயில்) இவைகளை குப்புஸ் என்ற அரேபிய தந்தூரி ரொட்டியுடன் சாப்பிடுவது.
6.கோவை அன்னபூர்ணா&கௌரிசங்கரில் சாம்பாரில் மூழ்கிய இட்லி,வடை!


6.. பிடித்த தலைவர்கள்

1. காமராஜர் (எல்லோரும் படிக்கப் பல கல்விச்சாலைகள் திறந்தவர்)
2. அப்துல் கலாம் (கனவு காண்பதுதான் வளர்ச்சிக்கு உதவும் என்றவர்)
3.மகாத்மா காந்தி
4. பாரதியார்
5. விவேகானந்தர் & சின்மயானந்தா
6. நரேந்திர மோடி (நம்மூர் sickular அரசியல் & மீடியா இவர் administration சாதித்ததைச் சொல்லாது அல்லாததை மட்டும் பெரிதாக்கும்)

நமக்குப் பிடித்த (நாம எப்பவும் நம்மள நாம-ன்னுதான் சொல்லிக்கிறதுங்க!) விஷயங்கள் லிஸ்ட் ஹி..ஹி..கொஞ்சம் நல்லா பெரிசாப் போகுங்க. ஏதோ இத்தோட இப்போ விட்டுர்றேன்.

மற்றபடி "வாய்ப்பு"(!?) ஏற்படுத்தித் தந்த 'வலை உலகின் மகாராணி' துளசியக்கா வாழ்க! வாழ்க! என்று கூறி பெறுகிறேன்.

என்ன அங்க சத்தம் "போதும் நிறுத்திரு இப்பவா..." சரி சரி..

அன்புடன்,

ஹரிஹரன்

18 comments:

கோவி.கண்ணன் said...

//ஒன்றுமுதல் நான்கு வயதுக் குழந்தைகளின் மழலை மற்றும் எதைச்சொன்னலும், விழிவிரியக் கேட்டு உள்வாங்குவது, பெற்றோர்மீதான அசாத்தியமான ட்ரஸ்ட்.
//
உங்க ஆறு வித்யசமாக இருக்குங்க... குழந்தைகளைப் பற்றி அழகாக சொல்லியிருக்கிங்க ... நல்ல பதிவு

கோவி.கண்ணன் said...

//ஒன்றுமுதல் நான்கு வயதுக் குழந்தைகளின் மழலை மற்றும் எதைச்சொன்னலும், விழிவிரியக் கேட்டு உள்வாங்குவது, பெற்றோர்மீதான அசாத்தியமான ட்ரஸ்ட்.
//
உங்க ஆறு வித்யசமாக இருக்குங்க... குழந்தைகளைப் பற்றி அழகாக சொல்லியிருக்கிங்க ... நல்ல பதிவு

Hariharan # 03985177737685368452 said...

வாங்க கோவி.கண்ணன். குழந்தைகள் உலகில் எல்லாமே பாஸிடிவ். அது அற்புதமான மனித காலகட்டம். தற்சமயம் அனுபவிக்கிறதால் அது "மாறிப்போகுமுன்" பதிந்துவிட்டேன்.

பாலசந்தர் கணேசன். said...

வித்தியாசமாகவும் நன்றாகவும் உள்ளது.

பினாத்தல் சுரேஷ் said...

நல்ல ஆறு ஹரிஹரன். அழகாக எழுத வருகிறது உங்களுக்கு.

Hariharan # 03985177737685368452 said...

//நல்ல ஆறு ஹரிஹரன்.//

வாங்க சுரேஷ். நன்றிகள்.

// அழகாக எழுத வருகிறது உங்களுக்கு.//

வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்.

Hariharan # 03985177737685368452 said...

//வித்தியாசமாகவும் நன்றாகவும் உள்ளது//

வாங்க. பாலசந்தர் கணேசன். பாராட்டுக்கு நன்றி.

Virhush said...

boring, barathi and gandhi s.a. rajkumar, ilayaraja. just u r trying to impress people. i dnt think u r honest with ur information.

துளசி கோபால் said...

உங்க 'ஆறு'லே குழந்தைகள் உலகைச் சொல்லி இருக்கறது அருமை. எனக்கு ரொம்பப்
பிடிச்சிருந்தது.

பார்க்க விரும்பும் உலக நகரங்கள் எல்லாம் நான் பார்த்துட்டேன்.
(அதனாலே என்னையே கைடாக் கொண்டு போகலாம்)

Hariharan # 03985177737685368452 said...

//உங்க 'ஆறு'லே குழந்தைகள் உலகைச் சொல்லி இருக்கறது அருமை. எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.//

இந்தக் குழந்தைகள் உலகம் வழியாக நிறைய "பெரிய தத்துவார்த்தமான விஷயங்களை அறிந்து கொண்டிருக்கிறேன்.


//பார்க்க விரும்பும் உலக நகரங்கள் எல்லாம் நான் பார்த்துட்டேன்.
(அதனாலே என்னையே கைடாக் கொண்டு போகலாம்)//

ஆஹா அப்படியே பண்ணிரலாம்.

Hariharan # 03985177737685368452 said...

//boring, barathi and gandhi s.a. rajkumar, ilayaraja. just u r trying to impress people. i dnt think u r honest with ur information.//

Nambi. Thanks for your time.
If you appreciate freedom in India, you will appreciate Bharathi and Gandhi.

I grew up with Ilayaraja's Music.
Of course S.A.Rajkumar has given good music which I like.

Hariharan # 03985177737685368452 said...

நடுவானில் 35-40,000 அடி உயரத்தில், வெண்மேகமூட்டத்திற்குள் விமானம் செல்லும்போது தேவதைகளயும், தங்கக் க்ரீடம் அணிந்த நம் கடவுளர்களை அனிச்சையாய் ஜன்னல் வழியாகத் தேடும் தருணங்கள்

//Intha tharunangalil naan kangalai thirappadhe illai.//

வாங்க மன்சூர். பறவைப் பார்வையில் காலுக்குக் கீழே வெண் முகில்களுக்கு ஊடாக நாடு நகரங்களைக் காண்பது தனிச்சுவை. அடுத்தமுறை ஜன்னலோர இருக்கையில் இருந்தபடி கண்டுகளிக்க மறக்காதீர்.

வடுவூர் குமார் said...

ஹரி
எங்க ஊருக்கு 2வது இடமா?:-))
வாங்க வாங்க வரவேற்கிறேன்

வடுவூர் குமார் said...

ஹரி
ஜன்னலோர இருக்கை??--அதுக்கெல்லாம் குழந்தையாக இருக்கவேண்டும்.
கேட்டாலும் கொடுக்கமாட்டேன் என்கிறார்களே.
3 பேரா போனா ஒருவேளை கிடைக்கும்.இல்லை அதிர்ஷடத்தைத்தான் நம்பவேண்டும்.சிங்கப்பூர் முதல் முறை வரும் போது ஜன்னல் அருகே உட்கார்ந்து பார்த்துக்கொண்டு இருக்கும் போதே ஒரு எண்ணம் "இங்கு வேலை கிடைத்தால் எப்படியிருக்கும்" என்று.
இப்போது வாழ்கையே இங்கு என்றாகிவிட்டது.
அதனால் ஜன்னல் சீட்டு எனக்கு ஒரு மாதிரி.:-))

Hariharan # 03985177737685368452 said...

//எங்க ஊருக்கு 2வது இடமா?:-))
வாங்க வாங்க வரவேற்கிறேன்//

குமார், இந்த முறையே ஆகஸ்டில் விடுமுறைக்குச் செல்லும் போது கோலாலம்பூர் + சிங்கப்பூர் பார்க்கத் திட்டமிட்டிருந்தேன். சிங்கப்பூர் எம்பஸி குவைத்தில் இல்லை எனவே விசா குளறுபடி. 2007-ல் சந்தர்ப்பம் எப்படி என்று பார்க்கலாம் அப்போது.

Hariharan # 03985177737685368452 said...

//ஜன்னலோர இருக்கை??--அதுக்கெல்லாம் குழந்தையாக இருக்கவேண்டும்.
கேட்டாலும் கொடுக்கமாட்டேன் என்கிறார்களே.
3 பேரா போனா ஒருவேளை கிடைக்கும்.இல்லை அதிர்ஷடத்தைத்தான் நம்பவேண்டும்.//

வளர்ந்தபின்னும் குழந்தைகள் மாதிரி குதூகலிகும் நம் மாதிரி ஆட்கள் அதிர்ஷ்டத்தைத்தான் அதிகம் நம்பவேண்டும்.


//சிங்கப்பூர் முதல் முறை வரும் போது ஜன்னல் அருகே உட்கார்ந்து பார்த்துக்கொண்டு இருக்கும் போதே ஒரு எண்ணம் "இங்கு வேலை கிடைத்தால் எப்படியிருக்கும்" என்று.
இப்போது வாழ்கையே இங்கு என்றாகிவிட்டது.
அதனால் ஜன்னல் சீட்டு எனக்கு ஒரு மாதிரி.:-))//

அட நல்லாயிருக்கே குமார், இந்த ஜன்னல் சீட் "செண்டிமெண்ட்".

aaradhana said...

அப்துல் கலாம் (கனவு காண்பதுதான் வளர்ச்சிக்கு உதவும் என்றவர்)///
எனக்கும் மிகவும் பிடித்தவர் இவரே

Hariharan # 03985177737685368452 said...

நான் வேலைக்குச் செல்ல ஆரம்பித்ததிலிருந்து 16 வருஷங்களாக What I want to achieve in the next 365 days அப்படின்னு ஒரு கனவு லிஸ்ட் போட்டு ஹிட் ரேட்டிங் வருஷக் கடைசியில் பெர்பார்மன்ஸ் எவால்யூ செய்வது பழக்கம். அப்துல் கலாம் வாழ்க்கை நமக்கு ஊக்கம் அளிப்பது.

அன்புடன்,

ஹரிஹரன்