Monday, November 06, 2006

(47) அமெரிக்கா..ஈராக்..ஈரான்..சவூதி..குவைத்...சதாம் தூக்கு

சதாம் ஹூசைன் 30 ஆண்டுகளாக ஈராக்கின் அதிபராக இருந்திருந்தாலும், எண்ணைய் வளத்தில் ஈராக் சவூதிக்கு அடுத்து எண்ணைய் வளமிக்க, தரமான ஸ்வீட் க்ரூட் என்ற சல்பர் குறைந்த, உற்பத்திச் செலவுகளைக் குறைவாக்கிடும் அதிக அழுத்த எண்ணைக்கிணறுகள், எண்ணைய் வயல்கள் ஈராக் நாட்டின் தெற்கிலும் வடக்கிலும் மேற்கிலும் வெகுதியாக இருந்தும் பெரும்பான்மை ஈராக்கியர்களை சேரிகளுக்கு இணையான சுகாதாரம், பின் தங்கிய கல்வி, வேலை வாய்ப்புகள் என மக்களுக்கு உருப்படியாக எதையும் செய்யாதவர்.

இது முதல் அம்சம்.

ஈராக்கின் தெற்கில் குவைத்தும் சவுதியும் மேற்கில் ஜோர்டான், சிரியா, வடக்கில் துருக்கி கிழக்கில் முழுவதுமாக ஈரான் என்று 99 சதவீதம் நிலத்தால் சூழப்பட்டு தெற்கு-தென்கிழக்குக் கோடியில் குவைத்க்கும் ஈரானுக்கும் இடையில் 50 கி.மீதூரத்துக்கும் குறைவான கடல்பகுதியில் சில அல்பாவ், அல் அமயா, உம்குசர்,பஸ்ரா,மினாஅல்பக்கர் என்ற ஐந்து துறைமுகம் மூலமாக எண்ணைய் ஏற்றுமதிக்குச் செல்லவேண்டும்.

வடக்கில் மோசுல் பகுதியிலிருந்து துருக்கிவழியாகவோ, சிரியா வழியாகவோ எண்ணைக்குழாய் அமைத்திருந்தால் ஈராக் நாடு எண்ணைய் ஏற்றுமதியில் மேம்பட்டிருக்கும். சவுதிக்கு இணையாக உலக பெட் ரோலிய அரங்கில் மிக முக்கிய இடமும் கிட்டியிருக்கும்.


அமெரிக்காவின் தற்போதய பாதுகாப்பு மந்திரி ரம்ஸ்பீல்டும், இணை அதிபர் டிக் செனியும் ஈராக்கிலிருந்து துருக்கிவழியாக மத்தியதரைக்கடல் துறைமுகத்துக்கும், சிரியாவழியாக மத்திய தரைக்கடல் துறைமுகத்துக்கும் எண்ணைய்க்குழாய் பதிக்கும் காண்டிராக்டுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பாக நடையாய் நடந்தார்கள். சதாம் மறுத்ததோடு அமெரிக்க டெக்னாலஜியையும் எண்ணைய் உற்பத்தியில் உள்ளே விடவிடாது எல்லாமே ரஷிய தொழில்நுட்பம் என்றாக்கி அமெரிக்காவினை ஈராக்கில் எண்ணைய் உற்பத்தி /ஏற்றுமதியில் முழுமையாக நிராகரித்தார்.

இது இரண்டாம் அம்சம்.

சன்னி முகமதியரான சதாம் சக முகமதிய நாடாகினும் ஷியா பிரிவு பெரும்பான்மை ஈரானை இதர சன்னி பெட்ரோலிய நாடான சவுதி, குவைத் இவைகளது பொருளுதவியால் பல ஆண்டுகள் போர் செய்து கொண்டே இருந்தார். சதாமின் கொம்பை சன்னி ஷியா என்று சக வளைகுடா நாடுகள் கொம்புசீவி விட ஒரு நிலையில் ப்ரொடக்ஷன் மணி மாதிரி சிறிய பணக்கார நாடான குவைத்தை மிரட்டும் நிலையானது.

ஜிசிசி எனப்படும் வளைகுடா நாடுகள் ஒத்துழைப்புக் கவுன்சில் சபையில் குவைத்-ஈராக்கிய அமைச்சர்களிடையே எல்லையிலான எண்ணைய் வயல்கள் மீது உரிமை/ பங்கீடு பற்றிய கூட்டத்தில் மோசமான வார்த்தைப் பரிமாற்றம் மற்றும் தகாத முறையில் கண்டனம் வெளிப்படுத்துதல் என்று மிகுந்த கோபாவேசமக உணர்ச்சிகளோடு மோதல் ஏற்பட மறுநாள் 02ஆகஸ்ட் 1990ல் ஈராக் டாங்கிகள் குவைத்துக்குள் ஆக்கிரமித்தது.

முகமதிய நாடுகளின் அரசுகளிடையே இன்றும் நிலவிடும் வர்க்கப் பிரிவினை, யார் பெரிய ஆள் என்ற போட்டா போட்டி, வாழையடி வாழையாக அரசனாவதில் எடுக்கப்படும் சார்புநிலை. முகமதிய பிரிவான ஷியாவை வெறுத்து நசுக்கிய சவூதிஅரசு அமெரிக்காவின் எடுபிடியாக எந்தக் கவலையின்றி ஆர்மி பேஸ் முதல் சர்ச்வரை அமைத்துக்கொள்ள அனுமதித்தது.

இது மூன்றாம் அம்சம்.

ஆக சூப்பர் பவர் அமெரிக்காவிற்கு சூப்பர் காரணம் கிடைத்து விட்டது. ஜனநாயகம் இல்லாத வளைகுடாவிற்குள் ஜனநாயகம் பேசி எண்ணைய் வளம் கூடியதாலே குவைத்துக்கு உதவிட ஓடோடி வந்தது சீனியர் புஷ் அரசு!

சதாம் பாலஸ்தீன விடுதலையை நைச்சியமாக குவைத் ஆக்கிரமிப்பின் போது இஸ்ரேல் மீது சில ஸ்கட் ஏவுகணைகள் விட்டதும் முகமதிய சகோதர நாடுகள் குறிப்பாக குவைத்தில் பலகாலம் வாழ்ந்த பாலஸ்தீனர்கள் குவைத்தை ஈராக் ஆக்கிரமித்ததும் சதாமோடு சேர்ந்தார்கள்!

ஹிந்து மற்றும் இந்தியனாகிய நான் கூட இரண்டாம் வளைகுடாப் போர் நடந்த சமயம் செஞ்சோற்றுக்கடன் மாதிரி (தேவையற்றது எனினும்) குவைத்தில் விழும் ஏவுகணைகளைப் பார்த்தவாறு குவைத்திலேயே இருந்தேன்! பாலஸ்தீனர்களின் குவைத் மீதான நட்பு, நன்றி, செஞ்சோற்றுக்கடன் இன்றைக்கும் ஆறாத வடு குவைத் மக்களின் மனதில். எரிகிறவீட்டில் இருப்பதைப் பிடுங்கிக்கொண்டு ஓடும் குணாதியமே பாலஸ்தீனியர்கள்!

முகமதிய நாடுகளுக்குள்ளே முகமதிய அரசுகளினிடையே முகமதிய அரசர்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்குகளுக்கு அவர்களுக்குள்ளேயே தீர்வு கண்டிருக்கலாம். குரங்கான அமெரிக்காவிடம் நியாயத்திற்காக எண்ணைய்வளமென்ற அப்பத்தினை பங்கிட பஞ்சாயத்துக்குப் போனதில் குவைத் அமெரிக்காவின் அறிவிக்கப்படாத காலனியாகியிருக்கிறது. ஈராக் சின்னா பின்னப்பட்டு நிற்கிறது. இசுலாமிய வன்முறைத் தற்குறிகள் அமெரிக்கனை வெளியேற்ற தங்கள்மீதே குறிவைத்து வெடிகுண்டுகளை வீசி மாண்டுபோகிறார்கள்.

நடந்த தகராறில் குவைத்தோ, சவூதியோ, ஈராக்கோ, ஈரானோ பரஸ்பரம் விட்டுக் கொடுத்திருந்தால் (சக முகமதிய சகோதரநாடுகளிடம்தான்!) மத்திய கிழக்கு பிராந்தியமே வெகுவாக மேம்பட்டிருக்கவேண்டும்.


வசதிகள் குறைவாயிருந்தாலும் அடக்குமுறை அநீதியில் துன்பப்பட்டாலும் ஈராக்கியர்கள் ஓரளவுக்கு அமைதியான வாழ்க்கை வாழ்ந்தார்கள் சதாமின் ஈராக்கில். இன்று கடந்த மூன்றாண்டுகளாக ஈராக் அமெரிக்காவின் இராணுவ தளவாடங்கள் சோதனைக்களமாகவும், ஜிகாதிகளின் போர்ப்பயிற்சி பயன்பாட்டில் நிறுவும் இடமாகவும் சீரழிந்து போயிருக்கிறது ஈராக்.

மனித நாகரீகத்தின் தொட்டிலான பாபிலோனை உள்ளடக்கிய ஈராக் இன்று மனித அவலங்களின் குப்பைத்தொட்டியாகவும் சவக்கிடங்காகவும் சீரழிக்கப்பட்டிருக்கிறது.

சதாமின் தூக்கில் என்பது நீதிநிலை நாட்டப்படுகிறதைவிட, எண்ணைய் காண்டிராக்ட் வஞ்சங்களும், முகமதிய நாடுகளில் சகோதரனைக் கொன்றுவிட்டு பதவியைப் பற்றித் தொங்குவதற்கு பலியிடப்படும் பலியாடு சதாம் ஹூசைன்!

அமெரிக்கா குற்றமிழைக்கிறது என்று அலறும் முகமதியர்கள் முறையாக மதியைப் பயன்படுத்தியிருந்தால் அங்கிள் சாமிடம் ஏன் நீதி / தீர்வு கேட்டு ஓடவேண்டும்! மசூதியில் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மைக்கில் சகோதரத்துவம் முல்லாக்கள் பேசுவது என்பதும் அதை நடைமுறையில் சகோதரத்துவமாக சிந்தித்து நடக்கவும் வேண்டும்.

சதாம் இறந்தபின்பும் மத்திய கிழக்கில் சிந்தனையில் மாற்றம் வருமா எனில் வராது.


அன்புடன்,

ஹரிஹரன்

9 comments:

வஜ்ரா said...

சரியாகச் சொன்னீர்கள்.

புஷைத் தூக்கில் போடு என்கிறார்கள். நம்மூர் "தோழர்கள்" "நாட்டாமை, தீர்ப்ப மாத்து" என்று கோஷம் போடுகிறார்கள்.

அமேரிக்க நாட்டாமையிடம் சதாமை தூக்கில் போடாமல் விடவேண்டும் என்று இந்திய அரசு கேட்டுக் கொள்ளவேண்டுமாம்...ஏன், செஞ்சோற்றுக் கடனா...! ?சதாமிடம் வாங்கிய Kickbacks!! பேசச் சொல்கிறது !

Hariharan # 03985177737685368452 said...

ஷங்கர்,

உண்மையில் இந்திய தேசத்தின் இன்ட்ரஸ்டில் சதாம் ஹுசைனின் இந்திய எண்ணைத்தேவைக்குச் சாதகமாக இருந்தது!

ஈராக்கிய எண்ணைக்கு ஈடாக இந்திய ரயில்வே ஈராக்கிய ரெயில்வேயின் கட்டுமான காண்டிராக்ட் பதிலுக்குச் செய்தது.

சதாமின் ஈராக்கிய ராணுவத்தினருக்கு இந்தியன் ஆர்மி டிரையினிங் தந்தது!

இதனாலேயே குவைத் ஆக்கிரமிப்பின்போது டர்பன் அணிந்த இந்தியர்களைக்கண்டு ஈராக்கியர் சல்யூட் அடித்ததாகப் பரவலாக இங்கு போரின்போது இருந்தவர்கள் சொல்லிக்கேட்டதுண்டு.

குறிப்பாக அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஐ.கே.குஜ்ரால் முனைப்பிலும் சதாமின் "இந்தியரைத் தொந்தரவு செய்யவேண்டாம்" என்ற அறிவுறுத்தலாலும் இந்திய உயிர்பலி ஆகவில்லை. பாக்தாத் வழியாக ஜோர்டானிலிருந்து உலகசாதனையாக வான்வழி எவாக்குவேஷனில் அரைமில்லியன் இந்தியர்கள் தாயகம் எடுத்துச்செல்லப்பட்டனர்.

சதாமின் ஈராக்கின் மீது பொருளாதரத்தடையினால் பாதிக்கப்பட்டது இந்தியா. 1991-92-ல் நரசிம்மராவ் அரசு கையிருப்புத் தங்கத்தை அடமானம் வைக்கும் நிலை ஏற்பட்டது.

சதாம் + லெனினக ரஷியா பாய் பாய் என்பதால் நம்மூர் செஞ்சட்டை அட்டைகள் சேட்டையாக குரல் எழுப்புவதும் இயல்பானது தானே!

Radha N said...

முடிவாக என்ன சொல்ல வர்ரீங்க....புஷ் செஞ்சது சரிங்கரீங்களா?

சதம் குற்றவாளியாகவே இருந்தாலும் அவர் தண்டிக்கபடும் முறை சரியல்ல.

சதாமை கொலை செய்யவேண்டாம். அவர் திருந்த சந்தர்ப்பம் வழங்கவேண்டும். புஷ் உடன் ஒப்பிடும் போது அவர் ஈராக்கியர்களுக்கு அவரின் தூரம் ஒன்றும் அதிகம் இல்லை! மனச்சாட்சியோடு ஒப்பிட்டு பாருங்கள்.

ஈராக்கில் நாட்டாமை செய்ய அமெரிக்கனுக்கு என்ன உரிமை இருக்கிறது. திருட்டு பயல்கள்! எண்ணை வளத்தினை சுரண்ட வந்த அயோக்கியர்கள்.

bala said...

ஹரிஹரன் அய்யா, வஜ்ரா அய்யா,

என்னைக் கேட்டால் அமெரிக்கா/சவுதி அரேபியா/பாகிஸ்தான் axis உலகத்தில் விளைவித்த நாசத்திற்க்கு அளவே கிடையாது.
Jihadis manufacturing factories of Pakistan entirely funded by US and Saudi Arabia. 9/11 was the price paid by USA for this folly.

அதுபோல் அமெரிக்கா/சீனா/பாகிஸ்தான்
axis விளைவித்த கேடுகளும் மிக அதிகம்.

Americas war on terror should have focussed on Saudi and pakistan. That they attacked Iraq citing fraudulent reasons has seriously eroded the credibility of their war on terror.

America had a very short sighted notion that Chinese comrades are a better bet for the world than the Soviet comrades. Thus they grossly under estimated the Chinese and grossly over estimated the Soviets.

I do believe that the US will pay a dear price for its folly in Iraq.

Saddam was a butcher but he was more progressive than the virulent Saudis in respect of Islamic practices.For example he made education for females compulsory.

பாலா

Hariharan # 03985177737685368452 said...

நாகு,

//ஈராக்கில் நாட்டாமை செய்ய அமெரிக்கனுக்கு என்ன உரிமை இருக்கிறது. திருட்டு பயல்கள்! எண்ணை வளத்தினை சுரண்ட வந்த அயோக்கியர்கள்//


அமெரிக்காவுக்கு எது நல்லதோ அதைச்செய்கிறார்கள் அமெரிக்க அதிபர்கள் லேபர் அல்லது ரிபப்ளிகன் பார்ட்டி அதிபர்கள் என எவரானாலும் இதுவே அவர்களது பார்வை!

இந்த நாட்டாமை செய்யும்படி அங்கிள் சாமிடம் ஓடியது /ஓடிக்கொண்டிருப்பது மத்தியகிழக்கு அரசர்களே!


//முடிவாக என்ன சொல்ல வர்ரீங்க....புஷ் செஞ்சது சரிங்கரீங்களா?//

சகோதரத்துவமில்லாமல் முட்டிக்கொள்ளும், காட்டிக்கொடுக்கும் மத்தியகிழக்கு முகமதிய அரசர்களின் சுயநல குணாதிசயங்கள் சரியல்ல அதுவே முதன்மை காரணி புஷ் எல்லாம் உப காரணி!

Hariharan # 03985177737685368452 said...

பாலா,

அமெரிக்கா ஆயுத வியாபாரி, அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு அவர்களது ராணுவத்தளவாட, போர்விமானங்கள், இதர ஆர்டில்லரிகள் விற்கப்பட்டே ஆகவேண்டும் அதற்கு கலகங்கள் இருந்துகொண்டிருந்தால்தான் நல்லது.

வார் ஆன் டெரர் வருமுன்பாக பெட் ரோலிய பேரல் 28 டாலர், இன்று மூன்றாண்டுகளாக 65+ டாலர், பெரும்பாலான வளைகுடா பெட் ரோலிய நாடுகளில் எண்ணை வயல் டவுன்ஸ்ட் ரீம் வேலை வெள்ளைக்காரர்களுக்கு 50% உரிமை, இழப்பு இதர நாடுகளுக்கு, முகமதிய அரசர்களால் இந்த எண்ணைய் வளத்தை நேர்மையாக சீராகப் பிரித்துக் கொள்ள ஏற்படும் அடிதடியே மத்தியகிழக்கின் முட்டாள்தனமான அரசியல் சூழல்.

பிரச்சினைக்கு தீர்வு காண அமெரிக்காவை நாடும் வரை குரங்கு அப்பம் தான் தீர்வு அது தெரிந்ததே!

ஆசியாவின் பிரச்சினையே அரேபியா,இந்தியதுணைக்கண்டம், சைனா, ஜப்பான், கொரியா, தூரகிழக்குநாடுகள் என்று சிதறுண்டு கிடப்பதே! ஆசிய யூனியனாக ஒருமித்தால் அமெரிக்காவிற்கு செக் வைக்கலாம்.

இதிலே அடிக்கிறான், உதைக்கிறான் என்ற குற்ற்ச்சாட்டுகளை வைத்தபடியே அமெரிக்காவிடம் பஞ்சாயத்துக்கு ஓடுவது அரேபியர்கள், நிதிப்பிச்சைக்கு ஓடுவது பாகிஸ்தான்!

சதாம் தூக்குக்கு புஷ் 10% மீதி 90% முகமதிய நாடுகளே!

bala said...

//சதாம் தூக்குக்கு புஷ் 10% மீதி 90% முகமதிய நாடுகளே! //

ஹரிஹரன் அய்யா,

மிகவும் சரி. குரங்கு/ஆப்பம் கதை தான் நடந்து கொண்டிருக்கிறது.
எனக்கு வருத்தமெல்லம் இதுலே இந்தியாவோட அப்பத்தையும் சுரண்டறாங்க.

பாலா

வஜ்ரா said...

//
இதுலே இந்தியாவோட அப்பத்தையும் சுரண்டறாங்க.
//

இந்தியா சும்ம இருந்தாலே நல்லது. அல்லது அடக்கி வாசிச்சிட்டு போகணும்.

There are no permanent enemies or friends. Only Permanent interests.

இது நம்மவூரு செஞ்சட்டை, கருஞ்சட்டை கிராக்கிகள் மண்டையில் ஏறாத விஷயம். ஆகயால் அவர்கள் இன்னும் அமேரிக்கா என்ன செய்கிறதோ அதற்கு எதிர் விஷயத்தை நாம் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அது நம் நலனுக்கு உதவாது என்று தெரிந்தும்.!

ஆகவே அவர்களாக வந்து சொறண்ட வேண்டிய அவசியம் இல்லை. நம்ம ஊர் செஞ்சட்டைகள் இந்தா வா, ஆப்பம், சொறண்டிக்கோ என்று வெத்திலை பாக்கு வைத்து அழைப்பார்கள்/அழைக்கிறார்கள்.

Hariharan # 03985177737685368452 said...

//இது நம்மவூரு செஞ்சட்டை, கருஞ்சட்டை கிராக்கிகள் மண்டையில் ஏறாத விஷயம். ஆகயால் அவர்கள் இன்னும் அமேரிக்கா என்ன செய்கிறதோ அதற்கு எதிர் விஷயத்தை நாம் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அது நம் நலனுக்கு உதவாது என்று தெரிந்தும்.! //

கருஞ்சட்டையை அமெரிக்கா சட்டைசெய்யாது! செஞ்சட்டை என்றாலே அமெரிக்காவின் ஒவ்வாமையால் எதிர்மறை விளைவுகள் நேரும் வாய்ப்புண்டு.

வாயை மூடிட்டு வேற எதானும் சேட்டை செஞ்சிட்டு செஞ்சட்டை இருந்தாலே போதும்!