Thursday, November 23, 2006

(61)அறிவுப்புரட்சிக்கு அக்க(ரை)றையான கட்டிப்புடிவைத்தியம்

"இந்தியாவுக்கு கம்பல்சரி மிலிட்டரி சர்வீஸை விட நல்ல வேலையிலிருக்கும் தனி நபர்களது கம்பல்சரி எஜுகேஷன் ஸ்பான்ஸர்ஷிப் சர்வீஸ் மிக மிக அவசியமானது."- ஹரிஹரன்

கொஞ்சம் பொறுமையோட முழுக்கப்படிக்கவும்.

நாடு விடுதலைபெற்று 1950களிலிருந்து 1975 வரை பல சமயங்களில் இந்திய தேசம் உணவுப் பஞ்சத்தால் அரிசி, தானியம் கிடைக்காமல் அமெரிக்கா கடலில் கொட்டும் கோதுமை US AID என்ற பிளாஸ்டிக் கித்தான் சாக்குகளில் ஓசியில் தந்ததை உண்டு அம்பது கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியா உய்த்திருந்த சூழ்நிலை இருபது வருடங்களில் திரு. சுவாமிநாதன் மாதிரியான விவசாய விஞ்ஞானிகளின் அயராத உழைப்பால் பசுமைப் புரட்சி நடத்திக் காட்டியதால் இன்று நூற்றுப்பத்துக் கோடியாக மக்கள் தொகை உயர்ந்தபோதிலும் இந்தியாவில் இன்னிக்கு உணவுப்பஞ்சம் இல்லை. இந்திய உணவுக்கழகத்தில் தேவைக்குமதிகமான உணவு தானியங்கள் கையிருப்பு இருக்கிறது. (ஏழைமக்களுக்கு வழங்கப்படும் விநியோக நிர்வாகக் குழப்பத்தோடு இதைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.)

விளைவிப்பவன் விலை நிர்ணயம் செய்யமுடியாத நிலைக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இவற்றில் முக்கியமானவை சில:

1. விளைவிப்பவன் கல்வியறிவு அதிகம் அற்றவனாயிருப்பது. இதனாலே சந்தையில் நேரடியாக விவசாயி அவன் உருவாக்கிய பொருளுக்கு விலை நிர்ணயம் செய்ய வழிமுறைகளை அறிந்திருக்காதது.

2. விவசாய பொருட்கள் விலையினை இடைத்தரகர்கள் நிர்ணயிக்கும் நிலை. இடைத்தரகர்கள் அரசியல் வாதிகளின் கூடுதல் கரம். விவசாயிக்கு உதவுவதுமாதிரி பேசி நடித்து ஆனால் உண்மையில் அவர்கள் பொருட்களைக் கொள்ளையடிப்பவர்கள் நம்மூர் அரசியல் வாதிகள்.

இதுல முக்கியமா விவசாயி மட்டும் என்றில்லை எந்த ஒரு தனிமனிதனும் தான் மேம்படமுடியாததன் பின் புலத்துல இருக்குறது கல்வி மற்றும் அத்துறையிலான அனுபவ அறிவு. அடிப்படையில கல்வி இல்லைன்னா அனுபவம் முறையாகக் கிடைக்காது அந்த அனுபவங்களும் வகுதியாக கசப்பான வலிமிகுந்த தோல்வி அனுபவங்களாகவே இருக்கும்.

நூத்திப்பத்துக் கோடி மக்களுக்கு சுயமா உணவு உற்பத்தி செய்து பசுமைப் புரட்சி, அதே மாதிரி பெருவாரியான மக்களுக்கு பால் உற்பத்தி செய்து வெண்மைப் புரட்சி செய்திருக்கிறோம்.

எங்களுக்குக் உண்ண உணவில்லை, பால் வாங்கிக் குடிக்க வசதியில்லை என்போர் அந்நிலையில் இருக்க கல்வி இல்லாததே பிரதானம். அரசியல் வாதிகளுக்கு இவர்கள் மேம்பட்டுவிடக்கூடாது என்பதே குறிக்கோள் ஆட்டுமந்தை ஜாதி /மொழி வியாபார அரசியலுக்கு இவர்கள்தானே மூலப்பொருள்! படிச்சுட்டா கல்வி கண்ணைத் திறக்க வைத்துவிடும் இல்லியா?

"அரசு செய்யாததை தனிமனிதர்கள் உயரிய குறிக்கோளுக்காக வேண்டித் தங்களின் தனித்த பங்களிப்பு மூலம் கல்விப் புரட்சியை ஏற்படுத்தலாம்."

2006ல் எவ்வளவோ இந்தியர்கள் வெளிநாட்டில் / வெளிநாட்டு நிறுவனங்களில் இந்தியாவில் என்று சிறப்பான ஊதியத்துடன் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

"அயல்நாடுகளில் மாதம் ஆயிரம் டாலர்களிலிருந்து சம்பளம் வாங்குவோர், இந்தியாவில் மாதம் இருபதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவோர் அவர்களது மாத சம்பளத்தில் இரண்டு சதவீதம் ஒதுக்கி தனது 40வது வயதுக்குள் தன் குடும்பம் சாராத ஓர் ஏழைக்கு கல்விக்கு உதவ வேண்டும். "

நாற்பதுக்கு மேல் தனது குடும்பத்தினரது உயர்கல்வி, திருமணம் என்று பொருள்தேவை கூடுதலாகும். எவ்வளவோ லோன்வாங்கி அபராத வட்டிகட்டும் நீங்கள் ஒரு ஏழையின் கல்விக்கு ஓரளவுக்கு உதவிட முடியாதா? கண்டிப்பாக முடியும்.

அறுபது வயதில் ஓய்வு பெறும் நிலையிலிருப்போர் செட்டில்மெண்ட்டுடன் பணியினின்று ஓய்வு பெறும் போது மனநிறைவோடு அவர்களது கடமையாக ஒரு 3% ஒரு ஏழைக்கு கல்விக்காக உதவ ஒதுக்கவும்.

அரசு வரி விதித்து இந்தப் பணிக்காக பணத்திற்கு வழி செய்தாலும் கேடு கெட்ட அரசியல் வாதிகளால் நலத்திட்ட நிதி களவாடப்படும். எனவே அரசியல் அரசு தள்ளியே நிற்கட்டும்.

எனவே பொதுமக்கள் கண்டிப்பாக அவரளவில் நேரடியாக நம் சமூதாயத்தில் இருக்கும் ஏழைக்கு கல்விக்காக ஸ்பான்ஸர் செய்யவேண்டும். கல்வியால் மட்டுமே ஒருமனிதன் மேம்பட முடியும்.

தனிநபர்களின் சேமிப்பு என்று பல லட்சங்கள் / கோடிகள் வங்கியிலே மட்டும் முடங்கி இருந்தால் சமூகத்திற்குப் பலனில்லை. பணக்கார தொழிலதிபராகிய அரசியல்வாதி திரும்பக்கட்டாத மஞ்சள் கடுதாசி தருவதற்காகவே தரப்படும் வங்கி லோனுக்குப் பயன்படும். இதற்கு சேமிப்பில் ஒரு பகுதியை கல்விபரப்பும் செயலுக்கு மங்களகரமாகத் தருவது எவ்வளவோ நல்லது!

"வீட்டில் உள்ள பெண்கள் தாங்கள் எப்போதோ அணிவதற்காக பெரிய தங்க, வைர நகைகள், மிக உயர்ந்த பட்டுப்புடவைகளில் ஒன்றைக் குறைத்தாலே ஏழைக்குப் படிப்பு ஸ்பான்ஸர்ஷிப் சாத்தியப்படும்.

தனிமனிதர்கள் வெறுமனே நீங்கள் அஞ்சாயிரம் வருஷத்துக்கு முந்தி இப்படி அதனால நாங்கள் இன்று இப்படி என்று மட்டுமே இன்னும் வெட்டியாகச் சமுதாயத்தின் சீர்கேடுகளுக்குக் காரணமான கல்வியின்மையை நீக்கிடும் தீர்வுக்காகச் சிந்திக்காமல் விவாதிப்பதால் விருட்சமாக விரோத மனப்பான்மையை வளர்த்துக்கொண்டு, அதையே அடுத்த தலைமுறைக்கும் பரிசளிக்கலாம்! இதுதான் தீர்வா? யோசிக்க வேண்டும் நாம் எல்லோரும்!

பேசலாம், விவாதிக்கலாம், கருத்து மோதல்கள் நடத்தலாம் ஆனால் இவைகட்கு நடுவே நம் முன்னோர்களை விடச் செயலில் ஆற்றலோடு விளங்கும் இத்தலைமுறையினராகிய நாம் நமது வாழ்நாளில் பேச்சிலர் லைஃபில்/திருமணமான புதிதில் ஒருமுறையும் பின்பு ஐம்பது வயதுகளில் மற்றொரு முறை என்று குறைந்த பட்சம் இரண்டு கல்வியற்ற ஏழைகளுக்கு கட்டிப்புடி வைத்தியம் செய்து கைதூக்கி மேலேற்றவும் வேண்டும் தனிப்பட்ட அளவில்.

இந்தியாவுக்கு கம்பல்சரி மிலிட்டரி சர்வீஸை விட நல்ல வேலையிலிருக்கும் தனி நபர்களது கம்பல்சரி எஜுகேஷன் ஸ்பான்ஸர்ஷிப் சர்வீஸ் மிக மிக அவசியமானது.

சாதி வியாபார அரசியல் நடத்துபவர்களால் ஆக்கமாக ஏதும் செய்ய இயலாது! ஆனால் முறையாகச் சிந்தித்திச் செயல்பட்டு வெற்றிகரமாக இருக்கும் ஒவ்வொரு தனிமனிதனாலும் அவனது நல்லவிதமான சமுதாய பங்களிப்பினால் சமுதாயத்தை மேம்படுத்த முடியும்.

பதிவுகளைப் போடும் வலைப்பதிவு உலகம் வெற்றியாளர்கள் நிரம்பியது. இம்மாதிரி செயல்கள் மிக வெகுதியாகச் செய்வதைத் தூண்டுவது, சொன்னபடி செய்வது என்பனவற்றால் வலைபதிவர்கள் அடுத்த நகர்வாக மேம்பாட்டுடன் நகரலாம் நெஞ்சை நிமிர்த்தியபடி!

அன்புடன்,

ஹரிஹரன்

3 comments:

நாமக்கல் சிபி said...

நல்ல உபயோகமான கருத்துடன் வந்திருக்கிறீர்கள் ஹரிஹரன்.

உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியது.

கல்விக்கு உதவுவது என்பதுவாழ்வில் ஒளியேற்றுவதைப் போன்றது.

ஒன்று கூடி விவாதிப்போம்.

நன்மனம் said...

நற்சிந்தனையை தூண்டும் பதிவு.

செயல் படுத்துவோம்.

Hariharan # 03985177737685368452 said...

நாமக்கல் சிபி,

//கல்விக்கு உதவுவது என்பது வாழ்வில் ஒளியேற்றுவதைப் போன்றது.//

கண்டிப்பாக! குடும்பத்தில் ஒருவர் பொறுப்புடன் கல்வி பயின்றால் பத்தே ஆண்டுகளில் அக்குடும்பத்தில் அனைவருமே சுயமாய் மேலேறி வந்துவிட முடியும்!