Tuesday, November 28, 2006

(66) ஈவேரா சொன்னதும் சிஷ்யகோடிகள் செய்வதும்

ஒரு சேஞ்சுக்கு ஈவெரா.சாமி சொன்ன வார்த்தைகளை வெங்காயத்தின் பாசறையில் பயின்ற அறிஞர் அண்ணா, கருணாநிதி போன்ற முதன்மை அக்மார்க் பகுத்தறிவு சிஷ்யகோடிகள் எப்படி அர்ப்பணிப்புடன் பின்பற்றி சமூகத்தில் பகுத்தறிவை பரப்பியிருக்கின்றார்கள் என்று பார்க்கலாம்:



(விடுதலையில் ஈவெரா 9.4.1962 அன்று சொன்னது:

"மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் பள்ளியில் படிக்கும் காலத்தை வீணடித்துக் கொள்ளக்கூடாது. பள்ளியில் படிக்கும் காலம் மிகமிக அருமையானது. எனவே, வெளியில் நடக்கும் எவ்வித நிகழ்ச்சிகளிலும் மாணவர்கள் தங்கள் மனத்தை அலையவிடக்கூடாது. குறிப்பாக கூறவேண்டுமானால் கிளர்ச்சிகளில் பங்கு கொள்ளக்கூடாது."


நடைமுறையில் பகுத்தறிவுப் பகலவன் ஈவெராவின் சிஷ்யகோடிகள் அண்ணா,கருணாநிதி செய்து வருவது:

1965-ல் மாணவர்களை முன்னிறுத்தி ஹிந்தியை எதிர்த்து தமிழகத்தில் மொழிப்போர் கிளர்ச்சி செய்யவிட்டு குளிர்காய்ந்தது. ஏராளமான தமிழ் மாணவர்கள் உயிரிழந்தனர்!

1967-ல் மாணவர்களை அரசியலில் மாணவரணியாக்கி அதிகாரத்திற்கு வந்தது! இன்னிக்கும் மாணவரணி இல்லாத அரசியல் திரா'விட' இயக்கமே கிடையாதேன்னு தன்னிறைவு அடைந்திருக்கிறது தமிழ்நாடு!

இன்றைக்கும் 2006ல் சென்னை நந்தனம், பச்சையப்பாஸ், மாநிலக்கல்லூரி இவைகளில் பாடங்களை விட அரசியல் திரா'விட' இயக்கங்களின் மாணவரணி அரசியலே பிரதானம்.

மாணவர்களை ஊறுகாயா ஆக்கியதாலே எல்லாரும் சத்தமாச் சொல்லுங்கோ!
கருணாநிதி ஜிந்தாபாத்!
அறிஞர் அண்ணா ஜிந்தாபாத்!




விடுதலையில் ஈவெரா 23.7.56 அன்று சொன்னது:


"பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் நல்ல நகைகள், ஆடம்பர உடைகள் உடுத்துவதுதான் பெருமையென்று கருதாமல் எளிய உடைகளே உடுத்த வேண்டும். படிக்கக்கூடிய இடத்தில், எல்லாப் பிள்ளைகளும் கலந்து பழகும்படியான இடங்களில், பேதங்கள் இல்லாமலிருப்பதுதான் நல்லது."


நடைமுறையில் பகுத்தறிவுப் பகலவன் ஈவெராவின் சிஷ்யகோடிகள் கருணாநிதி மற்றும் கழக வாரிசுகள் செய்து வருவது:

* பள பள கார்ல / பைக்ல கல்லூரி வரும் கழக வாரிசு மாணவர்கள் உதார் விட்டு உதிர்க்கும் வார்த்தை முத்துக்கள்..... டேய் வாத்தி...ஸாரி புரொபஸர்...நான் யாருன்னு தெரியும்ல ----மந்திரி மகன் ---- எம்பி மகன் ----எம்.எல்.ஏ மகன் தொலைச்சுடுவேன் --ங்காத்தா ----- மவனே!

ஆகா நம்ம எல்லோரும் ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே பொது இடங்களில் பேதங்கள் இல்லாமல் கழகங்கள் மறைத்ததற்கு!


விடுதலையில் ஈவெரா 17.5.62அன்று சொன்னது:

"மாணவர்கள்-மாணவியர் ஆபாசப் படங்கள், கருத்துகள் கொண்ட புத்தகங்களை வாங்கிப் படித்து வாழ்க்கையில் கெட்டுப் போகிறார்கள். அறிவுப் பெருக்கம் நிறைந்த-நல்ல கருத்துகளைக் கொண்ட புத்தகங்களை வாங்கிப் படித்துச் சிந்தித்து அறிவு ஆராய்ச்சி பெற வேண்டும்."


விடுதலையில் ஈவெரா 15.7.62அன்று சொன்னது:

"முதலாவதாக, மாணவர்கள் ஆசிரியருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அடுத்து, ஒழுங்குமுறை பழக வேண்டும். அதற்கு அடுத்தாற்போல்தான் பாடம்."



காலங்காலமா இந்த ரெண்டையும் கரடியா கத்தினாலும் தயிர்சாதம் தின்றவங்களோட, வீரம்குறைந்தவர்கள் பேசும் வீணான பேச்சுல்ல இது! தயிர்சாதத்துக்கு வெங்காயமும் மாவடுமாதிரியே நல்ல டேஸ்டுதாங்க! என்ன சொல்றீங்க!




குடியரசில் ஈவெரா 9.12.28 அன்று சொன்னது:

பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள் கேள்வி மாத்திரத்திலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது, எழுதி வைத்திருப்பதாலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது. வெகுகாலமாக நடந்து வருவதாகத் தெரிவதனாலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது. அநேகர் பின்பற்றுவதாலேயே நம்பிவிடக்கூடாது. கடவுளாலோ, மகாத்மாவாலோ சொல்லப்பட்டது என்பதாலேயே நம்பிவிடக்கூடாது. ஏதாவது ஒன்று நம்முடைய புத்திக்கு ஆச்சரியமாய்த் தோன்றுவதாலேயே அதைத் தெய்வீகம் என்றோ மந்திர சக்தி என்றோ நம்பிவிடக்கூடாது. எப்படிப்பட்டதானாலும் நடுநிலைமையிலிருந்து பகுத்தறிவுக்குத் தாராளமாய் மனம்விட்டு ஆலோசிக்கத் தயாராயிருக்கவேண்டும்.

பின்ன அப்படியே விட்டுருவமா? மஞ்சள் துண்டு ஆக்கம்தரும்னு தானே போட்டிருக்கீங்கன்னு கருணாநிதிய மனசு விட்டு கேட்டுத் துளைச்செடுக்குறோம்ல நாங்க ஆன்மீகப்பகுத்தறிவு இருக்கிறதால.
108 காரணம் ஒரு செயலுக்கான்னு மயக்கம் போட்டு விழலையே . நாங்க மெய்யாலுமே ரொம்ப ஸ்டெடியாச்சே! அநேகம்பேரால பகுத்தறிவுன்னு பம்மாத்துக் காட்டினானும் நம்பலயே எந்தப் பகுத்தறிவு வெங்காயத்தையும் நம்பி நாசமாப் போகலையே நாங்க!

குடியரசில் ஈவெரா 26.2.33 அன்று சொன்னது:

"நீங்கள் எந்த முறையில் கடவுளை நிர்ணயித்தாலும் எந்த முறையில் எவ்வளவு நல்ல கருத்தில் மதத்தை நிர்மாணித்தாலும் பலன்கள் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்குமே தவிர, மூட நம்பிக்கைக் கடவுளை விட, குருட்டுப்பழக்க மதத்தைவிட சீர்திருத்தக் கடவுளும், பகுத்தறிவு மதமும் ஒன்றும் அதிகமாய்ச் சாதித்துவிடப் போவதில்லை."

நடைமுறையில் பகுத்தறிவுப் பகலவன் ஈவெராவின் சிஷ்யகோடிகள் கருணாநிதி மற்றும் கி.வீரமணி மிகச்சமீபத்தில் செய்து வருவது:

திருவரங்கத்தில் ரங்கநாதர் கோவில் முன்பாக வெங்காயத்திற்கு சிலை வைக்க அரசாணை கருணாநிதி ஒப்புதல் தந்து கி.வீரமணி ஈவெரா.சாமியின் கரும்பாறைச் சிலை உருவம் பிரதிஷ்டை.

இந்தியாவில் இன்னுமொருமதம் பெரியார்/பகுத்தறிவுமதம் ஏற்படுத்திய வெங்காய வியாபாரிகளுக்கு பாராட்டுக்கள்!



அன்புடன்,

ஹரிஹரன்

குறிப்பு:
ஈவெராவின் வார்த்தைகளை ஓரிடத்தில் வைத்த பிருந்தனுக்கு நன்றிகள்!















9 comments:

Hariharan # 03985177737685368452 said...

டெஸ்ட் மெசேஜ்!

முத்துகுமரன் said...

//கருணாநிதி ஒப்புதல் தந்து //

ஒப்புதல் தந்தது வெங்கடேஸ்வர தீட்சதர். ஆண்டு 1973

Hariharan # 03985177737685368452 said...

முத்துக்குமரன்,

1973ல் கருணாநிதிதான் முதலமைச்சர்.
ஊராட்சித்தலைவர் வெங்கடேஸ்வர தீட்சிதர் இப்படியேல்லாம் தைரியமா தனியா முடிவெடுத்தார்ன்னு சொல்லாதீங்க. :-))

வெங்கடேஸ்வர தீட்சிதர் He let his shoulders to be used by the Higher authorities apparantly who is none other than MK!

ENNAR said...

ஏழை பணக்காரன் பாகுபாடு தெரியக்கூடாது என்பதற்காகத்தான் பள்ளிகூட மாணவர்களுக்கு சீறுவுடை கொண்டுவந்தார் காமராஜர்.
ஹரி ஏன் கள் ஐ விட்டு விட்டுவிட்டீர்கள்
கள் குடிக்கக்கூடாது என்பதற்காக தனது 300 அல்லது 1000 (சரியாக தெரியவில்லை) தென்னைமரங்களை வெட்டி வீழ்த்தினார் கள்ளுக்கடை மறியல் நடத்தினார் ஈ.வே. ராமசாமி நாயக்கர். அவரது சிய்யர்கள் மதுவிளக்கை ரத்து செய்தனர். வைத்தார்கள்

Hariharan # 03985177737685368452 said...

என்னார் ஐயா,

தமிழர் நலன் குறிப்பாக அடுத்த தலைமுறை மீது அளவற்ற அக்கறையோடு அர்பணிப்புடன் அரசியலில் இருந்தவர் கர்மவீரர் காமராஜர்.

இவரைத் தோற்கடித்த பாவம் தமிழனை 40 ஆண்டுகளாக திரா'விட' இயக்கங்களினால் விளைந்த மங்குசனி பிடித்தாட்டுகிறது.

கருணாநிதிக்கு மஞ்சள் வண்ணம் கிட்டிய மாதிரி பொதுமக்களுக்கு ஆக்கம் தர்ற நிறம் என்னன்னு யாராவது சொன்னால் நல்லது.

ஈவெராவின் வார்த்தைகளை பகுதிகளாக நடைமுறையில் அவரது பாசறை பயின்றவர்கள் எப்படி பகுத்தறிவோடு நிறைவேற்றியிருக்கிறார்கள் என்று இருப்பதால் சில அடுத்து வரும்

கருப்பு said...

அட வெண்ணை,

அப்போ ஆர்.எஸ்.எஸ், பாஜக, பஜ்ரங்தள், விஸ்வ ஹிந்து பரிஷத் இதில் எல்லாம் மாணவர் அணியே இல்லை என்று நிரூபிக்க முடியுமா?

Hariharan # 03985177737685368452 said...

ஜென்டில்மேன் கருப்பு,


"மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் பள்ளியில் படிக்கும் காலத்தை வீணடித்துக் கொள்ளக்கூடாது. பள்ளியில் படிக்கும் காலம் மிகமிக அருமையானது. எனவே, வெளியில் நடக்கும் எவ்வித நிகழ்ச்சிகளிலும் மாணவர்கள் தங்கள் மனத்தை அலையவிடக்கூடாது. குறிப்பாக கூறவேண்டுமானால் கிளர்ச்சிகளில் பங்கு கொள்ளக்கூடாது."

இதைச் சொன்னது பகுத்தறிவுப் பகலவன் ஈவெரா.சாமின்னு ஒத்துக்கொள்கிறீர்களா?

//அப்போ ஆர்.எஸ்.எஸ், பாஜக, பஜ்ரங்தள், விஸ்வ ஹிந்து பரிஷத் இதில் எல்லாம் மாணவர் அணியே இல்லை என்று நிரூபிக்க முடியுமா?//

ஈவெரா வெங்காயத்தின் பகுத்தறிவை திரா'விட' பாசறையில் பயின்றார்களா அதை ஏன் பின்பற்ற என்று கேட்க?

வெண்ணைய் பகுத்தறிவுக்கண்ணை மறைக்கிறது வேதநெறியில் நெய்த துண்டால் துடைத்துக் கொள்ளவும்
:-))

எப்பவுமே கோவமா இருக்காத சாமி கருப்பு!

Hariharan # 03985177737685368452 said...

அதெப்படிய்யா கருப்பு தங்களை மாதிரி பகுத்தறிவிலே ஊறிய, பகலவனின் பாசறையிலே பகுத்தறிவு ஆயகலைகளைப் பயின்ற ஆட்கள் அடுத்த நபரை விளித்து அழைத்துப் பேசும் போது புண்ணாக்கு, வெண்ணைய்
இன்னபிற சொற்கள் என்று "காட்டுமிராண்டி பாசை"யாக ஆகிறது தமிழ்?

வெங்காயம் இதை தனக்கு இல்லாத ஞானக்கண்ணால் முன்னமே குறிப்பாகச் சொல்லிப் போனது தனது பாசறை சிலபஸ் என்னன்னு முற்றிலும் அறிந்ததால்தானோ? :-)))

hosuronline.com said...

அரசியல்ல இதல்லாம் சகசமப்பா...