Wednesday, November 29, 2006

(68) ஈவெராவின் கன்னட வெறி! (இதுவரை அறியப்படாதது)

"தமிழ்மண்ணை வணங்கி ஈவெராவின் இந்த தமிழின துரோகத்தைஇதுவரை எவரும் கண்டுபிடிக்காததை மிகுந்த சிரமப்பட்டு ஆராய்ந்து, கண்டறிந்து சரித்திர, பூகோளத்தின் அடிப்படையில் உண்மையை உண்மையாகவே நிறுவியிருக்கிறேன். மனதை திடப்படுத்திக்கொண்டு மேலே படியுங்கள்."

தமிழர் தந்தை, பகுத்தறிவுப் பகலவன், சமூக விஞ்ஞானி என்று அஞ்ஞானிகளான தமிழ்ப் பொது மக்கள் உச்சிமோந்து, தலையில் வைத்தபடி ஆனந்தக்கூத்தாடும் ஈவெரா.சாமி எப்படிப்பட்ட கன்னட வெறியர் என்பதை புரட்டாக இதுவரை இருந்ததை புரட்டிப்போடும் உண்மையாக கீழ்க்காணும் உண்மை வரலாற்றின் மூலம் அடைபட்டுக்கிடந்த
"உண்மை"யை "விடுதலை" செய்வது எனது தலையாய சமூகப் பொறுப்புணர்வுடன், நெறிபிறழாது, செம்மையாகச் செய்யவேண்டிய கடமை என்பதால் Truth is Released here:

ம(ற)ரத் தமிழனே.... " உண்மை"யான வரலாற்றை மறந்துவிட்ட தமிழனே!
"விடுதலை"யாகு உனது அடிமைத்தனத்தினின்று. உணர்ந்திடு இந்தப் பெரிய வெங்காய சரித்திர உண்மையை! நீ பகுத்தறிவுப் பகலவனின் இந்த புரட்டு வரலாற்றை அறிந்து உணராவிட்டால் வேறு யாராவது லெமூரியாக் கண்டத்துக் கணவாய் வழியாக வேகவேகமாக வந்த செக்கோஸ்லோவேகியா ஆட்களோ, திங்கறதுக்குன்னே திங்க,புதன்,வியாழன் வெள்ளிக்கிழமையன்று செவ்வாய்க்கிரகத்திலிருந்து வந்த சனியன்கள் யாராவது வந்து இப்பேருண்மையை விடுதலைசெய்து பொதுஅறிவு என்றைக்கும் எழாத ஞாயிறான உனக்கு உணர்த்திவிடக்கூடிய அபாயம் இருக்கிறது!


பெரியார் ஈவெரா.சாமி எல்லா மேடைகளிலும் எல்லாவற்றையும், எப்போதும் , எவரையும் இது என்ன வெங்காயம் என்று அணுகுவார். இது சாதரண விஷயமாகச் சிலராலும் சதா"ரண" விஷயமாகப் பலராலும் இன்றும் பார்க்கப்படும் வரலாறு!

மேடைக்கு மேடை உண்மையை உரிப்பதாக உதார் விட்ட ஈவெரா.சாமி எப்பொழுதும் ஏன் ஒன்லி வெங்காயம் என்று சொல்லி உரிக்கவேண்டும்? மட்டைதேங்காய் என்று சொல்லியிருக்கலாமே? மட்டைத் தேங்காயைக் கூடத்தான் உரிக்க வேண்டும்.

ஏனெனில் கன்னடநாடான கர்நாடகத்தில் இருக்கும் பெல்லாரி எனும் ஊர் மீது அவருக்கு அவ்வளவு அளவிடமுடியாத ஈர்ப்பு. உலக வரைபடத்தில், இந்தோ யூரேஷியன் நிலத்தட்டில் அமைந்த இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கும் நமது இந்திய தேசத்தின் வரலாற்றில் கன்னட கர்நாடகாவில் இருக்கும் "பெல்லாரியையும்-வெங்காயத்தையும்" எப்படி பிரிக்க முடியாதோ அதே மாதிரி ஈவெரா.சாமியின் கன்னடவெறியால் கன்னட ஊர் பெல்லாரியின் நினைவுகள் உந்தித்தள்ள இந்தப் பெரிய வெங்காயம் எல்லாரையும் என்ன பெரிய வெங்காயம் என்று மேடைக்கு மேடை வெங்காய வியாபாரிகூட செய்யாத வெங்காய மார்க்கட்டிங் செய்தது காய்கறிவெறியா? இல்லை சமூக அக்கறையா? கிடையவே கிடையாது இது கண்டிப்பாக முழுக்க முழுக்க ரத்தத்தில் ஊறி(ரி)ப்போன கன்னட ஊர் பெல்லாரி வெறியே! பகுத்தறிவு ஆய்வகத்தில் டிஎன்.ஏ சோதனையில் வெளிவந்த உண்மை!

இதில் தமிழ் காட்டுமிராண்டி பாசையாம்? கன்னட ஊர் பெல்லாரி மீதும் அங்கு விளையும் பெரிய வெங்காயத்தின் மீதும் பசை மாதிரியான மொழி/ஊர் ஒட்டுதலால்தானே இப்படியெல்லாம்?

ஈவெரா.சாமி மேடைகளிலே சின்ன வெங்காயம் என்று ஏன் கூறவில்லை? தமிழ்நாட்டில் இட்லி/வடை/சாம்பாரில் பயன்படுத்தப்படும் சின்னவெங்காயம் தமிழகத்திலேயே ஏராளமாக விளைவதால்தானே? மட்டைத்தேங்காய் கூட தமிழகத்திலே நிறையக் கிடைப்பதுதானே?
ஏன் இப்படிப் பச்சையான பாகுபாடு?

பகுத்தறிவுப் பெரிய வெங்காயம் ஈவெரா.சாமியின் பெல்லாரி பாசக் கன்னடவெறிதானே இது?

"இனியானும் இருப்பவனையெல்லாம் சும்மாவானும் நிந்திப்பதைவிட்டு சிந்தித்துப் பகுத்தறிவுக்கு வேலை கொடு!"

தாய்மண்ணே வணக்கம்!

அன்புடன்,

ஹரிஹரன்

20 comments:

Hariharan # 03985177737685368452 said...

டெஸ்ட் மெசேஜ்!

திருமாவளவன் said...

LOL..........Joke of the day:-)

Hariharan # 03985177737685368452 said...

அய்யா பகுத்தறிவுப் பகலவனின் காவல் தெய்வங்களான காத்து கருப்புங்களா இன்னிக்கு நகைச்சுவை நாளாம்யா!

புண்ணாக்கு புண்ணியகோடிகளுக்கு, ஞாபகப்படுத்தணுமே ஒருகண்ணுல வெண்ணையோட அலையுற ஆட்களாச்சே! :-))

முத்துகுமரன் said...

விஞ்ஞானி ஹரிஹரன் வாழ்க! வாழ்க!!. :-))

Krishna (#24094743) said...

சூப்பரப்பு..இதல்லவோ ஆப்பு...ஜமாயுங்க ஹரிஹரன்... :-):-)

Hariharan # 03985177737685368452 said...

வாங்க திருமாவளவன்,

இங்கு இன்றைய கூட்டணியில் நட்பாக கைகோர்த்தமைக்கு மிக்க நன்றி!

Hariharan # 03985177737685368452 said...

முத்துக்குமரன்,

விஞ்ஞானியாக்கி இருமுறை வாழ்வித்ததற்கு மிக்க நன்றிகள்!

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

:-DDDDDDDDDDDD

பொன்ஸ்~~Poorna said...

ஹரிஹரன்,
எனக்கு ரொம்ப நாள் சந்தேகம் இன்னும் ஒன்று இருக்கு.. தீர்த்து வைக்கிறீங்களா?

ஒவ்வொரு பதிவிலும் முதல் பின்னூட்டம் சோதனைப் பின்னூட்டமா நீங்களே போடுறீங்களே? ஏதேனும் வாஸ்துவா? ;)

dondu(#11168674346665545885) said...

நீங்கள் நகைச்சுவையாக நினைத்துக் கூறியது உண்மையே. நான் முன்னம் இட்ட ஒரு பதிவிலிருந்து:
ஈவேரா நாட்டாலும், பழக்கவழக்கங்களாலும் தமிழராயினும், மொழியால் கன்னடர்தான். ஆம், அவரது வீட்டுமொழி கன்னடம். தாம் கன்னடர் என்பதை அவரே தமது பேச்சிலும், எழுத்திலும் பன்முறை மிகவும் பெருமிதத்தோடு சொல்லிக் கொண்டவர். - (டாக்டர் ம.பொ.சிவஞானம், நூல்-தமிழகத்தில் பிறமொழியினர்) என்ற குறிப்போடு முதல் அத்தியாயம் தொடங்குகிறது.

"ஈவேரா தமிழரா?
"ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஒரு தமிழர், தமிழ் மொழிக்காக அரும்பாடு பட்டவர் என்றெல்லாம் இன்று ஈவெராவின் அடிவருடிகள் சொல்லிக் கொண்டு தமிழருக்காகவே வாழ்ந்தவர் அவர் என்ற பொய் தோற்றத்தைத் தமிழகத்திலே உருவாக்கி வந்தனர். இன்னும் உருவாக்கி வருகின்றனர். ஆனால் 'தமிழர் தலைவர்' என்றெல்லாம் ஈ.வே.ராமசாமி நாயக்கரைச் சொல்கிறார்களே - அவரே தம்மை பற்றி அறிமுகப் படுத்திக் கொண்டது எப்படித் தெரியுமா?

'கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன், அண்ணாதுரை தமிழர்' (பெரியார் ஈவேரா சிந்தனைகள் - முதல் தொகுதி) என்றும், 'நான் கர்நாடக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவன்' (குடியரசு 22/8/1926) என்றும் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்."

'நான் கன்னடியன்' என்று தம்மைப் பெருமையோடு சொல்லிக் கொண்டவரைத்தான் தமிழர் என்றும், தமிழர் தலைவர் என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். 'நான் கன்னடியன்' என்று சொல்லிக் கொண்டே ஈவேரா தமிழ்மொழியையும், தமிழ்ப்புலவர்களையும் விமர்சித்தது கொஞ்சநஞ்சமல்ல.

'தமிழும் தமிழரும்' என்ற நூலில் ஈவேரா கூறுகிறார்:

''இன்று தமிழ் உலகில் தமிழ்ப்புலவர்களில் சில புலவர்களின் பெயர்கள் அடிக்கடி அடிபடுகின்றன. அவர்கள் 1.தொல்காப்பியன், 2.திருவள்ளுவன், 3.கம்பன்.

இம்மூவரில்,
1. தொல்காப்பியன் ஆரியக்கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாக செய்துவிட மாபெரும் துரோகி.
2. திருவள்ளுவன் அக்காலத்துக்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.
3. கம்பன் இன்றைய அரசியல்வாதிகள் - தேசபக்தர்கள் பலர்போல் அவர் படித்த தமிழ் அறிவை, தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தித் தமிழரை இழிவுபடுத்திக் கூலிவாங்கிப் பிழைக்கும் மாபெரும் தமிழ்த்துரோகியே ஆவான். இவன் முழுப்பொய்யன். முழுப்பித்தலாட்டக்காரன். தன்னைப் பார்ப்பானாகவே கருதிக் கொண்டு பார்ப்பான் கூட சொல்லப் பயப்படும் கருத்துக்களை எல்லாம் கூறி தமிழர்களை நிரந்தர கீழ்மக்களாக்கி விட்ட துரோகியாவான். இம்மூவருமே ஜாதியையும் ஜாதித்தொழிலையும் ஏற்றுக் கொண்டவர் ஆவார்கள்."

20/1/1929 குடியரசு இதழில் திருவள்ளுவரைப் பற்றி மேலும் சொல்வது:
"அவரது குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும், மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம், மேலோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரிய மத சம்பிரதாயங்களையும், மூடநம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களைப் பரக்கக் காணலாம்."

இதுதான் மாபெரும் தமிழ்ப்புலவர்களைப் பற்றிய இவரது பார்வை. தொல்காப்பியரும், கம்பரும், வள்ளுவரும் துரோகிகள். சரியான பட்டம்!"

மேலே படிக்க: http://dondu.blogspot.com/2006/09/blog-post.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Hariharan # 03985177737685368452 said...

//எனக்கு ரொம்ப நாள் சந்தேகம் இன்னும் ஒன்று இருக்கு.. தீர்த்து வைக்கிறீங்களா?//


//முதல் பின்னூட்டம் சோதனைப் பின்னூட்டமா நீங்களே போடுறீங்களே? ஏதேனும் வாஸ்துவா?//

பொன்ஸ்,

வாஸ்தவமா வாட் ஈஸ் தட் வாஸ்துவா?ன்னு சந்தேக மேகத்தை நீங்க கிளப்பியதாலே முதல்ல க்ளியர் பண்ணவேண்டியிருக்கு.

வாஸ்தவத்தைச் சொன்னா அது வாஸ்து இல்லை. பின்னூட்டுவதை பகுத்தறிந்த பொதுஅறிவு.

பதிவைப்படிக்கிறவங்க கருத்தைப் பின்னூட்ட சோதனையா பின்னூட்டப்பெட்டி இருந்திடக்கூடாதே என்ற சமூக அக்கறை!

எனக்கு ராகுகாலம்,வாஸ்துக்களில் நம்பிக்கை கிடையாது!

Hariharan # 03985177737685368452 said...

செந்தில் குமரன்,

பெரிசா சிரிச்சதுக்கு மிக்க நன்றி

bala said...

aஹரிஹரன் அய்யா,

கரும் பாறை சினிமாவை கன்னடத்தில் டப் செய்து வெளியிட பகுத்தறிவோடு தமிழக அரசு பண உதவி செய்யுமா?
கரும் பாறையின் மொழியை செம் மொழியாக அறிவிக்க பகுத்தறிவு பேதிகள் போராடுவார்களா?

காட்டுமிராண்டி மொழியான தமிழுக்கு பதிலாக,கன்னடத்தை ஆட்சி மொழியாக தமிழ்நாட்டில் அமுல் படுத்தினா காவேரி பிரச்சனையையும் பகுத்தறிவோடு தீர்த்து விடலாம்.

பாலா

VSK said...

நகைச்சுவை பதிப்பு என்ற கோணத்தில் மிக அருமையாக வடித்திருக்கிறீர்கள்.

ஆனால், திரு. டோண்டுவின் அந்தப் பின்னூட்டத்தைப் பிரசுரித்ததின் மூலம், நெறி தவறியதாகப் படுகிறது எனக்கு.

தவறெனில் மன்னிக்கவும்.

dondu(#11168674346665545885) said...

"ஆனால், திரு. டோண்டுவின் அந்தப் பின்னூட்டத்தைப் பிரசுரித்ததின் மூலம், நெறி தவறியதாகப் படுகிறது எனக்கு."
முழுக்க முழுக்க ஈவேரா கூறியதைத்தான் கூறினேன். இதில் ஏதாவது நெறிதவறு இருந்தால் அதற்கு கோட் செய்யப்பட்ட விஷயங்களே பொறுப்பு.

ஹரிஹரன் நகைச்சுவை என்று கூறியதை விடாது கருப்பு எப்படி திரித்திருக்கிறார் என்பதையும் பார்க்கட்டும் எஸ்.கே. அவர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Hariharan # 03985177737685368452 said...

சிநேகிதன்,

சிஷ்யகோடி கருணாநிதி வாழைமட்டை காப்புரிமை முன்னமே பாசறைப்பயிற்சியிலேயே எடுத்ததால் மட்டை மட்டை "டேஷிங்" ஆகம பெரிய வெங்காயம் புழக்கத்துக்கு வந்திருக்கலாம்!

Hariharan # 03985177737685368452 said...

டோண்டுசார்,

நகைச்சுவைப்பதிவில் அரசியல் சரவெடியை தோரணமாகக் கட்டியிருக்கின்றீர்கள்!
படித்தும் பகுத்தறிவு வேலை செய்யாத அதி மூடர்கள் பெரியார் பக்தி போர்வையில் கருத்து வன்முறைக்கு தயாராவார்கள் :-(

Hariharan # 03985177737685368452 said...

பாலா,

காவேரியில தண்ணீர் ஓடுகிறதோ இல்லியோ காவேரியை வைத்து இவர்கள் வாழ்க்கை ஓடுகிறது!

நகைசுவையினிடையே சோகம்! :-(

Hariharan # 03985177737685368452 said...

எஸ்கே சார்,

டோண்டுசாரின் கருத்து அது! நான் வருத்தப்பட ஏதுமில்லை. உங்களால் அடுத்த நபரை வருத்தப்பட வைக்க முடியாது!

VSK said...

எனக்குத் தோன்றிய அதே கருத்து திரு. வி.க. வுக்கும் உங்கள் பின்னூட்டத்தைப் படித்ததும் தோன்றியிருக்கலாம் அல்லவா, திரு டோண்டு அவர்களே!

பதிவின் தலைப்பை ஒட்டியே நமது பின்னூட்டங்கள் இருந்தால் பிரச்சினைகளைத் தவிர்க்கலாமோ என்னும் பொருளில் சொன்னேன்.
தவறெனில் மன்னிக்கவும்!