Thursday, December 28, 2006

(95) எல்லோருக்கும் எனது 2007 புத்தாண்டு வாழ்த்துக்கள்

எனக்கு தனிப்பட்டு 2006 நல்ல சிறப்பான வருடம். வலைப்பூ உலகம் என்கிற இணைய உலக ஜோதியில் இணைத்துக்கொண்ட வருடம். ( பலருக்கு இதனாலேயே 2006 மோசமான வருடமாக இருந்திருக்கலாம் :-)) ;-)))

2006ல் வேறு எப்போதும் இல்லாத அளவுக்கு எனது மூளையை கசக்கியிருக்கிறேன். (உனக்கு மூளையே கிடையாதுன்னு உன் எழுத்துதான் சொல்லுதே என்று செல்லமாக ஓசை எழுப்புபவர்களுக்கு) அட்லீஸ்ட் இந்த 2006ல் என்னோட மூளையைத் தேட ஆரம்பித்து இருக்கிறேன்! இனிமையான சாம்பிராணி மணத்துடன் எனது எழுத்துத் தமிழ் மணம் வீசியது என்றே நான் நினைக்கின்றேன்!

இணைய வலைப்பூ வாசத்திற்குப்பின் வாசிப்புக்களால் அறிவு என்பது மேம்பட்டது. பல்வேறு மாற்றுக் கண்ணோட்டங்களை மிக அருகே இருந்து ஒன் டூ ஒன் என்கிற மாதிரி ரசித்து அனுபவித்து, விமர்சித்து, விமர்சனப்படுத்தப்பட்டு, வசவுகள் தராமலே வசவுமேல் வசவு வாங்கி மனோதிடம் மேம்படுத்தப்பட்டு, கருத்தைக் கருத்தாகப் பார்ப்பது என்பது கடினமான பக்குவம் என்று படித்ததன் அர்த்தத்தை முழுதும் உணர்ந்து பயணிக்க வலைப்பூ வாசம் உதவியது.

2006ல் எனது தனித்த நேரம் எனது வலைப்பூ மூழ்கலால் களவாடப்பட்டது என்ற போதும் பயனுள்ளதாகவே கருதுகிறேன். வீட்டில் எப்போதும் பெரிய சிந்தனைவாதி மாதிரி தனித்து இருக்கும்படி செய்து கொள்ளவேண்டியதில் எனது வலைப்பூ வாசம் வீட்டில் இருப்பவர்களால் எதிரியாகப் பார்க்கப்படுகிறது.

2007 புதிய ஆண்டில் வலைப்பூ வாசம் குறைத்துக் கொள்ள திட்டமிட்டிருக்கிறேன்!
(நான் திட்டமிட்டால் அது நடக்காது என்பது என் ராசி) எனவே உடனே மிகுந்த மகிழ்ச்சி அடைய வேண்டியது இல்லை :-)))

எனது பதிவைப் படிக்காத, படித்த, படித்துப் பின்னூட்டமிட்ட , பின்னூட்டமிடாத, விமர்சித்த, பாராட்டிய, வசவுகளை அள்ளித்தெளித்த என அனைவருக்கும் எனது 2007 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

எல்லோரும் 2006ல் பெற்ற நல்-அனுபவங்களினும் கூடுதலாக இந்த 2007 புத்தாண்டில் இன்னும் சிறப்பான நல்ல அனுபவங்களைப் பெற்று தத்தம் நல்ல குறிக்கோள்களில் வெற்றியடைந்து மேலும் மேம்பட எனது நல்வாழ்த்துக்கள்.

மீண்டும் 2007 புத்தாண்டில் சந்திக்கலாம்.

அன்புடன்,

ஹரிஹரன்

Wednesday, December 27, 2006

(94) இந்து மதம் சார்வாக வாழ்வியலைத் தின்று செரித்ததா?

ஹஸ்தபதம்-> Husband சமஸ்கிருத ஹஸ்தபதம் எனும் சொல்லிலிருந்து ஆங்கிலம் உள்வாங்கியது
கட்டுமரம்->Cuttamaran தமிழ் கட்டுமரம் என்பதிலிருந்து ஆங்கிலம் உள்வாங்கியது
பதார்த்த கறி->Curry தமிழ் கூட்டுகறி என்பதிலிருந்து ஆங்கிலம் உள்வாங்கியது

ஆங்கிலம் செறிவோடு இருக்க அது எல்லா உலக மொழியிலிருந்தும் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டது. இந்த அடாப்டபிளிட்டி என்பதனால் ஆங்கிலம் தமிழை உள்வாங்கி அழித்தது என்று சொல்ல முடியுமா? அப்படிப் பேசினால் சுயமரியாதை, பகுத்தறிவுப் பேச்சாக ஆகுமா?

குகைக் கோவில்கள் என்று பாறையில் இறைவன் உருவங்கள் செதுக்கப்பட்டு வழிபட்ட பழக்கம் பின்னால் ஆகம விதிகளுடன் கர்ப்பக்கிரஹம்,பிரஹாரம், கோபுரம், தெப்பக்குளத்துடன் கூடிய ஆலய வளாகங்கள் என்பதாக காலஓட்டத்தில் அடுத்தநிலைக்கு ஏற்றத்துடன் பரிணாம வளர்ச்சி அடைந்தன. இதனை குகைக் கோவில் கலாச்சாரத்தினை ஆலய வளாகங்கள் உள்வாங்கிச் செரித்தன என்று பேசினால் அது சுயமரியாதை, பகுத்தறிவுப் பேச்சாகுமா?

பண்டைய குடவரைக் கோவில்கள் பண்பாட்டினை, கலாச்சாரத்தினை ஆஹம ஆலயவளாகங்கள் அழித்தன என்றாகுமா?

அடுத்த முன்னேறிய நிலைக்குச் செல்கிற பயணம் என்பது முந்தைய நிலையினை அழித்தது என்பதாகப் பொருள் கொண்டு குழப்புவதுதான் பகுத்தறிவா?

இந்து வேத நெறி வாழ்வியலில் தத்துவங்கள் பல பரிணாம வளர்ச்சிக்கு உள்ளாகியிருக்கின்றன.

சார்வாக வாழ்க்கை முறை என்று ஒன்று இருந்தது! திராவிட இயக்கங்கள் பஞ்சமர்களை அழித்து உள்வாங்கியது வேத நெறி வாழ்க்கை முறை என்று கூப்பாடு போடுவது இன்னும் நகைச்சுவை.

நீலகிரியில் இன்றும் தோடர்கள் அவர்களது பிரத்யேக வீடுகள், வழிபாடு, பண்பாடு, கலாச்ச்சரத்துடன் இருகின்றார்கள். படித்து வெளியுலகோடு தொடர்புகொள்ளும் தோடர்கள் இதர சமூகத்தினர் மாதிரியே வாழ எத்தனிப்பது என்பது தோடர்களது பண்பாட்டை, கலாச்சாரத்தினை இந்துமதம் தின்று செரித்ததாக எண்ணமுடியுமா?

சார்வாக வாழ்க்கை முறை என்பது என்ன? சார்வாக மகரிஷியின் தத்துவங்கள் சார்வாக வாழ்க்கைமுறை. சார்வாக வாழ்க்கைமுறையில் ஒரு சின்ன சாம்பிள் பார்ப்போம்.

"Runam Krithva Ghritham piba"
ருணம் கிரித்வா கிரிதம் பிபா
"கடன் வாங்கியாவது நெய் குடி"

இது சார்வாக வாழ்வியலில் ஒரு சுலோகம். உடலை மட்டுமே பிரதானமாகக் கொண்டாடும் வாழ்வியல் தத்துவம் சார்வாக தத்துவம். கடனை வாங்கியாவது நெய் பருகி உடலைப் பேணச்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம் என்பது மாதிரி மனிதன் பிறந்ததே புலன் இன்பங்களை அனுபவிப்பதற்கே என்கிற ஆரம்பநிலை வாழ்வியல் தத்துவம்.

இப்படி உடலை மட்டுமே பிரதானம் என்கிற புள்ளியினும் சிறிய சிந்தனையாகிய சார்வாக தத்துவம் எப்படி எதனால் என்பது மாதிரியான கேள்விகளை கேட்கச் சொல்வதில்லை. சார்வாகத்தில் எல்லாமே ஏன் கேள்விகள்தான். ஏன் என்பது இருப்பதிலேயே எளிதாக எந்தப் புரிதலும் இல்லாத அளவிலேயே எவராலும் ஏராளமாக எழுப்ப முடிகிற எளிதான கேள்வி!

ஆக உடலை மட்டும் பேணும், ஏன் என்று மட்டும் கேள்வி கேட்பது இருப்பதிலேயே எளிதான ஆரம்ப நிலை வாழ்வியல் முறை. இதில் சிந்தனைக்கு இடம் எங்கே இருக்கிறது? "ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை" என்பது மாதிரி சார்வாக வாழ்வியல் இருந்தது.

மனிதனுக்கு வேதநெறி வாழ்வியல் என்கிற சர்க்கரை கிடைத்தால் இனிப்புச் சுவைக்கு இலுப்பைப் பூவுக்கு ஏன் செல்லப்போகிறான். எனவே சார்வாக வாழ்வியல் முறை காலஓட்டத்தில் மனித நாகரீகத்தின் பரிணாம வளர்ச்சி என்கிற மியூஸியப் பொருளாக ஆனது. புள்ளி அளவில் சிந்தனை, உடலே அல்டிமேட் என்கிற வாழ்வியல் முறையின் அருகே பெரிய ஹைவேஸ் மாதிரி வேதநெறி வாழ்வியல் பல்விதமான எதனால், எப்படி என்கிற subjective inquiry களுக்கு அறிவியல் விளக்கங்கள் தந்தபடி நான்கு வேதங்கள்,கல்வி, கலைகள்,மருத்துவம், போர்கருவிகள், ஆன்மீக உயர்தத்துவ உபநிடங்கள், வழிபாட்டுமுறைகள், என்று பரிணாம வளர்ச்சி அடைந்தது கடந்த 10,000 ஆண்டுகளில்.

எது நேர்மையானதோ எது மனிதனின் பரிணாம வளர்ச்சியோடு சிந்தனைகளுக்கு வழிகாட்டுகிறதோ அதுவே மனிதனின் வாழ்வியல் முறையாக தினசரி வாழ்வில் நீடிக்கும். வலிந்து திணிப்பதால் தத்துவங்கள், வாழ்வியல் நெறி என எதுவும் காலத்தினை வென்று நெடுங்காலம் நீடித்து நின்றிடாது.

Anything and everything is subjected to evolution. Time changes anything and everything. The one that fails to cope up to face the challenges and upgrade / evolve to the legitimate requirements will diminish because of the builtin deficiency.

சார்வாக வாழ்வியல் தத்துவத்தினை இந்து வேதநெறி தின்று உள்வாங்கியதாகச் சொல்வதெல்லாம் பரிணாம வளர்ச்சியினை முன்னேற்றத்தினை இல்லை என்று மறுப்பதற்கொப்பானது.

பகுத்தறிவு என்று கூடுதலாக ஏழாவது சென்ஸ் என்பதெல்லாம் தேவையில்லை! சாதாரணப் பொதுஅறிவு இருந்தாலே போதும் மாற்றம் என்பது முன்னேற்றத்திற்கான பரிணாம வளர்ச்சிக்கான கட்டாயத்தேவை என்பதை உணர்வதற்கு!

அன்புடன்,

ஹரிஹரன்

(93) பகவத் கீதை பொருள்உலகியல் எல்லையில்

உயர்ந்த இந்துமத வேத நெறி, உபநிட தத்துவங்கள் எல்லாம் ஞான எல்லை எனும் தளத்தில் வைத்துப் பொருள் காணாமல் பொருள் உலகியல் எல்லையில் மனிதனுக்குக் கேடயமாக வைத்துப் பயன்படுத்தப்படுவதில் பகவத்கீதையின் நோக்கம் களங்கப்படுத்தப்படுகிறது.

பகுத்தறிவு என்பது எதையும் நேரடியாக ஆராய்ந்து உண்மையைக் கண்டுபிடித்து அதன் படி நடத்தலே என்பது பகுத்தறிவுச் சுயமரியாதைச் சிங்கங்களின் சீற்றமாக தமிழகத்திலே கிட்டத்தட்ட 75 ஆண்டுகளாக கொளுகை அளவிலும் ஆட்சி அதிகாரத்தில் அரசியல் திரா"விட"ப் பெத்தடின் இயக்கங்கள் சொல்லி அடித்து, நெத்தியடியாகச் செயல்பட்டு வர மக்களை வழி நடத்தி வருகின்றன.

பகுத்தறிவுப் புரட்(டு)சி புயலாக வீச, சுயமரியாதை கொழுந்துவிட்டெரியும் தமிழகத்தில் வீட்டைக் க்ளீன் செய்ய வீட்டையே கொளுத்துவது என்கிற பாணியில் சீரமைப்புச் சீர்திருத்தங்கள் நடைபெறுகின்றன். வேதம், இந்துமதம் என்றாலே ஆஆ..ஊஊ..டாய்..டோய் சத்தம் மட்டுமே ஏற்பட்டிருக்கும் சீர்திருத்தம். அவசியமானது சிறு திருத்தம் புரிந்துகொள்ளும் தளம் பற்றியதில் மட்டுமே அவசியம் என்பது தெரியாதமாதிரி எதுவும் தெரியாதவர்கள் சுயமரியாதை, பகுத்தறிவு என்று கூவியபடியே நடக்கிறார்கள்!

கீழ்க்கண்ட உயரிய தத்துவங்கள் பகவத் கீதையில் சொல்லப்பட்டவை: இவற்றின் பொருள் ஞான எல்லையில் / தளத்தில் வைத்துப் புரிந்து கொள்ளப்படவேண்டும்.

"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது"

"எதைக் கொண்டுவந்தாய் அதை இழந்தேன் என்று சொல்வதற்கு"

"இன்று உன்னுடையதாக இருப்பது நாளை இன்னொருவருடையதாகிறது"

இந்தத் தத்துவங்களின் பொருளை ஞான எல்லை தளத்தில் வைத்து உணர்கின்ற போது மனிதனுக்கு அவன் சந்திக்கின்ற தினசரி அனுபவங்கள் வாழ்க்கையில் கூடுதல் உந்து சக்தியை தந்து சிறப்பாகச் செயலாற்ற இவை துணை புரிகின்றன.

இந்த் இந்து மதத் தத்துவங்கள் என்பவை தமிழகத்தில் சில காலத்திற்கு முன்பாக சில நிதி நிறுவனங்கள் மேற்சொன்ன கீதை உபதேசத்துடன் கூடிய தினசரி நாள் காட்டிகளை பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.

இந்த இந்த நிறுவனங்களின் 36% வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தினை முதலீடு செய்த பொதுமக்களுக்கு கீதையுரை வழங்கப்பட்டன:

இந்த மோசடி நிதிநிறுவனங்கள் மூடப்பட்ட போது முதல் கீதையுரை பயன்படுத்தப்பட்டது:

"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.."

முதலீடு செய்த பணத்தைத் திரும்பத்தா என்ற பொதுமக்களுக்கு இரண்டாவது கீதையுரை:

"எதைக் கொண்டுவந்தாய் அதைத் திரும்பக் கொண்டுபோவதற்கு"

36% வட்டிக்கு ஆசைப்பட்டு முதலை இழந்த நபர்களுக்கு மூன்றாவது கீதையுரை:

"இன்று உன்னுடையதாக இருப்பது நாளை இன்னொருவருடையதாவது இயற்கையின் நியதி"

இது ஸ்மார்ட் லிவிங் அல்ல. கீதை என்ன சொன்னது இவர்கள் மோசடிக்கு கீதை துணைபோனதாக அர்த்தம் கொள்வது பகுத்தறிவாகுமா?

வர்ணாஸ்ரமம் என்று கீதையில் சொல்லப்பட்டது என்ன? அதைச் சுயமரியாதையாகப் பகுத்தறிவு பேசும் இயக்கங்கள் எந்த தளத்தில் வைத்து எப்படி அர்த்தம் செய்து கொண்டு பகவத்கீதையை மோசமான நூல் என்று கும்மியடிக்கின்றன!

இந்துமத வேத சாஸ்திரத்தினை முன்வைத்து மனிதன் தன்னைப் பின்வைத்துக்கொள்ளும் நிலை மாறி சுயநலங்களுக்காக மனிதன் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டு அதற்குத் தோதாக இந்துமத வேத நெறி சாஸ்திரத்தினைப் பின்வைக்கிறது என்பது மனிதனின் தவறே அன்றி இந்துமத வேத சாஸ்திரத்தின் தவறாகுமா?

சுயலாபங்களுக்காக மனிதர்கள் தவறு செய்வதற்கு இந்துமத வேத நெறி சாஸ்திரத்தினை பழிப்பது என்பது பகுத்தறிவாகுமா? சிறுதிருத்தம் செய்து மனிதத் தவறுகளைக் களைவது எளிதா? இல்லை வேதநெறியையே புறக்கணித்து எந்த நன்னெறி அடிப்படையும் இன்றி புதியதாக ஒரு வழி கண்டுபிடிக்கிறேன் என்பது எளிதா? முன்னோர்கள் காலகாலமாக செறிவான தன்னலம் அற்ற சிந்தனைகளின் தொகுப்பான வேதநெறி வாழ்க்கைவழியை இழிமொழிபேசித் திரிவது ஏற்றம் தருமா?

பெரிய சுயமரியாதை, பகுத்தறிவு என்பதெல்லாம் தேவையில்லை. சாதாரணப் பொது அறிவு போதும் ! சிந்திப்பீர்!

அன்புடன்,

ஹரிஹரன்

Tuesday, December 26, 2006

(92) பெண்கள் இந்துக்கோவிலில் அர்ச்சகராக்கப் படாதது ஏன்?

கடவுளே இல்லை என்கிற சுயமரியாதை பகுத்தறிவு இயக்கங்கள் தற்போது எழுப்புவது இந்துமதத்தில் பெண்கள் கோவில் அர்ச்சகர்களாக்கப்படவில்லை எனவே இந்துமதம் பெண்ணுரிமைக்கு எதிரான மதம் என்கிற பிரச்சாரம் சுயமரியாதை, பகுத்தறிவு இயக்கங்கள் தமிழ்நாட்டில் எழுச்சியாகப் பேசுகிற முக்கியமான பெண்களுக்கான சுயமரியாதைப் பிரச்சினை.

ஈவெரா ஒட்டுமொத்த தமிழனுக்கும் ரெகமெண்ட் செய்த இஸ்லாமில் இதே பெண்ணுரிமை பற்றியோ வாயே திறக்கமாட்டார்கள், பங்குத்தந்தையாக கிறித்துவத்தில் பெண்கள் ஏன் இல்லை என்கிற பெண்ணுரிமை பற்றி கூடுதலான சுயமரியாதை, பகுத்தறிவு எச்சரிக்கை செய்ய அமைதி காப்பார்கள்.


சரி இந்து மதத்தில் ஏன் பெண்கள் அர்ச்சகராக நியமிக்கப்படவில்லை என்பது குறித்து விளக்கம்:

பெண்களுக்கு இயற்கையான மாதவிடாய் நிகழ்வு நாட்களில் உடல் உபாதை கூடியிருக்கும் பெண்களில் பலருக்கு தாளமுடியாத வலி என்று சரியாக உட்காரக்கூட முடியாமல் வலியால் துடிப்பது என்பது சாதாரணமான பொதுஅறிவுடைய வெகுதியானவர்கள் அறிந்த உண்மை.

கோவில்களில் கருவறையில் இறைவனைப் பூஜிக்கின்ற செயல் என்பது ஆறுகால பூஜை என்கிற இடைவிடாது நின்ற நிலையிலேயே இறைவன் உருவச்சிலைகளுக்கு அபிஷேக, அலங்காரம் என்கிற குனிந்து நிமிர்ந்து செய்யும் செயல்களைச் செய்யவேண்டிய கட்டாயம் உடையது.

மேற்படியாக கடுமையான வலியில் இந்தக் காலகட்டத்தில் அவதியுறும் பெண்கள் குழந்தைகள், கணவன், குடும்பத்தார் மீதே எரிந்து விழுந்து, பொறுமையிழந்தவர்களாய் கிட்டத்தட்ட "ஸ்பிலிட் பெர்சனாலிட்டி" நபர்கள் மாதிரி நடந்து கொள்வார்கள்.

மேலும் பண்டைய காலத்தில் இந்துக் கோவிலில் இறைவனுக்குச் சேவை செய்தபடியே வேதம் சொல்லித் தந்த ஆசிரியர்களாகவும் இருந்தவர்கள், அந்தந்த ஊர் வழக்குகளில் நீதியும் சொல்லியிருந்து இருக்கின்றார்கள்.

நீதி சொல்லும் நபர் நிதானத்துடன் நியாய அநியாயம் உணர்ந்து சொல்லவேண்டியது கடமை ஆதலால், உடல் உபாதை, வலி காரணமாக மாதத்தில் சில நாள் நிதானம் இழக்கும் பெண்கள் ஆலய அர்ச்சகர்களாக இந்தப் பணிக்கு உகந்தவர்களாக கருதப்படாததில் சமூக அக்கறையே பிரதானம்.

சமூக அக்கறையோடு சீர்தூக்கிப்பார்த்து வழக்கத்தில் நடைமுறைப் படுத்திய நம் முன்னோர்கள் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் தந்தே வந்திருக்கின்றார்கள். வீட்டை நிர்வகிப்பதில் இன்றளவும் பெண்கள் பங்கு மிக முக்கியமானதும் அலாதியானதும் ஆகிறது.

பெண்ணுரிமை என்று கண்மூடித்தனமாக முட்டாள் தனத்தினை சுயமரியாதை, பகுத்தறிவு என்று இந்துமத ஆன்றோர்கள் வழிமுறைப்படுத்தவில்லை. எந்த ஒரு விஷயத்தையும் அறிவியல்பூர்வமாக சீர்தூக்கி சமூக அக்கறையுடனேயே செயல்முறைப்படுத்தி வந்திருக்கின்றார்கள்.

இன்றைக்கு சுயநலமும், பச்சையான பிழைப்புவாதமும் கொள்கைகளாக அதையே மக்களை ஏமாற்றி சுயமரியாதை என்றும், பகுத்தறிவு என்றும் எத்தனை காலம் ஏமாற்றுவார்கள்?

பகுத்தறிவு வேண்டாம். பொது அறிவு போதும்! சிந்திப்பீர்!

அன்புடன்,

ஹரிஹரன்

(91) வர்ணாஸ்ரம வர்ணனை & பகுத்தறிவு சுயமரியாதை

பிராமணன் தலையினின்று தோன்றியவன், ஷத்திரியன் மார்பினின்று தோன்றியவன், வைசியன் தொடையினின்று தோன்றியவன், சூத்திரன் கால் பாதத்தினின்று தோன்றியவன் என்பதாக விஸ்வரூப நாராயணனை வர்ணிக்கிறதை வைத்து தமிழகத்தில் சுயமரியாதை இயக்கங்கள் பகுத்தறிவோடு கும்மியடித்த மாதிரி எவரும் அடித்திருக்க முடியாது!

பிராமணன், ஷத்திரியன்,வைசியன் என இவர்களெல்லாம் தலை, மார்பு, தொடையில் இருந்து தோன்றியதால் கூடுதல் சிறப்பு என்றும் சூத்திரன் கால்பாதத்தில் இருந்து தோன்றியதால் இழுக்கு என்றும் என்னவெல்லாம் பேசக்கூடாதோ அவ்வளவுக்கு நாகூசும் அளவுக்குப் பகுத்தறிவு,சுயமரியாதை, இறைவன் இல்லை எனும் இயக்கங்கள் தமிழகத்தில் பேசியாச்சு!

இந்துமதத்தில் இருப்போர் இறைவன் திருவுருவங்களை வழிபடும் போது இறைவனின் பாதங்களைத் தொட்டுத்தான் வணங்குவார்கள். அதுதான் பாரம்பர்யம். பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு தலைமீது வைக்கப்படும் சடாரி எனும் கிரீடத்தின் மீது பெருமாளின் பாதங்கள் தான் இருக்கும்.

வீட்டில் பெரியோர்களிடம் ஆசிர்வாதம் வாங்கும் போதும் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து அவர்கள் கால் பாதங்களைத் தொட்டு வணங்கித்தான் ஆசிர்வாதம் பெறுவது இந்து மதப் பாரம்பர்யம். காரணம் அவர்கள் தங்கள் கால் பாதங்கள் தேய ஓடியாடி உழைத்து குடும்பத்தினரைத் தாங்கி நிற்பதால், அவர்கள் முன் நாம் "தான்" என்கிற ஈகோ விடுத்து
விழுந்து வணங்கிச் செய்யும் பணிவு, மரியாதை வெளிப்படுத்தும் விதமான செயல்.


இவ்வளவு என்ன பிராமணன், ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என இவர்கள் எவரும் உயிர்துறந்தால் இறைவன் அடி சேர்ந்தார் என்றுதான் சொல்வது இந்துப் பாரம்பரியம்.

சமூகத்தில் உள்ள சூத்திரன் என்கிற வகுப்பினர் அவர்களது உடல் உழைப்பால் சமூகத்தினைத் தாங்குகிறவர்கள். அப்படிச் சமூகத்தினைத் தாங்குபவர்க்ளுக்குச் செய்கின்ற மரியாதையாக, சமூகத்தின் இதர பிரிவினராகிய பிராமணன், ஷத்திரியன், வைசியன் என்கிற அனைவரும் தொட்டு, வழிபடும் விஸ்வரூப நாரயண ரூபத்தின் பாதங்களாக வர்ணித்த வர்ணாசிரம வருணனை என்பது தாங்கிநிற்கும் பாதங்களுக்குத் தரப்பட்ட மரியாதை, கூடுதல் பெருமையே அன்றி இழுக்கு எப்படி?


ஆக வர்ணாசிரம வருணனையாக இன்னின்ன பாகங்களில் இருந்து இன்னின்னவர் தோன்றினார் என்பது முதலில் வருணனையாகப் பார்க்கவேண்டும். இரண்டாவது கால்பாதம் என்பது இருப்பதிலேயே உயர்வானதன்றி இழிவானதல்ல!

கடவுள் இல்லை இல்லை இல்லவே இல்லை... கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி என்கிற தெய்வமறுப்புக் கொள்கையோடு வர்ணாசிரமத்தினை அணுகும்போது அடிப்படை அறிவும் செயலிழந்து முட்டாளாகிறான்... காட்டுமிராண்டியே பரவாயில்லை என்கிற அளவுக்கு வெறுப்பும் மூர்க்கமும் கட்டவிழ்ப்பு என்கிற வெறியில் நாகரீகம் கட்டவிழ்ந்து போகிறது!

வர்ணாசிரமம் வகுப்புபேதம் பாரட்டிச் சொல்லப்பட்டதல்ல. சமூகம் பகுக்கப்படும் விதங்கள் நான்கு என்பதே வர்ணாசிரமம். அரசில் நிர்வாகத்தில் கூட கிளாஸ் 1, கிளாஸ்2, கிளாஸ்3 கிளாஸ்4 என்று நான்காக நிர்வாகம் பகுக்கப்பட்டே ஆகவேண்டும்.

நமது பகுத்தறிவு, சுயமரியாதைச் சிந்தனையோடு இருப்பவர்கள், கிளாஸ் 4 வேலையில் இருப்பவர் நாட்டின் ஜனாதிபதியின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லத்தெரிந்த பகுத்தறிவு தனது வேலையில் தான் எப்படி இருந்து செயல்பட வேண்டும் என்பதை அறிந்து கொள்ளாமலே ரிடையர் ஆகியும் விடுகிறார்!

கிளாஸ்4 வேலையில் இருப்பவர் ஜனாதிபதியாகக்கூடாது என்பதில்லை! ஜனாதிபதியாக கிளாஸ்4 சிந்தனை எந்தவிதத்திலும் உதவப் போவதில்லை. அப்படியே கிளாஸ்4 சிந்தனையோடு இருக்கும் அரசியல் வாதிகள் நாட்டின் தலைமை ஏற்றால் என்ன ஆகும் என்பதற்கு இந்திய அரசியல் இன்றைக்கு இருக்கும் சூழலினை விட பொருத்தமான உதாரணம் கிடையாது!

வாழ்க ஒழிக கூப்பாடுகள் மட்டும் சமத்துவத்தினை சமூகத்தில் ஏற்படுத்தாது. சமநிலையான சமூகம் என்பது ஜனாதிபதியும் கக்கூஸ்கழுவும் நபரும் தனிவாழ்க்கையில் சமம் என்று கருதிப் பழகும் மனோபாவம் எல்லோரிடமும் வருவது!

தமிழகத்தின் தலையாய மூத்த,சுயமரியாதைச் சிங்கம், பகுத்தறிவுப்புயல், கருணாநிதியை பத்திரிக்கையாளர்கள் மிஸ்டர் கருணாநிதி என்று விளித்துக் கேள்விகேட்டால் தமிழகத்தின் முதல்வரை பெயர்சொல்லி அழைக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டதே என்று கடுப்போடு கருத்து தெரிவித்தவர் தலைமையில் சமத்துவபுரம், சமூகநீதி, வர்ணாசிரம எதிர்ப்பு என்கிற பிழைப்புவாதம் சுயநலக் கொள்கையில் இருப்பவர்கள், வழி நடப்பவர்கள், இந்துமத வர்ணாசிரமம் என்றதும் கூடுதல் சிரமத்துடன் சாணியடிக்க ஓடி வருபவர்கள் பொது அறிவை சிறிது பயன்படுத்தினாலே இந்துமத வேதத்தில் வர்ணாசிரமம் என்பது என்ன சொல்கிறது, வர்ணாசிரம வர்ணனையில் விஷ்ணுவின் அங்கங்களாக வர்ணிக்கப்பட்டதின் உள்ள மேன்மையான அர்த்தம் என்பது எளிதில் விளங்கும்!

இந்து வேதநெறி வாழ்வியல் நெறி அப்பழுககற்றது! காலங்கள் தாண்டி நிற்கும் நேர்மையான தத்துவங்களை அறிவியல் நோக்கோடு தினசரி வாழ்வியலின் அங்கமாக்கிய எவர்க்ரீன், எவர்மாடர்ன் சமூக வாழ்க்கை நெறி!

சுயமரியாதை, பகுத்தறிவு இறைவன் இல்லை என்று சமூகவியல் பேசும் இயங்கங்களின் அடிப்படையே சுயநலம், பிழைப்புவாதம். இது எப்போதுமே குறுக்குவழிச் சிந்தனையே அன்றி நேர்மையான தத்துவங்கள் என்று எதுவுமே இதில் கிடையாது!

இனியானும் வர்ணாசிரமம், வர்ணாசிரம வருணனை இவைகளின் பொருள் அறிய பொதுஅறிவினைப் பயன்படுத்துவீர்களாக!

அன்புடன்,

ஹரிஹரன்

Monday, December 25, 2006

(90) குவைத்தில் ஆண்கள் கற்பைச் சூறையாடும் புதுமைப் பெண்கள்

ஆண்களாய் இருப்பது அபாயமாகியிருக்கிறது! ஆணுரிமை கோரி கேவி அழும் அளவுக்கு குவைத்தில் பெண்கள் புதுமைப் பெண்களாகியிருக்கிறது சில்லிடவைக்கும் உண்மை!

குவைத் வாழ் அப்பாவி ஆண் தமிழர்களே உங்களுக்கு ஒரு அறிவிப்பு:
குவைத் கடற்கரைகளில் தனியாக வாக்கிங் செல்லாதீர்கள்!
குவைத்தில் நள்ளிரவில் தனியாகச் சாலையில் நடக்காதீர்கள்!

மீறி கவனமின்றித் தனியே சென்றால் கற்பிழந்த காரினனாகிவிடுவீர்கள்! :-((

மேற்கொண்டு விபரத்திற்கு சுட்டியை சொடுக்கவும்

புதுமைப் பெண்களின் எழுச்சி?! ஆணுரிமை பேசவேண்டிய காலம்! காலத்தின் கோலம்!


கிலியுடன்,

ஹரிஹரன்

Sunday, December 24, 2006

(89) (ட)தமிழி(ளி)(லி)சை வாங்கலியோ சாமி

தமிழ் செம்மொழி(ளி)(லி) யாகியது ஓல்டு பேஷன். இப்போ லேட்டஸ்ட் டிறண்டு தமிழிசை!

சில சமயம் ஒரு பொருளை விற்கும் நிறுவனத்தின் நேரடிக் கிளையில் நடக்கும் விற்பனையை விட அந்த நிறுவனத்தின் ஏஜெண்ட் / டிஸ்டிரிப்யூட்டர் சில பரபரப்பு யுக்திகளோடு செய்கின்ற விற்பனையில் வியாபாரம் மிகுந்து காணப்படும் சூழல் சில இடங்களில் இருக்கும்.

அந்தமாதிரி அரைநூற்றாண்டாக கோபாலபுரத்தில் கலிஞரு திருக்குறள், தொல்காப்பியம் போன்ற பழந்தமிழ் இலக்கியத்தை எல்லாம் ஓபன் புக் ஸ்கீம் மாதிரி பார்த்து திரும்பி பொழிப்புரை எழுதி தமிழை கழகத்தின் முப்பெரும்/ஐம்பெரும் விழாக்காலங்களில் லகர, ளகர, ழகரம், வல்லின, மெல்லினப் பயன்பாடுகள் அறியாத இடையினமான கழகக் கண்மணிகளிடம் ஹோல்சேல் வியாபாரம் செய்து நாலு காசு சம்பாதிக்கப் பயன்படுத்தி வந்தார்!

இப்போ இந்த மும்முரமான முத்தமிழ் வியாபாரம் கோபாலபுரத்தினின்று கலிஞரு கையை விட்டு திண்டிவனத்துக்கு தமிழ்க்குடிதாங்கி மருந்து ராமதாசு கைக்கு வந்தாச்சு! கலிஞரு செம்மொழியாக்கி தமிழ்த்தாயின் அணிகலன்கள் (அணி)வித்து அழகு சேர்த்ததை விட குடிதாங்கியால் தமிழ்த்தாயின் அணிகலன்கள் (அணி)வித்தல் இனிக் கூடுதல் வேகம் பெறும் என நம்பலாம்!

மல்லுவேட்டியை வரிஞ்சுகட்டி வரிவரியாக் கோடுபோட்ட அண்டிராயர் தெரிய உடுத்துவது தமிழ்நாட்டு நாட்டுப்புறத் தமிழனின் உடை உடுத்தும் பாவனை.

மல்லுவேட்டி வாங்கிய கடை பெயர் : மம்மிடாடி
கோடுபோட்ட அண்டிராயர் வாங்கிய கடை பெயர்: ஆண்டி அங்கிள்


இப்படித் தமிழன் தமிழைக் கிழிஞ்ச கோவணம் மாதிரி ஆண்டியாக்கி தினசரியாக வாழ்கின்ற செம்மொழியாகத் தமிழன் தமிழ்மொழியைப் பேணுகிற நிதர்சனத்தில், புது ரூட்டுல தமிழிசைன்னு கிளம்பியிருக்கிறது என்னத்துக்கு?

காசுமேல காசுவந்து கொட்டுகிற நேரமிது.... குடிதாங்கி ஹம் பண்ணும் தமிழிசைப்பாடல்!

கடவுள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி என்கிற இந்தச் சுயமரியாதை, பகுத்தறிவுக் காட்டுமிராண்டிகளுக்கும் கடவுளை உணர்ந்து, உருகிப் போற்றித் துதிக்கின்ற தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை போன்ற இறைத்தமிழ்,இசைத்தமிழ் இலக்கியங்களுக்கும் என்ன சம்பந்தம்?

பறை அடித்தலும், கொம்பு ஊதுவதும் மட்டுமே இனிமைதரும் தமிழிசையாகுமா? காவடிச்சிந்து என்பது நடந்து பயணிக்கும் நெடுந்தொலைவுப் பயணத்திலே களைப்பு வராமல் இருக்க வழிப்போக்கன் பாடும் பாடல்கள்! இசைஅரங்கிலே பாடப்படும் இசை அதைக் கேட்கும் ரசிகமக்களிடையே இனிமையான தாக்கத்தினை ஏற்படுத்த பழுதற்ற பல்சுவை வடிவம் வேண்டும்!

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுகாலமாய் இறைவனே இல்லை என்கிற பகுத்தறிவு, சுயமரியாதை முட்டாள் கொள்கையைத் தாங்கியதில் குத்துப்பாட்டு மட்டுமே தமிழ் என்கிற அளவிற்கு குறுகிப் போனது வெகுதியான தமிழர்களால் விளைந்த சுய அழிவே அன்றி எவராலும் திணிக்கப்பட்டு குறுகிப்போனதாக மருகுவது ஒரிஜினல் கூத்தாடிகளையும் மிஞ்சும் நயமான நடிப்பு!

இசையும் உளவியலும் ஒன்றுக்கொன்று பெரிய தொடர்புள்ள விஷயங்கள். கரும்பாறையாக கடினப்படுத்தப்பட்ட மனம் மென்மையான விஷயங்களில் ஈடுபடாது! மென்மையான கலைகள் பெண்மைத்தனம் என்று மார்தட்டிவிட்டு இப்போது தமிழிசை என்று செல்லாக்காசுச் சிந்தனையோடு கிளம்பி இருக்கின்றார்கள்!

இதிலே தனித்துத் தமிழிசைக்கருவிகள் என்பதை மட்டும் இசைத்துத் தமிழிசை காக்கக் கிளம்பியிருக்கும் வெற்று ஆரவார சுயமரியாதை, பகுத்தறிவுப் பாசறை கும்பல் மெய்யாகத் தமிழ் இசை என்பதன் விரிந்த தளத்தினை இறைமறுப்பு என்று முட்டாள்தனமாக 95% இசைத்தமிழ் இறைத்தமிழாக இருப்பதால் மறுதலித்ததாலேயே வெகுதியான மக்களிடையே விரும்பி தினசரியாக பயன்பாட்டில் இல்லாது சிறுத்துப்போனதை உணரவேண்டும்!

இசைக்கு மொழிபுரிதல் என்பது மட்டுமே அது வளர, வெகுதியாக மக்களிடையே பரவ காரணமாகிவிடாது. தேவாரம் எத்தனைபேர் அறிந்திருக்கின்றார்கள்? தேவாரம் ஓதுவோரது வாழ்க்கை ஏன் நொடித்து ஜீவனின்றி ஆனது? மொழி தமிழ்தானே? இந்துமத இறைவனே இல்லை என்று அரசாள்வோர் கொள்கையாக கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு காலமாக இருக்கிறதால் இறைத்தமிழ் எனும் இசைத்தமிழ் காலாவதியாகின்ற நிலை!

சென்னையிலேயே தெலுங்குமக்கள் நடத்தும் சூப்பர்மார்க்கெட் "அம்மா-நாணா" என்று பெயரிலிருக்கும். தெலுங்குமக்கள் தியாகராஜர் அருளிய தெய்வகீர்த்தனைகளை, இசையை வாழ்க்கையில் தினசரி பயன்படுத்துபவர்கள்!

தமிழ்நாட்டில் தமிழன் கோவணம் வாங்கும் "கடை மம்மி-டாடி, ஆண்டி-அங்கிள்" என்று இருக்கிறது! தமிழன் தமிழகத்தில் இந்து தெய்வீக இசையை சுயமரியாதை, பகுத்தறிவு காட்டுமிராண்டிகள் தலைமையில் நடைமுறை தினசரியில் பயன்படுத்துவதே கிடையாது!

இந்து தெய்வமே இல்லை என்பது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் சுயமரியாதை, பகுத்தறிவு இயக்கங்களின் பிரதானக் கொள்கையாக இருக்கும்வரை பாரம்பரிய இசையில் தமிழ்மொழிப் பாடல்கள் வழக்கத்தில் வெகுதியாக வரப்போவதில்லை!

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை போன்ற நாகூர் ஹனீபாவின் இசையும், எல்லாம் ஏசுவே எனக்கெல்லாம் ஏசுவே என்கிற இயேசு துதிகளும் பல்கிப் பெருகித் தமிழிசையாகி இருப்பதன் அடிப்படைக் காரணம் அரசியல் திரா'விட' பெத்தடின் இயக்கங்களின் இந்து இறைவன் மறுப்புக் கொள்கையே!

இறைவனை, இந்துமதத்தினை மறுக்கும் கூட்டத்தினர் எழுப்பும் ஆரவார ஒலிகள் தமிழிசை என்கிற மாய்மாலத்தினால் தமிழ் ஒருபோதும் இனிய இசையாக வளர்ந்து பெரும்பான்மையோர் பயன்பாட்டில் வந்துவிடப் போவதில்லை!

அப்போ தமிழ்க்குடிதாங்கியின் தமிழிசை மீட்பு என்பதெல்லாம்?

"காசுமேல காசுவந்து குடிதாங்கிக்கு கொட்டுகிற நேரம் இது... தைலாபுர வாசக்கதவை தமிழிசை ராசலட்சுமி தட்டுகிற நேரமிது"


சிங்கப்பூர்ல கூத்தாடிகள் சங்கத்தலைவர் விஜய்காந்து கூத்தாடியா இருந்துட்டே தமிழர் குத்தாட்ட நிகழ்ச்சி நடத்தின மாதிரி, தமிழிசை மீட்பு நிகழ்வில் சேர்ற காசைக் கோணியில கட்ட பாமகவின் 15 பிரதிநிதிகள் சகிதம் மருத்துவர் தமிழ்க் குடிதாங்கி கோபாலபுரத்து / கோடம்பாக்கத்துக் கூத்தாடிகளை மிஞ்சிக் கட்டுகிற கூத்து!

தமிளிசை தமிளு யாவாரத்தின் புதிய பரிணாமம்! டங்கு டங்கு...டணக்கு டணக்கு என்கிற இறைச்சல் சத்தம் மட்டுமே தமிழிசை என்று தமிழர்களுக்குப் போடப்படும் இன்னொரு அரசியல் திரா"விட"ப் பெத்தடின் ஊசி!

புதுசா மார்க்கெட்டுக்கு வந்திருக்கிற (ட)தமிழி(ளி)(லி)சை வாங்கலியோ சாமியோவ்.......
ட)தமிழி(ளி)(லி)சை வாங்கலியோ...

அய்யோ பாவம் தாய்த்தமிழ் இந்த வியாபாரிகளினால் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் ஆப்புகளின் மீது வலிந்து அமரவைக்கப்படுகிறது! தமிழ்க்கடவுளே காப்பாய் தமிழன்னையை இந்தச் சுயநல, பிழைப்புவாத, சுயமரியாதை, பகுத்தறிவு பேசியபடி தமிழ் வியாபாரம் செய்யும் நபர்களிடமிருந்து!

அன்புடன்,

ஹரிஹரன்

Thursday, December 21, 2006

(88) வெள்ளைக்காரன் & மெக்காலே கல்வி வருமுன்பான இந்தியா

இந்தியாவின் வளம், இந்தியர்களின் முன்னேறிய சிந்தனை, வாழ்க்கைமுறை இவைகளைக் கேள்விப்பட்டு இந்தியாவைத் தேடித் தேடி அலைந்த பயணங்கள் மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து ஃப்ரான்ஸ், டென்மார்க், போர்ச்சுக்கல் என்று பெரும்பான்மையான நாடுகள் அவர்களது மிக முக்கியமான நோக்கமாக மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பாக இருந்தது. இன்றைக்கு உலகின் வல்லரசாக இருக்கும் அமெரிக்காவுக்கு அன்றைக்கு பெயர்கூட இல்லவே இல்லை!



இன்றைய இந்தியாவின் பிரச்சினைகளுக்கு மிக முக்கியமான காரணங்கள் பல இருந்தாலும் பிரதானமானது வெள்ளைக்காரனான மெக்காலேயினால் அடிமைத்தனத்தை வாழையடி வாழையாக இந்தியமக்களிடையே அவர்கள் சிந்தனையில் தொடர்வதற்காக அமைக்கப்பட்ட மெக்காலே முறையிலான அடிமைக் கல்விமுறைத்திட்டம் முதன்மையானது என்பது எனது கருத்து.

மூலக் கட்டுரை முழுதும் ஆங்கிலத்தில் இருக்கிறதை அப்படியே தந்திருக்கிறேன்.

What is it that keeps the country down", asked the speaker. A young
man in the audience replied unhesitatingly: "Undoubtedly the
institution of caste that kept the majority low castes and the
society backward" and added "it continues".

The speaker replied, "May be". But, pausing for a moment, he
added, "May not be". Shocked, the young man angrily asked him to
explain his "may-not-be" theory.

The speaker calmly mentioned just one fact that clinched the debate.
He said, "Before the British rule in India, over two-thirds - yes,
two-thirds - of the Indian kings belonged to what is today known as
the Other Backward Castes (OBCs).

"It is the British," he said, "who robbed the OBCs - the ruling class
running all socio-economic institutions - of their power, wealth and
status." So it was not the upper caste which usurped the OBCs of
their due position in the society?

The speaker's assertion that it was not so was founded on his study -
unbelievably painstaking study for years and decades in the archives
in India , England and Germany. He could not be maligned as
a 'saffron' ideologue and what he said could not be dismissed thus.
He was Dharampal, a Gandhian in ceaseless search of truth like his
preceptor Gandhi himself was, but a Gandhian with a difference. He
ran no ashram on state aid to do 'Gandhigiri' .

Admitting that "he and those like him do not know much about our own
society", the young man who questioned Dharampal - Banwari is his
name - became his student. By meticulous research of the British
sources over decades, Dharampal demolished the myth that India was
backward educationally or economically when the British entered.
Citing the Christian missionary William Adam's report on indigenous
education in Bengal and Bihar in 1835 and 1838, Dharampal established
that at that time there were 100,000 schools in Bengal, one school
for about 500 boys; that the indigenous medical system that included
inoculation against small-pox.

He also proved by reference to other materials that Adam's record
was 'no legend'. He relied on Sir Thomas Munroe's report to the
Governor at about the same time to prove similar statistics about
schools in Madras. He also found that the education system in the
Punjab during the Maharaja Ranjit Singh's rule was equally extensive.
He estimated that the literary rate in India before the British was
higher than that in England.

Citing British public records he established, on the contrary,
that 'British had no tradition of education or scholarship or
philosophy from 16th to early 18th century, despite Shakespeare,
Bacon, Milton, Newton, etc'. Till then education and scholarship in
the UK was limited to select elite. He cited Alexander Walker's Note
on Indian education to assert that it was the monitorial system of
education borrowed from India that helped Britain to improve, in
later years, school attendance which was just 40, 000, yes just that,
in 1792. He then compared the educated people's levels in India and
England around 1800. The population of Madras Presidency then was 125
lakhs and that of England in 1811 was 95 lakhs. Dharampal found that
during 1822-25 the number of those in ordinary schools in Madras
Presidency was around 1.5 lakhs and this was after great decay under
a century of British intervention.

As against this, the number attending schools in England was half -
yes just half - of Madras Presidency's, namely a mere 75,000. And
here to with more than half of it attending only Sunday schools for 2-
3 hours! Dharampal also established that in Britain 'elementary
system of education at people's level remained unknown commodity'
till about 1800! Again he exploded the popularly held belief that
most of those attending schools must have belonged to the upper
castes particularly Brahmins and, again with reference to the British
records, proved that the truth was the other way round.

During 1822-25 the share of the Brahmin students in the indigenous
schools in Tamil-speaking areas accounted for 13 per cent in South
Arcot to some 23 per cent in Madras while the backward castes
accounted for 70 per cent in Salem and Tirunelveli and 84 per cent in
South Arcot .

The situation was almost similar in Malayalam, Oriya and Kannada-
speaking areas, with the backward castes dominating the schools in
absolute numbers. Only in the Telugu-speaking areas the share of the
Brahmins was higher and varied from 24 to 46 per cent. Dharampal's
work proved Mahatma Gandhi's statement at Chatham House in London on
October 20, 1931 that " India today is more illiterate than it was
fifty or hundred years ago" completely right.

Not many know of Dharampal or of his work because they have still not
heard of the Indian past he had discovered. After, long after,
Dharampal had established that pre-British India was not backward a
Harvard University Research in the year 2005 (India's
Deindustrialisation in the 18th and 19th Centuries by David
Clingingsmith and Jeffrey G Williamson) among others affirmed
that "while India produced about 25 percent of world industrial
output in 1750, this figure had fallen to only 2 percent by 1900."
The Harvard University Economic Research also established that the
Industrial employment in India also declined from about 30 to 8.5 per
cent between 1809-13 and 1900, thus turning the Indian society
backward.

PS: This great warrior who established the truth - the truth that was
least known - that India was not backward when the British came, but
became backward only after they came, is no more. He passed away two
weeks ago on October 26, 2006, at Sevagram at Warda.

எப்படி இருந்த நாம் மெக்காலே அடிமைக்கல்விச் சிந்தனையால் என்று இப்படி ஆகிவிட்டோம்?
நமது இந்தியப் பாரம்பரியம் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னமே மனித வாழ்வு முறைக்கு எடுத்துக்காட்டாக இருக்க வாழ்ந்த பெருமை அறியாமல் சுயமரியாதை, பகுத்தறிவு என்று இன்று பேசுபவர்களை மெக்காலேயின் கைக்கூலிகளாக குதூகலத்துடன் கலகம் செய்பவர்களை சமூகநீதிக்காவலர்கள் என்று வர்ணிக்கும் இன்றைய தலைமுறை பொய்யையும் புரட்டையும் வரலாறு என்று படித்து முட்டாள் இந்தியா என்கிற வரலாறு எழுதிக்கொண்டிருப்பவர்களை என்ன செய்யலாம்?

அன்புடன்,

ஹரிஹரன்

Tuesday, December 19, 2006

(87) மரணம் என்பதே பொய்யான கற்பனை

பாவத்தின் சம்பளம் மரணம். மரணம் நிச்சயமானது. தீர்ப்புநாள் என்று வரும். எனவே அதற்குள்ளாக சரி செய்துகொள்ளுங்கள் என்பது வணிக நோக்கம் கொண்ட மதங்களின் மரணம் பற்றிய பிரதான பார்வை. மனிதன் அவனது பாவச்செயல்களின் பயனாக மரணத்தினைச் சம்பளமாக ஈட்டுவதாகச் சொல்லி இட்டுச்செல்கின்றன!

கருவறையிலிருந்து உயிருள்ள உடலாக வெளிவந்ததிலிருந்து உயிர் பிரிந்து உடல் சவமாகும் வரையிலானது மனிதனின் வாழ்க்கை. சரியான, நெறியான, பிறர்க்கு உபகாரமாக வாழ்ந்த வாழ்க்கையின் சம்பளமாக மரணம் என்பது எப்படிச் சரியாகும்?

இந்துமதம் மரணம் பற்றி என்ன சொல்கிறது? மரணம் என்ற ஒன்றே கிடையாது என்கிறது இந்து மதம். மனிதனை அவனுக்குள் இருந்து இயங்க வைப்பது ஆன்மா என்கிற இறைசக்தியாகிய எனர்ஜி என்பது இந்து தத்துவம். எனர்ஜி தியரி என்ன சொல்கிறது? எனர்ஜியாகிய ஆற்றல் என்பது அழிவற்றது. அது வேறு ஒரு ஆற்றலாக உருமாறுமே அன்றி அழிவு என்பது ஆற்றலுக்குக் கிடையாது. "Energy can neither be created nor destroyed".

இந்துமதம் உடலியல் அறிவியலையும் தாண்டிச் சிந்திக்கிறது. கண் என்பது காட்சியைக் காண விழிக்கோளமும், மூளையோடு இணைக்கும் நரம்பு மண்டலமும் மட்டுமே காரணமல்ல. விழிக்கோளமும், நரம்புகளும் வெறும் கருவிகள். இறைசக்தி என்கிற எனர்ஜி ஆன்மாவாக கண்ணின் கண்ணாக இருக்கும் வரையே கண்ணினால் காணப்படும் காட்சி தெரியும்.

காதுமடலும், செவிப்பறையும் , இதை மூளையுடன் இணைக்கும் நரம்புகள் மட்டுமே கேட்கும் திறனுக்கு முழுமையான காரணமல்ல. காதின் காதாக இருந்து செயல்படும் இறைசக்தி இருக்கும் வரையே கேட்பது என்பது சாத்தியமாகிறது.

நாக்கும், நரம்பு மண்டலமும் மூளையும் மட்டுமே பேச்சுத்திறனுக்குக் காரணம் இல்லை. நாக்கு அசைவதற்கும், பேச்சின் பேச்சாக இருக்கும் இறைசக்தி இருக்கும் வரையே பேச்சு என்பது சாத்தியமாகிறது.

இப்படி உடலின் எல்லா பாகங்களும் அதன் செயல்பாட்டைச் செவ்வனே செய்ய இறைசக்தி உடலினுள் இருந்து அதனை பிரதிபலிப்பது மிக முக்கிய காரணம்.

உயிர்களின் செயல்பாட்டுக்கு இறைசக்தி காரணம் இல்லை எனில் டாக்டர்களால் இறந்துவிட்டார் கிளினிக்கலி டெட் என்று அறிவிக்கப்பட்ட அந்த நபரினால் சற்றுமுன்பு வரை செயல்பட்ட அவயங்கள் எவையும் ஏன் அதன் செயல்களைச் செய்ய தற்போது இயலாமல் போனது?

அருமையான காட்சியில் வசமிழந்து லயித்திருக்கும் போதும், மெய்மறக்கவைக்கும் இசையில் மூழ்கியிருக்கும் போதும் உடல் செயல்பாட்டுக்கான ஆக்ஸிஜன் வரும் மூச்சு மனிதனின் தனிக்கட்டுப்பாட்டில் இல்லாது தானியங்குவதும் இறைசக்தியாலேயே!

எந்த உடலினால் இத்தகைய இறைசக்தியான ஆன்மாவை முற்றிலுமாகப் பிரதிபலிக்க இயலாமல் போகிறதோ அது சவம் எனப்படுகிறது.

ஆன்மா இனி அந்த உடலினின்று செயல்பட முடியாத நிலைக்கு உடல் பழுதடையும் போது பிரிந்து செல்லும் ஆன்மா மீண்டும் வேறு தகுதியான உடலைத் தேர்ந்தெடுத்து மீண்டும் வாழ்க்கைச் சுழற்சி நடக்கிறது.

எண்பது வயது முதியவர் இறந்ததற்கு அழுது அரற்றும் நபருக்கு வெகு சாதாரணமான உண்மை புலப்பட்டுத் தெரிந்தாலும் புரியமாட்டேன் என்கிறது!

குப்புறக் கவிழ்ந்து கன்னத்தில் திருஷ்டிப் பொட்டுடன் புகைப்படமாக இருக்கும் xxxxx இப்போது இல்லை? இனி அந்தத் தோற்றம் மீண்டும் வரச் சந்தர்ப்பம் கிடையவே கிடையாது! சில பல ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த குழந்தை Mr.xxxxx எனும் தோற்றம் இன்றைக்கு என்ன ஆனது?

நாடா டவுசர் சட்டையுடன் நாலங்கிளாஸ் படிக்கும் போது எடுத்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் Mr.xxxxx எனும் தோற்றம் என்ன ஆனது?

கல்லூரிப்படிப்புக் காலத்தில் ஒரு நல்ல மதியத்தில் போக்குவரத்து நிறைந்த தேசிய நெடுஞ்சாலை 45ல் நட்ட நடு ரோட்டில் அமர்ந்தபடி அளும்பு செய்த வாலிபன் Mr.xxxxx எனும் தோற்றம் என்ன ஆனது?

கோடானு கோடி செல்கள் புதியதாய்த் தோன்றி இறந்து மீண்டும் தோன்றி எனக் குழந்தையாக தோற்றத்தில் இருந்ததில் இருந்து இன்று வரையிலான தோற்றம் வரை பல்வேறு தோற்றத்தினைப் பிரதிபலித்தபடி தனக்குள் இருக்கும் இறைசக்தியான ஆன்மா அதனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

பாவத்தின் சம்பளம் மரணம் எனில். மரணமே முடிவுநாளாகக் கணக்கில் எடுத்தால் கருவறையில் இருந்து பிறந்த கணத்திலிருந்து உடலில் செல்கள் சாக ஆரம்பிக்கின்றன். உடலில் செல்களின் செத்து செத்து விளையாடும் விளையாட்டு பிறந்த உடனே துவங்கிவிடுகிறதே!
தீர்ப்பு நாள் என்பதை எதை வைத்து எதன் மீது நிர்ணயிப்பது? செத்துப்போன உடலைவைத்தா?

இந்துமதத்தில் மரணம் என்பது forms and manifestations-க்கு மட்டுமே நிகழக்கூடியது. அதைச் செயல்பட உடலினுள் இருக்கும் இறை சக்திக்கு அந்த எனர்ஜிக்கு அழிவே கிடையாது. ஆன்மாவாகிய எனர்ஜி மீண்டும் வேறு வடிவில் மீண்டும் வேறொரு தோற்றத்தில் வெளிப்படும். சக்தியை அழிக்க மெட்டீரியல் உலக ஞானத்திலேயே வழியில்லை. மெய்ஞானத்தில் இது மீண்டும் மறுபிறப்பாக வெளிப்படுகிறது.

ஆன்மாவாகிய இறைசக்தியை வெளிப்படுத்த ஒரு வடிவம் வேண்டும். இந்த வடிவம் அவரவர் பாவ புண்ணியங்களுக்கேத்தமாதிரி புல்லாய், புழுவாய், பறவையாய், பாம்பாய், பல்மிருகமாகி, மனிதராய்..தேவராய் என்று வாழ்க்கைச் சுழற்சியினுள் சுழல்கிறது.

மரணம் என்பது xxxxx என்று பெயரிடப்பட்ட உடலுக்கு அதன் ப்ராரப்தத்தின்/விதிப் படி நடக்கும். உடலுக்குத்தான் xxxxx என்று பெயர். உடலைச் செயல்பட இயக்க சூட்சுமமாகிய ஆன்மா எனும் இறைசக்திக்கு xxxxx என்று பெயரில்லை!

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு... பிண்டத்தில் உள்ளது அண்டத்தில் உண்டு..
அண்டம் என்பது நெருப்பு, நீர், நிலம், ஆகாயம்,காற்று என்கிர பஞ்சபூதங்களின் தொகுப்பு.

முதலில் மனித உடம்பு என்பது என்ன? இது எவைகளால் செய்யப்பட்டது?

மூலாக்னி, ஜடாராக்னி எனும் அக்கினி சக்தி மனித உடம்பை 98.4 டிகிரி பாரன்ஹீட் சூட்டில் வைக்கிறது.

இரத்தம் இதர திரவங்களாக உடலில் ஐந்து லிட்டர் அளவுக்கு நீர் இருக்கிறது.

மண்ணோடு மக்கும் மண்சக்தியாக மண்ணில் விளைந்ததை உண்டு உருவான சதை,எலும்புகள் நிலமாக இருக்கின்றன்.

கபாலத்திற்கும் மூளைக்கும் இடைப்பட்ட இடைவெளி, இதயத்தினூடே இருக்கும் சிதாகாச இடைவெளி, காது, நாசித்துவாரங்களில் இருக்கும் வெளியாக ஆகாசம் இருக்கிறது.

தொடர்ந்து நுரையீரலுக்குள் சென்று வரும் காற்று வாயுசக்தி இருக்கிறது.

ஆக மனித உடல் அதனால் ஆன்மாவை, இறைசக்தியைப் பிரதிபலிக்க இயலாத நிலையில் ஆன்மா விடுபட்டு இன்னொரு தகுதியான வேறு உடம்பினைத் தேர்ந்தெடுத்துத் தன்னைப் பிரதிபலிக்கிறது.

ஆன்மா நீங்கிய உடல் என்பது மீண்டும் அது உருவாகக் காரணமான அதே பஞ்சபூதங்களான நிலம்,நீர்,நெருப்பு,ஆகாயம் மற்றும் காற்றோடு சங்கமித்துவிடுகிறது!

ஆக ஒருவித வடிவங்களாக வெளிப்படுத்தப்பட்டவை அவ்வடிவங்களுக்கான ஆயுள் முடிந்ததும் வேறு வடிவங்களாக உருமாற்றமடைகின்றதே அன்றி முற்றிலுமாக அழிவதில்லை!

Forms and Manifestations மாறுகின்றதே அன்றி முற்றிலும் அழிவதில்லை.

ஆன்மா என்பது இறைஎனர்ஜி "Energy can neither be created nor destroyed".

இந்துமத சித்தாந்தத்தின்படி மரணம் என்பதே பொய்யான கற்பனை! அசாத்தியமானது!

பாவத்தின் சம்பளம் மரணம். மரணத்திற்குப்பின் தீர்ப்புநாள் என்பவை எவ்விதமான அறிவியல் பார்வை இல்லாத வெறுமையான சித்தாந்தங்கள்.

இவை மரணத்தின் மீதான பொருள்சார் உலகில் அதீத ஈடுபாட்டுடன் இருக்கும் சுயநல் மனிதர்களின் குழப்பத்தினால் எழும் அச்சத்தினை அடித்தளமாக்கி உருவான சுயநல சித்தாந்தங்கள்!

அன்புடன்,

ஹரிஹரன்

(86) இளையராஜாவின் பயணங்கள் முடிவதில்லை

மூளை எனும் சாஃப்டான மெமரி ஹார்டுவேரில் பதியப்பட்ட நினைவுகளைத் திறக்க வாசனை, ஒலி இவை இரண்டும் மிக முக்கியமான திறவு கோலாக இருக்கின்றன. பல ஆண்டுகள் கழித்து நேற்றைக்குக் கேட்ட 1981-82ல் வந்த பயணங்கள் முடிவதில்லையின் சாலையோரம் சோலை ஒன்று... பாடல் ... நான் ஏழாம் வகுப்பு முழுப்பரீட்சை விடுமுறையின் போது ஊட்டியில் இருந்த உறவினர் வீட்டுக்குச் செல்ல கோவை காந்திபுரம்பேருந்து நிலையத்தில் மேற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகள் நிற்கும் நடைமேடையிலிருந்தோ, உதகமண்டலம் நோக்கிச் செல்லும் சோரம் போன சேரன் பேருந்தில் ஏறக் காத்திருக்கையில் அப்போதைய சூப்பர் ஹிட்டான பயணங்கள் முடிவதில்லையின் இந்தப் பாடல் ஒலிக்க வந்த மேட்டுப்பாளையம் செல்லும் இளையராஜவின் இசையை இசைத்தபடி அசைந்து நகர்ந்த அழகுரதமான ஒரு தனியார் பேருந்தில் ஏறத்துடித்து தந்தையினால் கடிந்து கொள்ளப்பட்டது நினவுக்கு வந்தது.

தோகை இளமயில் ஆடிவருகுது... பாடல் முணுமுணுத்தபடியே ஊட்டி ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸின் குடியிருப்புகளின் உள்ளிடை பரந்த பசுமைப் புல்வெளிகள், உயர்ந்த ஊசியிலை மரங்கள், சில்லென்ற குளிரோடு காற்றில் வரும் யூகலிப்டஸ் இலை மணம், நெடிதுயர்ந்த யூகலிப்டஸ் (நீலகிரித் தைல)மரத்தினைப் பார்த்தவாறே நீலகிரித்தைலத் தயாரிப்பாகப் பாடத்தில் படித்ததில், இலை பறிக்க யூகலிப்டஸ் மரமேறுவோர் மர உயரம் காரணமாக இறங்கி ஏறாமல் அப்படியே மரத்துக்கு மரம் தாவுவார்கள் என்கிற தகவல் நினவில் வர கிலியோடு யூகலிப்டஸ் உயரம் பார்த்தபடியே, தந்தியடிக்கும் பற்கள்,பேசும்போது கிளம்பும் பனிப்புகை, குளிரில் நடுங்கும் உடல், அலை அலையாய் மலைகள், மிக மிக அமைதியான சாலை, டிஜிடல் எஃபக்டில் பறவைகளின் ஒலி, பல கிலோமீட்டர்கள் தள்ளி வரும் சேரனின் ஹாரன் ஒலி, மழையில் ஈரமான மிகவும் தடிமனான அடிப்பாகத்துடம் நிமிர்ந்து நிமிர்ந்து பார்த்தாலும் உச்சி தெரியாத நெடிதுயர்ந்த காட்டுமரங்கள், படிக்கட்டு விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட செவ்வண்ணக் குவியல்களாய் பிடுங்கிக் குவிக்கப்பட்ட காரட்டுகள், முட்டைக்கோசு, உருளைக்கிழங்குகள் எனப் பார்த்தபடியே, குளிர்சீதோஷ்ணத்தின் தொந்தரவில், இயற்கை உபாதையினின்று இயற்கையை மாசுபண்ணியபடி விடுதலை செய்துகொள்ளும் போது , அது எழுப்பும் பனிப்புகை கண்டு கூடுதல் குதூகல ஆச்சர்யத்துடன் குதித்து, நடந்து, இறக்கங்களில் ஓடியபடியே அருகாமை தலக்குந்தாவுக்கு சிறுவனாய்ச் சென்ற மாலை நடை நினைவில் இன்னும் பசுமையாய் இருக்கிறது.

கல்லூரிப் படிப்பின்போது "ராக தீபம் ஏற்றும் நல்ல நேரம் இது... என்கிற பாடலை கேட்கச் சகிக்காத குரலில் அறைத்தோழன் ஜெயங்கொண்டத்து சதக்கத்துல்லா பாட நாங்கள் எல்லோரும் சிதறி ஓட... பாட்டின் முன்பாக படத்தில் புயல் மழை காரணமாக தெருமுனைக் கச்சேரி கேட்க உட்கார்ந்திருப்போர் எழுந்து போகும் போது அய்யா போகாதீங்க அம்மா போகாதீங்க.. நான் நல்லாப் பாடுவேன் என்கிற டயலாக்கை டாபிகலாக நண்பன் சதக்கத்துல்லா சொல்லியபடியே முழுவதுமாகப் பாடி சாதகம் செய்து தீர்த்தது நினைவுக்கு வருகிறது!

1982ல் வெளியானாலும் நான் பார்க்காத பயணங்கள் முடிவதில்லை படத்தினை படிப்பெல்லாம் முடித்து வேலைக்கு வந்த பின்பாக பேச்சிலர் எனும் துர்பாக்கிய நிலையின் காரணமாக எனது அப்போதைய சம்பளப்படி சில ஆண்டுகள் சம்பளத்தை வாடகை முன்பணமாகக் கேட்டு கிர்ர்ர்ரடிக்கவைத்த சென்னையின் வீட்டு ஓனர்களால் வாழ்வின் விளிம்புக்குத் துரத்தப்பட்ட நிலையில் மேற்குமாம்பலம் எல்லையம்மன் கோவில் தெருவில் ஒரு அரிசிமூட்டை வைக்கிற இடத்தில் ஒண்டிக் குடித்தன வளாகத்தில் ஒண்டிக்கொள்ள சில மாத வாடகை முன்பணம் தந்து தங்கியிருந்த காலத்தில் அப்போது அதிக "அமர்க்களம்" இல்லாத மேற்கு மாம்பலம் சீனிவாசா திரையரங்கில் 1991ல் இரண்டாவது ஆட்டம் பார்த்து கிட்டத்தட்ட மோகன் மாதிரியே இருமியபடியே சாலையோரம் சோலை பாடியபடி, நள்ளிரவில் மனிதனை விட தெருவில் அதிகமாக நடமாடும் தெருநாய்களுக்கு உள்ளே பயந்தாலும் வெளியே வீரனாக வெற்றிநடை போட்டபடி "வைகறையில் கூவக்கரையில்" பாடியபடியே ஒண்டிக்குடித்தன ஓட்டு வீட்டு ஜாகையில் அடிமைப்பெண் எம்ஜிஆர் மாதிரி குனிந்து நுழைந்து சுகமாய் சுருண்டு தூங்கிய நினைவு நீள்சுருளாய் விரிந்து நீள்கிறது!

சென்னையில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்த ஆரம்ப நாட்களில் தியாகராய நகரின் உஸ்மான் சாலையில் ஒரு ம்யூஸிக் ரெக்கார்டிங் சென்டரில் தரமான சவுண்ட் சிஸ்டத்தில் ஒலிக்கும் இளையராஜாவின் பாடல் ஒலித்தால் நின்று சில நிமிடம் இருந்து கேட்டுவிட்டுச் செல்வதும் வழக்கமாகி இருந்தது. மகுடிக்கு பாம்பு மயங்குவது மாதிரி மயக்கும் தன்மையுடையது இளையராஜாவின் இசை!

இசை என்றால் எனக்கு இன்றைக்கும் முதலில் இளையராஜா மட்டுமே நினைவுக்கு வருவார்.
இளையராஜாவின் ஊரான பண்ணைப்புரமும் நான் பிறந்து வளர்ந்த போடிநாயக்கனூரும் 20கி.மீ தூரம் அருகாமை என்கிற மண்வாசனையுடன் ஆரம்பித்துப் பயணித்து இன்றும் தொடர்கின்ற உணர்வு உறவு இது.

தாய் எனக்குப் பாடிய தாலாட்டு நினைவில் இல்லை. எனக்கு நினவு தெரிந்த நாள் முதல் மிகப்பிடித்தமான இசை இளையராஜாவின் இசை. இளையராஜாவின் பாடல்களை வெளிநாடு என்று எங்கு சென்றாலும் கங்காரு மாதிரி வாக்மேனோடு எடுத்துச்சென்று இளையராஜா காதில் தாலாட்ட நிறைய நிம்மதியாக உறங்கி இருக்கிறேன்.

எனது இருபது வயதுகளில் ஹார்மோன்களின் ஹார்மோனியத்தினால் விளைந்த "க்ரஷ்" காரணமாக என்னைக் கவர்ந்த பெண்கள் இளையராஜாவின் இசையைப் பின்ணணியாக்கியதில் அவர்கள் தேவதைகளாக சிறகு முளைத்துப் பறந்து பறந்தே போனார்கள்:-)))
இளையராஜா இசையாக என்னுடனேயே இருந்து என்னை இன்னும் மகிழ்விக்கிறார்!

1980கள் முழுவதும் இளையராஜா இசை அரசாண்ட காலத்தின் மிக அருமையான காலகட்டம்.
நான் பள்ளிநாட்களிலேயே எனக்கு அனுமதிக்கப்பட்ட மாதம் ஒரு சினிமா கோட்டாவின் படி ஒரு சினிமாப்படம் பார்க்கும் முன்பாக போஸ்டர் ஆராய்ச்சியில் பொதுவாக ஒளிப்பதிவு, டைரக்ஷன், இசை, எடிட்டிங், என்று டெக்னீஷியன்கள் பார்த்துத்தான் போவேன். இளையராஜாவுக்காக மட்டுமே சில பாடாவதியான படங்கள் உ.ம் தாயம் ஒண்ணு, சொல்லத் துடிக்குது மனசு போன்ற படுதிராவையான இவைகளைக்கூட பார்த்து தொலைத்திருக்கிறேன்.

ஆர் சுந்தர்ராஜன், கோவைத்தம்பி-ரெங்கராஜ்-மோகன் போன்ற கூட்டணியில் வந்த படங்களில் இளையராஜாவின் மயக்கும் இசைக்கு இன்றும் பெரிய ரசிகன். இளையராஜா இசையமைத்த படங்களில் பாடல்கள் மட்டுமல்லாது பின்ணணி இசை என்பது அடுத்த நுண்ணியமான விஷயம்.


1994 வீரா படத்துக்கப்புறம் டிரண்டு மாறி ரஹ்மான், தேவா என மக்கள் அணி மாறிப்போக இளையராஜா "பூமணி"யில் எம்பாட்டு எம்பாட்டு...உனக்கோ பொழுது போகணும் எனக்கோ பொழப்பு நடக்கணும் பாட்டுப் போடவைத்தது. இளையராஜா இஸ் அ பாஸ்ட் ஹிஸ்டரி... டீஸண்டா ஆட்டத்திலிருந்து கழண்டுக்குறது நல்லது எனும் பேச்சும் இளையராஜா இன்னிங்க்ஸ் முடிஞ்சுபோச்சு என்று கொக்கரிப்பைக் கேட்கும் போதெல்லாம் கோபம் வரும். அப்படிச் சட்டென்று முடிகிற இசைத் தொட்டி அல்ல இளையராஜா... என்றும் ஊற்றெடுக்கும் இசை ஊற்று என்று எனக்குக் கத்தத் தோணும்.

இளையராஜாவே பாடிய தாயைப் பற்றிய பாடல்கள், கலாய்க்கிற ஜாலியான பாடல்கள், நேர்த்தியான ரெக்கார்டிங் ஆர்க்கஸ்ட்ரைசேஷனுக்காகவும், இசையில் விளையாடும் வயலின், புல்லாங்குழல், பாடலிடையே நேர்த்தியான விநாடி மௌனம் என்று இளையராஜாவின் இசையை நிறைய அனுபவித்து ரசித்து வளர்ந்திருக்கிறேன்.

டவுசர் போட்ட சிறுவனாயிருந்த போதிலிருந்து இன்று வரை கால்நூற்றாண்டு காலத்திற்கு வெகு அந்நியோன்னியமாய் என்னுடனேயே இருப்பது இளையராஜாவின் இசை!

பாரதியின் வரிகளை இளையராஜாவினால் மட்டுமே பாரதி படத்தில் அப்படி ஒரு நேர்த்தியாகக் கையாள முடியும். இசை சத்தமாகி வரிகளை நசுக்காமல் இளையராஜாவால் மட்டுமே இன்றைய சமகாலத்தில் முடிகிறது.


இருபத்தைந்தாண்டுகள் கழிந்தும், இன்றும் நல்ல சவுண்ட் சிஸ்டத்தில் இளையராஜாவின் பாடல்களைக் கேட்கும் போது இளையராஜாவின் இசை ரெக்கார்டிங் துல்லியமாக நேர்த்தியாக செய்யப்பட்டதை உணரமுடிகிறது.

சேது, பிதாமகன் என்று பாடல்களுடன் தன் பின்ணணி இசை கம்பீரமாகத் தூக்கிநிறுத்தி இளையராஜாவின் இன்னிங்ஸ் இன்னும் வெற்றியோடு தொடர்கிறது!

இளையராஜாவின் இசைப் பயணங்கள் முடிவதில்லை!

அன்புடன்,

ஹரிஹரன்

Saturday, December 16, 2006

(85) திருவரங்கத்தில் ஈவெரா சிலை.... சுயமரியாதை..பகுத்தறிவு

உலகிலே எவனுக்குமே இல்லாத சிந்திக்கும் திறன் கொண்ட, சுயமரியாதையோடு பகுத்தறிகிற மூளை தமிழ்நாட்டில் இன்றைக்கு அதிகாரத்திலும், ஆட்சியிலுமாக இருக்கும் அரசியல் திரா"விட" இயக்கங்களின் தலைவனாக இருந்த , இருக்கின்றவர்களுக்கு மட்டுமே உண்டு.

அக் மார்க் பகுத்தறிவு + சுயமரியாதைக்குத் தகுதி கடவுளே கிடையாது என்பதில் ஆரம்பித்து, உருவ வழிபாட்டை உடைத்து, மூடநம்பிக்கைகளை முறியடிப்பதில் முனைந்து, சமூக நீதியில் பயணித்து, (இது ஒரு முடிவு இல்லாத பயணம் பயணித்துக்கொண்டே இருக்கும். இலக்கு இருந்தால் தானே அதைச் சென்று அடைய எண்ணம் பிறக்கும்.)

நாற்பதாண்டுகள் அரசியல் திரா"விட" இயக்க ஆட்சியின் மகிமை:

1947-48ல் இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டு மிக மோசமாக உருக்குலைந்தது. ஜப்பானிய சாமுராய் வீரர்களின் தாம் எவரினும் உயர்ந்தவர்கள் என்கிற எண்ணம் ஜப்பானின் இரண்டாம் உலகப்போர் செயல்பாடுகளுக்கு முக்கியமான காரணம்.

ஜெர்மனி நாடு ஹிட்லரால் வழிநடத்தப்பட்டு அவனது சிந்தனையான ஜெர்மானியன் எவரினும் மிக உயர்ந்தவன் என்கிற எண்ணத்தினால் உலகிற்குப் பரிசாகத் தந்தது இரண்டாம் உலகப் போர். யூதர்கள் கொத்துக் கொத்தாக கொன்றுகுவிக்கப்பட்ட ஹோலொகாஸ்ட் எனும் இன அழித்தொழிப்பைக் கிட்டத்தட்ட முழுமையாக நிறைவேற்றியவன் அடால்ஃப் ஹிட்லர்.

உலகநாடுகள் கூட்டாகப் போரிட்டு ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் மிகுந்த சேதப்படுத்தப் பட்டு இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது.

1947-ல் இந்தியா வெள்ளைக்காரனிடமிருந்து சுதந்திரம் அடைந்தது. 1950க்குள் இந்தியா சிதறுண்டு சிற்றரசுகளாக, ஜமீன், சமஸ்தானங்கள் என்று இருந்த நிலையை சர்தார் வல்லபாய் படேல் இன்றைக்கிருக்கும் இந்தியாவை உருவாக்கினார்.

வெள்ளையன் இருந்த போது வெள்ளையனே தொடர்ந்து இருக்க வேண்டும் இங்கிலாந்தின் நல்லாட்சி இன்னும் தொடரவேண்டும் என்று சுதந்திரத்தினை ஆதரிக்காத சுயமரியாதைகூடிய, பகுத்தறிவுடனான சிந்தனை ஈவெரா தனது கொள்கையாக முழங்கியது.

சுதந்திரத்துக்காகப் போராடிய வவெசு ஐயர் அந்தமான் சிறையில் தொழுநோய் பீடித்து இறந்து என்று தேசதுரோகம் செய்தவர்! சொந்தக்காசைப் போட்டு கப்பல் ஓட்டி ஓட்டாண்டியாய் சிறைவாசம் சென்ற வ.உ.சிதம்பரம் பிள்ளை சுயநலவாதி! வெள்ளையனை எதிர்த்து வணிகம் செய்ய முற்பட்ட பகுத்தறிவற்றவர்! குடும்பத்தோடு வாழாமல் புதுச்சேரி, சென்னை என்று சிறைகளில் வாசம் செய்தபடி சுதந்திரத்தீயோடு கவிதைகள் மூலம் விடுதலை உணர்வூட்டிய எட்டயபுர சுப்பிரமணிய பாரதி த்சோ..த்சோ கோழை! சுப்ரமண்யசிவா, வாஞ்சிநாதன் இவர்கள் எல்லாம் பொதுநலனில் வாஞ்சையில்லாத சுயமரியாதை அறியாத, பகுத்தறிவில்லாத ஜடங்கள்!

தமிழ்நாட்டின் ஏழைகளுக்காக கல்விக்கூடங்கள் திறந்த காரைக்குடி அழகப்பச் செட்டியார், கருமுத்து தியாகராஜர், போன்ற பொதுமக்கள் கல்விக்கண் திறக்கத் தமது செல்வத்தினைச் செலவழித்தவர்கள் எல்லாம் இந்துமத வெறியாளர்கள்! அறிவிலிகள்! பகுத்தறிவற்றவர்கள்!

உலகப்போர் முடிந்த 40 ஆண்டுகளுக்குள்ளாக பிணக்கிடங்காக, இடிந்த கட்டிடங்களின் குவியலாக இருந்த ஜப்பான் அதன் உண்மையான அக்கறையுள்ள, அர்ப்பணிப்புள்ள தேசம் முன்னேற வேண்டும் என்கிற பொதுப்புத்தியுடன் செயல்பட்ட தலைவர்களின் வழிநடத்தலால் முழுமையான அக்கறையோடு பொதுமக்கள் அனைவர்க்குமான ரயில் இருக்கை கிழிந்திருப்பதைத் சுயமரியாதையாய், பகுத்தறிவோடு சிந்தித்து கிழிசலைத் தைத்து சரிசெய்யும் ஆக்கமான சிந்தனையுள்ள பொதுப்புத்தி பொதுஜனங்களை உருவாக்கியதன் மூலம் பலமான கட்டமைப்பு, அதிலும் நிலநடுக்கம், சுனாமிகள் என்கின்ற நிரந்தரமான இயற்கை அழிவுச் சீற்றங்கள் ஜப்பானின் வாசலில் தொடர்ந்து இருக்கும் நிலையிலும் உலகமே வியக்க ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடத்தியது. உலகப்போர் அழிவில் இருந்து வெறும் நாற்பது ஆண்டுகளில் ஜப்பான் அதன் தலைவர்களால் உலகப்போருக்கு முன்பாக தான் இருந்த இடத்தினையும் மிஞ்சி வென்றிருக்கின்றது! ஜப்பானியத் தலைவர்கள் ஆக்கமாக ஜப்பானிய மக்களை வழிநடத்தியதற்கு இதை விடவும் சான்றுகள் தேவையில்லை.

இப்படி முன்னேறிய ஜப்பானின் புத்தர் கோவில்கள் முன்பாக சிலை வைக்கப் பொதுப்புத்தி ஜப்பானியன் சுயமரியாதை, பகுத்தறிவு வழி நடந்து தொலைக்கவில்லை! ஜப்பானில் கல்வி கற்க கற்கும் ஆர்வம் இருந்தால் மட்டும் போதும்! சாமுராய் இனத்தவரின் செயலால்தான் ஹிரோஷிமா, சாகசாகியில் அணுகுண்டு விழுந்தது எனவே சாமுராயைச் சாகடிக்கவேண்டியது சமூகநீதி என்று சுயமரியாதையோடும், பகுத்தறிவோடும் பொதுப்புத்தி ஜப்பானியனை காவல்நாய்கள் என்று குரைப்புப் பேச்சு பேசவைக்கவில்லை! ஜப்பானியத் தலைமை காட்டிய ஆக்கமான வழிகாட்டலில் ஜப்பானியனை அரசு முன்வந்து போதும் நிறுத்து வேலை செய்யாதே தாங்காது என்கிற அளவிற்கு ஆக்கமாக மனித சக்தியை பயன்படுத்த வைத்தார்கள்!

ஜப்பானியத் தலைமை அய்யோ பாவம் சுயமரியாதை அற்றது! லாரியிலே ஆடுமாடுகள் மாதிரி ஏற்றி கலிஞரு வாழ்க! அம்மா ஒழிக! அம்மா வாழ்க! கலிஞரு ஒழிக! என்று கோஷம் போடவும், இயற்கையின் கொடையிலேயே மிகச் சிறப்பானது வெங்காயம் மட்டுமே(பிரியாணிக்கு) என்று சிலைகள் வைத்துக் கலவரம் செய்யும் சாணக்கியத்தனம் தெரியவில்லை!

அதுசரி இடுங்கிய கண்ணும், குட்டையான உயரமும் இருக்கின்ற ஜப்பானியனுக்கு என்ன தெரியும் பகுத்தறிவு, சுயமரியாதை பற்றி?

பாருக்குள்ளே எங்காவது ஒருBarக்குள்ளிருந்த படியும், டாஸ்மாக் Barகளுக்குளேயும் சிந்தித்து சுயமரியாதையோடும், பகுத்தறிவோடும் எண்ணமுடியாத எண்ணப் பிழைகள் மற்றும் எழுத்துப்பிழைகளுடன் கூப்பாடுபோடும் கூட்டமாக இளைய தலைமுறைத் தமிழர்களை வழிநடத்திய அரசியல் திரா"விட"ப் பெத்தடின் சிந்தனையை, சுயநல, பிழைப்புவாதத்தினை கொளுகையாகக் கொண்ட சுயமரியாதைப், பகுத்தறிவு இயக்கங்கள் வாழையடி வாழையாக இந்த 40 ஆண்டுகளில் தமிழகத்தில் "சாதி"த்திருக்கின்றன!

ஆட்சி அதிகாரத்தில் இருப்போரது பயிற்சிப் பாசறையான மனிதனின் சுயமரியாதை, பகுத்தறிவை ஆராய்ந்து முதன் முதலில் கண்டுபிடித்துப் பறைசாற்றிய ஒரிஜினல் அக் மார்க் திரா"விட" கொளுகை இயக்கம் வெல்லமாய் இனிக்கும் வெள்ளம்போன்ற வல்லிய சொத்தைப் பேணுவதற்காக வல்லத்திலே நடத்தப்படும் சால்ஜாப்புக் கல்வி நிறுவனங்களின் பயன்பாடு உண்மை, விடுதலை பத்திரிக்கைகளின் மினிமம் கியாரண்டி சர்க்குலேஷனுக்கு என்பதான சுயநல கால்குலேஷன்களே!

இன்றைக்கு மத்தியில், மாநிலத்தில் ஆட்சி, அதிகாரம், பதவி, சுகங்களில் திளைக்கும் கால் நூற்றாண்டு காலமாக ஆட்சியில் இருக்கும் அக் மார்க் திராவிட இயக்கம் ஏன் ஒரு பள்ளியையோ, கல்லூரியையோ, எந்த ஒரு கல்வி நிறுவனத்தையோ இன்றைக்கு வரையில் துவக்கவில்லை? வீட்டுக்கு ஒருவர் என்கிறபடியாக இலவசமாக தமிழக ஏழை மக்களுக்கு கல்லூரிப்படிப்பைத் தந்து முன்னோடியாக ஏன் இருக்கவில்லை?

ஆட்சிக்கட்டிலில் அதிகாரத்தைப் பயன்படுத்தி டாட்டா பிர்லா ரேஞ்சுக்கு நாலாயிரம் ஐந்தாயிரம் கோடிகளுக்கு அதிபதியாக வெறும் இருபது ஆண்டுகளில் மக்கள் நலத்திட்ட நிதியைக் கொள்ளையடித்து இருபது தொலைக்காட்சிச் சேனல்கள் எனத் தனது மனச்சாட்சியினை அடமானம் வைத்ததன் மூலமாக அடையத் தெரிந்த கலிஞரு ஏன் மெயான அறிவாலயங்களான கல்வியைப் புகட்டுவதற்கு இரண்டு கல்லூரிகள் கூட ஆரம்பிக்கவில்லை? ஒருவேளை தனது தலைமையிலான மாநில அரசின் பெர்மிஷன் கிடைக்கல்லியோ?

பகுத்தறிவு என்றும் சுயமரியாதை என்றும் மேடைக்கு மேடை வெறும் வெட்டிப் பேச்சுப் பேசி வாய்கிழியப் பேசும் இந்தப் பகுத்தறிவு திரா'விட"த் தலைவர்கள் ஏன் இலவச வேட்டி, இலவச சேலை, இலவச செருப்பு, இலவச அடுப்பு, இலவச தொலைக்காட்சி என்று ஏழைத்தமிழனை வரிசையில் நின்று பகுத்தறிவோடும், சுயமரியாதையோடும் பிச்சையெடுக்க மட்டுமே திட்டங்கள் தீட்டி ஆட்சிக்கு வருவதென்ன?

பகுத்தறிவு வெங்காயத்தின் சொத்து அனுபவிப்புத் திலகமான கோழைமணிகள் சுயமரியாதையோடும், பகுத்தறிவோடும் இலவச டிவி ஏழைகள் "அந்த"விஷயத்தைக் குறைக்கும் கருத்தடைச் சாதனம் என்று வெளங்கியமாதிரி வெளக்கம் சொல்வதான சுயமரியாதை, பகுத்தறிவுக் கூத்துக்கள் ஏன்? 40ஆண்டுகளில் தன் சம்பாத்தியத்துக்கு மிஞ்சிக் கூடுதலான குழந்தைகள் தவறு என்றும் சம்பாத்தியத்துக்காகவே கூடுதல் குழந்தைகள் என்பது கொடுமை என்று சுயசார்புச் சிந்தனை வளர அடிப்படையான உயர்கல்வியை அல்லவா இலவசமாக எல்லோருக்கும் அளித்திருகவேண்டும்?

அரசியல் திரா"விட"ச் சுயமரியாதைச் சிந்தனை ஏழையைச் சுயதரித்திரத்திலே மூழ்கி மூழ்கி அடிக்க அவனது வேதனையை டாஸ்மாக் கடைகள் வைத்து அதிலும் காசு பார்க்கும் சுயமரியாதையான, பகுத்தறிவுச் சிந்தனை வராத ஜப்பானியனின் பொதுபுத்தி இகழப்பட வேண்டியதே! இதைச் செய்யத்தவறிய ஜப்பானிய சமூகத் தலைமை மூடநம்பிக்கைகள் கொண்ட முட்டாள்கள் தான்!

உலகப் போரில் உருக்குலைந்த ஜெர்மனி ஹிட்லரினால் தான் அனைத்தும் என்று ஹிட்லரின் உறவு, சார்பாளர்களைச் சாடிக்கொண்டு 40 ஆண்டுகளைக் கடத்தவில்லை! ஆக்கமாகப் பணியாற்றினார்கள். போரில் சிதைந்து பிரிந்த கிழக்கு, மேற்கு ஜெர்மனி மீண்டும் இணையும் படியாக ஜெர்மனியின் தலைமை மக்களை வழிநடத்தியது.

எந்தப் பொருளும் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது என்பது தரத்தில் சிறந்தது, நீடித்து உழைக்கும் என்கின்ற நம்பிக்கையை உலகமெங்கும் மக்கள் மனதில் விதைக்கும் அளவுக்கு மக்களை தரமான தயாரிப்புக்களைத் தயாரிக்கவைக்க உதாரணமாக இருந்து வழிநடத்தினார்கள்! ஜெர்மனியின் தலைவர்கள் சுயமரியாதை, பகுத்தறிவு என்று வெட்டிப் பேச்சு பேசவில்லை!

உலகமே வியக்க உலகப்போர் அழிவிலிருந்து மீண்டு கட்டமைப்பில், ஒலிம்பிக்ஸ் மாதிரி உலகத் திருவிழாக்கள் நடத்தி உலக மக்கள் நம்பிக்கையை மீண்டும் பெற்றார்கள்!

சுயமரியாதை, பகுத்தறிவு என்று பேசாத ஜெர்மனியின், ஜப்பானின் தலைநகர்களில் ஓடும் நதிகளில் இன்றும் நல்ல நீர் ஓடுகிறது. உலகிற்கே பகுத்தறிவையும், சுயமரியாதையும் கண்டுபிடித்துச் சொன்ன பகுத்தறிவுப்பகலவன்கள் ஒளிவீசிய தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஓடும் நதிகளான கூவம் ஆறு, அடையாறு இரண்டும் இந்த அரசியல் திரா'விட'ப் பெத்தடின் சுயமரியாதை, பகுத்தறிவு எத்தகைய தரம், மணம் கொண்டது என்பதற்கு நிகழும் சான்றுகள்.


துர்நாற்றம் பிடித்த நாற்பது ஆண்டுகள்! சுயமரியாதை, பகுத்தறிவு உணர்விருந்தால் மட்டுமே நிதர்சனம் இன்று விடுதலை செய்யும் இந்த துர்நாற்றமான உண்மையை உணரமுடியும்!

இந்தக் கேடுகட்ட வெங்காயமாகிய ஈவெரா எனும் பகுத்தறிவுப் பகலவனுக்குச் சிலை ஒரு கேடு! உண்மையில் சுயமரியாதை, பகுத்தறிவுக்கு வெட்கக்கேடு!



அன்புடன்,

ஹரிஹரன்

Wednesday, December 13, 2006

(84) மெய்யான பகுத்தறிவு விடுதலை செய்யும் உண்மை!

ஒரு உண்மையை யோசிக்க வேண்டும். ஆனால் அப்படி யோசித்தால் முழுமையாய் எதையும் அனுபவிக்க முடியாதோ என்கிற கவலை வந்துவிடுவதால் எட்டிக்காய் மாதிரியே படுகிறது. மெய்யான பகுத்தறிவினைக் கொண்டு உண்மைகளை உணர்ந்து விடுதலை ஆக விரும்புவதில்லை நாம்.

மிருகங்கள் வாழ்கின்ற மோசமான காடு, இந்தக் கொடிய காட்டை அடுத்து ஒரு பாலம், பாலத்தினைத் தாண்டினால் மகிழ்ச்சி நிரம்பிய பகுதி, மிருகங்களின் அச்சுறுத்தல்கள் இல்லாத மிக நல்ல இடம்.

மனிதனின் நிலை இந்த இடைப்பட்ட பாலம் போன்றதே! பாலத்திலேயே வீடுகட்டிக் குடியிருந்துவிடவும் முடியாது. கீழிறங்கிக் காட்டுக்குள் போய் மிருகம் போல் முழுமையாக வாழவும் முடியாது. பாலத்திலிருந்து முன்னேறி நிரந்தர மகிழ்ச்சி நிரம்பிய இறையுலகினை நேர்த்தியான செயல்களைச் செய்வதன் மூலம், நேர்த்தியான செயல்களைச் செய்யவைக்கிற சக்தியை இறைவனை போற்றியபடியே மனதில் நினைத்தபடியே முன்னேற வேண்டும்!

சாதாரண வாழ்க்கையில் உணர்வுக் கொந்தளிப்பில் மனிதனுள் இருக்கும் மிருகம் கோபமான நேரத்தில் வெளிப்பட்டுக் கேவலமான செயல்கள், கொலை வரைக்கும் இட்டுச்சென்று விடுகிறது!
மிருகமாய் மாறிவிட வெகு எளிதில் முடியும். பெரிய முயற்சி ஏதும் தேவையில்லை!

வீட்டிலே ஒரு சிறு பொருளை உடைத்ததற்காக குழந்தையின் மீது சிலநேரம் மிருகத்தனத்தைப் பெற்றோர்கள் அடி பின்னியெடுப்பதன் மூலம் வெளிப்படுத்திவிடுகிறார்கள்.

ஆன்மீகமாக இருப்பதாக வேடம் போடுவோரும் மிருகமாக எளிதில் மாறிவிட வாய்ப்பிருக்கிறது! கடிகாரத்தின் பெண்டுலம் மாதிரி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மனிதனாக இருந்துகொண்டு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை குடித்துவிட்டு குப்பையோடு குப்பையாக குப்பைத்தொட்டியினருகே வீழ்ந்து கிடக்கும் மிருக மனிதர்களையும் காணலாம்.

மனிதனுக்குள் இருக்கும் மிருக குணாதிசயங்களின் இழுவைசக்தி எப்போதும் மிக அதிகம் காணப்படும். இந்த இழுவைக்கு இரையாவது மிக எளிது! ஒத்த எண்ணங்கள் உடையோருடன் குழுமம் அமைத்திருக்கிறோம் என்பதை விட எந்தமாதிரியான எண்ணங்கள் உடையோருடன் குழுமமாக இருக்கின்றீர்கள் என்பது முக்கியம்!

குழுமமாகக் கூடி நமீதாவுக்கு கட் அவுட் வைப்பதும், விஜய் தலை அஜீத் சீயான் விக்ரமின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய ஒத்த எண்ணங்களுடன் இருப்பது எந்த வகையில் மேம்படுத்தும்? லாரியில் குவார்ட்டருக்காவும், பிரியாணி பொட்டலத்துக்காகவும், பேட்டாக் காசுக்காகவும், இன்னின்ன தலைவன் வாழ்க வாழ்க... இன்னின்ன தலைவர்கள் ஒழிக..ஒழிக என்று மந்தையாய்க் கூடி அரிய ஆற்றலைச் செலவிடுவதுதான் அவர்தம் மனிதப்பிறப்பின் நோக்கமா?

நாலு பெண்களைப் பெறக் காரணாமாயிருந்த போது ஒருவனுக்கு வராத சன்னியாச யோகம் படிப்பு, கல்யாணம் எனும் கடமையைச் செய்ய மாட்டாமல் எஸ்கேப்பிஸ ரூட்டாக கபட சன்னியாசியாக மாறுவது இறை தேடுதல் இல்லை. கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்!

இறைவனை நினைத்தவாறே தினசரி கர்மாக்களான கடமைகளைச் செய்தவாறே செயல்கள் மீது மட்டுமே தீவிரத்தைச் செலுத்தி செயலின் பயன் மீது பற்று வைக்காதபடி மனத்தினைப் பக்குவப்படுத்துவதே மனிதன் தனது பாலம் மாதிரியான இடைப்பட்ட நிலையினின்று மேம்பட உதவும்.

ஈகோ எனும் ஆணவம் தலை தூக்காமல் மனதைப் பண்படுத்த இறை தேடுதல் தேவை! எவருமே உதவவில்லை என வருந்தாமல் எப்போதும் இறைவன் துணை இருக்கிறான் என்று எப்போதும் தனக்கு அளப்பரிய சக்தி துணைபுரிகிறது என்று கூடுதல் உற்சாகத்துடன் ஆற்றலோடு ஆக்கமாக உழைத்து மேலே எழும்பிவர முறையாக வாழ இறைவன் மீதான பற்றுதல் உதவுகிறது!

மிருகங்களுக்கு இம்மாதிரியான குழப்பங்கள் இல்லை. மிருக உலகில் உடல் வலிமைதான் பிரதானம். Might is always right என்கிற ஒரே கோட்பாடுதான்! இறைவனை நம்புகிற போது
மிகவும் பாஸிடிவாக சிந்திக்க முடிகிறது. அதிகார மமதை, அகங்காரத்தினை அவற்றின் எதிர்மறை விளைவுகளை இறைபக்தியால் உணர்ந்து தன்னை சுயமாக மெல்லத் திருந்த முடிகிறது!

மாற்றங்கள் காலத்தின் கட்டாயம். காலம் என்பது கடவுளைத்தவிர வேறேதும் இல்லை! முழுமுதல் ஆரம்பம் கடவுளே. அதனாலேயே எத்தனை நவீன அறிவியல் கருவி கொண்டு அளக்கப்பட்ட குறைவான கால அளவீடெனினும் அது 0.00001 Micro Secondதான். இதற்கும் முந்தைய First என்பது கடவுளே!

சிந்தனை மேம்பட்டே ஆகவேண்டும். சிந்திக்காமல் காட்டுமிராண்டியாக, மிருகமாகவேதான் வாழ்வேன் என்பதும் மிருக காட்டுமிராண்டிச் சிந்தனையில் இருந்து வெளிவந்து மனிதனாகச் சிந்தித்து தன்னுள் இருக்கும் இறைசக்தி,எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் இறைசக்தியை உணர்ந்து, கண்டு, கலப்பது என்பதே மனிதனாகப் பிறந்தவன் செய்ய வேண்டியது!

பொருளை எப்படியாயினும் சம்பாதித்து / கொள்ளையடித்து ஸ்விஸ் பேங்கில் சீக்ரெட் அக்கவுண்ட் வைக்கும்படி இந்தியப் பாரம்பரிய வேத நெறி மெய்ஞானம் கூறுவதில்லை. செல்வமாகிய மகாலட்சுமியை தேக்கிவைக்கக் கூடாது என்பது வழக்கில் இருப்பது. தேவைப்படுவோர்க்கு செல்வம் தானமாகத் தரப்படவேண்டும். க்ராஸ் வெண்டிலேஷன் இருந்தால் காற்று சரளமாக வருவது மாதிரியான அருமையான அறிவியல் தத்துவம்!

எல்லாம் ஒழுங்காக நடக்கிற வரையில் மனிதனின் அறிவு பெரிது எனும் கர்வம் வருகிறது. சில டிகிரி வெய்யில் ஏறினால் ஃபாரஸ்ட் பயர் என்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், போர்ச்சுக்கல் , பிரான்ஸ் என்று பஞ்சபூத அக்கினி கொஞ்சம் கோபப்பட்டால் மனித அறிவியல் ஓட்டமாக இயற்கையைக் கெடுத்த க்ரீன்ஹவுஸ் வாயுக்கள் காரணம் என்கிறது!

ஒரு நிமிடதிற்கும் குறைவாக பஞ்சபூத நிலத்தட்டு சற்று உராய்ந்ததில் இன்னொரு பஞ்சபூதமான கடல் நீர் பூதாகரமான சுனாமி அலைகளை உருவாக்கிவிடுகிறது. கடல் நீர் ஒரு டிகிரி சூடேறியதால் ஆவியாதல் கூடுதலாகி இன்னொரு பஞ்சபூதமான ஆகாயத்திற்கு மேலேறி அங்கு தங்க இடமில்லாததால் கீழே இறங்கி பம்பாயில் ஒரே நாளில் 980 மி.மீ மழை பெய்து வெள்ளம், அமெரிக்காவை இன்னொரு பஞ்கபூதமான காற்றினால் ஐவன் தி டெரிபிள், கேத்தரீன் ஹரிக்கேன்கள் சின்னா பின்னப்படுத்திகின்றன!

இறைசக்தியான இறைவனது சில செயல்கள் எத்தனை அறிவியலில் முன்னேறியிருந்தாலும் நொடியில் மனிதனை மண்டியிட வைத்துவிடுகிறது! ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றினை இயற்கை ஒரே நொடியில் மாற்றிவிடுகிறது!

இந்தியப் பாரம்பரியம் இதனாலேயே இயற்கையை இறைவடிவங்களாக்கி அவற்றை ஆராதிக்க, அனுசரிக்க, கட்டுப்பாட்டுடன் இருக்க வழிமுறைகளைச் சொல்லித் தந்திருக்கிறது! இன்றைக்கு மனிதன் அறிவியலாளன் என்றாகியதில் சென்னையின் பஞ்சபூதக்காற்றின்மீது கரி பூசியிருக்கிறான்! அஞ்சு நிமிஷம் வெளியே போய் வந்தால் மூஞ்சியெல்லாம் கரிப்பூச்சு! ஆஸ்துமா சென்னை வாழ்க்கை தரும் பரிசு!

சுற்றுச்சூழல் மாசு என்பது மனிதனின் கடுமையான சுயநலம்! இது தானாக வரவில்லை சென்னைக்கு! சுயநலமாக அவனுக்கு இருக்கிறது எனக்கும் வேண்டும் என்கிற ஈகோ, நடந்து போனால் என்னோட கௌரவம் என்னாகிறது, சைக்கிளில் காட்டான் மாதிரி 2கிலோ மீட்டர் மிதிக்க என்ன தலைஎழுத்தா எனக்கு? இதுமாதிரியான உடல் சுகம் என்கிற சுயநல எண்ணம் நிறைந்த எண்ணங்கள் இவைகளே!

இதிலே என்னை மாதிரி 2 கிமீ தூரத்தினை நடந்தால் என்ன என்கிற நபர்கள் பாவி, கஞ்சன், பிசினாரி என்று தூற்றப்படுவது வெகு இயற்கை. குப்பை கட்டி எறியும் டிராஷ் பேக் பயன்பாட்டில் பிளாஸ்டிக் கேட்டால் சிக்கனமாக இருக்க அறிவுறுத்தும்போது கஞ்சன் பிசினாரி என்பது தாண்டி "அற்பன்" என்று தூற்றப்படும் நிலையை எய்தவேண்டிய அவலம். :-)))

மனிதன் பாலமான நிலையினைத் தாண்டியே ஆக வேண்டும். தன்னால் கேடு கூடுதல் ஆகாமல் பொறுப்போடு இருந்தே தீரவேண்டும். எல்லாமே இறைசக்தி என்கிற உணர்வு பொறுப்புணர்வைக் கூட்டுகிறது.

தனிமனிதர்கள் போடும் பலவகைக் குப்பைகள் என்பது எப்போதுமே சவாலான சிக்கல்கள்.
கார்பேஜ் டிஸ்போசல் என்பது பொறுப்புடன் செய்யப்படவேண்டிய விஷயம் என்பதை எவருமே உணர்வதில்லை! தன் வீட்டை விட்டு தெருவில் எறிந்து விட்டால் முடிந்தது என்று எண்ணுகிற மனோபாவமே இன்று பிரதானமானது! அடுத்த தலைமுறை குப்பைக்கு நடுவேதான் வாழவேண்டியிருக்கும் என்கிற சூழலை ஏற்படுத்துகிறோம் என்கிற எண்ணம் வருவதில்லை பெரும்பாலானோர்க்கு!

மென்று துப்பிய முருங்கைக்காய் சக்கையும், தூர எறிந்த மீன் முள்ளும், முட்டையின் ஓடும் இயற்கையே ஏற்றுக்கொண்டு மறுசுழற்சி செய்யும். மனிதன் அறிவியலால் கண்டுபிடித்த பிளாஸ்டிக் நூறாண்டுக்கும் மேல் வாழும்!

அதே மாதிரிதான் மனக் குப்பையாகிய சுயநலம், நய வஞ்சகம், தெரிந்தே ஏமாற்றுதல், பொறாமை, அதிகார போதை, தனக்காக ஊரே அழிந்தாலும் சரி எணும் பாங்கு இவைகள் மனிதச் செயல்களில் தொடர்ந்து வெளிக்காட்டப்படும் போது சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது!
கடவுள் இல்லை இல்லை இல்லவே இல்லை எனும் காட்டுமிராண்டிக் கொள்கை மனிதனை மிருகமாக மட்டுமே மாற்றும். மனிதப் பிறப்பு என்பதே ஒரு பாலம் இதைக் கடந்து சென்று இறைவனை மீண்டும் அடைவதே முழுமையான பயணம்!

மனக்குப்பைகளை மனதிலேயே மறுசுழற்சி செய்து தரமான எண்ணங்களாக்க மெய்ஞானமாகிய பகுத்தறிவுக்கு மட்டுமே வலிமை உண்டு! அரசியல் பகுத்தறிவினால் சிலை சிக்கல்களை மட்டுமே உருவாக்கி மனக்குப்பைகளைக் கூடுதலாக்கி இக்கொள்கை தாங்கும் மனிதர்களை நடமாடும் குப்பைத்தொட்டிகளாக்கிய பெருமை மட்டுமே அரசியல் நாத்திகப் பகுத்தறிவினால் "சாதி"க்க முடியும்!

பாலத்தில் இருக்கிறோம் மனிதர்களே! இதைக்கடந்து மேன்மையான நிரந்தரமான மகிழ்ச்சி தரும் இறையோடு இணைய அர்ப்பணிப்போடு கடமைகளைச் செய்வதே உன்னதமானது! மீண்டும் காட்டுக்குள்ளே மிருகமாகிவிடுவதில் பலனில்லை!

அன்புடன்,

ஹரிஹரன்.

(83) மாடப்புறாக்கள்...மனிதர்கள்...மதங்கள் (ஆன்மா அறுவடை)

கொஞ்சம் பெரிய கட்டுரை முழுக்கப் படிக்க வேண்டுகிறேன். சமீபத்தில் நான் கேட்க நேர்ந்த எல்லோருக்கும் நல்லவனாய் மனிதன் இருக்க மாடப்புறாக்கள் மனிதர்களுக்குச் சொல்லும் விஷயத்திற்கு வருவோம்! (கதைக்குப் பின் எனது கருத்தைச் சொல்லியிருக்கிறேன்) முதலில் கதை:

ஒரு இந்துக் கோவிலின் ராஜ கோபுரத்தின் மாடத்தில் மாடப்புறாக்கள் பல தங்கி இருந்தன. கோவிலுக்குக் குடமுழுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட சாரம் கட்டி கோபுரத்திற்கு வர்ணம் தீட்டப்படும் வேலை நடக்க அங்கே வாழ்ந்த மாடப்புறாக்கள் இந்த வேலைகளால் நேர்ந்த இடையூறுகளினால் மாற்று இடமாக அருகே இருந்த சர்ச்சின் கோபுரத்தில் சென்று தங்கின... சர்ச்சுக்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வர இருந்தகாரணத்தால் சர்ச்சுக்கும் வெள்ளையடிக்கும் பணி ஆரம்பமாக மாடப்புறாக்கள் அருகே இருந்த மசூதியின் ஒலிபெருக்கி கோபுரத்தில் சென்றமர்ந்தன!

குட்டிப்புறா அம்மா புறாவைக் கேட்டது கீழே என்ன சத்தம் என்று. அம்மா புறா சொன்னது கீழே மனிதர்கள் ஒருவரையொருவர் வெட்டிச்சாய்த்துக் கொள்ளுகிறார்கள் என்று. ஏன் என்றது குட்டிப்புறா. அம்மா புறா சொன்னது அவர்களுக்கு மதம் பிடித்துப் போனதால் மதம் பிடித்து விட்டது என்று.

குட்டிப் புறா மீண்டும் அம்மாவிடம் கேட்டது. அது என்னது மதம்? அது ஏன் பிடிக்க வேண்டும் என்று. அம்மா புறா சொன்னது கோவிலுக்குச் செல்லும் மனிதர்கள் இந்துக்கள். சர்ச்சுக்குச் செல்பவர்கள் கிறித்துவர்கள். மசூதிக்குச் செல்பவர்கள் இசுலாமியர்கள் என்று. இப்படித்தான் அவர்கள் மதம் அவர்களுக்குப் பிடித்துப்போய் மதம் பிடிக்கிறது என்று.

குட்டிப்புறா கேட்டது அம்மாவை அது எப்படி? நாம் எல்லா இடத்துக்கும் கோவில், சர்ச், மசூதி என்று சுற்றித்திரிந்தாலும் நாம் மட்டும் புறாக்கள் தானே மனிதர்கள் மட்டும் ஏன் இந்துக்கள், கிறித்தவர்க்ள், இசுலாமியர்கள் என்று வெவ்வேறாக இருக்கிறார்கள் என்று.

அம்மா புறா சொன்னது நாம் எங்கு சென்றாலும் புறாக்கள் என்பதை அறிந்திருப்பதால் தான் நாம் மாடங்களில் உயரே இருக்கிறோம். இதை உணராத மனிதர்கள் கீழே இந்துக்கள், கிறித்தவர்க்ள், இசுலாமியர்கள் என்று பிரிந்து அடித்துக்கொண்டு சாகிறார்கள் என்று!

எல்லோருக்கும் நல்லவனாக இந்தக் கதையைச் சொல்லும் நேரத்தில் நேரில் கண்ட மற்றும் மெய்யான இந்திய வரலாற்றில் நிகழ்ந்த கொடூர நிதர்சனங்கள் கண் முன்னே வந்து காட்சிகளாக விரிகின்றன!

பள்ளிப்படிப்பின் போது அதிகாலை நான்கரை மணிக்கு எழுந்து அமைதியான காலை நேரத்தில் படித்தால் மனதில் பதியும் என்று பெற்றோரின் வன்மையான வழிநடத்தலில் மீறமுடியாத காலகட்டம். ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்புவரை இந்தப் பழக்கம் கண்டிப்பான மிலிட்டரி அமலில் இருந்தது.

காலை அலாரம் கடிகாரத்தில் அடிக்கிறதோ இல்லையோ தூரத்து அல்லா கோவில் தொழுகை அழைப்புச் சத்தம் கேட்டு அம்மா எழுப்பிவிட அம்மாவிடம் நன்மதிப்புப் பெற வேண்டி மேற்குத்தொடர்ச்சி மலைகிராம-நகரத்தின் குளிர் நிறை மார்கழிக் காலையின் சுகமான தூக்கம் தியாகம் செய்து எழுந்து படிக்க ஆரம்பிப்பேன். அல்லா கோவில் அலாரம் கேட்கவில்லை எனில் அடுத்த சில நிமிடங்களில் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் முதல் கால பூஜைக்கு கோவில் மணி அடிக்கும் சத்தம்... முருகனும் தூங்கட்டும் குழந்தை ஹரிஹரன் என்று கருணையோடு எழுப்பாவிட்டால் போடி நகராட்சியின் சங்கொலி எழுப்பி விட்டுவிடும்.

எனது பள்ளித்தோழன் சுரேஷ் அவனோடு கிறிஸ்துமஸ் விழாவுக்கு போடியில் சர்ச்சுக்கு போயிருக்கிறேன். சுரேஷின் தந்தை பெயர் காமாட்சி, அண்ணன்கள் ஜோஷி, அமலன், சகோதரி பெயர் நிர்மலா தாயின் பெயர் கிரேஸ் டீச்சர். எங்க ஸ்கூல் டீச்சர். பெரிசா நெற்றியில பொட்டு வைத்திருப்பார். அவர்கள் வீட்டுக்குப் போய் விளையாடுவது என்றிருப்பேன். சில வருடங்கள் முன்பாக கன்வெர்ட் ஆகி யிருக்க வேண்டும். சுரேஷின் தந்தைவழிப்பாட்டி வீட்டின் மாடியிலிருந்து எதிரே தெரியும் விநாயகர் கோவில் கோபுரம் பார்த்து வீட்டினர் அருகில் இல்லை என்கிற போது கன்னத்தில் போட்டுக்கொள்வார்! பாவம் பாட்டி!
காருண்யா இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் அவர்கள் வீட்டினர் அனைவரும் பொறியியல் படித்தார்கள். சகோதரர் தினகரனின் மகிமை! குடும்பமே கல்விக்காக மதம் மாறியவர்கள்!


இன்றைக்கும் குவைத்தில் காலை நேரத்தில் குளித்தவுடன் சென்று தொழக் கோவில் இல்லை என்ற சூழலில் உதித்து வரும் சூரியனைத் தரிசித்து வழிபட்டுவிட்டு அலுவலகம் வந்தால் 12வது மாடியிலிருந்து பார்த்தால் எதிரே இருக்கும் மசூதியைப் பார்த்தும் உள்ளிருக்கும் கடவுளை வணங்குவது எனது இயல்பு!

பரம்பரை பரம்பரையாக பாரம்பர்யமாக இந்துவாக இருப்பதில் தொடர்வதில் இது பெரிய சிறப்பு! இந்து மதத்தில் இறைவன் ஒன்றே ஆனால் இறைவனின் சொரூபங்களாக முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்கிறார்கள். இவர்களோடு கூடுதலாக அல்லாவையும், இயேசுவையும், குருநானக்கையும், மகாவீரரையும், புத்த்னையும் வணங்க சுணக்கம் வருவதில்லை! சீனக்கோவிலின் கடவுளான கன்பூஷியஸையும் நம்மூர் சிவன் கோவிலில் காலபைரவரை வழிபடுகிற நேர்த்தியோடு வணங்கிவிட இந்துவாழ்வியல் நெறியில் வளர்ந்த மனம் மக்கர் செய்யாது!

இப்படியாக அனைத்தையும் உள்வாங்குகிற சக்தி இந்து மத வாழ்க்கை நெறிக்கு அது "வெரி வெரி அக்கமோடேடிவ்வாக" இருப்பதாலேயே இதர நிறுவனப் படுத்தப்பட்ட மதங்களுக்கு இந்து மதத்தைப் பிடிக்காதபடிக்கு அவர்கள் மதம் பிடித்துப்போனதால் மதம் பிடித்து அலைகிறார்கள்!

இந்து மதத்தில் இறைவன் வெளியில் இல்லை தன்னுள்ளே உறைகிறான் என்பதைத் தெளிவாக உரத்துச் சொல்லிச்சென்றிருக்கின்றார்கள் ரிஷிகள், ஞானிகள் பலர்! இதனாலேயே இந்து மதத்தை எனக்குப் பிடித்திருக்கிறது!

அல்லாவின்மீதும் இயேசுவின் மீதும் இந்துக்களுக்கு என்றைக்கும் வெறுப்போ காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. வேளாங்கண்ணி மாதாகோவிலுக்கு நான் சென்று வழிபட்டிருக்கின்றேன். மாரியம்மனுக்கும் மேரியம்மனுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக இந்துக்களின் மனம் பார்ப்பதில்லை. அஜ்மீர், நாகூர் தர்காக்களுக்கு என்னால் குழப்பமில்லாமல் அடுத்த இந்துக்கள் என்ன சொல்வார்களோ என்கிற அச்சமில்லாமல் சென்று வழிபட முடிகிறது என்மாதிரி ஏராளமான ஹிந்துக்களால்.

அடுத்தவர் மீது இந்துமத வேதநெறி வாழ்வியல் தத்துவத்தை வணிகமாக விற்பனை செய்யாத, ஆட்டுமந்தைக்கூட்டமாக எண்ணிக்கைக்காக என்னவேண்டுமானாலும் செய்யாத வைராக்கியம் இந்துமதத்தினை விழி உயர்த்தி மிகுந்த மரியாதையோடு பார்க்க வைக்கிறது!

எகிப்தின் லக்ஸர், கெய்ரோவில் இருந்த பண்டைய ரோமாபுரிக் கலாச்சரம் இன்றும் சன் டெம்பிள், பிரமிடுகள் என்று உறைந்துபோன உயர் சரித்திரக் கலாச்சாரமாக எகிப்தில் இன்று இருக்கும் இசுலாமிய சமய நம்பிக்கைகள் வழி வந்த அன்னியக் கலாச்சாரம் ஒட்டு மொத்தமாக எகிப்தின் பண்டைய கலாச்சாரத்தினை இயக்கத்தினை நிறுத்தி காட்சிப்பொருளாக்கி இருக்கிறது.

பண்டைய கிரேக்கக் கலாச்சாரத்தினை கிறிஸ்தவம் மியூசியத்தில் வைக்கப்பட்ட உயிரற்ற காட்சிப் பொருளாக ஆக்கியிருக்கிறது!


இந்து வாழ்வியல் வேத நெறி என்ன சொல்கிறது என்று அறியாமல் அறியாமையில் இருக்கின்றவர்களிடம் நீ பாவி என்றும், கல்விச்சலுகைகள், பொருட்சலுகைகளுக்காக ஆன்மா அறுவடை செய்பவர்கள், அவர்களுக்குள்ளேயே தெளிவில்லாமல் அடித்துக் கொல்(ள்)பவர்கள் என்கிற கூட்டத்தினரால் மீண்டும் இந்து மத வேத நெறி மாட்டித் தவிக்கக்கூடாது என்கிற எண்ணம் அன்பில்லாத அன்னியரது வரலாற்றுப் படையெடுப்புக்களால் ஆயிரங்காலம் பட்ட அவதிகளாலும், வணிகத்துக்கென ஒட்டகம் மாதிரி உள் நுழைந்து நாட்டையே அடிமைப் படுத்தியவர்கள் நம்பும் ஆக்கங்குறைந்த இதர சமயச் சித்தாந்தங்களிடம் பட்ட வரலாற்றுப் பாடங்களினால் எனது தேசத்தின் பாரம்பர்ய வாழ்வியல் கலாச்சாரத்தினைக் காத்து அடுத்த தலைமுறைக்கு வெளிப்புற மாசு, அசுத்தங்கள் இல்லாமல் ஒப்படைக்கின்ற பொறுப்பு இன்றைய நவயுக இந்துமத இளைஞனுக்கு அடிப்படைக் கடமையாகிறது இன்றைய காலத்தின் கட்டாயமே!

இந்திய பாரம்பரிய வேதநெறிக் கலாச்சாரத்தினைப் பேணிப் பாதுகாப்பதற்காகவும், அடுத்துவரும் பல இந்தியத்தலைமுறைகளின் செறிந்த பயனுக்காகவும் வேத நெறி அறிவால் பொருதி விளக்கவேண்டியது மிக அவசியமாகிறது. அரிவாளும் குருதியும் முதன்மைப் பிரயோகிப்பாக என்றுமே வேத வழி இந்துக்கள் எடுப்பதில்லை. ஆயிரம் ஆண்டு அன்பில்லாத அன்னியரின் கொடூரமான கொடுமைகளுக்கு உள்ளான வரலாற்றைத் தன்னகத்தே வடுவாகக் கொண்ட நிதர்சனம் மீண்டும் இந்தியப் பாரம்பரியம் அழிக்கப்படவேண்டும் என்றெண்ணி அயல்நாட்டு நம்பிக்கை, கலாச்சாரத்தினால் தாக்கப்படும் போது செல்ஃப் டிபன்ஸ் என்று முழுமையான வீரியத்துடன் அனைத்துவிதத்திலும் தயார்நிலையில் இருக்க வேண்டியதும் அவசியமாகிறது.

பலகாலம் சமய வழிபாட்டுக்குப் பயன்படுத்தப்படாத ஒரு இடத்தில் 1992ல் நடந்த டிசம்பர் 6 நிகழ்வுக்காக இன்றும் துடிப்பவர்கள் தினமும் காஷ்மீரத்திலும், மும்பை,கோவை குண்டு வெடிப்புக்கள், குஜராத் சுவாமிநாராயண் கோவிலில் உயிரோடு பெண்கள், குழந்தைகளைக் சுட்டுப்பொசுக்கிய கயவர்களுக்கு எல்லாவிதமான பின்புலமாக இருப்பதினை கண்டும் காணாமல் இருக்கக் காரணம் அந்நிய கலாச்சாரத்தின் வழியாக இவர்கள் மனம் சேர்க்கும் கலாச்சார மாசு! சாலையில் போக்குவரத்துக்கு இடையூராக இருக்கும் எல்லா மத வழிபாட்டுதலங்கள் அகற்றப்பட்ட நிலையில் இவர்களது வழிபாட்டுத்தலத்துக்காக கலகம் வெடிப்பு, குண்டுவீசுதல் என்று செயல்படக் காரணம் அந்நியப்பட்ட கலாச்சாரம் உந்த இங்கே இந்தியாவில் வாழ்ந்துகொண்டு சமய , கலாச்சார நன்றியை கடல் கடந்து காட்டுவதால் இந்திய சமூகத்தின் கலாச்சாரம் மாசுபட்டு வருகிறது.

கிரேக்க ரோமாபுரியின் பண்டைய கலாச்சாரங்களை இந்த வணிகநோக்கு சமயங்கள் சரித்திரத்திலே உயிரற்று உறைந்து போகச் செய்த வரலாற்றை அறிகின்ற போது இந்தியப் பாரம்பர்யக் கலாச்சாரத்தினை இந்த வணிக நோக்கு கொண்ட சமயங்களின் நேர்மையற்ற தேவையற்ற தத்துவக்கோட்பாடுகளற்ற தினசரித் தாக்குதல்களை இந்தியாவிலிருக்கும் இந்திய நாத்திகர்கள், பிழைப்புவாத அரசியல்வாதிகளைத் அதிகாரத் தரகர்களாக்கி போலி சிறுபான்மை பேசியபடியே நைச்சியமாக பெரும்பான்மை இந்தியர்களால் ஓரளவுக்குத் தொடர்ச்சியாகப் பின்பற்றப்படும் இந்தியப் பாரம்பர்ய வாழ்வியலை வணிக நோக்கிலான மதமாற்றங்கள் மூலமாக மாசு படுத்திட முற்றிலுமாக முழுமையாக முயன்றபடியே இருக்கிறது!


இசுலாமிய தைமூரில் ஆரம்பித்து கஜ்னி, கோரி முகமதுக்கள், பாபர் இன்னபிற அன்பில்லாத அந்நியர்கள்தான் இந்தியாமீது செல்வத்தை,பொருட்களை, வளத்தினைக் கொள்ளையடிக்க வேண்டும் என்கிற ஒரே நல்ல எண்ணத்தில் போர் திணித்து வந்தவர்கள். அப்படி வந்தவனில் ஒருவன் போர்க்களத்திலே நிராயுதபாணியாகியதால் ராஜபுத்திர இந்திய அரசன் இந்தியப் பாரம்பர்ய நெறிப்படி போக அனுமதித்ததால் அதே அன்பில்லாத அந்நியனால் கொல்லப்பட்டு அடுத்த ஆயிரம் ஆண்டுகள் இந்த அன்பற்ற கொள்கை கொண்ட சமயக் கூட்டத்தினரால் படுகொலைகள், கொடூரங்களைச் சந்தித்த இந்திய சமூகத்தின் வரலாறு இன்றுவரை உள்ளது உள்ளபடியாகச் சொல்லிவிட முடியாத ரத்தக் கறைபடிந்த கோரமான உண்மைகள் நிரம்பியது!

அன்பில்லாத இந்த அந்நியக்கூட்டத்தின் ஆட்சியானது ஆங்கிலேயனின் கிழக்கிந்தியக் கம்பெனி வழியில் வந்த வெள்ளைக்காரர்களால் தான் முடிவுரை எழுதப்பட்டது. ஆங்கிலேயனின் பிரித்தாளும் சூழ்ச்சியினால் பல சமூக மேடுபள்ளங்கள் தீவிரப்பட்டாலும் அவனால் உள் வந்த ஆங்கில மொழியாலும், சிதறிக்கிடந்த சிற்றரசுகள் ஒருங்கிணைந்த இந்தியாவாக உருவானதும் ஆங்கிலேயனால் விளைந்த சில முக்கிய நல்லவைகள்.

ஆங்கிலேயன் விட்டுச்சென்ற மெக்காலே கல்விக்கலாச்சாரமும் அதன்வழி இன்னமும் தொடரும் தாழ்வுமனப்பான்மைச் சிந்தனைகளும், மிஷனரிகளின் வணிக சமயப் பரப்பல்களின் முக்கிய அம்சமான ஆன்மா அறுவடைச் சித்தாந்தமும் இந்தியப் பாரம்பர்யத்திற்கு மிகக் கேடான விஷயங்கள்.

கோவில் மாடப்புறாவின் ஆன்மாவை யாரும் அறுவடை செய்யத் தனிக்கூண்டில் அடைப்பதில்லை. என் மாதிரியான தனிநபர்கள்கூட இந்தக் கிறிஸ்தவ ஆன்மா அறுவடைக் கூண்டு என்கிற கட்டாய சமய மாற்றும், இந்தியப் பாரம்பர்யக் கொலைக்களத்திற்கு இழுத்துச் செல்லப்படுவது என்பது இன்றைக்கு இந்தியாவில் நிகழும் சிறுபான்மை மகிழ்விப்பு அரசியல் என்கிற வாகனத்தினால் இன்னும் வேகப்படுத்தப் படுகிறது!

இசுலாமைத் தழுவவில்லை என்றால் காஃபிர் என்று கொலை செய்யப்படக்கூடிய தகுதி இந்தியப் பாரம்பர்யத்தினைப் வாழ்வியலில், சமய நம்பிக்கைகளைப் பின்பற்றும், அதனை அடுத்தவர் மீது திணிக்காத என் மாதிரியானவர்களை வெகு இயற்கையாகவே காஃபிர்களின் கொலைக்களத்திற்கு இட்டுச்செல்கிறது!

இந்த நிதர்சனங்கள் நடந்தேறிவிடாமல் இருக்க இந்தியப் பாரம்பர்ய வாழ்வியல், சமயக் கோட்பாடுகளை அனுசரிக்கும் இந்துக்கள் பாதுகாப்பு உணர்வோடு வேத நெறி வாழ்வியலை ஆழமாக அடுத்த தலைமுறையினர்க்கு மிகுந்த அவசியத்துடன் எடுத்துரைத்து ஈடுபடுத்துவது மிக அவசியமாகும்.

இந்துமதம் என்பது சமயங்களிலேயே விடுமுறை மாதிரி இந்துவாகப் பெயரளவில் இருக்கும் பெருவாரி பாரம்பர்ய இந்துக்கள் இந்தியாவில் தினசரி வாழ்வில் எதையுமே இந்து நெறியிலிருந்து பின்பற்றுவதில்லை! The most un-practiced Religion is Hindu Religion என்று இவர்கள் அக்கறையின்மையால் ஆக்கியிருக்கின்றார்கள்.

வேகமான தீவிரப் பற்றுதல் கொண்ட இந்துவின் கையிலிருக்கும் அருவாளால் நடந்தேறும் சமய வணிகமான ஆன்மா அறுவடையைத் தடுத்துவிடமுடியாது. அதற்கு ஆழ்ந்த வேத அறிவுடன் அனைவருக்கும் இந்தியப் பாரம்பர்ய வேத நெறியை பாரபட்சமில்லாமல் அறியச் செய்வதனாலேயே ஆன்மா அறுவடைக்கு இந்தியாவில் பயிர்விளைச்சல் இனி நடந்தேறாது என்றாக்க முடியும்.

அல்லாவைத்தவிர எதைத் தொழுபவனும் காஃபிர் என்று வாளோடு பொருதி இந்தியப் பாரம்பர்ய வேத வாழ்வியல் முறையினைப் பின்பற்றுபவனை கொலைசெய்வது தான் தனது சமயத்தின் தர்மம் என்று மட்டும் இருப்போரிடம் பண்போடு பேசினால் மட்டுமே பலன் விளையாது. இந்தச் சூழலை அறிவால் மட்டுமே எதிர் கொண்டுவிடமுடியும் என்று தோன்றவில்லை. இந்தியாவின் ஆயிரம் ஆண்டு முந்தைய செங்குருதி சிந்திய சரித்திரம் மீண்டும் நிதழாதிருக்க பாதுகாப்புக்காக காஃபிர் எனக்கூறியே மதியற்றுக் கொலை செய்ய வருபவனை எதிர்கொள்ளும்( இவர்களது வாளின் மேல் சென்று விழுந்து தற்கொலை செய்யாத, வைக்கின்ற வெடிகளின் மீது வலியச் சென்று விழுந்து துயிலாத அளவுக்கு) எல்லாவிதமான பாதுகாப்பு வழிமுறைகளையும் பயிற்சி பெற்றே தீரவேண்டியது காலத்தின் கட்டாயம்.

இந்தியப் பாரம்பர்ய வழி, வழியாக இந்துவான எனக்கு கிறித்துவர்கள் கண்டுணரும் கடவுளான "மை ஃபாதர் இன் த ஹெவன்" மீதும் இசுலாமியர்களின் கடவுளான "அல்லா"வின் மீதும் எந்தவிதமான மறுப்பும் கிடையாது. இதையே பரப்பிரம்மமாக எனது இந்தியப் பாரம்பர்யத்தின் வாழ்வியல் நெறியின் படி நாரயணணாக தொழுது வழிபடுகிறேன்!

ஆனால் இந்தியப் பாரம்பரியக் வாழ்வியல் வேத நெறிக் கலாச்சாரம் அதன் அடையாளங்களான கோவில்கள், கலைகள், தத்துவங்கள் இவையனைத்தும் இன்றைய எகிப்தின் உயிரற்ற ரோமாபுரிப் பண்பாடுகள், கலாச்சாரம், கோவில்கள், கலைகள் போன்றோ, மியூசியத்தில் வைக்கப்பட்டு மறக்கடிக்கப்பட்ட கிரேக்கப் பண்பாடு, கலாச்சாரம், கோவில்கள், கலைகள் போன்று எனது, என்மாதிரியான பெரும்பான்மை இந்துக்களின் அக்கறையின்மையினால் உயர்ந்த இந்தியப் பாரம்பர்ய வேத நெறிக் கலாச்சாரம் உயிரற்ற கண்காட்சிப் பொருளாக வருங்கால இந்தியாவில் ஏதாவது ஒரு வணிக நோக்கு சமயத்திலான அரசின் டூரிஸத்திற்கான முக்கிய வணிகமாக மட்டுமே என்கிற பரிதாப நிலைக்குத் தள்ளிவிடக் கூடாது என்கிற தொலைநோக்கு அக்கறை இருக்கிறது! அட்லீஸ்ட் இந்தமாதிரி புதிய தலைமுறை இந்துக்கள் தமது மிக உயர்ந்த, நல்ல பாரம்பர்யத்தைப் பேணிப் பாதுகாத்து ஒளிர்ந்தவாறே அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல வேண்டும்! இந்தியா உண்மையில் அப்போது தான் ஒளிரும்!


மாடப்புறாக்கள் மாதிரி மனிதனாய் வாழ்ந்ததில் இந்தியப் பாரம்பர்யமும் இந்து சமூகமும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பட்ட துன்பங்கள், கொடூரங்கள் நிறைந்த வரலாறும், சிறுபான்மை மகிழ்விப்பு அரசாங்கங்களின் அரசியல்வாதிகளின் செய்கைகளும், மாடப்புறாக்கள் மாதிரி சுதந்திரமான சூழலில் மனிதனாகிய நான் இருப்பதாக நிறைவான ஒரு உணர்வினைத் தரவில்லை.

வணிக நோக்கு மதமான மிஷனரி கிறித்துவம் இந்தியப் பாரம்பர்யத்தினை பூகோள இந்தியாவின் காலான கன்னியாகுமரியில் நிறைவுதரும் அளவுக்கு ஆன்மாக்கள் அறுவடை செய்யப்பட்டு விட்ட கன்னியாகுமரி மாவட்டம் கன்னிமேரி மாவட்டமாக மாறவேண்டும் என்று இந்தியப் பாரம்பரிய வேத நெறி வாழ்வியல் முறையிலிருந்து கலாச்சார விடுதலைக்குப் போராட்டம் நடத்துகிறது பெனின்சுலார் இந்தியாவினை கிறிஸ்துஸ்தான் ஆக்க நாத்திக, நம்பிக்கையற்ற பகுத்தறிவு பிழைப்புவாதிகளின் நயவஞ்சக ஆட்சி அதிகாரத்தின் போலி மதசார்பின்மை, பச்சையான சிறுபான்மை அடிவருடித்தனத்துடன் முயன்றுவருகிறது.

பூகோள இந்தியாவின் தலையான் காஷ்மீரத்தில் சவூதிக் காசில் அல்குவைதா பயிற்சி பெற்ற பாலஸ்தீனர்கள் முதல் ஆப்கானியன், செச்சனியன், பாகிஸ்தானியனின் துணையோடு வந்து அவர்கள் வழக்கமான அன்பில்லாத முறையில் காஷ்மீர பண்டிட்டுகளையும் காஷ்மீர இந்துக்களையும் இசுலாம் அல்லாத அனைத்து காஃபிர்களும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். காஷ்மீரில் பாதுகாப்புக்கு என்று செலவிடப்படும் ஓராண்டு நிதியில் 500 கல்வி நிலையங்கள், சாலைகள், சுகாதாரம் ஏற்படுதமுடியும்! என்ற போதும் இந்திய இறையாண்மைக்கு சகல பலியையும் தர வேண்டியிருக்கிறது!

வணிக நோக்கு மதங்கள் இந்தியப் பிரதேசங்களில் பெரும்பான்மையானால் அங்கு முதலில் குழிதோண்டிப் புதைக்கப்படுவது உயர்வான வழிவழியான இந்தியப் பாரம்பரியமே! கோவா எனில் இன்று அதன் வாழ்க்கை அமைப்பு, பாரம்பர்யமாக கேளிக்கை விடுதிகள், காபரே, டிஸ்கோ ஆட்ட விடுதிகள், சூதாட்டம், குடிக்கும் பார்கள், காமம், விலை மகளிர் என்று மேற்கத்திய போர்ச்சுக்கீசிய வாழ்க்கைமுறை முழு அமலில் இருக்கிறது!

கலாச்சாரக்கேடு இந்தியாவில் ஆழமாக அழிக்கும் அளவுக்கு வணிக நோக்கு மதங்களின் சாதனைகள் இதுவரையிலான இவைகளின் ஊடுருவல்கள் நிலை நாட்டிக் காட்டிக்கொண்டிருக்கின்றன. இந்தியா இன்றைய மலேஷியா மாதிரி தினம் ஒரு கோவில் உடைப்பு என்கிற அவலமான சூழலுக்குத் தள்ளப்பட்டு விடும் நிதர்சனம் இல்லாமல் இல்லை.

இந்தியாவின் வேத நெறிக் கலாச்சார வாழ்வியலைத் தனது பாரம்பரியமாகக் கொண்ட ஒவ்வொரு
தனிமனிதனும் மிகவும் கவனமாக இருந்து கவனிக்க வேண்டிய சூழல் இது. ஓணான்களான கிழக்கிந்தியக் கம்பெனியை உள்ளே பரவவிட்டு அப்புறம் குத்துது குடையுதுன்னு உப்புக்காய்ச்சிய மடத்தனத்தை மீண்டும் அடுத்ததலைமுறை செய்யும்படி செய்திடக்கூடாது. அதே மாதிரி நிராயுதபாணி அன்பிலா அந்நியனை மீண்டும் மீண்டும் மன்னித்து வலிந்து காஃபிர் கொலைக்களத்தில் உயிரோடு தோல் உரிக்கப்பட்டுச் சாகவேண்டிய சூழலை இந்தியாவில் வேத நெறிக் கலாச்சார வாழ்வியலைத் தனது பாரம்பரியமாகக் கொண்ட இந்தியனுக்கு, அடுத்த தலைமுறையினருக்குப் பரிசாகத் தந்துவிட்டுச்செல்லக் கூடாது!

நேர்மையோடு, உள்ளதை உள்ளவாறே இருக்கின்ற இன்றைய சூழலை எதிர் நோக்குவதே இந்தியப் பாரம்பர்ய வேத நெறி வாழ்வியல், கலாச்சாரம், பண்பாடு இவைகளைப் பேணி வரும் தலை முறைகளுகளிடம் மாசுகளின்றி ஒப்படைக்க வழிவகை செய்யும் என்பதே சரியானதாக இருக்கும்

அன்புடன்,


ஹரிஹரன்.

Monday, December 11, 2006

(81) பகவத் கீதை கொலை செய்யத் தூண்டிய நூலா?

அப்பாவி அர்ஜுனனைத் தூண்டிவிட்டுக் கொலைகளைச் செய்ய கிருஷ்ணன் தூண்டினான். பகவத் கீதை என்பதே கொலை செய்யத் தூண்டுகின்ற கொலைகார நூல்! மிக மோசமான வழிகாட்டுதலைச் செய்கின்ற ஒரு கொலைநூல் பகவத்கீதை! உறவினர்களையே கொலைசெய்யத் தூண்டுகின்ற வழிகாட்டுதல்கள்தான் உண்மையான உளவியலா? என்பது கீதையின்மீது கடவுள் மறுப்பாளர்கள் வைக்கிற பிரதான குற்றச்சாட்டுகளில் முக்கியமான குற்றச்சாட்டு!

துரியோதனனின் தாழ்வுமனப்பான்மையே மஹாபாரத யுத்தத்திற்கு அடிநாதம். எல்லாமும் இருந்தும் இந்திரன் பொறாமைப்படும் பட்டாடைகள், அரண்மனை, சொன்னதைச் செய்ய காத்திருக்கும் ஆட்கள், அமைச்சர்கள், ஆட்சி செய்ய நாடு என அனைத்தும் இருந்தும் துரியோதனன் பாண்டவர்களிடம்தான் அனைத்தும் இருப்பதாக எண்ணிப் பொறாமைப்பட்டு தாழ்வுமனப்பான்மையிலேயே காலத்தைக்கழித்து கொடூரமான பாரதப்போருக்கு வித்திட்டவன்.

தாழ்வுமனப்பான்மையின் அழிக்கும் சக்தி அவ்வளவுக்கும் வீரியம் மிக்கது. தேசத்தின் தலைமை, ஆட்சியின் தலைமை பல ஆயிரக்கணக்கான கோடிகள் மதிப்புக்குச் சொத்துக்கள் வசதிகள் மத்தியில் மாநிலத்தில் ஆட்சி அதிகாரம் என்று அனைத்தும் கிட்டியும் தாழ்வுமனப்பான்மைக் குவளையில் இருக்கும் தவளையாய் திருக்குவளையின் நலிந்த பிரிவினன் என்று பேசி கடமையைச் செவ்வனே!? ஆற்றுவதை ஆற்றாமையோடு காணக்கிடைக்கிறது இன்றைக்கும். ஆட்சி செய்ய அரியணை,சிம்மாசனமே கிடைத்தாலும் தாழ்வுமனப்பான்மை என்கிற நோய் அந்த அரியணையில் கம்பீரமாக அமர்ந்து நல்லாட்சி செய்ய விடாது! அரியணையில் கூட குத்தவைத்த நிலையில் அமர்ந்து ஆட்சி செய்வதில் என்ன பிரயோஜனம்?

துரியோதனன் அப்படியாக மனம் முழுக்க தாழ்வுமனப்பான்மையோடு வாழ்நாள் முழுதும் வாழ்ந்தவன்! திறன் இருந்தும் தாழ்வுமனப்பான்மையால் காமம், மோகம்,குரோதம் எனத் தவறான வழி நடந்து தானும் அழிந்து தன்னைச் சுற்றியிருந்தவர்களையும் அழிந்து போக வைத்தவன்!

போரின் ஆரம்பத்தில் அர்ஜூனன் தேரை களத்தின் நடுவே சென்று எதிர் தரப்பிலிருக்கும் அனைவரையும் யார்யாரை போரிட்டு அழிக்கலாம் என்பதைப் பார்க்கும் படியாக நிறுத்தும்படி தனது சாரதியான கிருஷ்ணனைப் பணிக்கிறான்.

துரியோதனன் மிருகம் மாதிரியான மனோநிலை கொண்டவன் எனவே அவனுக்கு என்றுமே புத்தி வேலை செய்யவில்லை "இன்ஸ்டிங்ட்ஸ்" என்கிற உணர்வுகள் உந்தி வழிநடத்த நடப்பவன் எனவே துரியோதனனுக்குக் யாரோடு போரிடுகிறோம் யாரெல்லாம் போரிலே செத்து மடிவார்கள் என்கிற சிந்தனையுமில்லை எனவே துரியோதனனுக்குக் குழப்பமில்லை!

கிருஷ்ணன் பகவான் எந்தச்செயலோடும் தன்னை ஒட்டிக்கொண்டு அதனால் வருத்தப்படும் ஜீவனில்லை. தெய்வத்துக்கு எல்லாம் தெரிந்திருப்பதால் கிருஷ்ணனுக்கு எந்தக் குழப்பமுமில்லை!

அர்ஜுனன் மிருகமும் இல்லை, தெய்வமுமில்லை. இடைப்பட்ட நிலையான மனிதன். எனவே எதிரேநிற்கும் தாத்தா பீஷ்மர், குரு துரோணர், நண்பர்கள், சுற்றத்தார் என்று இருப்பதைக்கண்டு குழப்பமடைகிறான். நான் ஏன் போரிடவேண்டும்? போரிட்டால் இவர்களை எல்லாம் நான் இழந்து விடுவேன். இவர்களை எல்லாம் இழந்துவிட்ட வாழ்க்கை எனக்கு ஒரு வாழ்க்கையா? இல்லை எனவெ போரே வேண்டாம் என வில்லையும் அம்பையும் கீழே போட்டுவிட்டு போர்வேண்டாம் என்கிற "அஹிம்சை" பேசுகிறான்!

அர்ஜூனனின் இச்செயல் அஹிம்சை அல்ல. தான் என்கிற சுயநலம்! அர்ஜுனன் இருந்த இடத்தில் ஒரு புத்தரோ, மஹாவீரரோ இருந்திருந்தால் பகவத் கீதையின் அவசியம் ஏற்பட்டிருக்காது. புத்தரும் மஹாவீரரும் எதிரிலே எவர் நின்றிருந்தாலும் போரிடமாட்டார்கள். அர்ஜூனன் அவனது வாழ்க்கைக்குச் சுகம் தரும் நபர்கள் இருந்ததால் போரிட "தான்" "எனது" என்பதிலிருந்து தோன்றிய மமதையினால் விளைந்த சுயநல "அஹிம்சை" பேசினான். பீஷ்மர், துரோணர், அவனது நண்பர்கள் இல்லையெனில் அர்ஜூனன் அஹிம்சை பேசியிருக்க மாட்டான்!

இன்றைக்கு பகுத்தறிவு நடுநிலைமை என்பது தனது கட்சிக்காரனுக்கு ஒரு நியதி அடுத்தவனுக்கு வேறு நியதி என்று பகுத்தறிவோடு நிர்ணயிக்கப்பட்ட மாதிரியானது அல்ல! செயலின் தன்மையை மட்டுமே பார்த்து நிலைப்பாடு எடுப்பது, செயலைச் செய்தவரை வைத்து எடுக்கப்படுவது நடுநிலைமை ஆகாது அது சார்புநிலை favoritism, Nepotism ஆகும்.

கிருஷ்ணன் பகுத்தறிவுக் கட்சி நடத்தவில்லை. நீதியை நிலைநாட்ட வந்ததால் நடுநிலைமையோடு இருந்தவன் பகவான் கிருஷ்ணன். துரியோதனனை மகிழ்விக்க துரியோதனது தரப்பிலிருந்த பீஷ்மர்தான் முதலில் சங்கை ஒலித்து சவாலை விடுத்தவர். பதிலுக்குச் சவாலை ஏற்று கிருஷ்ணனின் பாஞ்சன்யம் ஒலித்தது!

பகவானின் தெய்வ அனுக்கிரஹம் இருந்ததால் 7 அக்குரோனி (பட்டாலியன்) சேனைகளுடன் எண்ணிக்கையில் குறைந்த பாண்டவர்கள், 11 அக்குரோனி (பட்டாலியன்) எண்ணிக்கையில் கூடிய தாழ்வுமனப்பான்மை கொண்ட தலைமையான துரியோதனது கௌரவர்கள் போரிலே வெல்லமுடியாமல் தோற்றுப்போனார்கள்!

கிருஷ்ணன் பலமுறை நீதியை நிலைநாட்ட கௌரவர்களிடம் தூது போனபோது நியாயமாக நேர்மையாக நடுநிலைமையோடு துரியோதனன் நடந்திருந்தால் போரே நடந்திருக்காது!

ஆக கிருஷ்ணன் போர் என்று வந்த நிலையில் போர்க்களத்தில் தான் பீஷ்மரைக் கொன்றுவிட்டால் தன்னைப் புகழ, தனது வில் வித்தையைப் பாராட்ட தாத்தா இருக்க மாட்டாரே என்கிற எண்ணத்தாலும், தனக்கு வில்வித்தை கற்றுத்தந்த குரு அம்பு மாரி பொழிந்த சாகசத்தைக் கண்டுமகிழ்ந்ததைக் களிப்போடு கூறி தட்டிக்கொடுத்துப் பாராட்ட இருக்கமாட்டார் என்கிற சுயநல் எண்ணத்தாலும், போரை நிறுத்திவிட்டால் அர்ஜுனன் மிகநல்லவன் என்று நண்பர்கள் சுற்றத்தார் பாராட்டுவார்கள் என்கிற சுயநல உந்துதலாலும் குழம்பிக் கடமையை நிறைவேற்ற மறுத்த அர்ஜுனனை பகவான் கிருஷ்ணர் தெளிவுபடுத்திக் கடமையைச் செய்ய உரைத்ததே பகவத் கீதை!

"எனவே பகவத்கீதையைக் கொலைநூல் என்கிற பகுத்தறிவுப்பார்வை நடுநிலமையோடு கடமையாற்றுதல் என்கின்ற உயரிய தத்துவத்தைக் கொலை செய்வதற்கு ஒப்பாகும்!"

அன்புடன்,

ஹரிஹரன்

(82) நம் தமிழச்சிகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை!

நம் தமிழ்நாட்டில் வாழ்கின்ற அனைவரும் அறிந்த ஒரு பொதுவான விஷயம்தான் இது. நானாக எவ்வளவோ முறை திங்க்"கிங்" ஆக திங்கிங் செய்தும் ம்ம்ஹூம் பிடி கிட்ட மாட்டேங்குது! ஆரவாரமா வெட்டிப் பெருமையாக மட்டும் என்று சும்மாக் கேட்டுக் கேட்டு புளிச்சுப்போச்சு எனக்கு! இன்னிக்குக் கம்ப்ளீட்டா சுத்தமா சின்னதாக்கூட தொடர்ச்சின்னு இல்லாம் ஒட்டுமொத்தமா எப்படி விட்டுப்போச்சு? இன்னிக்கும் இல்லாமப் போன இந்த விஷயத்தை எப்படி ரிஜுவனேட் பண்ணாம அப்படியே தேமேன்னு இருக்கிறோம்னு தோணும்!

இங்கே அரேபியர்களுடன் சேர்ந்து வெளியே உணவு உட்கொள்ளும் போது உப கடிக்கும் உணவான ஊறுகாயிலோ இல்லை வெனிகரில் ஊறிய முழுப் பச்சை மிளகாயை நான் ஒதுக்கினால் உடனே அரேபியர்கள் இந்தியனாய் இருந்து கொண்டு மிளகாயை சாப்பிடாமலே ஒதுக்குகிறாயா என்று இதுவரை "ஹரிஹரன் மிளகாய் ஒதுக்கு சகஸ்ரநாமமாய்" விடாது கருத்தினை ஆச்சர்யமில்லாத ஆச்சர்யமாக நிறையவே காட்டியிருக்கின்றனர். முழுமையான இந்தியன் எனில் அரேபியர்களுக்கு பச்சைமிளகாய் தின்று நிரூபிக்கவேண்டிய கட்டாயம் இருந்து என் மாதிரி பலரை பச்சைமிளகாய் லிட்மஸ் டெஸ்டுக்கு ஆட்படுத்திவருவதை அரிய தகவலாக அறியத்தருகின்றேன்!

உலக அளவில் பிற நாட்டவர்களுக்கு இந்திய உணவு காரமானது ...இந்தியனின் சிறப்பு பச்சை மிளாகாயை அப்படியே சாப்பிடுவது. இந்த இந்தியனின் சிறப்புக்கு ஆவக்காய், பெசரட்டு ஆந்திராப் பார்ட்டிகள் அதி இந்தியனாய் இருந்து இந்தியாவின் மிளகாய் சிறப்பைப் கடல் கடந்தும் பேணுகிறார்கள்!

அதுமாதிரியே இந்தப் பழந்தமிழ்ப் பெருமையை நான் எந்த ஊர் மிருகக்காட்சி சாலைக்குச் சென்றாலும், படங்களில் பார்த்தாலும் எனக்கு நமது இந்தத் தமிழச்சிகளைப் புரிந்து கொள்ள முடியாத பழைய வீராப்பான பாரம்பர்யமாக வெறுமனே கேட்டுச் சலித்த விஷயம் நினைவுக்கு வருவது தவிர்க்க இயலாதது!

மேட்டர் என்னன்னு சொல்லாம இவ்வளவு பில்ட் அப்பா? என டென்ஷனாக வேண்டாம்.
தோ வந்தாச்சு!

இன்றைக்கு தமிழகத்தில் "பறந்து படம் காட்டும் கரப்பான் பூச்சிகள்" காதல் தூதுவனாக சிலருக்கும், அண்ணன் அப்பன்களுக்கு எரிச்சலான பயக் கூக்குரலாகவும் நானறிந்து சமீபமாக 30 ஆண்டுகளாக நம் தமிழச்சிகளின் வீரமாக அறியப்படுகிறது!

நமது இளம் தமிழச்சிகள் தேய்ந்து கிழவிகளாகும் போது கொட்டுகின்ற கொளவி, பறக்கும் கரப்புகளை பிராயத்தில் அவர் தம் வீரத்தினை கப்பலேற்றி மானம் வாங்கியதால் ஸ்லிப்பரால் அடித்து வீர சூரம் காட்டி வீட்டில் மற்றவர்களுக்குப் பயந்தரும் படம் காட்டுகிறார்கள்!

கிராமத்துச் சூழலில் உருட்டுக்கட்டை, கதிர் அருவாள் என்று உபகரணங்கள் இருக்கின்ற சூழலில் பாம்பு, வயல் எலி என்று அடித்து விரட்டி சாதனையான வீரத்தை வெளிப்படுத்துகிறார்கள். வெறியோடு குலைத்து வரும் நாய் நம்முடைய கிராமத்து தமிழச்சிகளையும் குலைநடுங்க வைத்துவிடுகிறது!

ஆக இன்றைய நிதர்சனமாக நான் பார்த்தது என்பது நமது தமிழச்சிகளின் வீரம் உச்சபட்சமாக உபகரணங்களுடன் பாம்பு, பெருச்சாளிவரை அடித்து துவம்சம் செய்தவரையே இருக்கிறது!

அரிசியில் கல் பொறுக்கிப் புடைத்துச் சுத்தம் செய்யும் போது வந்து உறுமிய புலியை எப்படி முறத்தால் அடித்து விரட்டினாள் நம் தமிழ்நாட்டுப் பழந்தமிழ் மறத்தமிழச்சி என்பதே எனது இன்றளவுக்கும் நேரில் கண்டுவிடாத, யோசித்தும் பிடிபடாத வரலாற்றுச் சிறப்பு!

ஒரிஜினல் வன் புலியையே தனது கைவசம் இருந்த முறத்தால் அடித்து விரட்டிய பாரம்பர்யமுடைய நம் மறத்தமிழச்சிகள் இன்று நகரங்களில் என்றில்லாமல் கிராமங்களில்கூட ஈவ் டீசிங், பலாத்காரம், வன்புணர்வு என்று கடுமையாக வீரம் காட்டப்பட வேண்டிய சூழல்களில் அவலமாகப் பலியாவதேன்?

வரிப்புலிதனை தன் கையிலிருந்த முறத்தால் அடித்து விரட்டிய பாரம்பர்யத்துடனான நம் தமிழச்சிக்கு இன்றைய காலகட்டத்தில் தினசரியாகவே பெண்ணுரிமை என்று ஏன் தனியாகப் புகட்டப்பட வேண்டியிருக்கிறது?

இல்லை புலியை முறத்தால் அடித்து விரட்டிய வீரத்தமிழச்சிகள் வாழ்ந்த இடம் தமிழகம் என்பது வெறும் வரலாற்றுப் பின்ணணியில்லாத வெற்று இயக்கங்களின் வழக்கமான வெட்டியான மேடை ஆரவாரம் மட்டுமேயா?

There is no smoke without fire எனும் அடிப்படையில் நமது பழந்தமிழ்ப் பெண்டிரின் வீரம் பேசும் இந்த முறத்தால் புலியை விரட்டிய வீரச்சம்பவத்துக்குத் தொடர்பான உண்மையான வரலாற்றுப் பின்ணணி யாது?


இல்லை முறத்தால் அடித்து விரட்டியது சிங்கம்புலி என்ற பெயர் கொண்ட ஏதாவது சண்டித்தனம் செய்த அப்பாவி?! நபரையா?

உண்மை அறிந்தவர்கள் வரலாற்று ஆதாரத்துடன், இப்பழந்தமிழ் வீரச்செயலின் சூழலை விளக்கினால் தெளிவு கிடைக்கும்!

அன்புடன்,


ஹரிஹரன்

Saturday, December 09, 2006

(80) இன்னிக்கு எம்மனசே சுத்தமாச் சரியில்லீங்க...

சே! மனசே சுத்தமாச் சரியில்லீங்க... வம்பு தும்புக்குப் போவாத என்னைப் பற்றி இப்படியா? யாருக்குமே நான் கெடுதல் நினைச்சதில்லீங்க என்னை இப்படி அசிங்கப்படுத்தலாமா? இதுநாள் வரைக்கும் நான் உண்டு என் வேலை உண்டுன்னு ஒதுங்கி தொந்தரவு செய்யாம நாம்பாட்டுக்குச் சிவனேன்னு வாழ்க்கை நடத்துறேங்க... என்னைப்போய் கூட்டமாச் சேர்ந்து குப்பை குப்பையா கூறுகெட்டுப் பேசித் திரிகிறார்கள்... தினசரி இப்படியான எத்தனையோ புலம்பல்கள்..

இன்னும் நிறையப் பேர் ஆ.. ஊன்னா மூட் அவுட் ஆகிவிடுகிறார்கள்! ஒரு நாளைக்கு சாலையில் இருக்கும் குண்டு குழிகளைக்கூட கணித்துவிடலாம். இவர்களது சிந்தனை பயணப்படும் மனச்சாலையில் மூட் அவுட் குழிகள் எத்தனை எப்போது வரும் என்பது அவருக்கே தெரியாது...

புது லூயி பிலிப் சட்டை 1800 ரூபாய்க்கு டவுசர் டவுனில் வ்ரிங்கிள் ஃப்ரீ டிரவுசர் 2500 ரூபாய்க்கு வாங்கிப் போட்டுக்கொண்டதை இன்னிக்கு ஆபிஸில் வயிற்றெரிச்சல் பார்ட்டிகள் எவனுமே கண்டுக்கவே இல்லை... டவுசர் பாண்டியின் புலம்பல் இது.

அடிப்படையில் இப்படி ஒரு சிந்தனை.... எழக் காரணம் உள்ளே ஊறிப்போன தாழ்வு மனப்பான்மை. அடுத்தவர் அங்கீகரிப்புக்கு கிடையாய் கிடந்து அலைவது! அங்கீகாரப் பிச்சையெடுப்பது! அன்றைய தினம் திருவோட்டில் அங்கீகாரப் புன்முறுவல், பொய்யாகவேனும் பாராட்டுக்கள், என்று எதிர் பார்த்து அது கிடைக்காமல் போய்விடும் போது அதன் விளைவாய் எழும் வார்த்தையே வெகுபிரபலாமான... மனசே சுத்தமாச் சரியில்லீங்க!

பகுத்தறிவுப் பாசறையில் தேர்ந்த எந்தக் கழகம் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தில் ஏதாவது ஒரு ரூபத்தில் ஆனால் நிரந்தரமாக ஆறாக ஓடுவது சாராயம். இன்றைய அரசுத்துறை டாஸ்மாக்குகளாகிய நேற்றைய ஏ.பி.சி.... ஒயின்ஷர்ப்புகளின் வலிமையான பிஸினஸுக்கு வலியுடனான இந்த மகா வாக்கியமான " மனசே சுத்தமாச் சரியில்லீங்க" என்பது பிரதான காரணம்.

ஈர்ப்பின் காரணமாகவும், முழுமையான அறிவுடனும் யோசித்துச் செய்கின்ற காதல் பம்ப் பூர்வமானதாக ஆரம்பித்து ( இதயம் = ரத்த பம்ப்) முறிகிற போது ஒடிந்து போகிறதோ அப்பாவியான மனசு! அம்மாதிரியே உன்னதமான காதல் வெற்றியானால் உடல் வெறி அடங்கியதும் மகிழ்ச்சி ஓட்டமாக முதலில் ஓடிப்போகிறது! இப்போது மீண்டும் வெறுமையாக "வெறிச்"சோடிப் போவதும் மனசு!

எந்த குறிப்பிட்ட காலகட்டத்திலும் பெரும்பான்மையானவர்களால் தொடர்ந்து உணரப்படுவது என்று பொருள்சார் உலகியல் சமூக மகாவாக்கியமாக " மனசே சுத்தமாச் சரியில்லீங்க" என்பது வாக்கெடுப்பு, கருத்துக்கணிப்பு நடத்தப்படாமலே இந்தியா டுடேவையும், இட்லி வடையையும் சோகப்படுத்திவிட்டு "அன்-அப்போஸ்டாக" வெற்றிவாகை சூட்டப்பட்டுவிடுகிறது!

சரி...சிறிய பொது அறிவு / சிறு வேத நெறி அறிவுடனான ஆராய்ச்சியை மேற்கொள்வோம்.


மனசே சுத்தமாச் சரியில்லை என்று ஆரம்பிக்கும் வேள்வி விடையறிய பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் போவதனால் எடை கூடி அடுத்த கட்டமாக சே!மனசே பாரமாகிப் போச்சு, மனசே கனமாகிப் போச்சு என்று பரிணாம வளர்ச்சி அடைகிறது!


மனசுங்கிறது முதலில் என்னங்க? அதன் நிறமென்ன, வடிவம் என்ன? எடை என்ன?

மனதின் பிறப்பிடம் உடல். வெறும் உடல் மட்டும் எனில் அது சவம்! தனித்து சவத்தினால் என்ன செய்ய முடியும்? நாள்பட்டு அழுகி நாறுவதைத்தவிர தானாக வெற்று உடல் ஏதும் செய்ய முடியாது?

ஆக உடல் இயங்க உயிர்சக்தி இன்றியமையாததாகிறது. உயிரோடு புதிய உடல் பிறப்பது ஆண்குழந்தை என்றும் பெண் குழந்தை என்றும் அறிகிறோம்.

உடல் வெளியேறி அதன் நடமாட்டம் குறைவாக இருந்து அதன் காரணமாக வெளிப்புற உலக அறிவு குறைவாக இருக்கும். குழந்தைக்கு மனதில் எதுவும் தங்காது! மனசு சரியில்லாமலோ, பாரமாகி கனத்து என்று எந்தக் குழந்தையும் இருப்பதில்லை. கிடைத்தால் சிரிக்கும்... இல்லை என்றால் அழும் அடுத்த ஐந்தாவது நிமிடம் எதுவுமே நடக்காதமாதிரி அழுவதற்கு காரணமானதுடனேயே மீண்டும் சிரித்து விளையாடும்!

தனது எதிர்பார்ப்புக்கு எதிர்மறையாக எது நடந்தாலும் அதனின்று உடனே மீண்டுவிடும் சக்தியை குழந்தைக்கு இறைவன் தந்திருக்கிறான். குழந்தையும் தெய்வமும் அதனாலேயே ஒன்று என அறியப்படுகிறது. பரப்பிரம்மமும் அது தான். குழந்தையும் அது தான்! ஆண், பெண் என்கிற பாகுபாடு இந்த நிலையில் கிடையாது! உள்குத்து, வெளிக்குத்தெல்லாம் தெரியாத நபர் இதனாலேயே குழந்தை மனதுக்காரர் என அழைக்கப்படுகிறார்!

நம் இந்தியாவில் குழந்தையாய் இருக்கிற போது உடல் ஒரு பாரம்பர்யமான,நெறிப்படுத்தப் பட்ட கட்டுப்பாட்டு வளையத்தில் சுற்றிவருவதால் தேவையற்ற இடங்களுக்குச் சென்று உழல்வது குறைவு!

வயதாக வயதாக குழந்தை பருவமாகி வாலிபமாகி அவனது உடம்பைச் சுமந்து எந்த மாதிரி சூழலுக்குத் தன் உடலை அதிகம் எக்ஸ்போஸ் செய்கிறதோ அந்த்ச் சூழலின் தரம் தாக்கங்கள் நினைவாக உருவெடுக்கிறது! ஸ்வீட் மெமரீஸ் என்றும் பேட் நைட்மெர், அன்பிளசண்ட் மெமரீஸ் என்றும் தனது எதிர்பார்ப்பு எந்த அளவுக்கு முழுமை அடைந்ததோ அதை அளவுகோலாகக் கொண்ட முந்தைய அனுபவங்களின் டேட்டா பேஸோடு ஒப்பிட்டு மனம் நிகழ்வுகளை அவைகள் நடந்து முடிந்ததும் Classification செய்கிறது!

ஆக தச இந்திரியாஸ் எனப்படுகின்ற Five sense organs + Five organs of Actions ஐந்து உணர்வு புலன்களின் வழிநடத்தலில் ஐந்து கர்ம இந்திரியங்களின் செயல்பாட்டில் கட்டுப்பாடற்று மூழ்கிய உடல் நல்ல சம்பவங்களினை, தரமான நிகழ்வுகளினை சந்திக்காத உடல் நிறைவான அமைதியான மகிழ்ச்சியான நினைவுகளை உள்ளடக்கிய மனத்தினை உருவாக்கிவிடாது!

மனம் என்பது வெறும் mere compilation of effects! இந்த effectகளின் மூல காரணமான Causes என்பது உடலை வலிந்து சூழல்களுக்கு உட்படுத்துபவையே!

ஆக உடலைத் தகாத சூழலுக்கு புலன்களின் உதவியோடு சிந்திக்காமல் தினசரி தள்ளிவிட்டு விட்டு
குவார்ட்டர் அடித்தால் சுத்தமாச் சரியில்லாத /பாரமான மனசுக்குநல்லது என்று தினசை குவார்ட்டர் கோவிந்தனாக இருந்து சிந்திப்பதை ஆஃப் செய்துவிட்டு ஃபுல் மனதுடன் எல்லாம் வல்ல இறைவன் கோவிந்தனைத் தினசரி ஒவ்வொரு நொடியும் தியானியுங்கள்.

இன்னொருவாட்டி வெட்டியா சுத்தமாக மனசே சரியிலீங்க என்றோ மனசே பாரமாக இருக்குங்கன்னு வெட்கமில்லாமல் உடலின் தவறுக்கு மனதின் மீது பழிபோடாதீர்கள்!

பாவங்க மனசு! அது ரொம்ப மென்மையானது! ஒடிஞ்ச மனசை ஒழுங்காக்க ஓம்காரமான இறைவனால் இயலும். அதுமேல டாஸ்மாக்/ வெளிநாட்டு சரக்கு சாராயத்தை ஊத்தி எரிக்கிறது சரியில்லீங்க! இது பகுத்தறிவா? இதுதான் சுயமரியாதையான செயலா?

வேத நெறியின் வழியில் செல்லும் ஒரு மனம் "பிரஸாத புத்தி" மற்றும் "ப்ரதி பக்ஷ பாவனையோடு" தாழ்வுமனப்பான்மை ஊறலில் ஊறாமல், கலங்காமல் உறுதியோடு இருக்கும்.. நிறைவாக எதையும் திடமாய் எதிர்கொள்ளும் மனோதிடம் கிட்டும்!

*ப்ரஸாத புத்தி = குறைகூறாமல் ஏற்றுக்கொள்ளும் மனம். இந்துக்கோவில்களில் பூஜைப் பிரஸாதத்தின் இனிப்பு,உப்பு,காரம் எனச் சுவையைக் குறைகூறாமல் அப்படியே ஏற்றுக்கொள்கிற சாத்வீகமான புத்தி

*ப்ரதிபக்ஷ பாவனா = உள்ளதை உள்ளபடியே பார்த்து ஏற்றுக்கொள்ளும் பாவனை!

வேதநெறி வெற்றிக்கான செறிவான நெறி! முழுக்க முழுக்க அறிவியல் பூர்வமான எக்காலத்துக்கும் உகந்த 100% அக்மார்க் இந்தியப் பாரம்பர்ய தினசரி வாழ்வியல் வழி! வேதவழி பின்பற்றினால் வழக்கறிஞர்கள், சைக்யாட்ரிஸ்ட் எனப்படும் மனோவியல் நிபுணர்கள் தொழில் வருமானம் இழக்கும் அபாயம் உள்ளது!



அன்புடன்,

ஹரிஹரன்

(79) சிவம் என்பது சிற்றின்பம் என சிறுமைப்படுத்திய சிறுமதி

அதென்ன நமீதா படம்? செந்தழல் ரவி கேட்டுக்கொண்டார் அதனாலேயே! முழுக்கப்படியுங்கள்!




தாம்பத்யம் என்கிற பரப்பிரம்ம விஷயம் இன்றைக்கு சிற்றின்பம் என்கிற அளவில் சிறுமதியாளர்களால் சிறுமைப் படுத்தப்பட்டு நாற்றமெடுப்பது மாதிரியான கெடுதியான சமூகச் சீரழிவு வேறில்லை!

ஒரு யாகசாலைக்கு ஒப்பான தெய்வீகத்தன்மை உடைய உன்னதமான தாம்பத்யம் என்கிற விஷயம் அநாகரீகமான புலன்சார் சிற்றின்பமாக உருத்திரிந்து அதன் விளைவாக பெண்கள் என்றாலே முகம் பார்த்து உள்ளம் அறிந்து பேசுவது விடுத்து உடல் நோக்கிப் பேசி, பெண்களை கேவலமாக வருணிப்பது என்பதாகிய பகுத்தறிவோடு இருத்தல் என்று திரிந்து நாற்றமெடுக்கிறது.

இந்தியாவில் இன்றைக்குத் தமிழகத்தில் மட்டுமே பேருந்தில் சக பெண் பயணி ஆணின் அருகே அமர்ந்து பயணித்திடும் நிலையிருக்கிறதா? சமத்துவம், சீர்திருத்தம், பகுத்தறிவுக் கூப்பாடுகள் வந்தபின்பு பெண்கள் பேருந்தில் கூறுகட்டப்பட்டு, கூண்டுமாதிரி பேருந்தின் முன்புறம் மிகவும் முன்னேறிய நிலை அடைந்திருக்கிறார்கள்.

ஆணுக்கில்லாத பெருமை சிறப்பு பெண்ணுக்கு இயற்கையாகவே இருக்கிறது. பெண்ணின் கர்ப்பப்பையும் கோவிலின் கர்ப்பக்கிரஹமும் மிகப்புனிதமானவை. பெண்ணின் உயிர் சக்தியோடு ஆணின் உயிர் சக்தி இணைகின்றபோது முதலில் அது கருவாக ஆணுமற்ற பெண்ணுமற்ற பரப்பிரம்மமாகவே இருக்கிறது.


தாம்பத்யம் என்கிற செயலினால் பெண்ணின் கர்ப்பப்பையில் ஆணின் உயிரணுவும் பெண்ணின் உயிரணுவும் இணைந்து நிலையில் இருக்கும் உயிரற்ற கருவானது அமைதிநிலையான ஆணுமற்ற பெண்ணுமற்ற பரப்பிரம்மமாகவே ஆரம்பநிலையில் இருக்கிறது. இறைசக்தி ஆத்மா உள்நுழைந்து அது பிற்பாடு வாஸனா கர்மா பேலன்ஸ்ஷீட் இவைகளினால் ஆணாகவோ பெண்ணாகவோ உயிர்பெற்று கருவானது மேலும் வளர்ந்து குழந்தையாகப் பிறக்கிறது.

இன்னொரு உயிரை இறைவன் ஒரு பெண்ணின் கர்ப்பப்பையின் உட்புகுந்து உருவாக்கியதனாலேயே.. இறைவன் வந்து செல்கின்ற இடமான கர்ப்பப்பையைத் தாங்குகிறதாலேயே தாயைத் தொழுவது, வழிபடுவது எல்லாம் இதனாலேயே. சமூகத்தின் நாம் பார்க்க இறைவன் வந்து செல்கின்ற இடம் தாய்!

இந்துக் கோவிலைச் சுற்றி சிவப்பு வெள்ளைப் பட்டை அடிப்பதன் காரணமும் இதுவே!

சிவப்பு பெண்ணின் உயிரணுவையும் , வெண்மை ஆணின் உயிரணுவையும் குறிக்கிறது. இந்த இரண்டும் கலக்கும்போது எப்படி அமைதியான பரப்பிரம்மம் உருவாகிறது அதுவே கடவுள்!

இப்படிக் கருவாக இருந்த பரப்பிரம்மம் ஆணாகவோ பெண்ணாகவோ அதன் 50% இழந்து பிறந்து வளர்ந்து வந்தநிலையில் ஆணுக்குப் பெண்ணையும் பெண்ணுக்கு ஆணையும் திருமணம் செய்து வைத்து அவர்கள் மீண்டும் முதன்முறையாக தாம்பத்தியம் மூலமாக கூடுவதற்கு "சாந்தி"முகூர்த்தம் என்று பெயர்! பரப்பிரம்மத்தில் 50% இழந்து அமைதியற்று இருந்த ஆண், பெண் மீண்டும் கூடி பரப்பிரம்மத்தை ஏற்படுத்தி என்று மனிதனின் உயிர்ச்சுழற்சி நடக்கிறது!

அன்று பிறந்த குழந்தை இறைவனிடதிலிருந்து நேரடியாக வந்த அற்புதம். பெரிய தலைவர், நட்சத்திரமான நடிகன் அமர்ந்த நாற்காலியில் அமர்ந்து அதில் மிச்சமிருக்கும் சூட்டை அனுபவித்துப் பேரானந்தம் அடைகிற பகுத்தறிவின் உதவியோடு இறைவனை குழந்தையின் மூலம் பார்க்க முடிவதில்லை!

குழந்தை சிற்றின்பத்தின் விளைவு என்று அறிவியல் பேசி பெண் சுமை என்று பரப்பிரம்மத்தைக் கருவிலேயே பகுத்தறிவோடு கலைத்து சமூகத்தில் கேட்டை பிரதானப் படுத்தியிருக்கிறது! இந்தமாதிரி ஆக்கமான பகுத்தறிவுச் சிந்தனையோடு இருப்பவர்களால் தாம்பத்தியம் மீறி சிவத்தினை மறந்து சிற்றின்பமாக மட்டுமே கருதி உடல்-புலன் இன்பம் மட்டுமே பிரதானம் என்று செயல்படும் நவயுக பகுத்தறிவு அறிவியல் விஞ்ஞானிகள் அதாவது எந்த உடல் முறையற்ற புலன் ஆசையால் சிற்றின்பமே சிறப்பானது என்று கூப்பாடு போட்டு அறிவிலியாக வேதநெறிக் கலாச்சாரத்தினை கழுத்தை நெறித்து நடப்பவர்களுக்கு அதே உடலின் எதிர்ப்பு முற்றாக முடக்கி எத்தனை ட்யூரக்ஸ்கள் உபயோகித்தாலும் "எய்ட்ஸ்" என்பதில் முழுக்கப் புதைத்திருக்கிறது!

வெகுஜன தமிழ்பத்திரிக்கை, புத்தகமெங்கும் கவர்ச்சி போட்டோக்கள், அடுத்த இளைய தலைமுறையை "வழிநடத்தும் " தமிழ் சினிமாவில் டூ பீஸில் நங்கைகளின் கண்டிப்பான குத்தாட்டம், தமிழ்நாட்டுப் பகுத்தறிவாளர்களுக்காகவே கேரளத்தில் எடுக்கப்படும் "அஞ்சரைக்குள்ள வண்டி" ...இன்பவெறி படங்களுக்காக தலையில் துண்டுபோட்டும், போடாமலும் ஊருக்கு ஒதுக்குப்புறமான தியேட்டர்களில் வெள்ளித்திரையில் கண்டுகளித்து பெரிய சிந்தனாவாதிகளாக மாற சிற்றின்ப பகுத்தறிவு சமூகத்தைச் சின்னா பின்னமாக்கியிருக்கிறது!

சிற்றின்பச் சிந்தனைகளைச் சரி என்கிற சிறுமதியாளர்கள் சிவத்தினை சிறுமைப்படுத்துவதாக சிக்கலில் சிக்கித் தவிப்பது நிதர்சனம். இந்தியாவில் தமிழகம் எய்ட்ஸில் முன்ணணி வகிக்க முழுமுதல் காரணம் வேத நெறியை கழுத்தை நெறித்து மறுத்தலே!

சிற்றின்பத்தைச் சிவமென தொங்கிக்கொண்டு நிற்பவர்கள் ஆன்ம எழுச்சியோடு சிவத்தைச் சிந்தித்தாலே சீர்கெட்ட சமூகம் சீர்படும்!

சர்வம் சிவமயம்! இந்தியாவில் தமிழகத்தில் மீண்டும் வேத நெறி வெகுஜன நெறியாகவேண்டும்!

அன்புடன்,

ஹரிஹரன்

Thursday, December 07, 2006

(78) கெட்ட வாஸனை ரிப்பேர் - Personality Rehabilitation

மனிதனின் உண்மையான உடன் பிறப்பான கெட்ட வாஸனா என்கிற ஆசை நறுமணம் (Fragrance of immoral Desire) பொங்கி வழிந்து அதன் வழி நடக்கின்ற மனிதன் முறையற்ற வாழ்வு வாழ்ந்து நிறைவற்ற முடிவை மட்டுமே எதிர் நோக்க முடியும்.

மனிதன் அவனது தற்போதைய தோற்றத்தின் இறுதிவரை வந்தும் வயதினால் மட்டும் முதிர்ச்சியடைந்து கிழவனாகியும் தன்னைச் செலுத்துவது எது என்று அறியாமையிலேயே இருந்தால் தோற்றத்தின் அர்த்தமே அறியாமல் வாழ்வு பிழையாகிறது.

சாதாரண பொருள்சார் வாழ்க்கையில் நல்ல செயல்பாடுகளால் நிறுவனத்தில் ப்ரமோஷன் பெற்று உயர்வதும், கையாடல், திருட்டு என்று கேடான செயல்களால் டி-ப்ரமோஷன் பெறுவதும் அறிந்திருக்கிறோம்.

திருடியும், கொள்ளையடித்தும், இன்னபிற கேடான செயல்கள் செய்தவர்கள் பொருள்சார் உலகில் பெரிய ஆளாக ஆகியிருக்கலாம். யாருமே பார்க்கவில்லை அதனால் யோக்கியனானான் என்று ஸ்மார்ட் லிவிங் பேசித் திரியலாம். அவனுக்குள்ளே இருக்கும் இறைவன் எங்கும் நிறைந்திருக்கும் பரப்பிரம்ம சக்தி பார்த்துக்கொண்டே இருக்கிறது.


தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று பக்த ப்ரஹலாதன் சினிமா டயலாக் பேசி மகிழ்வதை விட அப்படி ஆல் பெர்வேடிங்காக இருக்கும் இறைவனை உட்கார்ந்து உணர முதல் முயற்சியாக இறை நாமத்தினை ஜபமாகத் துதித்தபடி கான்சன்ட்ரேசனை குவித்து உள்ளிருக்கும் இறைசக்தியை உணர்ந்து அது எப்படி 31 ப்ளேவர் பேஸ்கின் ராபின்ஸ் ஐஸ்க்ரீமை விட சுவைகூடியதாக அளவிடமுடியாத மகிழ்ச்சியை அளிக்கிறது என்பதை சுயமாக ஒவ்வொருவரும் உணரவேண்டும்.

நாம் மகிழ்ச்சியை எப்போதும் பொருட்களோடு இணைத்து பொருட்களால் இன்ன பிற Objectiveகளால் மட்டுமே இன்பம், மகிழ்ச்சி கிட்டுகிறது என்று நினைக்கிறோம். ஒரு குலோப் ஜாமூன் தரும் மகிழ்ச்சி, இரண்டாவது குலோப் ஜாமூன் தரும் சர்ப்ரைஸ் ... ஐந்தாவது குலோப் ஜாமூனில் திகட்டல்...பத்தாவது குலோப்ஜாமூனில் வெறுப்பு....இருபதாவது குலோப்ஜாமூனில் அலர்ஜி இனி அடுத்தது சபதம் அடுத்து ஆறுமாதம்/ஒரு வருஷத்துக்கு ஸ்வீட்டே வேணாம்... குலோப் ஜாமூன் என்ற வார்த்தையே குமட்டலை வரவைத்து விடுகிறது. பிரச்சினை குலோப் ஜாமூனில் இல்லை! அது நிலையான மகிழ்ச்சியைத்தரும் என்று எண்ணியதால் தான்!


மெட்டீரியல் லைஃபில் பக்கத்தில் இருக்கிறவன் வசதியா இருக்கிறதைப் பார்த்தால் நம்மில் பெரும்பாலானோர்க்கு உடன் வருவது புகைச்சல் அனல் மூச்சு! நாம் இன்னமும் சாண்ட்ரோவில் தான் போகவேண்டியிருக்கு? சொனாடாவில் வருபவனைப் பார்த்ததும் ரெபரன்ஸ் டேட்டா போட்டுக்குடுக்கும் தகவல்.

சாண்ட் ரோ இல்லாமல் தாவித்தாவி பள்ளத்தில் விழுந்தெழும் பைக்கென்றாலும், இங்கிதமில்லாதவன் இண்டிகோ காரில் போகும் போது குறைந்த அழுத்த வானிலையால் பெய்த மழையினால் விழைந்த சேறு தெளிக்கப்படும் நிலையில் நடந்தே செல்லும் சூழலிலும் புன்னகையோடிருக்க மனதிலே கூடிய அழுத்தம் இல்லாமல் லேசாக இருக்க இறைவனைத் துதித்தவாறே பக்குவப்பட்டிருக்கும் மனம் வேண்டும்.

பொருட்களோடு எத்தனை அட்டாச்மெண்ட் வைக்கிறோமோ அவ்வளவுக்கும் அவஸ்தைதான்.
சுதந்திரம் என்பதன் அர்த்தம் தெரிவதில்லை நமக்கு. ஓசியில்/ குறைந்த செலவில் சன் டிவி, ஜெயா டிவி வந்தால் அதில் சினிமா வருகிறது சீரியல் வருகிறது என்று எப்போதும் டிவி முன் அமர்ந்து அடிமையாகிறோம். சுதந்திரம் இதுவா? உண்மையான மகிழ்ச்சிதரும் சுதந்திரம் என்பது நாம் விரும்பும் நேரத்தில் எதனிலிருந்தும் விடுவித்துக்கொள்ளும் மனோதிடமே!

சாட்டிலைட் தொலைக்காட்சி 15 ஆண்டுகள் முன்பாக வெள்ளிக்கிழமை மாலை வரும் சினிமாப்பாடல்கள் நிகழ்ச்சி தூர்தர்ஷனில் ஒளியும் ஒளியும் மிக மிகப் பிரபலமானதாக இருந்த சமயம்... மாலை 8 மணியிலிருந்து 8.40 செய்திவரும் வரை வரும் நிகழ்ச்சி. அலுவலகத்தில் இருந்து ரயிலைப்பிடித்து வர சில நேரம் தாமதமாகிவிடும் போது ஆரம்பத்தில் மனம் மிகவும் வருத்தப்படும்... அய்யகோ இப்படி தூர்தர்ஷனில் வரும் ஒளியும் ஒலியும் நிகழ்வைப் பார்க்க முடியாத பாவியாகிவிட்டேனே என்று மனம் புலம்பும். பின்பு அதே ரயிலில் ஆயிரக்கணக்கானவர் இப்படி வருத்தப்படவா செய்கிறார்கள்... அப்போது எனது இந்த வருத்தம் என்பது ஒரு மிகச் சாதரணமான விஷயத்திற்கு நான் தரும் மிகுந்த இன்ஃப்ளேட்டட் வேல்யூ நிஜமற்ற பொய்மையான உணர்வு என்பதை சில வாரங்களிலேயே உணர்ந்து தெளிவுற்ற மாதிரி
பல்வேறு விஷயங்களில் வாழ்வில் இப்படித்தான் தகுதிக்கு மீறி பல சமயங்களில் உணர்வுகளுக்கு, ஆதர்சமான கொள்கைகளுக்கு , மனிதர்களுக்கு, செயல்களுக்கு நாம் இன்ஃப்ளேட்டட் வேல்யூ என்பதை தந்து கூடுதலாக வருத்தப்படுகிறோம் எல்லாம் தலைக்குமேலே போன பின்பு!



சரி. கெட்ட குணாதிசயங்களின் மூலமான கெட்ட வாஸனாவை எப்படிச் சுத்திகரிப்பது?
கெட்ட வாஸனா என்பது அழுக்குகள் நிரம்பிய நீர் நிறைந்த பாத்திரமாக மனம் இருக்கிறது. அப்படியே மனதைப் பிடுங்கி அழுக்கைக் கொட்டி விட இயலுமா? இயலாது. ஆக அப்படியே இருந்த நிலையிலிருந்த வாறே மனதில் இருக்கும் கெட்ட வாஸனா என்கிற அழுக்குநீரை நீக்கிவிட எந்த டெக்னாலஜி உதவிக்கு வரும்? நவீன பிலிப்ஸ், சீமன்ஸ் போன்ற அறுவை சிகிச்சை உபகரணங்களால் மனதை டிரான்ஸ்பிளாண்ட் செய்துவிடமுடியுமா? நல்ல மனம் நற்சிந்தனை கொண்ட ஏழை டோனார் தயாராகவே இருந்தாலும் நடக்கிற சாத்தியமா?
உடலும் மனமும் ஒன்றுக்கொன்று இணைந்தது பிரிக்க இயலாதது.

பின் எப்படித்தான் மேம்படுவது? கெட்ட வாஸனா ரிப்பேர் செய்து மேம்படுத்துவது?
ஸத்ஸங்கம் என்கிற நல்லோர்களுடன் இணைத்துக் கொள்வது, மனதை பார்வையாளனாக இருந்து பார்வையிட நல்லோர்களின் சகவாசம் தேவை. ரெபரன்ஸூக்கு நல்ல ஆரோக்கியமான டேட்டா கிடைக்கும். இந்த நல்லவர்களோடு நல்ல விஷயங்களான இறைவனைப்பற்றி அறிய உணர ஆரம்பித்து, சிந்தனையின் போக்கினை நல்ல திசைக்கு மாற்றி தன்னை தனக்கே மறு அறிமுகம் நல்லவிதமாக செய்து மேம்பட நல்லவர்கள் நிரம்பிய சூழலில் இருக்க வேண்டும்.

இம்மாதிரி தொடர்ந்து நல்லவர்கள் நிரம்பிய சூழலில் இருக்க கெட்ட வாஸனா என்கிற அழுக்கு நீர் நிரம்பிய மனத்தில் நல்ல எண்ணங்கள், நற்சிந்தனைகள், இறைவனை நம்பி, உணர்ந்து, அறிந்து, ஒன்றுவது ஆகிய செயல்கள் ஊற்றாக நல்ல நீராக உற்பத்தியாகி மனதின் அழுக்குகளை நீக்கி வாஸனா சுத்தகரிப்பு நடந்தேறும்.

மனச் சுத்தகரிப்பு என்பது ஆன்மாவை உணர மிக மிக அடிப்படையான முதற்சுற்றுப் பயிற்சி. சொல்வதற்கும் செய்வதற்குமான பொருந்தா இடைவெளி குறுகி நெறியான் நேர்மையாளர் ஆவதற்கு முதல் படி வேதநெறிப் பயிற்சி!

சாதாரண சங்கத்தில் சாண்ட்ரோ கார், 200சிசி பைக், ரெண்டு பெட் ரூம் 1000 சதுர அடி வீடு, சம்பளம், லைஃப் ஸ்டைல், இவைகளில் உடனே நமக்கிருக்கிறதா? என்கிற கம்பேரிசன் வரும்.

ஸத்ஸங்கம் விஷயத்திற்கு வருவோம். தெய்வம் பற்றிய சிந்தனை, பேச்சு, சூழல் ஏன் அவசியப்படுகிறது. பார்த்தசாரதிப் பெருமாள் இன்னிக்குத் தங்கக் கவசத்தில் ஜொலிக்கிறார் பார்!கபாலீஸ்வரர்க்கு இன்னிக்கு உற்சவத்தில் எப்படியான அலங்காரம்? பார்க்க கண்கள் கொடுத்து வச்சிருக்கணும். தெய்வீகமான சூழலில் கோவிலில் யாரும் எனக்கு விலை தங்க கவசம் வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை புகைவதில்லை.

மனமே கோவில் என்று உண்மையை உணர்கின்ற போது சக மனிதனிடம் பொறாமை வருவதில்லை. இருப்பது இல்லாதது கவலை அளிப்பதில்லை. பொருள் வசதி பணம் இவை நேற்று ஒருவனுடையதாயிருந்து இன்று ஒருவனிடம் இருந்து நாளை இன்னொருவனிடம் பயணப்படக்கூடிய நிலையற்றது என்பது புரியும்!

ஸத்ஸங்கம் எனப்படும் நல்ல எண்ணம் கொண்டவர்களோடு நிறையத் தொடர்பு கொண்டு நல்ல விஷயங்கள் பேசுதல் விவாதித்தல் என்பது மிக முக்கியம். நல்ல எண்ணம், நல்ல கருத்துக்கள் கொண்டவர்கள் இல்லை எனில் இருப்பவரோடு எப்படிப்பட்டவராயினும் எப்படிப்பட்ட கீழான விஷயங்களைப் பேசி, படித்தும் , பார்த்தும் இருக்க வேண்டியதில்லை. பல நேரங்களில் தற்காப்பாக Better to Be alone in a bad Company என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நல்லவர்கள் சேர்ந்து நல்ல விஷயம் எனில் அது இறைவனைப் பற்றியதாகவே இருக்கும். இறைவனை விட நல்லவன் வேறுயாரும் இருக்க முடியாது. எனவே இறை பற்றிய சிந்தனை, அது பற்றிய அறிவு இவை சிறப்பானவை.


இருக்கின்ற சூழலை அப்படியே ப்ரஸாத புத்தியோடு ஏற்றுக்கொள்ளும் மெய்ஞானம் வேண்டும். உள்ளதை உள்ள படியே பார்க்கும் ப்ரதிபக்ஷ பாவனை வேண்டும். இருக்கின்ற சூழலை மேம்பெடுத்த மேலேறி வர கடின உழைப்புத் தேவை!

நல்லவர்கள் நிறைந்த ஸத்ஸங்கத்தில் இணைத்துக் கொள்வதில் தனிமனிதனுக்குப் பல நல்ல விஷயங்கள் நெறியோடு வாழ்வதற்குக் கிடைக்கிறது. நல்லவர்கள் துணையிருத்தலால் பொருட்களின் மீதான பற்றுதல் குறைகிறது, பொருட்கள் மீதான பற்றுதல் குறைந்ததனால் மாயையான குழப்பங்களிலிருந்து விடுதலை கிட்டுகிறது, மாயையான குழப்பங்களிலிருந்து விடுதலை கிட்டுகிறதால் இம்மியூட்டபிள் ரியாலிட்டி எனும் குற்றமற்ற உண்மையை அறிய முடிகிறது. இந்தப் பேருண்மையை ஆழ்ந்து தினசரி கடைபிடித்து முழுமையாக அனுபவிக்கும்போது மனிதனுக்கு வாழ்வுச்சுற்றிலிருந்து விடுதலை கிடைக்கிறது.


இம்மாதிரியே நமது ஒட்டுமொத்த கர்மாவின்/ செயல்களின் பாலன்ஸ் ஷீட்டில் செயல்களின் தன்மைகளின் படி மனிதனாகப் பிறந்து மிக மோசமாக வாழ்ந்து மடிந்தால் அடுத்த எபிஸோட் தோற்றத்தில் மிருகமாக பிறவியே டி-ப்ரமோட் ஆகலாம். மேன்மையாக வாழ்ந்தவர்கள், அதிநேர்மையாக, மிகுந்த நெறியோடு வாழ்ந்து மடிந்தவர்கள் பிறப்பு-இறப்புச் சுற்றிலிருந்து விடுபட்டு பரப்பிரம்மத்தினூடே கலந்து விடலாம்!

மிருகமாகக் காட்டில் பிறந்து மீண்டும் மனிதனாகப் பிறந்து நேர்மையாக வாழ்ந்து இறைவனை அடைவது எளிதானதா? இல்லை இந்த மனிதப் பிறப்பிலேயே நல்ல செய்கைகளால் சிறப்பான குணாதிசயங்களோடு வாழ்ந்து இறைவனை உணர்ந்து இறைவனோடு கலந்து பேரானந்தம் அடைவது எளிதானதா?

இது அவரவர் புத்தியால் பகுத்தறிந்து அவரவர்க்கு உவப்பானதை அவரவராகத் தேர்ந்தெடுக்கவேண்டிய மிகமுக்கியமான விஷயம். அறுபதுவயதுக்கு மேல், ரிடையரானபிறகு மட்டுமே கவனம் செலுத்தப்பட வேண்டிய விஷயம் என்று நினைப்பவர்களால் என்றுமே இறைவனை உணர முடியாது. அறுபது வயதில் ரிட்டையரானபிறகு புதிது புதிதாக வரும் பிரச்சினைகளுக்கு பக்குவமற்ற மனதால் இரையாவதற்கு மட்டுமே இயலும்.



அன்புடன்,


ஹரிஹரன்