(56) இன்று நான் புதிதாய் பிறந்தநாள்!
இன்னிக்கு 18 நவம்பர் எனது பிறந்தநாள். அதனால் என்னன்றீங்க! நான் பிறந்த நாளைவிட பிறந்த ஆண்டு சரித்திர முக்கியம் வாய்ந்தது.
1969 ரொம்ப முக்கியமான வருஷம். ஹரிஹரன் பிறந்த ஆண்டு என்பதால் அல்ல!
விண்வெளி அறிவியல் ரீதியாகவும் தமிழகத்தின் அரசியல் ரீதியாகவும்.
நீல் ஆம்ஸ்டிராங் நிலவிலே கால்பதித்தானா இல்லை அமெரிக்க நெவெடா பாலைவனத்தில் எடுத்த படங்களை நிலவிலே கால்வைத்ததாகக் கதை விட்டார்களா என்பதற்கு இன்றுவரையில் சிறுவயதில் நான் நிலவில் பார்த்த இன்றும் குழந்தைகள் பார்த்து ரசிக்கும் ஊன்றுகோலுடனான கிழவி தான் சாட்சி!
இதே 1969ல் தற்போதைய முதல்வர், தமிழின மான, சமூகநீதி காவலர் கருணாநிதி நேர்மையுடன் தமிழக முதல்வராக அரியணை ஏறிய ஆண்டு.
இந்த 37 ஆண்டுகளில் ஹரிஹரனை சில பல பிரச்சினைகள் Hurricane புயல் மாதிரி சுழன்றடித்தபோது ஹரி"can do it" என்று அரிக்கேன் விளக்காய் ஹரிஹரனுக்கு இருட்டில் வழிகாட்டி நடத்துவது ஹரியும் ஹரனுமான நாரயணனே!
ஐந்தாறுமாதமாகிய என் தமிழ்மணத் தொடர்பு இன்று எனது இந்த 38வது வயது துவக்கத்தை கூடுதலாக சுவைகூட்டியதாக ஆக்கியிருக்கிறது. அரசியல் களத்தில் நேரிடையாக எதிர்தரப்பில் இருப்போரது கருத்தை அறிந்து (அதிர்ந்து)கொள்ள முடிகிறது.
என்னுடய எண்ணங்களை என்போக்கில் எழுத இந்த வலைப்பதிவு. இதில் தொடர்ந்து தமிழக அரசியல் குறித்து கருத்துக்களை எழுதினாலே புகழ் /இகழ் வெற்றி/தோல்வி சந்தோஷம்/கவலை என்றில்லாமல் "ஸ்திதப்ரக்ஞன்" ஆகிவிடலாம் என்று நம்புகிறேன்!
எனது வலைப்பூவிற்கு வருகை தந்த, வந்துகொண்டிருக்கும், இனிவரப்போகும் அனைவருக்கும் மேலான என் நன்றிகள்.
வலைப்பதிவு,தமிழ்மணம், தேன்கூடு என்று இணைத்துக்கொண்டதில் கனடியக் கால்கரியிலிருந்து ஐரோப்பா மத்தியகிழக்கு இந்தியா சிங்கைவழியாக நியூஸி கிறிஸ்ட்சர்ச் வரை பல தமிழ் நெஞ்சங்களையும் அவர்களது எண்ணங்களை அறிந்து கொள்ள முடிகிறது.
"அடுத்தவர் மனதிலான எண்ணங்களை அறியும் ஜன்னலாகிய இந்த வலைப்பதிவு உலகத்தை எனது 38வது பிறந்தநாளின் மிகச் சிறந்த பரிசாக எண்ணுகிறேன்."
அன்புடன்,
ஹரிஹரன்
56 comments:
டெஸ்ட் மெசேஜ்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் ஹரிஹரன்
நன்றி நாமக்கல்லாரே,
நாமக்கல் ஆஞ்சநேயரே வாழ்த்தியமாதிரி இருக்கு!
பிறந்த நாள் வாழ்த்துக்கள்...:-))
இலவச கொத்தனாரே,
இன்றைய பிறந்தநாள் வாழ்த்துக்கோட்டையில் உங்கள் வாழ்த்து கான்கீரீட் மாதிரி!
வாழ்த்துக்களுக்கு நன்றி
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மங்கை.
ஹரிஹரன் அய்யா,
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பாலா
அஞ்சா நெஞ்சர் ஹரி வாழ்க
பாலா,
வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள்
கால்கரி சிவா,
பிறந்த நாள் காலையில் "அஞ்சா நெஞ்சர்" என்று பட்டம் தந்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி!
"உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமில்லை என்பதே" என்று உண்மைக்காக உதார் காட்டுவேன் என்று உறுதி கூறுகிறேன்!
அதுக்குள்ள இவ்வளோ பின்னூட்டமா?
இன்னைக்கும் சதமா?
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணே!
நேரு தாத்தா உங்கள விட நாலு நாள் பெரியவரா?
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஹரிஹரன்
கங்ராட்ஸ்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அதுக்குள்ள இவ்வளோ பின்னூட்டமா?
இன்னைக்கும் சதமா?//
ஐயா கார்மேகம் இன்னிக்கானும் என்னோட பதிவுல ஹோம் பிட்சில் சதமடிக்கணும்!
வாழ்த்து அட்டையை போஸ்டில் அனுப்பியுள்ளேன்.
ஸ்டாம்ப் ஒட்ட மறந்துட்டேன்.
ஐந்து ரூபாய் அபராதம் கட்டி விடவும்.
//நேரு தாத்தா உங்கள விட நாலு நாள் பெரியவரா?//
கார்மேகம் ஐயா,
இதுக்குத்தானே பிறந்த வருஷத்தை சரித்திரப்பின்ணணியோட நேரடியா சொல்லியிருக்கேன்! அப்படியும் நேரு தாத்தாவோட லிங்க் தருவது நியாயமா?
//வாழ்த்து அட்டையை போஸ்டில் அனுப்பியுள்ளேன்.
ஸ்டாம்ப் ஒட்ட மறந்துட்டேன்.
ஐந்து ரூபாய் அபராதம் கட்டி விடவும்.//
கார்மேகம் சார்,
குவைத்தில் வாங்கணும்னா தினார்ல இல்ல அபராதம் கட்டணும்! ஸ்கேன்பண்ணி வாழ்த்து அட்டையை அனுப்பிடுங்க!
செந்தழல் ரவி,
மிக்க நன்றி வாழ்த்தியதற்கு!
முத்துக்குமரன்,
தங்களது பிறந்தநாள் வாழ்த்து இனிமையைக் கூட்டுகிறது. மிக்க நன்றி வாழ்த்தியதற்கு!
டோண்டு சார்,
தங்களது வாழ்த்துக்களுக்கு மிகுந்த நன்றிகள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹரிஹரன் :)) நீங்க என்றும் 18 தான் ;)))
பிறந்த நாள் வாழ்த்துக்கள்! இதுக்கு நடுவுல எதுக்கு ஹரி கருணாநிதி மேட்டர்... தவிர்த்து இருக்கலாம்.
ஜாலியா எடுத்துக்குவீங்க என்று நினைக்கிறேன்.
அன்புடன்,
ஜெய்
இன்னும் நிறைய்ய்ய்ய பிறந்த நாள் காண இந்த நாளில் மனமார வாழ்த்துகிறேன்..
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஹரிஹரன் அவர்களே! அஞ்சனா மைந்தன் உமக்கு வாழ்நாள் முழுதும் அருள் புரிய ப்ரார்த்திக்கிறேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
தங்களை இன்னும் சின்ன வயசுக்கார்ர் என்று நினைத்திருந்தேன். (உங்கள் அசட்டு துணிச்சலை பார்த்து.... :-)))) பரவாயில்லை. இன்னும் 2 வருடம் இருக்கு நாய் குணத்துக்கு.....
ராம்பிரான் 37 வயதில்தான் அறியணை ஏறினார். உங்களுக்கு கொஞ்சம் லேட்டாக இணையத்தில் அறியாசனம் கிடைத்துள்ளது. ஜமாயுங்கள்...
நன்றி
Happy B'day.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!
வாழ்த்துக்கள் அண்ணே
உங்க வயசு தெரியாம நிறைய வாட்டி மோசமா மோதிட்டேன்.... அதுக்காக மன்னிக்கவும்.
நூறாண்டு காலம் வாழ்க (உண்மையிலேயே முழு மனதுடன் வாழ்த்துகிறேன். நீங்கள் கலைஞரை வாழ்த்தியது மாதிரி அல்ல)
இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள் ஹரிஹரன்.
நல்லா இருங்க.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!
சரித்திரம் படைத்திட்ட நாள் மட்டுமல்ல, சரித்திர நாயகர்கள் ( நேரு, இந்திரா, பிரபாகரன்) பிறந்த மாதமும் கூட.
அன்பு ஹரிஹரன்,
எல்லா நலமும் பெற்று இருக்க வைப்பாய் இவரை தொடர்ந்து நெருப்பாய் என கண்மூடி எனது குருநாதரையும்,குல குருவையும், குல தெய்வத்தையும் வேண்டிக் கொள்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
பா.ராமச்சந்த்ரன்.
முதலில் அனுப்பிய வா(ழ்)த்துகளைக் காணோமே ? பறந்துருச்சோ? :-)))
விடறதில்லை.
மீண்டும் இதோ...
இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள் ஹரிஹரன்
ஜொள்ளுப்பாண்டி,
20வயசைக் குறைச்சு 18 ஆக்கியதற்கு மிக்க நன்றி. கையில ஒரு புஸ்தகத்தோட நல்ல கோஎட் காலேஜூக்கு கிளம்பிற வேண்டியதுதான்!
வரதன்,
Hurricaneகளால் ஹரிcan do it என்று அறிந்து கொள்ள முடிந்தது. வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.
ஜி.கௌதம்,
தடாலடியாக வந்து வாழ்த்தினதுக்கு என் நன்றிகள்!
நன்மனம்,
வாழ்த்திய உங்கள் நன்மனத்திற்கு நன்றிகள்!
கிருஷ்ணா,
அஞ்சனா மைந்தன் அருள்கிட்ட பிரார்த்தனையோடு வாழ்த்தியதற்கு நன்றிகள்!
ஜெயராமன் சார்,
வாழ்த்துக்களுக்கு நன்றிகள். என்னிலும் என் எழுத்து துள்ளலோடு இளமையாக துணிவாக இருக்கிறது என்று சொல்கிறீர்கள் எனக் கொள்ளலாமா? மனம் காலேஜ் காம்பௌண்டுக்குள்ளேயே (படிப்பு, அறிந்து கொள்வதற்குத்தான்) இருக்கிற மாதிரிதான் இருக்கிறது!
தியாகராஜன்,
வாழ்த்தியதற்கு மிகுந்த நன்றி!
nono,
nono என்றில்லாமல் yesyes என்று வருகை தந்து வாழ்தியதற்கு நன்றிகள்!
லக்கி,
மோதுவதெல்லாம் கருத்துக்கள் தானே!
எதற்கு மன்னிப்பெல்லாம்?
நான் கருணாநிதியை உயர்வுநவிற்சியாக எழுதி உண்மை நிகழ்வுகளோடு பொருத்தியபோது வஞ்சப்புகழ்ச்சியாகிப் போனது!
பொதுவாழ்வில் உயரம் போனால் எதிர்பார்ப்பு, விமர்சனம் அதிகம் வரும். கருணாநிதி மிக உயரத்தில் இருப்பவர்.
துளசியக்கா,
திடீர் வேலைப்பளு பாலைவனத்துக்குள் சைட்விசிட்டுக்கு ஓடியதில் கம்ப்யூட்டர் பக்கமே வரமுடியவில்லை. அதான் உடனடியாக பப்ளிஷ் செய்ய முடியவில்லை.
வாழ்த்துக்களுக்கு நன்றிகள்!
மணியன்,
வாழ்த்துக்களுக்கு நன்றிகள். ஏதாவது சிறு சரித்திரமாவது படைக்க முயற்சிக்கிறேன்!
பா.ராமச்சந்திரன் (எ) மனிதன்,
//எல்லா நலமும் பெற்று இருக்க வைப்பாய் இவரை தொடர்ந்து நெருப்பாய் என கண்மூடி எனது குருநாதரையும்,குல குருவையும், குல தெய்வத்தையும் வேண்டிக் கொள்கிறேன்//
எனது நலத்துக்காக வேண்டிக்கொண்ட உங்களின் நல்ல எண்ணத்துக்கு என்ன கைம்மாறு செய்வேன்? கண்ணில் நீர்கசிய நன்றிகள் என்று சொல்வதைத் தவிர!
வி த பீப்புள் ஜெய்,
கருணாநிதியைத் தொடாமல் சென்றிருக்கலாம்தான்! என்றபோது 1969ல் நிலவில் நீல் ஆம்ஸ்டிராங்கின் ஸ்பேஸ் வாக் சாதனையை விட தமிழக அரசியலில் ராங் சாய்சின் நேர்மைக்கு கொஞ்சம் ஸ்பேஸ்விடாத தாக்கம் தான்!
சாரி உங்க பின்னூட்டம் தொடர் ஈமெயில் சுருளுக்கு மத்தியில் மாட்டிக்கொண்டதில் தாமதம்!
வரதன்,
உங்க முதல் பின்னூட்டம் வந்ததே.
மீண்டும் வாழ்த்திய வரதண்ணனுக்கு ஜே!
Dear Hariharan,
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
Pl. forgive me for my belated wishes.
My best wishes for your continued success in whatever you seek to endeavour !!!
இரண்டு நாள் தாமதம்,இருந்தாலும் மென்மேலும் பல வெற்றிகளை குவித்து வாழ்விலும் முன்னேற வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் ஹரிஹரன். இன்று போல் என்றும் வாழ்க : )
எ.அ.பாலா,
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்1
வடுவூர் குமார்,
நிரம்ப மகிழ்ச்சி. சிங்கையை சிடியில் பார்த்தேன். வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்!
பாஸ்டன் பாலா,
முதல் தரம் வந்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி!
//தமிழக அரசியலில் ராங் சாய்சின் நேர்மைக்கு கொஞ்சம் ஸ்பேஸ்விடாத தாக்கம் தான்!//
தமிழக அரசியலில் எது ரைட் சாய்ஸ். எல்லாமே தப்பான சாய்ஸ் தான். அதனால தான் மக்கள் ரெண்டு ராங் சாய்சிக்கு ஈக்வலா சான்ஸ் குடுக்கறாங்க. ரெண்டும் வெட்டிங்க. பிறந்தநாளில் எதுக்கு என்பதே என் கருத்து :)))
//சாரி உங்க பின்னூட்டம் தொடர் ஈமெயில் சுருளுக்கு மத்தியில் மாட்டிக்கொண்டதில் தாமதம்!//
நோ ப்ராப்ளம்
Post a Comment