Sunday, November 19, 2006

(57) ஈவெரா வெங்காயம் & சனாதனதர்மம்... இந்துமதநெறி...வழிபாடு

கடவுள் இல்லை.. இல்லை... இல்லவே இல்லை என்று சொன்ன கரும்பாறை ஈவெரா மக்கள் மனம் உருகி வழிபடுகின்ற கடவுள் சிலைகளை வெறும் கல் என்று சொல்லி ஒதுக்குவதே பகுத்தறிவு என்றார்.

இது என்ன வெங்காயம் என்று உண்மையைப் பகுத்தறிந்து பார்ப்போம்.

இன்று திரைகடல் ஓடித் தமிழர்கள் பல்வேறு நாடுகளில் பொருளீட்டச் செல்கிற இத்தருணத்தில் சுவைகூடுகிறது உருவ வழிபாடு எத்துணை உணர்வுபூர்வமானது என்று அறிந்துகொள்ள!

அயல் நாட்டிலும் , உள் நாட்டிலும் வேறு இடங்களில் குடும்பத்தினரைப் பிரிந்து வாழ்வோர் அவரது மேஜையின் மீது பெற்றோர், மகன், மகள் புகைப்படத்தினை வைத்திருப்போம், பர்சுக்குள் மனைவி, காதலி, காதலன், புகைப்படம் இருக்கும். கட்சித்தலைவன், சினிமாநடிகன் என்றும் இஷ்டமானவர்களது புகைப்படம் வைத்திருப்பதைக்காணலாம்.

ஈவெரா போட்டோவை ஈவெரா வாழ்ந்தகாலத்தில் வாழ்ந்தவர்கள் அவரை நேரிடையாகக் கண்டுணர்ந்தவர்கள் புகைப்படத்தில் இருப்பது ஈவெராவேதான் என்று சொன்னால் மட்டும்தான் ஈவெரா என்று ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது பகுத்தறிவாகாது என்பது உண்மை என்று ஏற்றுக்கொள்வது பகுத்தறிவு.

நியூயார்க் கான்க்ரீட் காட்டில் தனது அலுவலகத்தின் மேஜைமேல் இருக்கும் புகைப்படம் அவனது இருபதாயிரம் மைல்கள் தள்ளி தமிழகத்தின் பட்டிக்காட்டில் இருக்கும் வயதான தாயை மீண்டும் தரிசிக்க உதவுகிறது. மாண்டுபோய்விட்ட தந்தையை மீண்டும் காண புகைப்படம் உதவுகிறது.

அரேபியப் பாலைவனத்தில் ஏதாவது எண்ணைய் நிறுவன வாயிலில் நுழைவுச்சோதனையின் போது "Gatepass" எடுக்கும்போது பர்சுக்குள் புகைப்படமாய் இருக்கும் மனைவி /காதலி /மகன்/மகளை கண்டு உணரமுடிகிறது புகைப்படம் வாயிலாக, உடனடியாக.

நூறுதரம் பர்சிலிருந்து எடுத்து எடுத்துப் பார்த்து காதலியைக் கண்டு உணரவைத்து முத்தமிட்டு மகிழ்ந்த புகைப்படம் சிறிது காலத்திலேயே நைந்துபோய் கிழிபட்டுவிடக்கூடியது. கண்ணாடியோடு சட்டம் போட்டு வைத்தால் புகைப்படம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக சில காலம் நிலைத்து நிற்கும். பூச்சித்தாக்குதல், வேதிப்பொருள் நிறமிழப்பு இவைகளால் புகைப்படம் பிரதிபலிப்பது ஈவெராவா, இல்லை வேறு எதானும் வெங்காயமா என்று சந்தேகம் வரும்.

காலம் கடந்து நிற்கும் மெய்யாக இறைவனை பஞ்சலோகத்திலும், கரும்பாறைக் கற்களிலும் திருமேனி செய்து இறைசக்தியை உள்ளிருத்திப் பிரதிஷ்டை செய்தார்கள். தினம் பக்தி உணர்வோடு அர்ப்பணித்தபடி ஆடிப் பாடித் தொழுதார்கள்.

தலைவன்/தலைவி மீது காதல் உணர்வோடு இருப்போருக்கு காதலை வெளிப்படுத்தியபடி புகைப்படம் அஞ்சலில் வரட்டும் ஆனந்தக்கூத்தாடுவார்கள். அம்மாதிரியே பக்தியுணர்வோடிருப்பவர் இறைவனது உருவம் கண்டு உணர்ந்த வேளையில் ஆனந்தக் கூத்தாடுவார்கள்!

ஆக தாயாக, தந்தையாக, காதலியாக, மகன், மகளாக புகைப்படமாக இருப்பது வேதிப்பொருள் காகிதம் என்று சம்பந்தப்பட்ட நபர் உணர்வதில்லை. இத்தருணத்தில் உருவமாகத் தென்படுவது வெறும் வேதிப்பொருளும் காகிதமும் என்று நினைவுக்கு வந்தால் அப்போது காதலி காணாமல் போய்விடுகிறாள், தாய், தந்தை, மகன், மகள் அதில் பிரதிபலிக்கப்படுவதில்லை!

உணர்வுகளால் உருவம் பிரதிபலிக்கப்படும்போது புகைப்படத்தின் உள்ளிருக்கும் உறவு புலப்படுகிறது. உணர்வற்ற கரும்பாறையாக மனது இருக்கும்போது கடவுள் சிலை கல்லாகத்தான் தெரியும். உணர்வு அற்றுப்போய் வாழ்கின்ற கரும்பாறையாகிப்போன ஒரு குத்துகல்லுக்குக் கடவுளுக்கு பதில் கல்தான் புலப்படும்!

பாசம் எனும் உணர்வு மேலோங்கியநிலையில் மனதினால் பார்க்கப்படும் போது வேதிப்பொருள் காகிதம் தன் நிலைஉயர்ந்து தாய்/தந்தை/காதலி என்று உறவாகிறது. பக்தி எனும் உணர்வு மேலோங்கிய நிலையில் மனதால் பார்க்கப்படும்போது கடவுள் கற்சிலையில் புலப்படுவார்!

இன்றைக்குத் தனது இளைய தலைமுறைக்கு தனது முன்னோரை அடையாளம் காட்ட உறுதியான நிலையான பிரதிபலிப்பாகவே சிலைகள் அமைகின்றன. பலநூறு ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ராஜராஜ சோழனை, திருமலைநாயக்கரை காணாதவர்கள் அவர்களது உருவச்சிலைகளினின்று எவ்வாறு இருந்தார்கள் என அறிய முடிகிறது.

இறைவுணர்வோடு பக்தியோடு தியானநிலையில் அமர்ந்த கடுந்தவம் புரிந்த, தான் எனும் அகந்தை அகற்றி இறைசக்தியிடம் அர்ப்பணித்த அடியவர்கள் >தாம் கண்ட இறைவனை அவர்கள் கண்டு உணர்ந்ததை காட்சியாக்கியிருக்கின்றார்கள் சிலைகளாக.

நூறாண்டுகளுக்கு முன் தோன்றிய ஈவெரா இன்று உணரப்படுவது அறியப்படுவது உருவங்களாகிய சிலை மற்றும் புகைப்படங்கள் வாயிலாகத்தான்.அவர் சொன்ன வார்த்தைகள்தான் பகுத்தறிவுவாதிகள் பின்பற்றும் வேதம். இதை வெளிக்காட்டிடும் அடையாளமாக, குறியீடுகளாக பகுத்தறிவுஆட்கள் அணிவதுதான் கருஞ்சட்டை! (வேத அறிவுகொண்ட பிராமணனுக்குப் பூணூல் அடையாளம் மாதிரி!)

உருவ வழிபாட்டை வெங்காயம் முட்டாள்தனம் என்ற ஈவெரா வெங்காயம் இன்று இளையவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவதே சிலை + புகைப்படம் போன்ற உருவப் பிரதிபலிப்புகள் மூலமே!

கோவிலில் இறை உருவங்களுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால் மற்றும் இதர பூஜைப்பொருட்கள் விரயம் என்கிற பகுத்தறிவுப் புனிதங்களுக்கு இவர்கள் பிறந்தநாள் மற்றும் நினைவுநாட்களின் போது சாற்றப்படும் மாலைகளும், வைக்கப்படும் மலர்வளையங்களும், சிலைமுன்பு கைகூப்பி கரும்பாறைச் சிலையை தொழுவது என்பதுமானவை தானாடாவிட்டாலும் தன்வழியே சனாதனதர்ம கலாச்சாரம் எனும் சதையாடுவதே என்பதை அறியாதமாதிரி நடிப்பது பகுத்தறிவு!

தனிமையில் காதலன்/காதலி புகைப்படங்கள் முத்தமிடப்படும் போது உணரப்படுவது காகித வேதிப்பொருளைத் தன் இதழ்களால் தீண்டும் செயலா?

எப்பேர்ப்பட்ட விஞ்ஞானியானாலும் ஒரு காகிதவேதிப்பொருள் துண்டைக் கண்டதும் புன்முறுவல் பூத்து மை லிட்டில் டார்லிங் என்று சொல்லியபடியே பேத்தியை நினைவு கொள்வது எனும் செய்கை சொல்வது விஞ்ஞானி அஞ்ஞானி ஆகிவிட்டார் என்பதையா?

ரஜினியோட பாட்ஷர் திரைப்படம் தெலுங்குக்குப் போய் பின்னர் தமிழில் மீண்டும் விஜய்காந்த் நடித்த கஜேந்திராவாக வந்தது மாதிரியான உறவு வேத அறிவுக்கும் பகுத்தறிவுக்குமான உறவு!


வேத அறிவு பிரகடனங்கள் பொதுவில் எல்லா மனிதனுக்குமானது. பகுத்தறிவு பிழைப்புவாத மனிதனுக்கானது!

வேத அறிவு நிஜமானது வேதத்தின் பின்னே போகிற நிழல்தான் பகுத்தறிவு!

வேதம் சொல்லும் நிஜம் பல நிறங்களோடு வர்ணமயமாக இருக்கும். நிழல் எப்போதுமே கருமைதான்!

என்றுமே நிழல் நிஜம் ஆகாது என்பதை பிழைப்புவாத பகுத்தறிவும் அறிந்தே செய்யும் மாய்மாலம்தான் கருஞ்சட்டைகளின் சேட்டை!

தமிழ்க்கடவுள் முருகன் சரி இருக்கட்டும்... பகவான் கிருஷ்ணன் வருணாசிரம போதிப்பாளன் எனவே எப்படி பகவான்?... தமிழன் நீரை வணங்கியவன் எனவே அக்னியை வணங்கமுடியாது என்பதான பிழைப்புவாதத்தினால் விளைத்துக்கொண்ட பேத உணர்வுகளோடு பார்த்தால் மனம் போல மாங்கல்யம்!

"நிறுவனப்படுத்தப்பட்ட மதங்களின் அச்சில் இன்னுமொரு சேர்க்கையாக பெரியார்மதம் புத்தம்புதிய ரிலீசுக்காக நெடுங்காலமாக இதர நிறுவனப்படுத்ப்பட்ட மதக்கொள்கைகளை விமர்சிக்காது ஆபிரகாமிய மதங்களின் அடிவருடியபடி, மஞ்சள்துண்டு அணிந்தால் ஆக்கம் என்று பகுத்தறிவுப் பகலவனின் கொள்கையை மூத்த தளபதிகள் சோழிஉருட்டிப் பலன்கேட்டபடி வழிநடத்தியபடி உருவாகிவருகிறது! இதுவே இவர்களது செயல்கள் "விடுதலை" செய்கின்ற "உண்மை"


அன்புடன்,

ஹரிஹரன்


7 comments:

அரவிந்தன் நீலகண்டன் said...

துணிகரமாக கருத்துகளை வெளியிடுவதற்கு நன்றி.

Hariharan # 03985177737685368452 said...

வாருங்கள் நீலகண்டன்.


யதார்த்தத்தை உண்மையைச் சொல்லுகிறேன்!

இன்றைக்கு அரசியல் சாக்கடையில் புரட்டாகச் சொல்லப்படும் வேதமே வேதம் என்று வேதவாக்காகச் செயல்படுவோருக்கு பாசாங்கில்லாத நேர்மையான மாற்றுப்பார்வைக்கு கருத்துக்களை பதிகிறேன் அவ்வளவே!

துணிகரம் என்ன தனியாக இதற்கெல்லாம்?

bala said...

//இது என்ன வெங்காயம் என்று உண்மையைப் பகுத்தறிந்து பார்ப்போம்//

ஹரிஹரன் அய்யா,

இப்படி பல உண்மைகளை விடுதலை செஞ்சி வெளியே கொண்டுவரும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பாலா

வாசகன் said...

How do U identify the 'shape' of GOD?

Hariharan # 03985177737685368452 said...

//How do U identify the 'shape' of GOD? //

தமிழ் மகன்,

GOD is not an objectof the intellect. He is the very subject.

வடிவமில்லாதது, வடிவானது என அனைத்தும் இறையே! HE is the eye of the eye, ear of the ear, mind of the mind!

கண் என்பதன் கண்ணான பார்வையாகவும், செவி என்பதன் கேட்கும் திறனாகவும், மனம் என்பதன் நினவுகள்+எண்ணங்கள்+சிந்தனையாகவும் இருப்பது இறையே!

In the process of the "causation Hunting" trying to trace everything to its ultimate origin, the point at which human intellect get stalled is GOD!

Mohan Madwachar said...

ஞானி- காஷ்மீர்
ஐயா, உங்கள் கருத்துக் நன்றி.

நான் தீவிரவாதத்தை சரியென்று சொல்லவில்லை. காஷ்மீரின் பாதுகாப்புக்காக செலவிடப்படும் கோடான கோடி ரூபாய் பாதுகாப்புக்காக மட்டுமே செல்கிறதா. நாட்டின் எல்லா துறையிலும் ஊழல் மலிந்திருக்கும் போது ராணுவம் கறை படாமல் இருக்கும் என்று நினைக்கிறீர்களா. 50 வருடங்களாக தீர்க்க முடியாத பிரச்சனையிது என்று நீங்கள் நம்புகிறீர்களா. நீங்களே கூறுங்கள்

Hariharan # 03985177737685368452 said...

லியோ மோகன்,

//நான் தீவிரவாதத்தை சரியென்று சொல்லவில்லை. காஷ்மீரின் பாதுகாப்புக்காக செலவிடப்படும் கோடான கோடி ரூபாய் பாதுகாப்புக்காக மட்டுமே செல்கிறதா. நாட்டின் எல்லா துறையிலும் ஊழல் மலிந்திருக்கும் போது ராணுவம் கறை படாமல் இருக்கும் என்று நினைக்கிறீர்களா. 50 வருடங்களாக தீர்க்க முடியாத பிரச்சனையிது என்று நீங்கள் நம்புகிறீர்களா. நீங்களே கூறுங்கள் //



இங்கு பதிலளித்தால் இப்பதிவினை திசைதிருப்பும் என்பதால் இதற்கு
உங்களது பதிவிலேயே பதிலளிப்பதுதான் சரியாக இருக்கும். பின்னர் வருகிறேன் உங்கள் பதிவுக்கு.