Tuesday, December 05, 2006

(74) அரசியல் திரா'விட'த்தின் இந்து தத்துவங்கள் மீதான அலர்ஜி

இந்துமதம் என்றாலே புழுதிவாரித் தூற்றுவது அரசியல் திரா'விட'த்தின் ஹால் மார்க் ரியாக்ஷன். தமிழின் தமிழ் தன்னை மனதில் வைத்து இந்து என்றால் திருடன் என்று சொல்வது கண்டிப்பாக பகுத்தறிவுதான். தன்னை முழுதும் உணர்ந்து "தன்னைப்போல் பிறரை" நினைத்திருக்கிறார். சரி உண்மையில் இந்து மத தத்துவங்கள் என்ன சொல்கின்றன.

சனாதன தர்மம் என்பதே தியரியான இந்த உயரிய இந்து மத தத்துவங்களை மக்கள் தினசரி வாழ்வில் அப்ளை செய்து முறையாக வாழ்வதுதான்.

இந்துமத தத்துவங்கள் பிராக்டிக்கலாக கடைபிடிக்கப்பட்டால் இந்தப் பகுத்தறிவுப் பாசறையினரின் அரசியல் இயக்கக் கடைகள் இழுத்து மூடப்படும் அபாயம் இருப்பதாலேயே இந்துமதம் என்றாலே வெகுண்டெழுந்து வன்மையாக விமர்சிக்கின்றார்கள். மக்களை திசை திருப்புவதிலேயே குறியாக இருக்கின்றார்கள்!

தமிழின் தமிழ் மக்கள் நலனுக்காக ஆட்சியில் இல்லாத போது ஓடோடிப்போய் ஆட்டுக்குத் தாடியென இருக்கும் ஆளுநரைச் சந்தித்ததாக என்றுமே இருந்ததில்லை. தனியார் தொலைக்காட்சி கேபிள் ஆப்பரேட்டர்களைத் தமிழக அரசுடமைப் படுத்தும் என்ற அறிவிப்பு வந்ததும் சட்டமன்றம் போகமுடியாததற்குக் காரணமான வயது மூப்பு நொடியில் காணாமல் போய் துடிப்பான இந்தக் கிழவர் clever ஆக இவரது குடும்ப கேபிள் நிறுவனமான சுமங்கலி இந்தச் சட்டத்தினால் அமங்கலி ஆகிவிடும் என்று ஓட்டமாக ஓடிச் சந்திக்கிறார்.

அடுத்து தனது கம்யூனிஸ மகன் எப்படியாவது அடுத்த தலைமுறை முதல்வராக நிலைநிறுத்த என்னவெல்லாம் முடியுமோ அதை எல்லாம் செய்கிறார். கட்சிக்குள்ளேயே விமர்சனப்படுத்தப்படுகிறார். கட்சியினரைஅடக்கி, நெறித்து என்று தனது குடும்பத்தினர் மட்டுமே நவீன சோழனாக இருந்து ஆட்சி செய்ய வேண்டும் என்ற பற்றுதல் எண்பது சொச்சம் வயதிலும் தத்துவார்த்ததினை பாரம்பர்யமாக உணர்ந்து பக்குவமாகக் கனிகின்ற தன்மை பகுத்தறிவு நாத்திகம் என்று தனது பெரும்பாலான் காலத்தினைக் கழித்துவிட்டதில் பொருள்சார் உலகத்தினுள்ளே தேன் பாட்டிலில் விழுந்த எறும்பாய் இருக்கிறார்.

இந்து மத தத்துவம் மனிதன் தனது மனதைத் தயார்படுத்த பல மிக உயரிய தத்துவங்களை எளிதாகச் சொல்லியிருக்கிறது. தத்துவம் என்றாலே தலை தெரிக்க ஓடவேண்டியதில்லை. உண்மையான பகுத்தறிவு என்பது நான்காவது டைமன்ஷனைப் பார்க்கத் தூண்டுவது தத்துவம்.

இந்துமதத்தில் கணவன் மனைவி, மகன் மகள் என்று நெருங்கிய உறவுகளோடு முழுமையான அன்பும், புரிதலுமாக வாழவேண்டும் என்பதை முன்னிறுத்திச் சொல்கின்ற வேளையில் இந்த உறவுகளில் கொஞ்சம் இடைவெளி வேண்டும் என்கிறது. நமது வழக்கில் " தாயும் புள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு வேறு தானே" என்று சொல்லியிருப்பதையும் காணலாம்.

எத்தனை நெருக்கமான உறவானாலும், ஏன் உன் மனைவியே ஆனாலும் உயிர் பிரிந்த பின்பு உன் உடலோடு தனிமையில் இருக்க விரும்ப மாட்டாள். அதுவரை அன்பு காட்டியவள் அச்சப்படுவாள். குளிர் பேழைக்குள் இருப்பது உன் உடம்புதான். ஆனால் இறக்கும் முன்பு வரை அந்த உடலுக்குக் கிடைத்த அன்பு/மரியாதை இறந்தபின் கிடைக்கிறதா? அழியக்கூடிய, அழுகப்போகிற இந்த உடல்தானே ஆட்டமாய் ஆடியது? இறப்பு அறிவிக்கப்பட்டவுடன் எத்தனை இன்புளுயன்ஸ் கொண்டு எங்கு சென்றாவது இறப்பு அறிவிப்பினை மாற்றி அறிவித்திட இயலுமா? பெருவெற்றியாளர், பெரும் பணக்காரர், ஆளுமையான தலைவர் என்றும், மாபெரும் புள்ளி என்பதெல்லாம் காணாமல் போய் "அது"என்று அஃறிணையாகக்கூடிய இந்த உடல் இதை மட்டும்தானே வாழும்போது பெரும்பாலோர் பார்ப்பதும்,போற்றுவதும், தூற்றுவதும் என்று நாடகமாக நடிப்பதை அறியாமல் நேச்சுரலாக நடிக்கின்றனர்?

எப்படிச் சாவாய்? என்று சாவு வரும் என்பது எவ்வளவு பெரிய வியாபாரப்புள்ளிகளாலோ, அறிவியல், ஆராய்ச்சி, பகுத்தறிவு என்று எப்போதும் பேசி வெற்றி அடைந்த ந்த நபர்களாலும் சொல்ல முடிகிறதா? எத்தனை செல்வந்தன் என்றாலும், எத்தனை விருப்பமான பொருளானாலும், எத்தனை விலை உயர்ந்த பொருளானாலும் இறந்த பின்பு அதனால் உனக்கு என்ன பயன்?


சரி என் மகன் என் மகள் என்று பாசப் பற்றுதலினால் தவறு மேல் தவறு செய்வதெல்லாம் எதற்கு? என் மகன் நன்கு வாழ வேண்டும் என்கிற உந்துதல் தானே காரணம்? எல்லாமே எனது குடும்பத்திற்குப் பின் தான் என்று ஏன் எண்ணுகிறாய்? எண்ணங்கள் இதைத்தாண்டி ஏன் சிந்திக்க மாட்டேன் என்கிறது?


மனைவி / கணவன் என்று அளவுக்கு மீறிய பந்தபாசத்திலே மூழ்கியிருக்கின்றாயே உண்மையில் உன் மனைவி யார்? யாருடைய மகளாகவோ பிறந்து யாருடைய சகோதரியாக இருந்து உன் வாழ்வின் இடையிலே வந்து மனைவியாகி உஅனது பிள்ளைகளுக்குத் தாயாகி மூப்பாகி யார் எவருக்கு முன்னால் இந்த உலகிலிருந்து செல்லப்போகிறார்கள் என்பதை அறிவாயா? மனிதனே? எப்போதும் உன்னுடன் இருப்பது, உன்னைச் செயல்பட வைப்பது எது என்று அறிய முற்பட்டிருக்கிறாயா? பகுத்தறிவை என்றாவது இதற்குப் பயன்படுத்தி இருக்கின்றாயா?

சரி நாலாவது டைமன்ஷனாக இந்து மத தத்துவம் என்ன சொல்கிறது? மகன் மகன் என்று மருகுகிறாயே... மகள் மகள் என்று உருகுகிறாயே? ஒரு நிமிடம் யோசி யார் இந்த மகன் /மகள் என்பதை... பிறந்த பின்பாக இன்று நீ உருகி மருகிக் கொண்டாடும் மகன்/மகள் பிறக்கும் முன்பு தாயின் வயிற்றில் Foetus கருவாக இருந்தது.... Foetus எனப்படும் கருவாகும் முன்பாக விதையாக உன் உடலின் விரைகளில் இருந்தது.... விரைக்குள் எப்படி வந்தது? நீ உட்கொண்ட காய்கறி, தானியங்கள் பழங்கள் இன்னபிற உணவுவகைகளினை நீ உட்கொண்டதால் விரைக்குள் உருவாகியது. காய்கறி, தானியங்கள், பழங்கள் எங்கிருந்து எப்படி உருவாகியது?
பூமியில் மண்ணில் இருந்து அதன் சக்தியை உறிஞ்சி உருவாகியது.

ஆக நீ உருகி மருகிக் உணர்வுகளால் கொண்டாடும் மகன்/மகள் என்ற உறவுகள் எல்லாமே மண்ணின் வெவ்வேறு வடிவங்களே... Just realise these all relationship however intimate they are... all of them are mere "clod-of-mud"


எத்தனை சக்தியானது இந்த மாயை! நீ எவரோடு கொண்டது உண்மையில் உறவு? உனது தோற்றம் தொடர எது உண்மையான காரணி? எங்கிருந்து வந்தாய் இந்த வழிப்போக்கு நாடகத்தினை இந்த உலக மேடையில் நடத்த வந்தாய்? இங்கிருந்து எங்கே செல்லப்போகிறாய்? எது உனது உண்மையான சேருமிடம்?

பகுத்தறிவு என்பது உண்மையில் தன்னை, தனது தோற்றத்தின் காரணத்தினை, தனது தோற்றத்திற்கான சக்தியை அறிய முற்படுவதே ஆகும்!

அட்டாச்மெண்ட் என்கின்ற பொருட்கள் மீது, பொய்யான நிலையற்ற உறவுகள் மீது வைக்கின்ற பற்றுதல் இவை ஏற்படுத்துகின்ற மன சஞ்சலங்கள் இவைகளிடையே உழலும் மனிதன் இவைகளால் ஏற்படும் Mental agitations காரணமாக மன அமைதி குன்றி மகிழ்வைத் தொலைப்பது உண்மையில் பகுத்தறிவா?

கொஞ்சம் நிதானமாக உட்கார்ந்து கொலைவெறியோடு அலைகின்ற அரசியல் திரா'விட'ப் பெத்தடினால் ஆட்டோ அரிவாள், கருப்பான மனதுடன் பிளாக் மெயில் என்று பகுத்தறிவாக எண்ணி மதிகெட்டு அலைகின்ற மனிதர்கள்(!!?) சிந்தித்தாலே எல்லாவிதமாகவும் உலகோடு இவர்களால் ஆரோக்கியமான தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

வெறும் மேற்கத்திய Might is Right இரவல் கொள்கைகளால் Objective enquiry என்று கும்மியடிப்பவர்கள் Who am I? என்கிற subjective enquiry செய்ய முற்படவேண்டும். Subjective enQuiryல் மிக ஆச்சர்யமாக பிராமணன், ஷத்திரியன், வைசியன்,சூத்திரன் என்கிற பாகுபேதம் இல்லாமல் போகும்.... அடிக்கடி இந்த இந்துமத தத்துவமாகிய who am I? எனும் subjective enquiryயினை எல்லோரும் மெடிட்டேஷன் என்று தினசரி 10 நிமிடம் உட்கார்ந்து "உள் வினவுதல்" செய்யவேண்டும்.... subjective enquiryயினால் அறிவதை Objective world எனப்படும் நிஜ உலகில் தினசரி தனிமனிதர்கள் பிரதிபலிக்க..பிரதிபலிக்க சமூகத்தில் திரிக்கப்பட்டு நிலவும் இன்றைய சாதிப்பாகுபாடுகள் தானே குறையும்... நாட்பட நாட்பட தானே காணாமல் மறையும்!

பொய்யான சலுகைகள், ஆட்சி,அதிகாரம் என்கிற தடியால் அடித்து இறக்கக்கூடிய விஷயமல்ல. மனமாற்றம் தனிமனித அளவில் எல்லாத்தரப்பிலும் ஏற்பட்டு நிதர்சனமாக வேண்டிய விஷயம் இது!

இந்துமத தத்துவங்களினை ஆட்சியில் அதிகாரத்தில் இருப்போர் முழுமையாக முன்னுதாரணமாகப் பின்பற்றி வழிகாட்டுதலான வாழ்க்கையை வாழ்ந்து காட்டாத வரையில் சாதி குறையாது... இந்துமத வேத நெறி தர்மத்தினை ஆட்சி அதிகாரத்தில் இருப்போர் நிரகரிக்க நிராகரிக்க இன்றைக்கு சமூகத்தில் இருக்கும் இந்தச் சாதிக் குரைப்பு... ... காவல்நாய்கள்...அடக்குமுறை இன்னபிற என்பது தொடர்ந்து பெருஞ்சத்தமாக கேட்டவண்ணமே தொடரும்.

அன்புடன்,

ஹரிஹரன்

5 comments:

Hariharan # 03985177737685368452 said...

டெஸ்ட் மெசேஜ்!

வடுவூர் குமார் said...

"மன மாற்றம் தனிமனித அளவில் ஏற்படவேண்டும்"- இது சரியான கூற்று.
அது ஏற்பட்டுவிட்டால் அப்புறம் அரசியல் தலை எப்படியிருந்தாலும் அவர்கள் பின் இவர்கள் ஓடாமல் இருப்பார்கள் அல்லவா?

Hariharan # 03985177737685368452 said...

குமார்,

மனமாற்றம் பெரிய அளவில் அனைத்துத் தனிமனிதர்களிடமும் நிகழவேண்டும். கண்டிப்பாக திரா'விட' பகுத்தறிவு புகட்டும் வெறுப்பு அடிப்படையால் இன்னும் அடிப்படை பாழாகி பாதாளத்தில் விழவே சாத்தியம் அதிகம்!

தமிழகத்தில் நாத்திகம், பகுத்தறிவு என்பது வெறும் வெறுப்பை மட்டுமே வளர்த்திருக்கிறது! ஆட்டு மந்தைத்தனம் அப்படியே தொடர்கிறது!

மன மாற்றம் நிகழ மிக அவசியமான அமைதியான சூழலை அரசியல் திரா"விட" பகுத்தறிவால் ஏற்படுத்த இயலாது இந்துமத உயரிய தத்துவங்களை மீட்டெடுத்து தினசரி வாழ்வில் முறையாகக் கடைப்பிடித்து நடப்பதால் மட்டுமே சமுதாயத்தில் எதிர்பார்க்கின்ற மாற்றம் வரும்!

Sundar Padmanaban said...

நிரம்ப யோசிக்க வைக்கிற பதிவு.

கடவுள் என்றாலே "கட - உள்" 'உன்னை அறிந்து கடந்து செல்' என்பதாக எண்ணியிருக்கிறேன். அதற்கு மேலும் வலு சேர்க்கிறது இப்பதிவின் விவரங்கள்.

நன்றி.

Hariharan # 03985177737685368452 said...

சுந்தர்,

வருகைக்கும் படித்து யோசித்ததற்கும் மிக்க நன்றி!