Thursday, December 07, 2006

(78) கெட்ட வாஸனை ரிப்பேர் - Personality Rehabilitation

மனிதனின் உண்மையான உடன் பிறப்பான கெட்ட வாஸனா என்கிற ஆசை நறுமணம் (Fragrance of immoral Desire) பொங்கி வழிந்து அதன் வழி நடக்கின்ற மனிதன் முறையற்ற வாழ்வு வாழ்ந்து நிறைவற்ற முடிவை மட்டுமே எதிர் நோக்க முடியும்.

மனிதன் அவனது தற்போதைய தோற்றத்தின் இறுதிவரை வந்தும் வயதினால் மட்டும் முதிர்ச்சியடைந்து கிழவனாகியும் தன்னைச் செலுத்துவது எது என்று அறியாமையிலேயே இருந்தால் தோற்றத்தின் அர்த்தமே அறியாமல் வாழ்வு பிழையாகிறது.

சாதாரண பொருள்சார் வாழ்க்கையில் நல்ல செயல்பாடுகளால் நிறுவனத்தில் ப்ரமோஷன் பெற்று உயர்வதும், கையாடல், திருட்டு என்று கேடான செயல்களால் டி-ப்ரமோஷன் பெறுவதும் அறிந்திருக்கிறோம்.

திருடியும், கொள்ளையடித்தும், இன்னபிற கேடான செயல்கள் செய்தவர்கள் பொருள்சார் உலகில் பெரிய ஆளாக ஆகியிருக்கலாம். யாருமே பார்க்கவில்லை அதனால் யோக்கியனானான் என்று ஸ்மார்ட் லிவிங் பேசித் திரியலாம். அவனுக்குள்ளே இருக்கும் இறைவன் எங்கும் நிறைந்திருக்கும் பரப்பிரம்ம சக்தி பார்த்துக்கொண்டே இருக்கிறது.


தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று பக்த ப்ரஹலாதன் சினிமா டயலாக் பேசி மகிழ்வதை விட அப்படி ஆல் பெர்வேடிங்காக இருக்கும் இறைவனை உட்கார்ந்து உணர முதல் முயற்சியாக இறை நாமத்தினை ஜபமாகத் துதித்தபடி கான்சன்ட்ரேசனை குவித்து உள்ளிருக்கும் இறைசக்தியை உணர்ந்து அது எப்படி 31 ப்ளேவர் பேஸ்கின் ராபின்ஸ் ஐஸ்க்ரீமை விட சுவைகூடியதாக அளவிடமுடியாத மகிழ்ச்சியை அளிக்கிறது என்பதை சுயமாக ஒவ்வொருவரும் உணரவேண்டும்.

நாம் மகிழ்ச்சியை எப்போதும் பொருட்களோடு இணைத்து பொருட்களால் இன்ன பிற Objectiveகளால் மட்டுமே இன்பம், மகிழ்ச்சி கிட்டுகிறது என்று நினைக்கிறோம். ஒரு குலோப் ஜாமூன் தரும் மகிழ்ச்சி, இரண்டாவது குலோப் ஜாமூன் தரும் சர்ப்ரைஸ் ... ஐந்தாவது குலோப் ஜாமூனில் திகட்டல்...பத்தாவது குலோப்ஜாமூனில் வெறுப்பு....இருபதாவது குலோப்ஜாமூனில் அலர்ஜி இனி அடுத்தது சபதம் அடுத்து ஆறுமாதம்/ஒரு வருஷத்துக்கு ஸ்வீட்டே வேணாம்... குலோப் ஜாமூன் என்ற வார்த்தையே குமட்டலை வரவைத்து விடுகிறது. பிரச்சினை குலோப் ஜாமூனில் இல்லை! அது நிலையான மகிழ்ச்சியைத்தரும் என்று எண்ணியதால் தான்!


மெட்டீரியல் லைஃபில் பக்கத்தில் இருக்கிறவன் வசதியா இருக்கிறதைப் பார்த்தால் நம்மில் பெரும்பாலானோர்க்கு உடன் வருவது புகைச்சல் அனல் மூச்சு! நாம் இன்னமும் சாண்ட்ரோவில் தான் போகவேண்டியிருக்கு? சொனாடாவில் வருபவனைப் பார்த்ததும் ரெபரன்ஸ் டேட்டா போட்டுக்குடுக்கும் தகவல்.

சாண்ட் ரோ இல்லாமல் தாவித்தாவி பள்ளத்தில் விழுந்தெழும் பைக்கென்றாலும், இங்கிதமில்லாதவன் இண்டிகோ காரில் போகும் போது குறைந்த அழுத்த வானிலையால் பெய்த மழையினால் விழைந்த சேறு தெளிக்கப்படும் நிலையில் நடந்தே செல்லும் சூழலிலும் புன்னகையோடிருக்க மனதிலே கூடிய அழுத்தம் இல்லாமல் லேசாக இருக்க இறைவனைத் துதித்தவாறே பக்குவப்பட்டிருக்கும் மனம் வேண்டும்.

பொருட்களோடு எத்தனை அட்டாச்மெண்ட் வைக்கிறோமோ அவ்வளவுக்கும் அவஸ்தைதான்.
சுதந்திரம் என்பதன் அர்த்தம் தெரிவதில்லை நமக்கு. ஓசியில்/ குறைந்த செலவில் சன் டிவி, ஜெயா டிவி வந்தால் அதில் சினிமா வருகிறது சீரியல் வருகிறது என்று எப்போதும் டிவி முன் அமர்ந்து அடிமையாகிறோம். சுதந்திரம் இதுவா? உண்மையான மகிழ்ச்சிதரும் சுதந்திரம் என்பது நாம் விரும்பும் நேரத்தில் எதனிலிருந்தும் விடுவித்துக்கொள்ளும் மனோதிடமே!

சாட்டிலைட் தொலைக்காட்சி 15 ஆண்டுகள் முன்பாக வெள்ளிக்கிழமை மாலை வரும் சினிமாப்பாடல்கள் நிகழ்ச்சி தூர்தர்ஷனில் ஒளியும் ஒளியும் மிக மிகப் பிரபலமானதாக இருந்த சமயம்... மாலை 8 மணியிலிருந்து 8.40 செய்திவரும் வரை வரும் நிகழ்ச்சி. அலுவலகத்தில் இருந்து ரயிலைப்பிடித்து வர சில நேரம் தாமதமாகிவிடும் போது ஆரம்பத்தில் மனம் மிகவும் வருத்தப்படும்... அய்யகோ இப்படி தூர்தர்ஷனில் வரும் ஒளியும் ஒலியும் நிகழ்வைப் பார்க்க முடியாத பாவியாகிவிட்டேனே என்று மனம் புலம்பும். பின்பு அதே ரயிலில் ஆயிரக்கணக்கானவர் இப்படி வருத்தப்படவா செய்கிறார்கள்... அப்போது எனது இந்த வருத்தம் என்பது ஒரு மிகச் சாதரணமான விஷயத்திற்கு நான் தரும் மிகுந்த இன்ஃப்ளேட்டட் வேல்யூ நிஜமற்ற பொய்மையான உணர்வு என்பதை சில வாரங்களிலேயே உணர்ந்து தெளிவுற்ற மாதிரி
பல்வேறு விஷயங்களில் வாழ்வில் இப்படித்தான் தகுதிக்கு மீறி பல சமயங்களில் உணர்வுகளுக்கு, ஆதர்சமான கொள்கைகளுக்கு , மனிதர்களுக்கு, செயல்களுக்கு நாம் இன்ஃப்ளேட்டட் வேல்யூ என்பதை தந்து கூடுதலாக வருத்தப்படுகிறோம் எல்லாம் தலைக்குமேலே போன பின்பு!



சரி. கெட்ட குணாதிசயங்களின் மூலமான கெட்ட வாஸனாவை எப்படிச் சுத்திகரிப்பது?
கெட்ட வாஸனா என்பது அழுக்குகள் நிரம்பிய நீர் நிறைந்த பாத்திரமாக மனம் இருக்கிறது. அப்படியே மனதைப் பிடுங்கி அழுக்கைக் கொட்டி விட இயலுமா? இயலாது. ஆக அப்படியே இருந்த நிலையிலிருந்த வாறே மனதில் இருக்கும் கெட்ட வாஸனா என்கிற அழுக்குநீரை நீக்கிவிட எந்த டெக்னாலஜி உதவிக்கு வரும்? நவீன பிலிப்ஸ், சீமன்ஸ் போன்ற அறுவை சிகிச்சை உபகரணங்களால் மனதை டிரான்ஸ்பிளாண்ட் செய்துவிடமுடியுமா? நல்ல மனம் நற்சிந்தனை கொண்ட ஏழை டோனார் தயாராகவே இருந்தாலும் நடக்கிற சாத்தியமா?
உடலும் மனமும் ஒன்றுக்கொன்று இணைந்தது பிரிக்க இயலாதது.

பின் எப்படித்தான் மேம்படுவது? கெட்ட வாஸனா ரிப்பேர் செய்து மேம்படுத்துவது?
ஸத்ஸங்கம் என்கிற நல்லோர்களுடன் இணைத்துக் கொள்வது, மனதை பார்வையாளனாக இருந்து பார்வையிட நல்லோர்களின் சகவாசம் தேவை. ரெபரன்ஸூக்கு நல்ல ஆரோக்கியமான டேட்டா கிடைக்கும். இந்த நல்லவர்களோடு நல்ல விஷயங்களான இறைவனைப்பற்றி அறிய உணர ஆரம்பித்து, சிந்தனையின் போக்கினை நல்ல திசைக்கு மாற்றி தன்னை தனக்கே மறு அறிமுகம் நல்லவிதமாக செய்து மேம்பட நல்லவர்கள் நிரம்பிய சூழலில் இருக்க வேண்டும்.

இம்மாதிரி தொடர்ந்து நல்லவர்கள் நிரம்பிய சூழலில் இருக்க கெட்ட வாஸனா என்கிற அழுக்கு நீர் நிரம்பிய மனத்தில் நல்ல எண்ணங்கள், நற்சிந்தனைகள், இறைவனை நம்பி, உணர்ந்து, அறிந்து, ஒன்றுவது ஆகிய செயல்கள் ஊற்றாக நல்ல நீராக உற்பத்தியாகி மனதின் அழுக்குகளை நீக்கி வாஸனா சுத்தகரிப்பு நடந்தேறும்.

மனச் சுத்தகரிப்பு என்பது ஆன்மாவை உணர மிக மிக அடிப்படையான முதற்சுற்றுப் பயிற்சி. சொல்வதற்கும் செய்வதற்குமான பொருந்தா இடைவெளி குறுகி நெறியான் நேர்மையாளர் ஆவதற்கு முதல் படி வேதநெறிப் பயிற்சி!

சாதாரண சங்கத்தில் சாண்ட்ரோ கார், 200சிசி பைக், ரெண்டு பெட் ரூம் 1000 சதுர அடி வீடு, சம்பளம், லைஃப் ஸ்டைல், இவைகளில் உடனே நமக்கிருக்கிறதா? என்கிற கம்பேரிசன் வரும்.

ஸத்ஸங்கம் விஷயத்திற்கு வருவோம். தெய்வம் பற்றிய சிந்தனை, பேச்சு, சூழல் ஏன் அவசியப்படுகிறது. பார்த்தசாரதிப் பெருமாள் இன்னிக்குத் தங்கக் கவசத்தில் ஜொலிக்கிறார் பார்!கபாலீஸ்வரர்க்கு இன்னிக்கு உற்சவத்தில் எப்படியான அலங்காரம்? பார்க்க கண்கள் கொடுத்து வச்சிருக்கணும். தெய்வீகமான சூழலில் கோவிலில் யாரும் எனக்கு விலை தங்க கவசம் வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை புகைவதில்லை.

மனமே கோவில் என்று உண்மையை உணர்கின்ற போது சக மனிதனிடம் பொறாமை வருவதில்லை. இருப்பது இல்லாதது கவலை அளிப்பதில்லை. பொருள் வசதி பணம் இவை நேற்று ஒருவனுடையதாயிருந்து இன்று ஒருவனிடம் இருந்து நாளை இன்னொருவனிடம் பயணப்படக்கூடிய நிலையற்றது என்பது புரியும்!

ஸத்ஸங்கம் எனப்படும் நல்ல எண்ணம் கொண்டவர்களோடு நிறையத் தொடர்பு கொண்டு நல்ல விஷயங்கள் பேசுதல் விவாதித்தல் என்பது மிக முக்கியம். நல்ல எண்ணம், நல்ல கருத்துக்கள் கொண்டவர்கள் இல்லை எனில் இருப்பவரோடு எப்படிப்பட்டவராயினும் எப்படிப்பட்ட கீழான விஷயங்களைப் பேசி, படித்தும் , பார்த்தும் இருக்க வேண்டியதில்லை. பல நேரங்களில் தற்காப்பாக Better to Be alone in a bad Company என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நல்லவர்கள் சேர்ந்து நல்ல விஷயம் எனில் அது இறைவனைப் பற்றியதாகவே இருக்கும். இறைவனை விட நல்லவன் வேறுயாரும் இருக்க முடியாது. எனவே இறை பற்றிய சிந்தனை, அது பற்றிய அறிவு இவை சிறப்பானவை.


இருக்கின்ற சூழலை அப்படியே ப்ரஸாத புத்தியோடு ஏற்றுக்கொள்ளும் மெய்ஞானம் வேண்டும். உள்ளதை உள்ள படியே பார்க்கும் ப்ரதிபக்ஷ பாவனை வேண்டும். இருக்கின்ற சூழலை மேம்பெடுத்த மேலேறி வர கடின உழைப்புத் தேவை!

நல்லவர்கள் நிறைந்த ஸத்ஸங்கத்தில் இணைத்துக் கொள்வதில் தனிமனிதனுக்குப் பல நல்ல விஷயங்கள் நெறியோடு வாழ்வதற்குக் கிடைக்கிறது. நல்லவர்கள் துணையிருத்தலால் பொருட்களின் மீதான பற்றுதல் குறைகிறது, பொருட்கள் மீதான பற்றுதல் குறைந்ததனால் மாயையான குழப்பங்களிலிருந்து விடுதலை கிட்டுகிறது, மாயையான குழப்பங்களிலிருந்து விடுதலை கிட்டுகிறதால் இம்மியூட்டபிள் ரியாலிட்டி எனும் குற்றமற்ற உண்மையை அறிய முடிகிறது. இந்தப் பேருண்மையை ஆழ்ந்து தினசரி கடைபிடித்து முழுமையாக அனுபவிக்கும்போது மனிதனுக்கு வாழ்வுச்சுற்றிலிருந்து விடுதலை கிடைக்கிறது.


இம்மாதிரியே நமது ஒட்டுமொத்த கர்மாவின்/ செயல்களின் பாலன்ஸ் ஷீட்டில் செயல்களின் தன்மைகளின் படி மனிதனாகப் பிறந்து மிக மோசமாக வாழ்ந்து மடிந்தால் அடுத்த எபிஸோட் தோற்றத்தில் மிருகமாக பிறவியே டி-ப்ரமோட் ஆகலாம். மேன்மையாக வாழ்ந்தவர்கள், அதிநேர்மையாக, மிகுந்த நெறியோடு வாழ்ந்து மடிந்தவர்கள் பிறப்பு-இறப்புச் சுற்றிலிருந்து விடுபட்டு பரப்பிரம்மத்தினூடே கலந்து விடலாம்!

மிருகமாகக் காட்டில் பிறந்து மீண்டும் மனிதனாகப் பிறந்து நேர்மையாக வாழ்ந்து இறைவனை அடைவது எளிதானதா? இல்லை இந்த மனிதப் பிறப்பிலேயே நல்ல செய்கைகளால் சிறப்பான குணாதிசயங்களோடு வாழ்ந்து இறைவனை உணர்ந்து இறைவனோடு கலந்து பேரானந்தம் அடைவது எளிதானதா?

இது அவரவர் புத்தியால் பகுத்தறிந்து அவரவர்க்கு உவப்பானதை அவரவராகத் தேர்ந்தெடுக்கவேண்டிய மிகமுக்கியமான விஷயம். அறுபதுவயதுக்கு மேல், ரிடையரானபிறகு மட்டுமே கவனம் செலுத்தப்பட வேண்டிய விஷயம் என்று நினைப்பவர்களால் என்றுமே இறைவனை உணர முடியாது. அறுபது வயதில் ரிட்டையரானபிறகு புதிது புதிதாக வரும் பிரச்சினைகளுக்கு பக்குவமற்ற மனதால் இரையாவதற்கு மட்டுமே இயலும்.



அன்புடன்,


ஹரிஹரன்

5 comments:

Hariharan # 03985177737685368452 said...

டெஸ்ட் மெசேஜ்!

வடுவூர் குமார் said...

இறை உணர்தல் என்பது மிகப்பெரிய கடல்.
கடக்க முயற்சிப்பதும்,காற்று வாங்க கரையில் உட்கார்ந்திருப்பதும் அவரவர் விருப்பம்.அதில் சிலர் வெற்றி பெறக்கூடும்.
சில சமயம் அது இயற்கையிலேயே அமைந்துவிடுபவர்களையும் பார்த்திருக்கேன்.

Hariharan # 03985177737685368452 said...

குமார்,

ப்ராஜக்ட் சேல்ஸ்& மார்க்கெட்டிங்கில் இருப்பவர்களுக்கு சாதாரணமாகப் படும் உண்மை " இந்த முதல் ஆறுமாத ஓராண்டு உழைப்பு ஆர்டர் / காண்டிராக்டாக அடுத்த ஆறுமாதத்தில் அடுத்த ஆண்டில் கிடைக்கப்பெறும் என்பது.

//சில சமயம் அது இயற்கையிலேயே அமைந்துவிடுபவர்களையும் பார்த்திருக்கேன்//

இது இயற்கையாகவே சும்மா அமைந்து விடுவதில்லை. தற்போதைய தோற்றத்திற்கு முதல் தோற்றத்தில் அதற்காக முயன்றது அடுத்ததில் ஈஸியாக விட்ட இடத்திலிருந்து தொடர்கிறார்கள்!

இந்த உலகத்தில் Cause இல்லாமல் எந்த effectம் கிடையாது. இந்துமதம் இதை மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறது!

துளசி கோபால் said...

அட்டகாசம்! அப்படியே அசந்துட்டேன்.

//சுதந்திரம் இதுவா? உண்மையான மகிழ்ச்சிதரும்
சுதந்திரம் என்பது நாம் விரும்பும் நேரத்தில்
எதனிலிருந்தும் விடுவித்துக்கொள்ளும் மனோதிடமே!//

இது............. ஃபண்டாஸ்டிக்!

Hariharan # 03985177737685368452 said...

துளசியக்கா,

உண்மையில் ஒரு பழக்கத்திற்கு அடிமையாகியிருப்பதை உணராமல் அதைச் சுதந்திரம் என்று கொண்டாடுவதை என்ன என்று சொல்வது?

பீட்ஸா/கோக்/சன்/ஜெயா டிவி/ எப்.எம் ரேடியோ, எஸ்.எம்.எஸ், பெண்கள் கல்லூரி வாசலில் தேவுடுகாத்து தவம் இயற்றுவது, இதரம் என்று நவநாகரீகமாக, சுதந்திரமாக இருப்பதாக அசராமல் எத்தனை பழக்கங்களுக்கு அடிமையாகி இருக்கின்றார்கள்?

என்னமோ போங்க!